பேரினவாதம் சிறுபான்மைத் தேசிய இனங்களை சிறுகச் சிறுக அழித்து தேசிய இனங்களைச் சின்னாபின்னமாக்கியுள்ளது. இன்று தமிழ்ப் பெண்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் இன்னுமோர் ஈனக் கூட்டம் இலங்கை முழுவதும் உருவாகியுள்ளது.
ஏகத்துவம் என்ற தலையங்கத்தில் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலான அனைத்து அரசியல் தலைமைகளும் அழிக்கப்பட்ட பின்னர் புலிகளும் அழிக்கப்பட்ட பின்னர் இன்று தேசியத்தையும், தலைவரையும் உபயோகித்து அரசியல் வியாபாரம் செய்யும் சமூக விரோதிகளிடம் தமிழர்களின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
16 வயதுச் சிறுமி உட்பட 6 பெண்கள் வேலைக்கென அழைத்துவரப்பட்டு சமூக விரோதி ஒருவரால் பாலியல் தொழிலுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்ப்பில் நடைபெற்ற இந்த அதிர்ச்சிச் சம்பவம் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.
indian government should stop providing fund to ilankai…,