வியட்னாமியப் போராட்டம் குறித்துப் பேசும் போது, கோச்சிமினை நிராகரித்துப் பேசமுடியாது. வியட்னாமியப் போராட்ட வரலாற்றையே அவரின் வரலாற்றிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றால் அது மிகையற்றது.
ஈழப் போராட்ட வரலாறு என்பது பிரபாகரனை நிராகரித்து எழுதப்பட முடியாது. முள்ளிவாய்க்காலில் புலிகளின் தலைமை அழித்துச் சிதைக்கப்படும் வரையான போராட்டப் பின்புலம் பிரபாகரன் என்ற தனிமனிதனினின் ஆளுமை, அதிகாரம் என்ற அனைத்துக் கற்பிதங்களையும் சூழவே தனது ஒவ்வொரு அசைவையும் கொண்டிருந்தது.
ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பிரபாகரனையும் போராளிகளையும் மக்களையும் கொலை செய்துவிட்டு உலக நாடுகளின் ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரச பயங்கரவாதி ராஜபக்சவைக் காப்பாற்றும் வியாபாரிகள் பிரபாகரன் வாழ்கிறார் என்கின்றனர்.
தனது 17 வது வயதில் போராட்டத்திற்காக ஆயுதங்களை ஏந்திய பிரபாகரன் மரணித்துப் போகும் வரை அதனைக் கைவிடவில்லை. பிரபாகரனை விமர்சிப்பதென்றால் எதிர்காலப் போராட்டத்தைச் செழுமைப்படுத்தும் அரசியல் விமர்சனங்களாகவே முன்வைக்கப்பட வேண்டும். இதனைத் தவிர்த்து ஒரு பகுதி இலங்கைப் பாசிச அரசுடன் இணைந்து சேறடிக்கிறது. மறுபகுதி பிரபாகரனைத் தெய்வமாக்குகிறது. இந்த இரண்டு பகுதிகளுமே மக்களை மந்தைகளாக்கும் ஒரே கூட்டத்தைச் சார்ந்தவர்கள்.
புலம்பெயர் நாடுகளிலிருந்து, தென்னிந்தியா ஈறாக அனைத்துப் பிழைப்பு வாதிகளும் பிரபாகரன் வந்தால் தம்மிடமுள்ள மக்களின் சொத்திற்குக் கணக்குக்காட்டுவோம் என்கிறார்கள். இதற்காகவே ஆயிரமாயிரமாய் மக்கள் நம்பிய பிரபாகரனை அஞ்சலி கூட இல்லாமல் அனைதையாக்குகின்றனர்.
பிரபாகரனின் சரியான மற்றும் தவறான பக்கங்களிலிருந்து கற்றுக்கொண்டு சுய நிர்ணைய உரிமையை வென்றெடுப்பதற்கான புதிய போராட்டத்திற்கு மக்கள் தயாராக வேண்டும். பிரபாகரன் வருவார் என்ற போலி நம்பிக்கையை வழங்கி மக்களை ஒடுக்கி வைத்திருக்கும் பிழைப்பு வாதிகள் ஓரங்கட்டப்பட வேண்டும். இலங்கைப் பேரினவாத அரசுகள் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களை வாழ விடப்போவதில்லை. மக்களை அணி திரட்டுவதும் புதிய போராட்டத் தந்திரோபாயங்களை வகுத்துக்கொள்வதும், உலகம் முழுவதும் போராடும் மக்களோடு இணைந்து நாமும் போராடுவதும் தவிர்க்க முடியாதது. இந்த நிலையில் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி புதிய போராட்டத்திற்கான அறைகூவலை விடுப்பது இன்றைய தேவை.
இவ்வேளையில் பெண்ணுரிமைக்காகவும் சமூக ஒடுக்குமுறைக்காஅகவும் குரலெழுப்பும் லண்டன் விஜி இன் அஞ்சலிக் கவிதையை பதிவிடுகிறோம்.
பதின்ம வயதின்
அறியாப் பருவத்துடன்
போரென எழுந்து
பாதை வகுத்து
மரணித்து போன
பிரபாகரன்!
அவலத்துள் அமிழ்த்தி
அழிக்கப்பட்ட
பின்னரும்
அவனைச் சுற்றி
இன்னமும்
பேய்களாய்
ஆய்வாளர்களும்
பொறுப்பாளர்களும்
கூத்தாடுகின்றனர்!!
எல்லா நம் மக்களையும் போல
அன்றைய நாளில்
முள்ளிவாய்க்காலில்
மரணம் நெருங்கிய போது
எல்லோரையும் போலவே
யாருமேயற்று
மரணித்த பிரபாகரன்
அறுபது மாதங்கள் கடந்தும்
இன்னமும் அமைதியற்று!!
எல்லா திசைகளினின்றும்
தலைவன் எனவும் முருகன் எனவும்
தேவன் எனவும்
ஓலமிடும் மனிதப் பேய்களில் இருந்து
இன்றே
விடுதலையாகி
அமைதியடைவாய்!
எமது அஞ்சலிகள்!!!
தேசியத் தலைவரைத் தவிர வேறு யாரும் போராட்டத்தை வழி நடத்த தகுதி இல்லாதவர்கள். அந்த மாகான் இல்லாத போராட்டம் தேவையில்லை. அவர் சரியான தருணம் வரும்போது வருவார். உங்களைப் போல மோட்டுத்தனமாக கத்திப் பிடிபட மாட்டார். ஒரு வெப்சைட்டேயே அடிவாங்காஅமல் நடத்தத் தெரியாத உனக்கு தேசிய தலைவருக்கு அஞ்சலி செய்ய என்ன உரிமை இருக்கிறது?
அப்படியானால் “அந்த மகான்” வரும்வரை இனிஒருவைத்
தாக்கியவர்களின் “கத்தி”யை எமது தேசிய சின்னமாகி “கத்தி”யை
உருவாக்கிய அவர்கள் தலைமையில் எமது போராட்டத்தைக்
“கத்தி”க் “கத்தி” முன்னெடுக்கலாமா????
இணையத்தளத்தை அடிவாங்காமல் நடத்தக்கூடிய தொழில்நுட்பம் தெரிந்தால் இனியொருவுக்கு சொல்லிகொடுங்களேன் அவர்களுக்கு உதவியாய் இருக்கும். சாதரணமாக ஒரு வீடு கட்டும்போது சுற்றுமதில் கண்காணிப்பு கோபுரம் கமெரா இனோரன்ன பாதுகாப்பு பொறிமுறைகளை அமைத்தாலும் அது நூறு வீதம் பாதுகாப்பானது என்று உறுதிப்படுத்த முடியாது எதிரிகள் எந்தவழியில் தாக்குவார்கள் என்பது தெரியாது தெரிந்தாலும் அதை தணிக்க முடியுமே ஒழிய நிறுத்த முடியாது. அதுபோலத்தான் இணையப்பரப்பும் தாக்குதல்களை நூறு வீதம் தடுத்து விடமுடியாது. மிக பெரிய நிறுவனங்களே சேவை மறுப்பு தாக்குதல் மூலம் திணறும் போது சாதாரண இணையத்தளங்கள் அடிவாங்கித்தான் ஆகவேண்டும். போதுமான சில முன்னேற்பாடுகள் இருந்தால் மீண்டுவரமுடியும்.
“ஒரு வெப்சைட்டேயே அடிவாங்காஅமல் நடத்தத் தெரியாத உனக்கு”
இதைத்தான் சொல்லுறது சரியான புரிதல் இல்லாமல் எதையாவது எழுதி மொக்கை வாங்குறது.
சரியான தருணத்தில் வெளியான அஞ்சலி. இயக்கத்தில் தலைவரைப் பலருக்குத் தெரியாது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் அதிகமாக வெளியே வருவதில்லை. இறுதிக் கட்டப் போரில் அவர் இறந்து போனார் என்பது எமக்கு எல்லாருக்கும் தெரியும். தலைவர் இல்லை என்று சொன்னால் வேறு தலைவர்கள் வந்து வேறு போரட்டம் வந்துவிடுமோ என்று தன் பயப்படுகிறர்கள். இனி ஒரு முதல் ஆளாக அஞ்சலி செலுத்தியுள்ளது. இனிமேல் கொஞ்சப்பேராவது விளங்கிக்கொண்டு போராட்டத்தை வை நடத்துவார்கள்.
கீத் உங்களுக்கு வெப்சைட் அடிவாங்குவது மட்டும் தான் தெரியும். அடிவாங்கினாலும் எழுந்து வர தெரிய வேண்டும். ஆனால் உங்கள் தலைவர் இறந்து விட்டார் என்பதை சொல்ல துணிவில்லாத புறம்போக்குகளிற்கு எல்லாம் எதற்கு போராட்டம்?
கீத்தின் எழுத்தாளுமையில் இருந்து நான் விளங்குவது…. கீத்தின் தலைவராக பிரபாகரன் இருக்க சம்மந்தமே இல்லை என்பது.
கீத் நடத்துவது ஒரு புலனாய்வு உளவியல் தாக்குதல், இத்தாக்குதல் தமிழ் மக்களின் அக புற சிந்தனை வட்டங்களை!, பிரபாகரன் வாழ்கிறார் என்ற பரபரப்பான செய்தி வட்டத்துக்குள் குறுக்குவதன் மூலம், திறனாய்வு அற்ற சமூகமாக எமது சமூகத்தை மாற்றும் உத்தியின் வெளிப்பாடு.
இப்படி பலர் சம்பள அடிப்படையில் புலனாய்வு அமைப்புகளுடன் வேலை செய்வார்கள்.
இந்திய இலங்கை புலனாய்வு அமைப்புகள் ஈழத்தமிழர் நலன்களை அழிக்க தமது முகவர்கள் பலரை வைத்திருப்பது ஒன்றும் புதினம் அல்ல.
இவர்களின் வேலையின் ஒரு பகுதி சமூகத்தில் பிரச்சனைகளை தூண்டுதல்.
பிரபாகரனின் இழப்பு உருதியானதுக்கு நிறையவே ஆதாரம் உள்ளபோது இல்லாத அத்தலைவனின் இருப்புக்கு என்ன ஆதாரம் உண்டு???????????
எதுவும் இல்லை என்பது தான் விடை ஆக அவரை இருப்பதாக தமிழர் தரப்பு கூறுமாயின் அது ஒற்றனின் கூற்று மாத்திரமே ஆகும்.
மாறாத,தூய,மரபுவகைப்பட்ட கொள்கை கோட்பாடுகளுக்கும் எ ப்போதுமே மாறிக்கொண்டிருக்கும் சமூக யயார்த்தங்களுக்கும் இடையிலான ஊசலாட்டங்களின் முடிவாய் நல்லதோர் ஆரம்பம்.
மரணத்தை வென்றவர்கள் உலகத்தில் இருக்கின்றார்கள் என அறிய முடியாது விட்டாலும் ஈழத்தின் விடுதலைப் போராட்டம் வரலாற்றுப் போராக இன்று எழுச்சி பெற்றிருப்பதனை தமிழினம் உணரத்தவறினால் உலகத்தில் மனிதன் இருப்பதனை அவனால் எப்படி பு. ரிய முடியும் ?
அதனால் போராட்டம் அதற்கான தலமைத்துவம் இதுவரை மாறவில்லை என்பதனை தமிழர்கள் நன்கு அறிந்து கொண்டு எதிர்காலத்தை பயன்படுத்த வேண்டுமே தவிர உலகத்தை விமர்சிப்பதற்கு எமக்கு தகுதி உண்டா என்பதனை நிராகரிக்க முடியாது 39வருட ஆயுதப் போராட்டம் அதற்கான தலமைத்துவத்தை விமர்சித்து இன்னொரு போராட்டத்தை தலமைத்துவத்தை உருவாக்க உலகம் முயற்சிக்கலாம் தமிழர்கள் அதனை ஏற்க்க முடியாது
காரணம் அர்பணிக்கப்பட்ட உயிர்தியாகங்கள் அதற்கான அடையாளம் வரலாற்றின் அடிப்படையில் உருவாக்கம் பெற்று மகாவம்சத்தின் அழிவிற்காக ஆயுதத்தை மெளனித்துள்ள போது சிங்கக் கொடி அகற்றி தமிழர்கள் தமது நியாயத்தை கூறுவதற்கு விடுதலைப்புலிகள் அமைப்பு அவர்களது போராட்ட மே முக்கியத்துவம் பெறுகின்றது.
வடக்கும் கிழக்கும் சூறையாடப்பட்டு சிதைக்கப்பட்டிக்கொண்டிருக்கும் சூழலில் தமிழீழ விடுதலைப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது எனப் புலம் பெயர் நாடுகளிலிருந்து புலம்பும் நீங்கள் அப்பாவியா வியாபாரியா என்று தெளிவில்லை. எது எப்படியாயினும் இன்னொரு போரட்டம் உருவாகிவிடக்கூடாது என்பதில் நீங்கள் மிகக் கவனமாக இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாகவே சொல்கிறீர்கள். இது தன் புலம்பெயர் புலிகளின் விருப்பமும் கூட. அது அவர்களின் அறிக்கையிலேயே தெரிகிறது. விடுதலைப் புலிகளின் போரட்டத்திற்கு முக்கியத்துவம் இருக்கட்ட்டும், அதனால் இனிமேல் போராடவே கூடாது என்று சொல்கிறீர்களே, இதைத் தான் மகிந்த ராஜபக்சவும் சொல்லுகிறார்.
உர வியாபாரிகள் எல்லாம் தேசிய வியாபாரம் நடத்த வெளிக்கிட்டால் இது தான் நிலை. தேசியத் தலைவரை உயிர்ப்பித்து எலும்ம்புக்கூடாக்கி கூத்தாடுகிறார்கள்.
ஒரு அத்தியாயம் முடிந்து விட்டது அடுத்ததற்கு செல்லவேண்டிய தேவை வந்தாகிவிட்டது ஆனால் போகாதீா்கள் இன்னும் அது முடியவில்லை என்பது கொடிய கயமைத்தனம் மட்டுமல்ல துரோகமும் ஆகும்.
பிரபாகரனும் அத்தனை மாவீரா்களும் காலம் பூராகவும் நினைவில் கொள்ளப்படவேண்டியவா்கள் அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது ஆனால் அடுத்த போராட்டம் அவா்களின் தவறுகளை மனதில் கொண்டு புதிய சந்ததியினால் மேற்கொள்ளப்படவேண்டியதேயன்றி சில புலம்பெயா் ஒற்றா்களின் விருப்பத்தில் நடக்கவேண்டிய ஒன்றல்ல.
நீங்கள் எல்லாம் இயக்கத்துக்கு என்ன செய்தீர்கள். தலமை ஆசை பிடித்து அலையாதீர்கள். தேசிய தலைவரின் கெண்டைக்காலில் உள்ள ஒரு ரோமத்திற்கு கூட நிகரற்ற இதுபோன்ற பேடிகள், தலைவர் பற்றிப் பேசுவதும் மாவீரர் குறித்து எழுதுவதும் தமிழ் தேசவிரோதச் செயலாகப் பார்கப்படவேண்டிய ஒன்று. இறைமையுள்ள தமிழீழ தேசிய பரப்பில், இவர்களின் பரப்புரைகளுக்கு தண்டனை உண்டு என்பதனை இவர்களைப் போன்ற பேடிகள் மறந்துவிட்டார்கள் போலும், தமிழ் நிறுவனங்களை தாக்குவது தமிழ் உணர்வாளர்களை தாக்குவது இது தான் நீங்கள் இப்ப தேசிய தலைவர் இல்லை என்று பரப்புரை.