பலஸ்தீன இராச்சியத்தை நாடாக ஐக்கிய நாடுகள் அங்கீகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக 139 நாடுகளும், எதிராக ஒன்பது நாடுகளும் வாக்களித்தன. 41 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
பலஸ்தீனத்தை நாடாக ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வாக்கெடுப்பு முடிவுகளைத் தொடர்ந்து பலஸ்தீன மக்கள் ரமல்லா நகரில் பாரியளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
பலஸ்தீன நாட்டுக்கான பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு இன்று வழங்கியுள்ளதாக பலஸ்தீன பிரதமர் அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் ஒடுக்கப்பட்ட மக்களோடு இணைந்த பாலஸ்தீன மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை தவிர்க்க முடியாத நிலையில் ஐ.நா அங்கிகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பாலஸ்தீனம் தனி நாடு அங்கீகாரம் பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான வாக்களிப்பில், இந்தியா உட்பட 138 நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இஸ்ரேல், அமெரிக்கா உட்பட 9 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன. 41 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
மொத்தம் 193 உறுப்பினர் கொண்ட ஐ.நா. சபையில் இந்த வெற்றியின் மூலம் பாலஸ்தினத்துக்கு ஐ.நா. சபையின் உறுப்பினர் அல்லாத நாடு என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பாலஸ்தீனிய அதிபர் முஹமது அப்பாஸ் இந்த வாக்குகள் பாலஸ்தீனத்தை இஸ்ரேலிடமிருந்த காப்பாற்ற கடைசி வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
M. K. Stalin is as good as Mahnmoud Abbas. Palestinian Arab is in conflict with the state that is trying to represent him – Abba Eban – Discovery Channel. A Jewish Liberal and Former Foreign Minister of Israel.
உறுப்புரிமையற்ற, பாலஸ்தீன தேச பார்வையாளர் அங்கீகரிப்பின் வாக்கெடுப்பு பெருந்திரையில்,மூன்றாவது நாடாக ஸ்ரீலங்கா “ஆமா” போட்டிருந்தது.
ஐ.நா. என்கிற கூரையின் கீழ் யாரும் எப்படியும் ஓடிப் பிடித்து விளையாடலாம் என்பதே பட்டவர்த்தனமான இந்தச்செய்தி.
தமிழ் இணைய வெளியில்,”பாலஸ்தீனம் ஐ.நா இனால் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது.-இனியொரு ” என்றும்
“தனிநாடு கோரும் வாக்கெடுப்பில் பலஸ்தீனத்திற்கு வெற்றி.-தேசம்நெட்” என்றும், “சுத்துமாத்து” செய்தியாவது வெளி வந்தது.
ஏனையவை மாவீரர் நாள் க(ளி)ழிப்பிலிருந்து மீளவேயில்லை.
////ஏனையவை மாவீரர் நாள் க(ளி)ழிப்பிலிருந்து மீளவேயில்லை.
///// அப்பிடி போடுங்க நெருஞ்சியை குறுக்கா நல்லா குத்தட்டும் .நோர் வேசிய கற் குகை “மைய” ஆவிகள் அடுத்து எது பற்றி மரண விசாரணை “கத்துரை” எழுதலாம் என்று யோசிக்கினமாம்! . !!!! அது சரி குத்துறதுக்கு வெளியே உங்க் இம்மா பெரிய “அரிவை” கொஞ்சம் “காத்தலாமே”.
பலஸ்தீன இராச்சியத்தை ஒரு நாடாக வாக்களிக்காமல், அமெரிக்கா கடும் எதிர்ப்பைக் காட்டிக்கொண்டதுபோல் நாடகமாடியதாகவே நோக்கமுடியும். அமெரிக்காவின் ஆதரவின்றிப் பெரும்பான்மையான ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அங்கத்துவ நாடுகள் எந்த முடிவுகளையும் மேற்கொள்ளாது.
They are still using Israali currency in the West Bank. Israeli Defence Forces have to give the clearance. Gaza Strip is a little difference. Anyway they have to keep moving diplomatically.