பிரச்சினை இங்கு புலிகளது நடவடிக்கைகளில் மாத்திரமல்ல. மாறாக புலிகளுக்கு மாற்றாக அமைப்புக்களை கட்ட முனைந்தவர்களது பேரிலும் இருக்கிறது. எமது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய சித்தாந்தங்களான வர்க்கவாதம், சாதியம், ஆணாதிக்கம், பிரதேசவாதம், முஸ்லிம் ‐ சிங்கள மக்கள் மீதான தப்பெண்ணங்கள் போன்ற எவற்றுக்குமே சவால் விடும் வேலைகள் எமது தரப்பில் தீவிரமாக முன்னெடுக்கப்படாதபோது, இந்த ஆதிக்க சித்தாந்தங்கள் எமது போராட்டத்தில் அதிகம் செல்வாக்கு செலுத்தியது. அதன் விளைவுகள் தான் இந்த தோல்விகளில் வெளிப்பட்டதாகும். முன்னேறிய பிரிவினரான நாம் எம்முன்னே இருந்த கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, போராட்டத்தின் சித்தாந்த மேலாண்மையை நிறுவுவது சாத்தியப்பட்டிருக்குமானால், புலிகளுக்கு எதிரான ஒரு பலமான அரசியல் சக்தியாக நாம் நிலை பெற்றிருக்க முடியும். ஆனால் அதற்கான புரிதலும், அதனை அவசியப்படுத்த தேவைப்படும் கடுமையான உழைப்பும், விடாப்பிடியான செயற்பாடும் எம்மிடம் இருக்கவில்லை. இப்படியாக நாம் முன்னேறிய பிரிவினர் இழைத்த பாராதூரமான தவறுகளையும் இணைத்தே இந்தச் சடுதியானதும், முழுமையானதுமான தோல்வியைப் புரிந்து கொள்ள முடியும் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது மட்டும் தான் எந்த விதமான ஆரோக்கியமான முன்னெடுப்புக்களும் எதிர்காலத்தில் சாத்தியப்படும்.
கடந்த காலத்தில் நடைபெற்ற கட்டற்ற அராஜகவாதங்களுக்கு காரணம் அமைப்பல்ல. மாறாக அமைப்புத்துறையை தன்னியல்பாக முன்னெடுத்ததேயாகும். அமைப்புத்துறையை முற்றாக நிராகரித்தவர்கள் உண்மையில் அதன் அங்கத்தவர்களது சுதந்திரமான நடவடிக்கையை ஊக்குவிக்க முடியவில்லை. மாறாக, அந்தந்த அமைப்புக்களில் இருந்த கற்றறிந்த, பேசும் ஆற்றல் மிக்க சில மத்தியதர வர்க்க புத்திஜீவிகளது கரங்களில் அதிகாரங்களைக் குவிப்பதற்கே வழிவகுத்தது. இது தன்பங்கிற்கு மேட்டுக்குடி அரசியலுக்கே வழிவகுப்பதாக அமைந்தது.
இப்படிக் கூறுவதனால் நாம் ஏற்கனவே இடதுசாரி அமைப்புக்களில் காணப்படும் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சினைகளைப் புறக்கணிப்பதாக அர்த்தப்படுத்தத் தேவையில்லை. புரட்சிர அமைப்புக்கள் அதிகாரமயமாதல் பற்றிய பிரச்சினைகளை இப்போதும் நாம் முகம் கொடுத்து முறியடிக்க வேண்டிய பிரச்சினைகளாகவே கருதுகிறோம். இது உண்மையில் அமைப்புத்துறை பற்றிய பிரச்சினையைக் கோட்பாட்டு மட்டத்தில் அணுகி தீர்வு காண்பதால், பல்வேறு மாற்று அமைப்பு வடிவங்களின் நடைமுறை அனுபவங்களை பொதுமைப்படுத்தி ஆய்வு செய்வதனால் மட்டுமே சாத்தியப்படும். மாறாக, இந்தப் பிரச்சினையை பொதுப்புத்தி மட்டத்தில் அணுகி, அமைப்புத்துறையை அப்படியே நிராகரிப்பதானது ஒடுக்கப்படும் மக்களுக்கு, அவர்கள் கையில் இருக்கக் கூடிய ஒரேயொரு சாதனத்தையும் கைவிட்டுவிடுவதைக் குறிக்கும். ஆகவே அமைப்புத்துறை என்பது நிராகரிக்கப்பட வேண்டியதல்ல. மாறாகக் கோட்பாட்டு மட்டத்தில் இன்னும் கறாராகப் பரிசீலிக்கப்பட வேண்டியதாகும். இந்த விடயத்தில் எதிர்காலத்தில் வியூகம் தனது கவனத்தைக் குறிக்கும் என்பதை மட்டும் இப்போதைக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு நேற்று 27.12.2009 ஞாயிற்றுக் கிழமை பிரான்ஸ் “புதிய பயணிகள் ” சார்பில் ஒழுங்கமைக்கப்பட்டு பாரீஸ்சில் நடைபெற்ற “மே 18 இயக்கத்தின்” கோட்பாட்டு இதழான “வியூகம்” வெளியீட்டு நிகழ்வில் அச் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ரகுமான் ஜான் தெரிவித்தார்.
இவ் விமர்சன உரையாடல் நிகழ்வில் பல்வேறு அரசியலாளர்கள் குறிப்பாக “ஓசை” மனோ, உதயகுமார் ,நேசன் , சுதாகரன், மகேஸ் தங்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் கருத்துக்களையும் முன் வைத்தனர். இவ் வியூகம் சஞ்சிகை பற்றிய அறிமுகத்தையும் விமர்சனத்தையும் வி.ரி இளங்கோவும், லியோதர் பெர்ணான்டோவும் முன் வைத்து உரையாற்றினார்கள்.
இந் நிகழ்வுக்கு பிரான்ஸ் ” புதிய பயணிகள்” செயற்பாட்டாளர் அசோக் யோகன் தலைமை வகித்தார். இவ் விமர்சன கலந்துரையாடல் பற்றிய முழுமையான பதிவு பின்னர் இனியொருவில் வெளிவரும்.
ஜனநாயக அரசியல் அமைப்பு வடிவங்களாக இதுவரை காணப்பட்ட வடிவங்கள் எல்லாம் அராஜகம்/ வன்முறை / ஆதிக்கவெறி கொண்டதாக இருந்தது வரலாறு. தோழர் ரகுமான் ஜான் அவர்களின் அமைப்புத் துறை தொடர்பான இந்த உரை பல்வேறு கருத்துக்களத்துக்கு வழிசமைத்து எமக்கு புதிய நம்பிக்கையை பெற்றுத்தரவேண்டும்.
இது ஒரு நல்ல முயற்சி.இப்போது எம்மிடையே( தமிழரிடையே) இருக்கும் அமைப்புத்துறை வெற்றிடத்தை நிரப்ப(மே18) இவர்கள் முயற்சி செய்வார்கள் என நம்புகிறேன்
மூன்று தசாப்தங்களாக நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற பயங்கரவாதத்தை இல்லாதொழித்து தாய் நாட்டின் வெற்றியினை உறுதி செய்த 2009ஆம் ஆண்டினை வரலாற்றில் பதித்துவிட்டு நாம் 2010ஆம் ஆண்டிலே காலடி எடுத்து வைத்துள்ளோம்.
குறுகிய நோக்கங்களை விட்டு விட்டு பொதுவானதொரு நோக்கத்திற்காக அனைவரும் அணிதிரண்டு நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய காலம் பிறந்துள்ளது. பிறக்கின்ற 2010ம் ஆண்டின் புதிய ஆரம்பத்துடன் சிறந்ததொரு எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்போம்
செளபாக்கியம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை நாட்டில் தோற்றுவிப்பதே எதிர்காலத்தில் எமக்குள்ள பொறுப்பாகும். செய்ய முடியாது என நினைத்த சவால்களை வெற்றிகொண்டு ஒரே நாட்டு மக்களாக அபிமானத்துடன் வாழ்வதற்குரிய சூழ்நிலையினுள் சிறந்ததொரு நாட்டினை கட்டியெழுப்புவது ஓர் இயலாத விடயமன்று
செழிப்பான இலங்கையினுள் நற்குணமிக்க ஒழுக்கமான சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான பாதையை திறக்கும் அபிவிருத்திப் பணிக்கு நேரடிப் பங்களிப்புச் செய்வது அனைத்து இலங்கையர்களினதும் கடமையாகும்
“தாய் நாட்டின் வெற்றியினை உறுதி செய்த 2009ஆம் ஆண்டினை…”
இதைக் கேட்டல் வன்னியில் உலாவுகிற 30 000 ஆவிகள் விலாப்படைக்கச் சிரிக்கும்.
“தாய் நாட்டின் வெற்றியினை உறுதி செய்த 2009ஆம் ஆண்டினை…”
இதைக் கேட்டல் வன்னியில் உலாவுகிற 30 000 ஆவிகள் விலாப்புடைக்கச் சிரிக்கும்.
எ மது எல்லோருடைய முயற்சியிலும் நாடு(இலங்கை) சிங்கப்புரை விட முன்னேறியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை இப்போது டூ லேட். நடந்த இனக்கலவரங்கள் மூலமாக கொல்லப்பட்ட வெளியேற்றப்பட்ட தமிழர்கள் ஏதோ ஒரு துறையில் முன்னேறியிருந்தவர்கள்தான் .தபால் புகையிரத சேவைகளிலில் இருந்நவர்கள் கொல்லப்பட்டவர்கள் தவிர எதுவுமே இல்லாமல் பிரபாகரனுக்கு கட்டப்பட்ட அதே கோவணத்துடன் அகதிகளாக அனுப்பப்பட்டார்கள்.
இந்த கொலை கலாச்சாரம் மூன்று தசாப்தங்களுக்கு முன்பே சிங்களஇனவாதிகளால் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது நண்பா!
.பிரபாகரன் என்ரால் அது தனி மனிதன் அல்ல அது தமிழ் இன் அடையாலம்.அதனால்தான் பிணம் பார்வைக்கு வைக்கப்பட்டது.மனிதம் புதைக்கப் பட்டு தமிழ் இனம் அழிக்கப்பட்டது.
கடந்த காகல தவருகல்லுக்கெல்லாம் அமைபப்ப்ப்ப்கலின் தலைமைகலெ காரனம்.
அடேங்கப்பா…….கிழம்பிட்டாங்கப்பா…………கிழம்பிட்டாஙப்பா…………..பூனை இல்லாதா வீட்டில…….எலி ஓடி விழையாடுதாம்……..உங்கழைப் போல தமிழரிட்காகவ…எம் தலைவன் பிரபாகரன் தமிழ் ஈழம் கேட்டார்…. தலைவாழ இலையில……..அழகாய்……பொங்கல் சாப்பாடை வைத்துவிட்டு ..ஒரு ஒரமாய்….அதன் மேலேய் ……மலத்தை ..வைத்தால் ..எப்டி இருக்குமோ………….அப்டி இருக்கு உங்க பேச்சு…..
ஒரு மாற்றுக் கருத்தையும் கேட்க ஆயத்தமில்லாததாலே தான் தமிழ் மக்களின் போராட்டம் இந்தக் கதிக்கு வந்தது.
இன்னமும் நாம் அதை உணர ஆயத்தமாக இல்லை.
கருத்தைக் கருத்தால் எதிர்த்துப் பழக வேண்டும். பேச்சுக்கு வாய்ப்பூட்டுப் போட முயல்வது தவறு.
தமிழீழம் என்பது ‘தந்தையோ’ ‘அண்ணனோ’ ‘தம்பியோ’ பெற்றுத் தருவதல்ல.
விடுதலை என்பதுமக்கள் போராடி வெல்லுகிற விடயம். தமிழ் மக்கள் வேண்டுவது சுயநிர்ணய உரிமை.
அது எல்லாருடையதும் உரிமை. ஒரு சிலருடையது அல்ல.
மாற்றுக் கருத்து……..மாற்றுக்கருத்து…….தமிழறிற்கு அடிமை இல்லாததும்.சுதந்திறமானதுமான வாழ்வுக்கு…….என்றுமே ..தமிழ் ஈழமே தேவை.இதில…….என்ன மாற்றுக்கருத்து..?….சொல்லுறீரா.!….இதுக்காகத்தானே தமிழரின் போராட்டமே….இதுக்கு மறு கருத்து சொல்லுறீர் எண்டால்……… நீர்………..தமிழ் ஈழத்தை எதிர்க்கிறீர் எண்டுதான் அர்த்தம் அன்பரே…………………………………….மாற்றுக்கருத்துக்கு என்றுமே நான் எதிரி அல்ல …அதை நீர் சொல்லும் காலமும்……சூழலும் தான் பிழை……………….ஒரு சுதந்ததிர நாட்டில் மேடை போட்டு …….கூட்டம் போட்டு…… உங்கழைப் போல ஆட்கழிற்கு….சொல்ல நாழும் இருக்கு…. நேரமும் இருக்கு…….ஆனால்…எமது நிலமை அப்படியா…..எதிரி பாத்துக் கொண்டு இருப்பானா… நீங்க எல்லாரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க…….அப்புறமா…. நாமே சண்டை பிடிக்கலாம்..இன்று..போய்..நாழை வா எண்டு சொல்ல நாங்க என்ன ராமன் கூடவா சண்ட போடுறோம்
குட்டையைக் குழப்பிப் பயன்பார்க்க முனையாதீர்கள்!
ஆக்கமாக உருப்படியாக உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்! இல்லாவிட்டால் அமைதியாயிருங்கள்.
எந்தக் குட்டையை யார் குழப்பினார்கள்?
குழப்பத்தின் நடுவே தெளிவைத் தேட முடியாவிட்டால் தேடுகிறவர்களை ஏன் திட்டுகிறீர்கள்?
முதலில் இங்கே உள்ள மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற அக்கறை கூட இல்லாமல் முடிவுகளை எடுக்கிறவர்கள் குட்டை குழப்புவதைப் பற்றிப் பேசலாம்.
உருப்படியாக என்னநடக்கிறது என்று சொல்வீர்களா?
இத்தனை அழிவுக்குப் பிறகும் அதே பாதையில் அதே விதமான அடக்குமுறை மொழியில் தான் புலம்பெயர்ந்த ‘அடியாட்கள்’ பேசப் போகிறார்களா?
அதே தவாறான பாதையில் தான் போகப் போகிறர்களா?