விடுதலைப் புலிகளின் தலைமை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு வலயப் பிரதேசத்துக்குள் உள்ள ஒரு கட்டடத்துக்குள் முக்கிய தலைவர்கள் பலரும் இருந்து அதனை வெடிக்கவைத்துத் தற்கொலை செய்துகொண்டதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் பரவிவருகின்றன.
புலிகளின் கதை முடிந்துவிட்டது என்ற செய்தியை ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச ஜோர்தானிலிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தொலைபேசி வாயிலாக அறியத் தந்ததாகவும், இதன் பின்னரே அவர் தனது பயணத்தை இடையில் முடித்துக்கொண்டு உடனடியாக நாடு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி மகிந்தவுக்கு தெரிவித்த தகவல்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
களநிலைமைகள் தொடர்பான தகவல்கள் அரசாங்கத்துக்கு இப்போது முழுமையாகத் தெரியும் எனவும், எனினும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு அதனை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்காக இன்னமும் இரகசியம் பேணப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
அப்ப கோத்தபாயாவின்ரை சொல்லைக் கேட்டு> பிரயாணத்தை பாதியிலை முடித்து வந்து> விமான நிலையத்திலை நிலத்திலை விழுந்து கும்பிட்டதுதான் மிச்சம்!