Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பிரஞ்சுப் போராட்டங்கள் : புரட்சிக்கான புதிய அடித்தளம்?

இனியொரு... by இனியொரு...
10/17/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
6
Home பிரதான பதிவுகள் | Principle posts

முப்பது லட்சம் பிரஞ்சுத் தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் பொலீஸ் அடக்குமுறைக்கு மத்தியில் தெருவில் இறங்கிப் போராடியிருக்கிறார்கள். மக்கள் போராடிப்பெற்ற ஓய்வூதிய உரிமையைப் பறித்தெடுக்கும் வகையிலான பிரஞ்சு ஜனாதிபதி நிக்கொலா சார்க்கோசி அரசின் புதிய சட்டங்களுக்கு எதிராக பிரஞ்சு நாட்டின் உழைக்கும் மக்கள் இன்று ஐந்தாவது நாளாகப் போராடுகின்றனர். பிரஞ்சுக்காரர்கள் 60 வயதில் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதே இதுவரை நடைமுறையில்லிருந்த சட்டமாகும்.

நிக்கோலா சார்க்கோசியின் வலதுசாரி அரசு அதனை 62 ஆக உயர்த்துவதற்கும், முழுமையான அரச ஓய்வூதியம் பெறுவதற்கான வயதை 67 ஆக உயர்த்துவதற்குமான முன்மொழிவைச் சட்டபூர்வமாக்க முற்பட்ட வேளை இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஓய்வூதியத்திற்கான புதிய திட்டம் ஏற்கனவே பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் செவ்வய்க்கிளமை 18ம் திகதி ஒக்டோபர் மாதம் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் ஒன்றை மேலும் அறிவித்துள்ளன. இதே வேளை பிரித்தானியாவிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் அரச அதிகாரங்கள் பிரஞ்சு மக்கள் வேலைக்கு போக விரும்பாத சோம்பேரிகள் என்றும் அதன் வெளிப்பாடாகவே இந்த வேலை நிறுத்தங்கள் என்று பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளன.

பிரித்தானியாவில் பெரியளவின எதிர்ப்புக்கள் எதுவுமின்றி ஓய்வூதியத்திற்கான வயது 65 என்பதை ஏற்கனவே சட்டமூலமாக்கியிருந்தனர். இப்போது அதனை 66 ஆக உயர்த்துவதற்கு புதிய பழமைவாதக் கட்சியின் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. பல்கலைக்கழகங்களை முழுமையான வியாபார நிறுவனங்களாக மாற்றும் திட்டம் பிரித்தானிய அரசால் ஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ளது.

இதே வேளை, குழந்தைகளுக்கான மானியத்திட்டமும் மறுசீரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. இலவச மருத்துவம் உட்பட பல துறைகள் தனியார் மயமாக்கும் திட்டங்கள் குறித்து நாளாந்தம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தோற்றுப் போன முதலாளித்துவப் பொருளாதார முறையில் மக்கள் நம்பிக்கை இழந்த நிலையில், பிரஞ்சுத் தொழிலாளர்களின் விட்டுக்கொடாத போராட்டங்கள் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் எதிர்ப்பியக்கங்கள் உருவாகிவளர்வதற்கான முன்னுதாரணமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பிரஞ்சு மக்களின் 70 வீதமானோர் வேலை நிறுத்தங்களுக்கும் எதிர்ப்புப் போராட்டங்களுக்கும் ஆதரவளிப்பதாக கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன.

பிரஞ்சு பாராளுமன்ற வாத போலிக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சி.ஜே.ரி போராட்டங்களில் முன்னணியில் திகழும் தொழிற்சங்களில் ஒன்றாகும். கட்சியின் தலைமைக்கு எதிராக புரட்சிக்கான அடிப்படைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்ப்புக்கள் உருவாகியிருப்பதாகவும் இது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் எனவும் கடந்தவார பிரித்தானிய ஊடகமான “ஈவிங் ஸ்டான்டர்ட்” கருத்து வெளியிட்டிருந்தது. கம்யூனிட்கட்சி உறுப்பினர்கள் பலர் சே குவேராவின் படங்களுடனனான மேலங்கிகளை நேற்றைய ஊர்வலத்தில் அணிந்திருந்தனர். முன்னை நாள் பிரன்சுப் பிரதமர் டொமினிக் வில்பன் கருத்துத் தெரிவிக்கும் போது, வேலையில்லாத் திண்டாட்டமும், வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சியும், அரச அதிகாரத்தின் அடக்குமுறையும் பிரான்சில் புதிய சமூகப்புரட்சியைத் தோற்றுவிக்கும் “அபாயம்” உள்ளதாக எச்சரித்துள்ளார். பிரஞ்சு தேசம் உருவாகி வளர்ந்த காலப்பகுதி முழுவதும் உரிமைக்கான மக்கள் போராட்டங்களினூடாகவே வளர்ச்சிபெற்றுள்ளது.

பிரஞ்சு தேசத்தின் உழைக்கும் மக்கள் பல போராடப் பயிற்றப்பட்டவர்கள். 1789 ஆம் ஆண்டிலிருந்து 1793 ஆம் ஆண்டுவரை நடந்த போராட்டங்கள், 1848 இல் நடந்த பரிஸ் கம்யூன் போராட்டம், 1936 இலும் 1968 இலும் நிகழ்ந்த வேலை நிறுத்தங்கள் ஆகியன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். 70 களில் உருவான நெருக்கடியின் போது முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு முறையை காப்பற்றுவதற்காக தோற்றம்பெற்ற நவ-தாராளவாதமும் அதன் தொடர்ச்சியான உலக மயமாதலும் இன்று நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. மேற்கு நாடுகள் தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலம் ஐரோப்பாவில் போராட்டங்களுக்கான காலகட்டம் என மதிப்பிடப்படுகிறது. ஏற்கனவே இங்குள்ள இடதுசாரி அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமை மறு சீரமைக்கப்பட்டோ அன்றி புதிய தலைமையின் உருவாக்கத்திலிருந்தோ உருமைக்கான போராட்டம் சமூக மாற்றத்திற்கான போராட்டமாக மாற்றமடையும் சமூகப் புறச்சூழல் உருவாகியுள்ளது.

சில ஆண்டுகளின் முன்னர் வெறுக்கப்பட்ட மார்க்சும் மார்க்சிசமும் இன்றைய ஐரோப்பிய புதிய சூழலில் மக்களின் தத்துவங்களாக மீட்சிபெற்றுள்ளன என்கிறார் ஆய்வாளர் டொமினிக் லேவிஸ். ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகளும் புதிய உலக ஒழுங்கு விதியும், புதிய பணச்சுற்று முறையும் உருவாக்கப்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறிவருகின்ற போதிலும் அதற்கான வழிமுறையை அவர்கள் இன்னும் கண்டறியவில்லை. முன்னைய நெருக்கடிகளைப் போலன்றி இன்றைய நெருக்கடி பல பண்புகளில் வேறுபட்டது. அதிகாரவர்க்கம் தன்னை மீள்கட்டமைப்புச் செய்து கொளவதற்கான வழிமுறைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டன. ஐரோப்பியப் போராடடங்களில் சர்வதேச இடதுசாரி இயக்கங்களின் பங்கு குறித்து ஆராயப்பட வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்
1. மூலதனத்தின் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் பிரான்ஸ்!

2.   ஐரோப்பாவில் தொடரும் உரிமைப் போராட்டங்கள்

3.  பொருளாதார சுனாமி : மூழ்கும் வல்லரசுகள்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

13 திருத்தச் சட்டம் - இந்திய இலங்கை நாடகம்? : பீரிஸ் ஒப்புதல்

Comments 6

  1. chandran .raja says:
    15 years ago

    பிரான்ஸ் மக்கள் எப்பவும் போராட்டத்திறகு பழக்கப்பட்டவர்கள். பிரான்சியபுரட்சி பாரீஸ்கம்யூன் எனநீண்ட புகழ் மிக்கபோராட்டவரலாற்றை கொண்டவர்கள். இன்று பிரான்ஸ் பாட்டாளிவர்ககம் எதிர்நோக்கியுள்ள பொருளாதரபிரச்சனை உலகப் பாட்டாளி
    வர்க்கமும் எதிர்நோக்கி உள்ள பிரச்சனையே!

    முதாலித்தவபொருளாதார உற்பத்திமுறையின் சீர்கேடுகளில் இருந்து உருவாகுவதே
    இந்த சமூகத்தை தெருவுக்கு இறக்கியுள்ளது. இனி உலகம் பூராவும் இப்படியான போராட்டங்கள் காணப்படும். அமெரிக்கா உட்பட. அமெரிக்காவில் இன்னும் சில மாதங்களில் தீவிரதன்மையை எட்டும்.
    ஆதாயத்திற்கான உற்பத்திகளை விட்டு சமூகத்தின் தேவைக்காக உற்பத்தி செய்வதையும்
    உலகத்து செல்வங்கள் ஒருசிலரின் கையில் குவிந்திருப்பதை தவிர்த்து உலகத்து மக்களுக்கு பகிர்ந்தளிப்பதை நோக்கமாகக் கொண்டு போராட்டங்கள் முன்நகரும்.

    உலகத்தொழிலாளர்களே! ஒன்றுபடுங்கள் என்பதைத்தவிர வேறு கோஷம் எதுவும் இல்லை.

    • Shiva says:
      15 years ago

      அப்போ அடுத்த பிரெஞ்சுப் புரட்சிக்கு நாள் குறித்தாயிற்றா?
      போராளிக் குணதை நெறிப்படுத்த 1968 முதலாக உருவான மாற்றுத் தலைமைகள் தவறி விட்டனவே!
      நவ பாசிசம் வளர்ந்த அளவுக்கு அவர்கள் வளரவில்லையே!

      • chandran .raja says:
        15 years ago

        மானிடவரலாற்று வகைப்பட்ட போராட்டத்திற்கு பிரான்சியப் பாட்டாளி
        வர்க்கம் எப்பவும் முன்னுதாரணமாகவே இருந்திருக்கிறார்கள்.இவர்கள்
        களில் இருந்து கற்றுக்கொண்டவவை ஏராளமாக இருக்கின்றன.
        1968 டையும் 2018 இதன் ஒப்பிட முடியாது.
        திரும்பவும் நச்சு வட்டத்திற்குள் உலகம் உள்ளீர்கப்பட்டிக்கிறது. சிலவேளைகளில் பத்து பதினைந்து வருடங்கள் என்று சொன்னீர்களே
        ஏன்? இப்படி அறுபது வருடங்களுக்கு பின் என்றென்று ஒரு கேள்வி கேட்கலமெே ஒழிய வேறு எதும் இல்லை.
        மானிடநீதிக்கு காலம் தாமதித்தால் நாம் என்ன செய்வோம் செய்வோம்?.
        அதையும் முடிந்தவரை ஆய்வுக்கு உட்படுத்துவோம்.
        பூமிப்பரப்பில் முதாலித்துவத்துவத்தை வீழ்த்தி பாட்டாளிவர்க்கத்தின்
        சர்வவாதிகாரத்தை ஏற்படுத்துவது தவிர்க முடியாத வாறு நடந்தே தீரும்.இந்த கோஷமே! உலகப்பாட்டாளிகளின் “ஓம்” என்கிற பிரணவ
        மந்திரமாகட்டும்.

  2. a voter says:
    15 years ago

    ஓய்வூதிய வயதா ஓய்வு பெறும் வயதா உயர்த்தப்பட்டுள்ளது? தனியார் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது நல்லது தானே? விஞ்ஞான வளர்ச்சிகளின் மூலம் உயிர் வாழும் காலம் உயர்ந்துள்ள நிலையில் ஓய்வு பெற்று சும்மா இருப்பதை விட அதிக காலம் வேலை செய்வது நல்லது என்று நம்புகிறேன்.

    தயவு செய்து விளக்கவும்.

    • Shiva says:
      15 years ago

      a voter
      எல்லாத் தொழில்களிலும் முதுமையில் உழைக்க இயலாது.
      முக்கியமானது முதுமை என ஏற்கப்பட்ட வயதில் ஓய்வு பெறுவதற்கான உரிமை மட்டுமே.
      மேற்கொண்டு உழைப்பது அவரவரது சுயவிருப்பாயிருக்கலாம். அதைத் தடுக்கும் தேவை இல்லை என்பதில் உங்களுடன் உடன்படுகிறேன்.

  3. THAMILMARAN says:
    15 years ago

    போராட்டத்திற்கும்,கலகத்திற்குமான இடைவெளீயில் சன்நாயகம் தன்னைப் புதுப்பித்து முதலாளளீத்துவம் காப்பாற்றப்படுகிறது.தொளீலாளர்களீன் இந்த எழுச்சி என்பது கூட இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்படுவது தெரியாமலே இல்லாமல் செய்யப்படுகிறது.மறூபடி,மறூபடி அதிகார வர்க்கம் வெற்றீ பெற்றூ விடுகிறது,

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...