தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் கடற்புலிகளின் தளபதி சூசை தற்கொலை செய்து கொள்ளவில்லை அவர்கள் இருவரும் போராடியே மரணித்தனர். குறிப்பாக யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலே கொல்லப்பட்டனர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பிரபாகரனும் சூசையும் தற்கொலைச் செய்து கொண்டதாக பல ஊடகங்களில் வெளியான தகவல்களையும் அவர் நிராகரித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த சரத் பொன்சேகா
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரன் மற்றும் 100 போராளிகளுடன் சூசையும் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.
பிரபாகரன் மற்றும் சூசையின் குண்டுதுளைத்த உடல்களை படையினர் கண்டெடுத்தனர்..அவர்கள் இருவரும் கடைசிவரை போராடியே மரணமானார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஆதாரங்கள் படையினருக்கு கிடைத்தன.
புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானின் மனைவியே தற்கொலை செய்து கொண்டிருந்தார். ஆனால் பிரபாகரனும் சூசையும் சயனைட் உட்கோள்ளவோ தற்கொலை செய்து கொள்ளவோ இல்லை. என குறிப்பிட்டுள்ளார்.
பொட்டு அம்மானின் மனைவியும் பொட்டு அம்மானும் யுத்தததின் இறுதி நாளில் ஒரு எரியும் வீட்டிற்குள் தம்மிடம் இருந்த புலிகளின் எல்லா ஆவணங்களையும் கொளுத்தி விட்டு தாமும் அந்த இடத்திலேயே தற்கொலை செய்து கொண்டார்கள் என யுத்தம் முடிவடைந்த காலப்பகுதில் பேசப்பட்டது.