Thursday, March 19, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

பிரபாகரனால் சாதிக்க முடியாதவற்றை இந்த புலம்பெயர் தமிழர்களினால் சாதிக்க முடியுமா? : டக்ளஸ்

இனியொரு... by இனியொரு...
06/13/2010
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்

டக்ளஸ் தேவானந்தா இன்று மகிந்த அரசு சார்பான நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்களைக்  கேள்விக்குள்ளாக்கும் இவ்வறிக்கை மகிந்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும்  நியாயப்படுத்துகிறது.

புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் ஈழக் கனவினால் தமிழ் மக்களே காயப்படுவதாக  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தமிழீழக் கோரிக்கையை கைவிட மறுப்பதனால், தமிழ் மக்களே பாதிக்கப்படப் போவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்குலக நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ் புலம்பெயர் மக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழீழ இராச்சிய கோரிக்கை பெரும்பான்மை இலங்கை மக்களுக்கு எந்த வகையிலும் நன்மை அளிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போதோ எதிர்காலத்திலோ தமிழீழ இராச்சியமொன்றை அமைக்க முடியாது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் உயிருடன் இருந்த காலத்திலேயே ஈழ இராச்சியம் என்பது ஓர் கனவாகவே காணப்பட்டதாகவும், தற்போது ஈழ இராச்சியம் என்பது கனவுகளின் கனவாக மாற்றமடைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரபாகரனினால் சாதிக்க முடியாதவற்றை இந்த புலம்பெயர் தமிழர்களினால் சாதிக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒருபோதும் இவர்களினால் ஈராக்கியமொன்றை உருவாக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகளினால் அரசாங்கத்தின் ஒரு பகுதியினரிடையே தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தமிழர்களின் வாழ்க்கை நெருக்கடி மிகுந்ததாக மாற்றமடையும் என அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவது குறித்து புலம்பெயர் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டங்களுக்கு காத்திரமான பங்களிப்பினை நல்குவதே புலம்பெயர் சமூகத்தின் தற்போதைய கடப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பிரபல இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வு நடவடிக்கைகளில் சில குறைபாடுகள் காணப்படுவதாகவும், நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களே இதற்கான காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கவனிக்குமாறு அமைச்சர் தேவானந்தா தமிழக அரசியல்வாதிகளிடம் கோரியுள்ளார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தமிழினத்தைப் பூண்டோடு அழிக்க 5000 கோடி : வை.கோ

Comments 7

  1. நக்கீரன் says:
    16 years ago

    திரு.டக்லஸ் அவர்களின் எல்லாகருத்துகளுக்கும் உடன்பாடிலாவிடினும் தற்போதுள்ள சூழ்நிலைகளுக்கு அமைய அவர் கூறியபடி புலத்தில் உள்ள சிலர் தங்களின் சுயலாபத்தை கருதி எடுக்கும் நாடு கடந்த சுடலை போன்றவற்றால் ஈழத்தில் உள்ள அப்பாவி தமிழர்கள் பாதிப்படைவார்கள் என்பது உண்மையே.அதே போல கௌரவ டக்லஸ் அவர்கள் ஈழத்தில் உள்ளமக்களின் வாழ்வுரிமைகளை பாதுகாப்பதோடு தேவையில்லாத குடியேற்றங்களையும் தடுத்துநிறுத்த பாடுபடவேண்டும்.

    • போலி says:
      16 years ago

      கொல்ல துணை நின்றவர்கள் எப்படி ஐயா பாதுகாக்கப் போகிறார்கள். மஹிந்தா யுத்தத்தை தனிய வெல்லவில்லை அவரது அன்புத் தமிழ் தோழர்களும் பெரும் துணை புரிந்துள்ளார்கள். அதுதான் தமிழரின் பெருமை. இனியாவது எல்லோரும் விழித்துக்கொள்வோம்.

    • Soorya says:
      16 years ago

      ஊர்காவற்துறை மக்களை பல வருடஙகளாக பணயக்கைதிகளாகவும், யாழ் மக்களை வாயமூடி மெளனிகளாக்கியும் அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் முதுகுத் தண்டில்லாத் “தலைவனுக்கு” என்ன பெரிய திருவாளர், கௌரவம் வேண்டிக்கிடக்கு? செவிடன் காதில் எவ்வளவு காலம் சங்கூதப் போகிறீர்கள்? சத்திர சிகிட்சை செயதாலும் குணமாகாத நோயாளிகள்.

  2. ranjini says:
    16 years ago

    கூலிப்படை தலைவன் டக்ளசுவே பிரபாகரனைப் பெரியாள் ஆக்கிவிட்டார். ******

    • Abdulah says:
      16 years ago

      புலம் பெயர் தமிழர்களின் காசு கலைக்சனுக்கு நாட கொடுத்து அதிரடி தாக்குதல் நடத்தியவர்களை என்னவென்று அழைப்பதுங்கோ ? கூலி கொடுத்த படை தலைமை ?.. 

    • xxx says:
      16 years ago

      அப்துல்லா இங்கே என்ன பிரச்சனை பேசப்படுகின்றது என்ற அக்கறையே உங்களுக்கு இல்லையா?
      டக்ளசின் எக் கருத்தையாவது ஏற்றால் அதை நியாயப் படுத்துங்கள். அவருடைய அரசியல் சரி என்றால் அதை நியாயப் படுத்துங்கள்.
      நாடு கடந்த தமிழீழம் பற்றிய டக்ளஸின் கருத்தில் எனக்கு உடன்பாடுண்டு. (அது ஒரு ஏமாற்று வேலை என்பதை அவர் சொல்லத் தவறுகிறார்). ஆனால் டக்ளஸின் கபட, சுயநல நோக்கங்கள் பற்றித் தெளிவாகவே இருக்கிறேன்.

      புலி எதிர்ப்பு வன்மத்தை விட்டால் உங்களிடம் ஒன்றுமே இல்லையா? புலிகளை விமர்சிப்பதிலும் ஒரு நிதானம் தேவை.
      புலிகளினதும் பிற ஆயுதக்க் குழுக்களினதும் அராஜகத்துக்கும் சமூக அக்கறை அற்ற கண்டனங்கட்கும் என்ன பெரிய வேறுபாடு?

  3. போலி says:
    16 years ago

    மன்னிக்கோணும் தோழர் உங்களாலும் முடியாமல் போனதென்று சொல்லுங்கோ. இதுக்கு மேலை என்னத்தை தோழர் உங்கட தலைவர் எங்கட சனத்திற்கு செய்யப்போகிறார். எல்லாத்தையும் சேர்ந்து செய்து போட்டியள். எண்டாலும் நீங்க பெரிய ஆள்தான்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...