தேசத் துரோகம் செய்ததாகவும், மார்க்சிய கொள்கையாளர் நாராயண் சன்யாலுக்கு உதவியதாகவும் குற்றம்சாற்றப்பட்டு, சட்டீஸ்கர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள மனித உரிமைப் போராளி பினாயக் சென்னை உடனடியாக பிணையில் விடுவிக்கக் கோரி நோபல் பரிசு பெற்ற 40 அறிவியலாளர்கள் கையெழுத்திட்டு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
“தங்களுக்கு உதவிக்கொள்ள இயலாத மக்களுக்கு உதவ தன்னையே அர்பணித்துக்கொண்ட நிகரற்ற, துணிச்சல் மிகுந்த, சுயநலமற்ற மருத்துவர் பினாயக் சென்னை விடுவிக்கக் கோருகிறோம்” என்று 1965ஆம் ஆண்டு நோபர் பரிசு பெற்ற ஃபிரான்சின் பிரான்சுவா ஜாக்கப் முதல் 2009ஆம் ஆண்டு நோபர் விருது பெற்ற இந்தியரான முனைவர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் வரை உலகின் 12 நாடுகளைச் சேர்ந்த 40 நோபல் பரிசு பெற்றவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
“எங்களைப் போன்ற அறிவியலாளரான 61 வயதாகும் மருத்துவரும், மனித உரிமை போராளியுமான பினாயக் சென் கடந்த மாதம் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதை அறிந்து ஏமாற்றும், ஆச்சரியமும் அடைந்தோம்.
இந்த வழக்கின் அடிப்படையில் 2008ஆம் ஆண்டு பினாயக் சென் சிறைப்படுத்தப்பட்டிருந்தபோது நாங்கள் அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்காக நாங்கள் கூறியிருந்த நியாயத்தை பிறகு இந்தியாவின் உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு அவரை விடுவிக்க உத்தரவிட்டது. அவரை விடுவிக்கக் கோரி அப்போது நாங்கள் கோரிக்கை விடுத்த பல மாதங்களுக்குப் பிறகு எங்களின் சகாக்கள் சிலர், சட்டீஸ்கரில் அவர் பணியாற்றிய இடங்களுக்குச் சென்று அவர் ஆற்றிய சுயநலமற்ற அரும் பணிகளை கண்டு வியந்தனர். அந்த உண்மைகளை நேரில் அறிந்த பின்னரே, ராய்ப்பூர் சிறைச்சாலைக்குச் சென்று அவரை நாங்கள் சந்தித்து பேசினோம்.
இந்த நாட்டில் தங்களுக்குத் தாங்களே உதவிக்கொள்ள வகையற்ற மக்களுக்கு உதவ தன்னைத் தானே அர்பணித்துக்கொண்ட நிகரற்ற, துணிச்சலான, சுயலமற்ற மனிதர் பினாயக் சென். இதற்காக அவர் இரண்டு ஆண்டுக் காலம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டார், வேகமான நீதிமன்றம் அவர் வழக்கை விசாரிக்க இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டு, அவர் தேசத் துரோகம் செய்துள்ளதாகக் கூறி, நியாயமற்ற முறையில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
எங்களுடைய இந்த மறு வேண்டுகோள் கவனிக்கப்படும் என்று ஆழமாக நம்புகிறோம். இப்படிப்பட்ட அநீதிகளுக்கு எதிராகப் பேச…
Comments 1