இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு சம்பந்தப்பட்ட இராஜதந்திரியிடம் விசாரணை நடத்தியபோது, அவர் அதனை மறுத்துள்ளதாகவும் தனது பொருட்களையே அவர் கொண்டு வந்ததாகவும் வீட்டுரிமையாளரின் பொருட்களை அல்ல என்றும் கூறியிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் டெய்லிமிரர் இணையத்தளத்துக்குக் கூறியுள்ளன.
எவ்வாறாயினும் அந்த இராஜதந்திரி குற்றமிழைத்திருந்தால் ஜப்பானிய வீட்டுரிமையாளருக்குச் சொந்தமான பொருட்களை உடனடியாக இராஜதந்திரியின் சொந்தச் செலவில் கப்பலில் ஏற்றி அனுப்புமாறு வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தும் என்று அறியவருகிறது.
இந்த இராஜதந்திரி அரசியல் நியமனம் பெற்றவர் என்றும் ஒப்பந்த அதிகாரியாக ஜப்பானில் “மினிஸ்ரர் கவுன்சிலராக%27
சேவையாற்றியதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறின. தனது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் சுமார் 5 மாதங்களுக்கு முன்னர் இவர் நாடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் கொழும்புக்குத் திரும்பி வந்தவுடனேயே ஜப்பானிய வீட்டுரிமையாளர் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்புகொண்டதாகவும் தனது பியானோ, பழையகால மணிக்கூடு, விலை மதிப்புள்ள சுவரோவியம் என்பனவற்றை இராஜதந்திரி கொண்டு வந்துவிட்டதாகக் குற்றச்சாட்டுத் தெரிவித்ததுடன், உடனடியாகத் தனது பொருட்களைத் திருப்பியனுப்புமாறு வலியுறுத்தியிருந்ததாகவும் அந்த வட்டாரம் உறுதிப்படுத்தியது.
இந்த முறைப்பாடு கிடைத்தவுடனேயே வெளிவிவகார அமைச்சு முழுமையான விசாரணையை ஆரம்பித்திருந்தது.
பியானோவும் விலைமதிப்புள்ள ஓவியமும் தனது உடமையெனவும் பழங்கால மணிக்கூடு தலைமுறை தலைமுறையாக தமது குடும்பத்தினரிடையே கைமாறப்பட்டு வந்தவொன்று என்றும் ஜப்பானிய வீட்டுரிமையாளர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இவங்களுக்கு எங்க போனாலும் களவுதான் தொழில். யாழ்பாணத்தில் கொள்ளை, வன்னியில் கொள்ளை, வெளிநாட்டில் விளையாடப் போனா களவு. இப்ப இருந்த வீட்டில் சுருட்டல். சொந்தமாக உழைக்கவே இவங்களுக்குத் தெரியாதா?
அப்ப எங்கடை ஆட்கள் எல்லாரும் சுருட்டாத, சொந்தமாக உழைக்கிற தரவழிகள் எண்டா சொல்லுறியள்?
நல்ல பகிடி தான் போங்கொ!