Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பாரிசில் புலி உறுப்பினர் பருதி சுட்டுக் கொலை : மாபியா அரசியலின் அடுத்த நிலை

இனியொரு... by இனியொரு...
11/10/2012
in இன்றைய செய்திகள்
0 0
51
Home இன்றைய செய்திகள்

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) முக்கிய உறுப்பினரும், செயற்பாட்டாளருமான பரிதி -ரேகன் – (நடராஜா மதீந்தரன்) அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது. இக் கொலைக்கும் அரசுக்கும் தொடர்பு இருப்பதாக பல இணையத்தள பதிவுகள் தெரிவிக்கின்றன.

 

துப்பாக்கி சூட்டில் ரேகன் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். மாவீரர் தினத்தை இதுவரை காலமும் நடத்திவந்த ரேகன் அவர்களுக்கு சமீபகாலமாக பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் இன்று பின்னிரவு(08.11.2012) பேருந்து நிலையம் ஒன்றில் நின்றிருந்த அவரை நோக்கி 4 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் குழு ஒன்றினாலேயே இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. சுட்டவர்கள தாம் பார்த்ததாக ஒரு தமிழர் கூறியுள்ளார் என சில செய்தி இணையங்கள் தெரிவிக்கின்றன.
பருதியின் கொலை விடுதலைப் புலிகள் சார்ந்த குழுக்கள் இடையேயான மோதலின் அடுத்த கட்டமாக இருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு. அதே வேளை இன்று இலங்கை அரசு உட்பட உலகின் உளவு நிறுவனங்களின் ஆடுகளமாக மாறியுள்ள புலம்பெயர் தமிழர் அரசியல் மாபியாக் குழுக்களின் அரசியல் வடிவத்தை நோக்கி நகர்கிறது. தொடர்ச்சியான இவ்வகையான கொலைக் கலாச்சாரம் பல எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
வடகிழக்கில்  பெளத்த  சின்னங்கள்  பாதுகாக்கப்பட வேண்டும் : துறவி

வடகிழக்கில் பெளத்த சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் : துறவி

Comments 51

  1. mahen masil says:
    13 years ago

    புலம்பெயர் மண்ணில் நடந்த இக்கொலை வன்மையாக கண்டிக்கபட வேண்டியது.

    இவ்வளவு விரைவில் எப்படி அரச உளவாளிகள்தான் செய்தார்கள் என்று
    கண்டு பிடித்தார்கள்.

  2. thevan says:
    13 years ago

    நிச்சயமாக கண்டிக்கப்படவேண்டிய கொலை, விடுதலைப் புலிகள் சார்ந்த குழுக்கள் இடையேயான மோதலின் விளைவோ இல்லை அரசு தொடர்பு குழுக்களின் செயலோ வன்முறைகள் கண்டிக்கப்படவேண்டியதே. இது போன்ற எவர் மீதான வன்முறையையும் கண்டிக்கும் கலாச்சாரம் உருவாக வேண்டும்.

  3. நெருஞ்சி says:
    13 years ago

    ஒரு மாவீரர் மாதம் உருவாகி வருகிறது.

    மிகுதி நாட்கள் நிரப்ப இன்னும் ஆட்கள் தேவை.

    உடனடியாக விண்ணப்பிக்கவும்.

    செய்தியின் கொசுறு:அதென்ன “மாபியாக் குழுக்களின் அரசியல் வடிவம்”? “அரசியல் வடிவம்” உருவானால் அது மாபியாக்குழுதானே.

    • KARAN says:
      13 years ago

      POLITICS= MAFIA=ECONOMICAL IMPOTENT(POTTAI)= DECORATED MODERN INDIA

  4. manithan says:
    13 years ago

    பிரான்சில் பல தடவைகள் இப்படி கொலைகள் நடக்கின்றன. பிரான்ஸ் அரசு ஏன் கண்டு கொள்வதில்லை?

  5. chandran.raja says:
    13 years ago

    ஆடும்சொத்து அசையாச் சொத்துக்கு குத்துவெட்டு படுகிறார்கள். தங்களுக்கு தாங்களே கணக்கைத் தீர்த்துக் கொள்ளுகிறார்கள். இதையாரும் அரசியல் பிரச்சனையாக்க முனைய வேண்டாம்.

    இதை ஏற்கவே ஐரோப்பாவாழ் தமிழ் தீர்க்கதரிசிகள் முன்மொழிந்தவை தான: சிலருக்கு இது புதினமாக தோற்றுவதில் வியப்பில்லை.

    • MustangGT says:
      13 years ago

      You are always wise after the event !

      • chandran.raja says:
        13 years ago

        இப்பவாவது புரிந்துதெல்லே!. இனியாவது வாலை ஒட்ட நறுக்குங்கள். இறைச்சி தின்னுகிற பல்லை கழட்டி தோலை உரித்தெறியுங்கள். பெங்குளுர் நித்தியானந்தசாமி ஆன்மீக வேஷம் போட்ட மாதிரி முகத்தை தொங்க போட்டு விடுதலை வேஷம் போடாதீர்கள்.

        இனிமேலாவது யாரிடம் காசுவாங்கினால் ரசீத்து கொடுங்கள்.
        தலைவரின் அனுமதியிடம் தான் செயல்படுகிறோம். இது பாதுகாப்பு- ரகசியம் சம்பந்தபட்ட பிரச்சனை என கதை விடாதீர்கள்.

        மாற்று இயக்களுக்கு மண்டைபிளந்தவர். இராணுவத்தால் மண்டைபிளந்து மூன்றுவருடங்கள் ஐந்து வருடங்கள் ஆகின்றன. இதையும் நம்புங்க!. வசூலை தொடர்ந்தும் நடத்துவதற்கு அங்கையிருக்கிறார் இங்கேயிருக்கிறார் உரிய நேரத்தில் திரும்பி வருவார் பஜனை செய்வதை நிறுத்துங்கள். நான் இப்ப புலியில்லை புதுத்தாளத்தில் மெட்டமைத்து பாட்டுப் பாடாதீர்கள். முடிந்தால் உங்களுக்கு தெரிந்த புலிஆசாமிகளுக்கும் தெரிவியுங்கள். முடிந்தால் நெடுமாறன் வைக்கோ சைக்கோ பேர்வழியான சீமான்னுக்கும் செய்தி அனுப்புங்கள். முடிந்தால் அறுபது வருடப் பல்லவியை ஒரே மாதிரி குரலில் பாடும் தேசியக்கூட்டமைப்புக்கும் ஒரு ஈமெயில் அனுப்பிவிடுங்கள் திரு முஸ். இனியாவது புதுபிறவி எடுத்தோம் புதுவாழ்வு வாழ்கிறோம் என்கிற சேவைமனப்பான்மை உங்களுக்கு கிட்டட்டும்………….! பிழைத்துப் போங்கள் ஆனால் மக்கள்பக்கம் தலைவைத்தும் படுக்காதீர்கள். சில பிறவிக் குணங்களை மாற்றமுடியாது. அது உங்களை அறியாமலே சுருட்டத்தான் மனம் வரும் அதற்காகவே!. வேறு சந்தேகமிருந்தாலும் அடிக்கடி கூச்சமில்லாமல் கேளுங்க!

    • சி.சந்திரமௌலீசன் says:
      13 years ago

      //திரு சந்திரன் ராஜா நீர்  விபச்சாரியா எனக் கேட்டு நான் எழுதியதற்கு உங்கடை  விளக்கத்தை தருவீங்களா பிளீஸ் ???
      கேள்வியை ஆங்கிலத்திலேயே தருகின்றேன் . 
      ஏதாவது தெரியாத சொற்கள் இருந்தால் சொல்லுங்கோ கையோடை ஆங்கில வகுப்பும் எடுக்கலாம் என யோசனை . ஹி ஹி 

      வேறுவிடைங்கள் எழுதி திசை திருப்பவேண்டாம் . புத்தகங்கள் படித்த உங்களுக்கு விவாதப் பொருளுக்கு ஆப்பால் செல்லாமல் பதில் சொல்ல தெரியும் என நம்புகின்றேன் 

      //////chandran.raja—-/நான் ஈ.பி.ஆர்.எல்.எவ்யையோ. டக்கிளஸ் தேவானந்தா கட்சியையோ சேர்ந்தவன் அல்ல. நிலமை கருதி அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறேன் என்றால் அது உண்மை.——– chandran.raja   /////
      please explain what situation is making you to support Douglas. are they holding your wife ? are they threatening to rape your family member ?
      in that case I can help you to get out the hell . I know they are doing that . the article itself says a minister raped the girl . 
      other wise , if it is 
      just to fill up you stomach ?  
      don’t you think that supporting a politician with whom you don’t agree is political prostitution .
      how would you feel if call you a prostitute ? 
      how would you feel , when I get a chance to meet you child or wife and tell them that “your husband /father is a prostitute and he is keeping you by prostitution .
      no hard feelings my dear , these questions arose from your statement above.  my apologies if I had  heart you . that was not the intention . no hard feelings once again my dear . 

      • chandran.raja says:
        13 years ago

        உங்களை நினைக்க திருவிளையாடல் திரைப்படத்தில் தருமியின் பாத்திரம் தான் நினைவுக்கு வருகிறது. எனக்கு கேள்வி கேட்கத் தெரியும் என்பது மாதிரி.

        உங்கள் தாய்ப் பாஷை ஆங்கிலா? தமிழா?? அல்லது மெத்தப்படித்த மேதாவித் தனமா? ஆங்கிலம் படிப்பதற்கு வேறு இணைத்தளங்கள் இருக்கிறன. இனியொருவில் அதற்கு சம்மதிக்க மாட்டார்கள்.

        ஆங்கில எழுத்தில் உங்கள் மேதாவித்தனம் கிழிந்து தொங்கிறது என்பது உங்களுக்கு தெரியாதவிடாலும் ஒருசில வாசகர்களுக்கு தெரியத்தான் செய்யும்.

        அரசியலை விட்டு ஆங்கிலவகுப்பு எடுக்க முயல்வது கதையை திசைதிருப்பி போவது என்பது ஒருபயலுக்கும் தெரியாது என்று நினைக்கறீர்களா! ஆங்கிலம் தெரிந்தவன் தான் அரசியல் கதைக்கமுடியும் என்றால் உலகத்தை பிரித்தானியாவும் அமெரிக்காவும் தான் ஆளமுடியும் இந்த சின்ன விஷயத்தை தெரிந்துகொள்ள எனது அறிவுரைதான் உங்களுக்கு தேவைப் படுகிறதா?

        பெரும்பாலான விபச்சாரத்திற்கு வறுமைதான் காரணமாக இருக்கின்றன. தமிழனில் எத்தனை பிரிவுகள் இலங்கையில் இருக்கிறது என்பது பற்றி மெளலீசனுக்கு தெரியுமா? புலத்தில் இருக்கிற தமிழன் பெரும்பாலும் ஒருபிரிவாகத் தான்இருக்கிறான். அவன் உங்களைப் போல தாய்நாட்டை யுத்தத்தில் மாட்டிவிட்டு குளிர்காய்பவனே!

        யுத்தம் இடப்பெயர்வு குண்டடி செல்வீச்சு இதுவெல்லாம் புலத்தில் இருந்து உருவாக்கி விட்டவர்களில் நீங்களும் ஒரு பங்குதாரியே! இது 2009 மே 19ம் திகதியுடன் முடிவுக்கு வந்துவிட்டது. இனியும் நீங்கள் கயிறுவிட்டு பணம் பண்ணவே துடியாத்துடிக்கிறீர்கள்.அந்த துடிப்பின் இணைப்பாகப்பாக ஆங்கிலபாடமும் எடுக்க தயாராகி விட்டீர்கள். இதுதெல்லாம் கையால்யாகத்தனத்தின் சிந்தனையின் பிறப்பிடமே! இனியும் கிலுசுகெட்ட எழுத்துக்களை எழுதி உங்களையும் மினக்கெடுத்தி என்னையும் இணையத்தளத்தைம் நாறடிக்காதீர்கள். இது கல்விகற்றவர்களுக்கு அழகல்ல.

        ஆங்கிலவாத்தியார் தேவைப்படும் போது வேலையிடம் காலியாக இருக்கும்போது சொல்லி அனுப்புகிறேன். ஆனால் தயவுசெய்து அரசியலில் மட்டும் ஈடுபாடதீர்கள்.அமைதியை கெடுத்துவிடுவீர்கள் சந்திர மெளலீசன் அவர்களே!.

        • சி.சந்திரமௌலீசன் says:
          13 years ago

          ////////chandran.raja—-/நான் ஈ.பி.ஆர்.எல்.எவ்யையோ. டக்கிளஸ் தேவானந்தா கட்சியையோ சேர்ந்தவன் அல்ல. நிலமை கருதி அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறேன் என்றால் அது உண்மை.——– chandran.raja   /////
          எனக்கு தமிழும் தெரியும் ஆங்கிலமும் தெரியும் அதுக்கு மேலையும் தெரியும் அதை விடும் .
          உமக்காக தமிழில் எழுதுகின்றேன் , உணர்ச்சிவசப்பாடாமல் பதில் தாரும் .
          தயவு செய்து டக்ளசுக்கு ஆதரவு வழங்க உம்மை நிர்பந்தித்த காரணி என்ன என்று விளக்க்கமாக சொல்ல முடியுமா ?
            அவர்கள் உமது மனைவியை பணயம் வைத்துள்ளார்களா ? 
          உமது  குடும்ப உறுப்பினரை பாலியல் பலாத்காரம் செய்வோம் என மிரட்டுகின்றர்களா ?
          டக்ளஸ் இதனைச் செய்வது  எனக்கு தெரியும் ,
          உங்களை நிர்பந்தித்தது எது ? 
          வெறும் பணமும் சுகமும் தானா ? 
          உமது கருத்துடன் ஒத்துவராத அரசியல் வாதிக்கு , வெறும் வயிற்றுப் பிழைப்புக்கு ஆதரவு வழங்கி சீவியம் தள்ளுவது அரசியல் விபச்சாரம் இல்லையா ? 
          உம்மை ஒரு விபச்சாரி என அழைத்தால் என நினைக்கின்றீர் ?  
          உமது பெண்டிரையும் பிள்ளையையும் பார்ப்போர் உமது கணவன் /தந்தை விபச்சாரி என இழிந்தால் உமது உணர்வுகள் எப்படி இருக்கும் . 
          எந்த விரோத எண்ணமும் வேண்டாம் அன்பரே ! இந்த கேள்விகளை நான் உருவாகவில்லை உமது தெளிவற்ற வரிகள் தான் அதன் பிறப்பு . உங்களை மன நோவடிக்கும் நோக்கம் எனக்கில்லை . 
          அவனது கருத்துக்களை எதிர்ப்பவன் ஏற்கும் பொழுதுதான் . அரசியல் வாதியின் வெற்றி உறுதி செய்யப்படுகின்றது  , 
          முடிந்தால் உமது கருத்துக்கு விளக்கம் தந்து இங்கு வருவோர் மனங்களை வெல்லப்பாரும் .
          அல்லது அவதூறு மட்டும் பேசி உங்கள் மாமாவுக்கு , உமக்கும் மானபங்கத் தை ஏற்படுத்தும் .
          தெரிவு உம்முடையது .
          எது விருப்பமோ அதை செய்யும்  மகனே 

        • MustangGT says:
          13 years ago

          சினிமா மோகமும் உண்டோ ? அது தானே பார்த்தேன் ஏதோ மிஸ் பண்ணுதுன்னு.

  6. siva says:
    13 years ago

    ஆயுதக்கலச்சாரத்தை மீண்டும் அனுமதிக்க முடியாது, இந்த விதமான செயற்பாடுகள்
    அமைதியாக, ஜனநாயக உரிமையுடன் , ஜனநாயக பாதையில் சுதந்திரமாக புலம்பெயர்
    நாடுகளில் உள்ள எமது அடுத்த சந்ததியை வலுவான அரசியல் தளம் பதிக்க தடையான
    செயல். மீண்டும் ஒரு வரலாற்றுத் தவருனடக்க ஆரம்பித்துள்ளது . யாராகவிருந்தாலும்
    மன்னிக்கமுடியாது .

  7. Mahendra says:
    13 years ago

    சுட்டவர்களை தாம் பார்த்ததாக ஒரு தமிழர் கூறியுள்ளார் என சில செய்தி இணையங்கள் தெரிவிக்கின்றன.

    பின்பு எதற்காக கருத்துக்களில் ஊகங்கள்????. பாரிஸ் காவல்துறையும் கோத்தபாயாவின் ஆணையின் கீழ் பணிபுரிகின்றார்களா?.

  8. P.V.Sri Rangan says:
    13 years ago

    பாரீசில் புலிப் பாசிஸ்ட்டுப் பருதியென்ற[பருதி-ரேகன் – (நடராஜா மதீந்தரன்) ] மாபியா கொல்லப்பட்டதை வைத்து நடாத்தப்படும்”ஆய்வுகள்”,சும்மா “அரசு”வெனக் கதைவிடுதல்பொதுப் புத்தியாச்சு!

    பெரிய-பெரிய புலிப் பினமிகளே அரசோடிணைந்து “அரசியல்” செய்யுபோது இத்தகைய வால்களை அரசு கொல்லவேண்டியிருக்குமா?

    இதைப் புரிந்துகொள்வதற்குமுன் புலிகளுக்குள் இருக்கும் பல இலட்சம் கோடி இரூபாய்களது உரிமையையெந்தப் புலி மாபியாக்குழு ஆதிக்கஞ் செலுத்துவதெனத் தொடரும் போரில் இஃது, எந்த வகையானது?

    ஏதோ பருதியொரு மக்கள் போராளி,மக்களுக்காகப் பாடுபட்டவனெனக் கருத்தாடுவதில் என்ன நியாயமிருக்கு?

    எத்தனை ஆயிரம் மனிதர்களைப் புலிகள் இங்ஙனம் கொன்றார்கள்?

    அதே பாசிஸ்ட்டுக்கள், தமக்குள் அடிபடும்போது இதையும் “மக்கள்-விடுதலை” எனும் பெயரால் நாம் உரையாடிவிடும் சந்தர்ப்பமிருக்கே,அஃதுதாம் கயமைத்தனமானது!

    வினை விதைத்தவர்கள் அறைவடை செய்கின்றனர்.

    அடியுதை,அராஜகமென வெறும் மாபியாக்களாக வலம் வந்த புலம்பெயர் புலிப்பினாமிகள், தமக்குள் அடிபட்டுச் சாகும்போது அந்தச் சாவை மக்களது இழப்பாகச் செய்யும் அரசியலானது சுத்த மோசடியானது.

    இந்தப் பருதிக்கும் மக்களுக்கும் என்ன தொடர்பு?

    முன்னால் போராளிகளது இன்றைய மோசமான வாழ்வுக்காக இவர்கள் என்னத்தைச் செய்தார்கள்?

    கோடிக்கணக்கான டொலர்களைப் பதுக்கி வைத்துவிட்டு அந்தப் போராளிகளை அம்போவென விட்ட கயவர்கள்,மக்களைக் கொன்று சொத்துச் சேர்த்த வரலாறுவொன்றும் மக்களது விடுதலைக்கான போராட்டமில்லை!

    வரலாற்றை உண்மையோடு ஏற்க வேண்டும்.அல்லது, வரலாற்றிலிருந்து அனைவருமே காணாமற் போவோம்!

    ப.வி.ஸ்ரீரங்கன்
    09.11.2012

  9. Kumar says:
    13 years ago

    எனது இளமைக்கால நண்பனின் பிரிவால் வருந்துகிறேன் அவன் ஆத்மா சாந்தி அடைய எனது வேண்டுதல்.
    பாதைகள் மாறிப்போனாலும் சில கடந்தகால கசப்பான உண்மைகளை நாம் நினைவுபடுத்திக்கொள்வது நம் எல்லோருக்குமே நல்லது.
    திலகா் பாரீசில் இருந்தவேளை இரு இளைஞா்கள் கொல்லப்பட்டார்கள் அல்லவா அப்போது நாம் இலங்கை அரச நோக்கி குற்றவாளி என்று கதறினோம் சிங்கள ஏகாதிபத்தியவாதிகளும் பட்டாசு கொழுத்தி மகிழ்ந்தார்கள்அதாவது தமது புலனாய்வுப்பிரிவினா் பாரிஸ் வரை சென்று சாகஸம் செய்துவிட்டார்கள் என்று நம்பி ஆனால் நடந்தது என்ன திலகா் அனுப்பிய கொலையாளிதான் அவா்கள் இருவரையும் கொன்றான் என்பதும் அத்தோடு திலகா் நாட்டுக்கு அழைக்கப்பட்டு வெளியேறமுடியாமல் முடக்கப்பட்டதும் உலகம் அறிந்த உண்மை.

    ஆகவே நமக்கு கொஞ்சம் பொறுமை அவசியம்

    • சி.சந்திரமௌலீசன் says:
      13 years ago

      “ஒரு இனத்தினுள் உள்ள அரசியல், 
      சமூக  சிந்தனை பலவீனங்கள் தான்  எதிரியின் நுழைவாசல் ”
       இந்த ஓட்டைகள் ஊடாக தான் 
      கைக்கூலிகள் எமக்குள் வருகின்றார்கள் .

      • thevan says:
        13 years ago

        Well said: but small correction :ஒரு இனத்தினுள் உள்ள அரசியல்,
        சமூக சிந்தனை பலவீனங்கள் தான் “”அக, புற”” எதிரியின் நுழைவாசல் ”
        இந்த ஓட்டைகள் ஊடாக தான்
        கைக்கூலிகள் எமக்குள் வருகின்றார்கள் .

        WHY small correction? because:: We shouldn’t blame “புறஎதிரி” or “கைக்கூலி” for our பலவீனங்கள். is this LOGICAL THINKING ANNA? please correct me, if I’m wrong.

        • சி.சந்திரமெளலிசன் says:
          13 years ago

          You are correct . Well done. Thank you .

  10. manithan says:
    13 years ago

    சந்திரன் ராஜாவை விபச்சாரியா என கேட்பது நாகரீகமற்றது. ஒருவரை சாடுவதற்கு தமிழில் எத்தனையோ நல்ல வார்ர்த்தைகள் இருக்கின்றன. எதிரியைக் கூட மரியாதையுடன் நடத்துவது ,அழைப்பது மேன்மக்கள் பண்பு.

    • சி.சந்திரமௌலீசன் says:
      13 years ago

      எனக்கும் அதை எழுத கூச்சமாய் தான் இருந்தது மன்னிக்கவும் , 

      தயவு செய்து என்னை மன்னிக்கவும் என்று சொல்ல கூச்சப்படும் பலர் சிம்பிளா sorry சொல்லுவது எனக்கு தெரியும்.

      தமிழிலை சொன்னால் தான் விளங்கும் எண்டு ஐயா சந்திரன் ராசா அடம் பிடடித்தார் தமிழிலை போட்டிருக்கு ஹி ஹி  

      அவருக்கு இந்த தடவை கேள்வி விளங்கும் விடிய எழும்பின உடன் கொம்பியூட்டரோடை குத்தி முறிய போறார் . 

      உங்களுக்கே கூசுது என்றால் அவருக்கு காஞ்ச்சூண்டி பகாஞ்ச்சோண்டி பட்ட மாதிரி இருக்கும் . 

      அவர் கேட்டார் நான் கொடுத்தேன் என்னில் ஏன் காய்கின்றீர்கள் .. ஐயோ ஐயோ சிவப்பு விளக்கு ஏரியா என்பதை அது வெள்ளை விளக்கு ஏரியா அல்ல என்று சொல்ல சொல்ல சொல்லுகின்றீர்களா .

      சந்திரன் ராஜா வுக்கு  பொருத்தமான நாணயமானசொல்லு ஒன்று சொல்லுங்கள் ப்ளீஸ் 

      • chandran.raja says:
        13 years ago

        திரு சந்திரமெளலீசன் அவர்களே! நிர்வாண நடமாடி எல்லோரையும் அசத்திவிட்டீர்கள். இனி இருக்கிற துண்டை எடுத்து இடுப்பில் செருகிக்கொள்ளுங்கள். நீண்டநேரம் பார்க்க சகிக்க முடியவில்லை.

        இந்த நடனத்தை நானும் ஆடியானால் இனியொரு வாசகர்கள் பார்க்கமாட்டார்களா? நீங்கள் கேட்ட கேள்வியை இன்னும் ஒருபடிஉயர்த்தி கேட்டால் இணையத்தில் வெளியிட மாட்டார்களா? நிச்சியம் வெளியிடுவார்கள். அவர்களுக்கு எதுவும் “சுத்தமாக” இருக்கவேண்டும்.

        நீங்கள் எறிந்த மலஉருண்டைகளை நானும் திருப்பி எறியமாட்டேன் என்பது மட்டும் உங்களுக்கு வடிவாகத் தெரிந்கிறது. இதை எப்படி விழுங்கி ஜீரணிக்க பழகினீர்கள் என்பதை இப்போது விபரிக்க போகிறேன்.

        கொட்டடிசந்தியில் வண்டில் இழுப்பவர்கள் மூட்டைதூக்குபவர்கள் தொழில்முடிந்து பட்டணசந்திக்கு வரும் மீனவதொழிலாளர்கள் இவர்களுடன் சரளமான உறவு வைத்திருந்தவர் தான் திரு அல்பிரட்துரையப்பா. இவரை போட்டுத்தள்ளுவதற்கு யாழ்பாணகுட்டிமுதாலித்துவ
        பிரிவு தனது முழுஆதரவையும் வழங்கியது. அதில் நீங்களும் ஒருவர் மெளலீசன் அவர்களே!

        தமிழ்யினத்தில் கெடுகெட்ட சாதியப்பிரச்சனை இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இரத்தத்தையும் ஊனையும் செல்வமாக்கி இலங்கை பொருளாதாரத்தை வாழவைத்து எந்த இன்பதையும் காணாதவர்
        களாக ஆக புதைகுளிக்கு போகிற பெருமைமிக்க மலையகமக்கள் இருக்கிறார்கள். கிழக்கே முஸ்லீம்மக்களுடன் சிங்களமக்களுடனும் ஐக்கியபட்டு உறவாடி வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழர்கள் இருக்கிறார்கள். மலஉருண்டை விழுங்கி ஜீரணிக்கப் பழகி உங்களுக்கு தமிழர்கள் யார் என்று தெரியவில்லை ?

        நீங்கள் தமிழர்களாக கற்பனை செய்வது யாழ்ப்பாண குட்டிமுதாலித்துவ வர்க்கத்தையே! அதுவே உங்கள் வர்க்கத்தன்மை மெளலீசன் அவர்களே!

        நடுத்தெருவை தோண்டி கண்ணிவெடி வைத்து கொண்று விட்டால் அதற்குபெயர் விடுதலைப் போராட்டமா? அடுத்த கனமே இராணுவம் படையெடுத்து வந்து நாசகாரம் செய்யும் என்பது இலங்கைராணுவத்திற்கு மட்டும் உரிய செயல் அல்ல. இந்தியாவை எடுத்துகொண்டாலும் உலகநாடுகளை எடுத்துகொண்டாலும் பலஸ்தீன ஐரீஸ் போராட்டங்களில் இதுதான் விடை. அபப்பாவி-குற்றம் அறியாதமக்கள் கொல்லப்பட்டார். இதுதான் இன்றைக்கிருக்கிற கவலையளிக்கும் செய்தி. அதற்கு நீங்களும் காரணமாக இருக்கிறீர்கள் மெளலீசன் அவர்களே!

        3- 4 லட்சம் மக்களை துப்பாக்கி முனையில் பயமுறுத்தி பயணக்கைதிகளாக பிடித்து வைப்பது விடுதலைப் போராட்டம் அல்ல. பங்கருக்கள் இருந்து கொண்டு மக்களை வழிநடத்துவதாக சொல்வது சந்திரமெளலீசன் போன்ற விடுபேயர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.இது இறுதியில் கோவணம் கட்டுவதற்கும் சேறுபூசுவதற்கும் காரணமாகி விடும் திரு.சந்திரன்மெளலீசன் அவர்களே! மலஊருண்டைகளை விழுங்கி ஏப்பம்விடுவதைவிட்டு மனிதராகரீகத்தின் அமுதங்களை தின்று செமிபாடாக்க கற்றுக்கு கொள்ளுங்கள்.

        நான் எப்படிசொன்னாலும் உங்கள்-குட்டிமுதாலித்துவ புத்தி தமிழீழம் கேட்டுக்கொண்டு கொழும்பில் தொடர்மாடிக்கட்டிடம் கட்டுவதிலேயே கவனத்தை ஈர்ந்த கொண்டிருக்கும்.

        “நீர்ரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நுhல்லளவே ஆகுமாம் அதன் நுண்ணறிவு”.

        • சி.சந்திரமௌலீசன் says:
          13 years ago

          டக்ளசுக்கு ஆதரவளிக்க உம்மை நிர்பந்தித்தது என்ன ? ஏற்காமல் இருக்க வைத்தது என்ன ? நிற செய்வது அரசியல் விபச்சாரம் இல்லையா எனக் கேட்டால் வழுநிலை விவாதம் பன்னுகின்றிரே !!!
           டக்ளசோடை இருக்கிறன் எண்டு அவன் ஒத்துக் கொண்ட பின்  அவனிடம் கருது கேட்க போன நீ முட்டாள் என்று பக்கத்தில் இருக்கிற நண்பன் சொல்லுறான் .

        • P.V.Sri Rangan says:
          13 years ago

          சந்திரன் இராஜா, மிக ஆழ்ந்த கருத்துக்கள்.உங்களை இதில் ஆதரிக்கிறேன்!

          • thevan says:
            13 years ago

            இராணுவம் படையெடுத்து வந்து நாசகாரம் செய்யும் என்பது இலங்கைராணுவத்திற்கு மட்டும் உரிய செயல் அல்ல..///சந்திரன் இராஜா//மிக ஆழ்ந்த கருத்துக்கள்.உங்களை இதில் ஆதரிக்கிறேன்!///P.V.Sri Rangan//படு கேவலமான சமூக அக்கறையற்ற கருத்துக்கள் P.V.Sri Rangan அவர்களே .புலி தவறு ஆகவே இலங்கை ராணுவம் சரி என்ற கருத்து படு கேவலமான கருத்து. I hate this view.

        • P.V.Sri Rangan says:
          13 years ago

          Nadarajah Muralitharan:[புலம் பெயர் புலிப் பெருமுகர் ]
          //அனைத்துப் படுகொலைகளையும் கண்டிப்போம்! வன்மையாக எதிர்ப்போம்! அரசியல் என்ற பெயரால் நிகழ்ந்த , நிகழ்த்தப்படுகின்ற அனைத்துப் படுகொலைகளையும் புலத்திலே வாழும் தமிழர்கள் திரண்டு உறுதியாக எதிர்ப்பதில் எந்தத் தயக்கத்தையும் காட்டிவிட முடியாது. காட்டிவிடக் கூடாது! சபாலிங்கம்,கஜன்,நாதன், றீகன்(பரிதி) என்ற வரிசை இனிமேலும் தொடருவதை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது எம்முன் உள்ள மிகப்பெரிய கேள்வி! இது குறித்த கருத்தாடல்கள், சிந்தனைத் தளங்கள், உரையாடல்கள், செயற்பாடுகள் வேண்டிக் கிடக்கின்றன. ஒவ்வொரு தனி மனிதனும் தனியாகவும், கூட்டாகவும் இவ்வேலைத்திட்டத்துக்குத் தனது பங்களிப்பை வழங்க வேண்டியுள்ளது. நாம் இனியும் ஒரு கணம் தாமதிக்கலாகாது. விரைந்து செயலாற்ற வேண்டிய தருணம்! மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்!//
          http://www.facebook.com/nadarajah.muralitharan?ref=ts&fref=ts

          முரளி இப்படி ஓர வஞ்சனை செய்யலாமா?

          இந்தக் கருத்தை முள்ளி வாய்க்காலுக்கு முன் சொல்லியிருப்பீரா?

          அல்பேர்ட் துரையப்பாவிலிருந்து இதை நாம் அனைவரும் கடைப்பிடித்திருந்தால் நிச்சியம் தமிழ்ச் சமுதாயத்துள் அதிசிறந்த மனிதர்கள் எஞ்சியிருப்பார்கள்.அப்போது,இதை நியாயப்படுத்த நீங்கள் கைக்கொண்ட கயமைக்குப் பெயர்”துரோகி-தேசத்துரோகி”.

          இதன்படி நீங்கள்(அனைத்து மக்கள் விரோதிகளும்-இயக்ககங்களும்) செய்த இந்தத்”துரோகி” க் களையெடுப்பு எத்தனை நல்ல மனிதர்களைக் கொலைக்குள்ளாக்கியது?

          பல் ஆயிரம் மனிதர்களைப் பட்டில் போட முடியும்! அவர்கள் எல்லோரும் உங்கட நாதன்,கஜன்,ரீகன் போன்றவர்களைப் போலத்தாம் உயிருள்ளவர்களாகவிருந்திருக்கிறார்கள்.

          இவர்களையெல்லாம் “துரோகி” எனச் சொன்ன உங்கள் போராட்ட வடிவத்துக்கு இப்போது மடியில் கைவைக்கும் உள்ளடி கஷ்டமாகவிருக்கிறது?

          உண்மையைச் சொன்னால் முரளி இஃது, உங்களுக்கும் நன்றாகத் தெரியும். பிரபாகரன் முள்ளி வாய்க்காலுக்குள் மெல்லச் சிக்குப்பட்டுக்கொண்டிருக்கும் தருணத்துக்கு முன்னமே-வன்னி இறுதியுத்தம் ஆரம்பிக்கும்போதே அவரது நேரடிக் கட்டுப்பாட்டில் வளர்ந்த-பயிற்றப்பட்ட 200 அதி திறன்படைத்த கொமாண்டோ அணியொன்று அவரது கட்டளைக்கொப்ப ஐரோப்பாவுக்குள் வந்து குந்திக்கொண்டது.

          அதுள், ஒரு பகுதி ஜேர்மனிய நகரான ஓபர்கவுசனில்”மக்கள் கடை” ஊழியர்களாகவும் இருந்துகொண்டது.அவர்கள் 50 க்கு மேற்பட்டவர்கள்.

          இவர்கள், பிரபாகரனை எவரெவர் உள்ளிருந்து ஏமாற்றினார்களோ அவ்வளவு பேர்களையும் பழிவாங்கியே தீருவார்கள்.

          புலி வேடமிட்டுப் பணப் பெட்டியை நிரப்பியவர்களும்,”தமிழீழம்”-உறவுகளெனச் சொல்லி மக்களை மொட்டையடித்த புலம் பெயர் புலிப் பெருந் தலைகளும் பெரும் நிதியோடு தலைமறைவாகியிருக்கிறது.

          இதுள், பலர் பெரு வர்த்தகர்களாகவிருந்தபடி இந்தக் கொமாண்டோ அணியை ஏமாற்றத் தொடர்ந்து “தமிழீழம்,தேசவிடுதலை” யெனப் பதுக்கிய சொத்தைக் காக்கப்படும்பாட்டில் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை!

          இதைத் தடுக்கப் பிரபாகரன்தாம் இனி உயிர்த்து வரவேண்டும்.

        • thamizhan says:
          13 years ago

          ” பன்றியுடன்  சேர்ந்த  கன்றும்  மலம் தின்னும்”. தலைவன் எப்படியோ, அவனது  தொண்டனும் அப்படியே.  எஜமான்  எங்கேயோ  , அவனது அடிமை நாயும் அவனுடனையே.  டக்கிளஸை  எல்லாம்  தலைவனாய்  ஏற்றால்  அவனும்  , அவனது மனமும்  எப்படிப்பட்டது  என்று  எல்லாருக்கும் சொல்லியா தெரிய  வேண்டும். பாவம் சந்திரன் றாயா, 35 வருச ஆற்றாமையை எல்லாம்  கொட்டித் தீர்க்கிறார். விடுங்கள்:நன்றாக அழட்டும். இல்லையெல்  அவருக்கு  பைத்தியம் பிடித்து விடும். அழு  ராசா  அழு.

          • MustangGT says:
            13 years ago

            ஓருபடியா இது ஒரு கார்தான் எண்டு கண்டுபிடிச்சிருக்காரு, அடுத்தது எனக்கு ஒரு புதிய ஊர் கண்டு புடிச்சிருக்காரு. குறளுக்கும் கொம்யூனிசத்துக்கும் என்ன கொணக்சன்ங்கிறதுக்குமட்டும் ?

        • MustangGT says:
          13 years ago

          குறளுக்கும் கொம்யூனசித்துக்கும் ஏழாம் பொருத்தமாமே?

          • chandran.raja says:
            13 years ago

            முஸ்தா! விடியமுதல் எழும்பியிருந்து இது என்ன வேலை? மாவீரர்நாள்களுக்கு இன்னும் நாள் இருக்கிறது. அப்படியென்றாலும் பரவாய்யில்லை பிணம் பார்த்து பணம் போட்டுவரலாம் இல்லை எடுத்துவரலாம். இந்த குளிர்காலத்தில் நேரகாலம் தெரியாமல் நித்தரையில்லாமல் திரிகிறதும் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்கும். குறள்-கொம்யூனிஸம் எல்லாதையும் தூக்கி எறிந்து போட்டு உடம்பை பத்திரமாக பாத்துக் கொள்ளவும்.
            முதல் முஸ்தாங்ஜிரி என்கிற கார் “மெடலை” மாற்றி அழகாக முஸ்தப்பா என்று எழுதவும். இதுவே எனக்கும் செல்லமாக வாய்நிறைய முஸ்……முஸ் என்று கூப்பிடவும் வசதியாக இருக்கும்.

          • MustangGT says:
            13 years ago

            அது முஸ்டாங்கில்ல மஸ்டாங் அத மொதல்ல தெரிஞிக்கணும்.

  11. யாழ். says:
    13 years ago

    கொலைவெறியர்கள் எதை அழிக்க நினைக்கின்றார்கள் யாரை அழிக்க நினைக்கின்றார்கள். வெட்ட வெட்ட துளிர்க்கும் மரமாக விழ விழ எழுபவர்களாக புலிகள். பலிகள் அவர்களை அயரவைக்காது என்பது நிதர்சணம். மாவீரன் பரிதிக்கு வீர வணக்கம்.

    • நக்கீரன்2012 says:
      13 years ago

      //வெட்ட வெட்ட துளிர்க்கும் மரமாக விழ விழ எழுபவர்களாக புலிகள்// இது தன்மையில்லை – அதாவது யாரயோ தான் எழ சொல்கிறிர்கள்! நீங்கள் எழ தயாராக இல்லை! யாழ் என்ற பெயருடன் வருவது யாழ் மேலாதிக்க குணாம்சம் கொண்ட வர்க்கம் என்பது தெளிவாக தெரிகிறது! இனி வெட்டி ஒட்டினாலும் புலி எழாது காரணம் ஒட்ட நறுக்கியல்லா விட்டார்கள்!

  12. venu says:
    13 years ago

    ஆழ்ந்த அனுதாபம் செலுத்த வேண்டிய இந்த மரணத்திற்க்கு   ஏன் வீரமரணம் என்று சொல்கிறார்கள் .தயவுசெய்து சற்று புரயும்படி எழுதுங்கோ .
     நன்றி 

  13. ஓணான் says:
    13 years ago

    எல்லாக்கருத்துக்கும் ரெண்டே ரெண்டு வரியில் வரியில் கேள்விகேடிருகார் நம்ம வேணு முடிந்தால் பதில்சொல்லுங்கட போடிப்பசன்களா 

    • thevan says:
      13 years ago

      மரணம் பல வகை :இயற்கை ,விபத்து,,

      விபத்து பலவகை: கொலை…தற்கொலை .அகால …

      . . கொலை பலவகை ;…………,….,மரணதண்டனை …….பழிவாங்கல் … .வீர மரணம் . .

      கொலைகள் பார்க்கப்படும் பார்வைகள் பலவிதம்;;;துரோகி தொடக்கம் வீர மரணம் ,.

      கொலை செய்வோர் பலவகை: புற, அக எதிரிகள்

      மரணம், கொலை :இவற்றை பார்க்கும் பார்வைகள் பலவகை: தனி மனித பார்வை, சமூக பார்வை..

      தனி மனித,சமூக பார்வை பலவகை:தனிமனிதனின் இழப்பு,or (அழிவு ,முடிவு ) ,சமுகத்தின் இழப்பு,அழிவு or விடிவு,குழுவின் இழப்பு,அழிவு ,விடிவு.

      இதே மரணத்தை ஒரு தனிமனிதன்(eg VENU or ஓணான்) கொலை ஆக பார்க்கவில்லை,ஒரு தனிமனித மரணமாகவோ ,அல்லது இழப்பகவோ அல்லது தனதெதிரியின்

      அழிவு ,முடிவு ஆக பார்கிறானே ஒழிய,இந்த கொலையை சகஜமாக ஏற்றுக்கொள்கிறான்,அதன் காரணத்தை பார்க்க மறுக்கிறான்.மறுக்கும்போது தான் அஞ்சலி,அனுதாபம் ,ஆழ்ந்த அஞ்சலி,அனுதாபம் ,இரங்கல்,அல்லது வாழ்த்து,வரவேற்ப்பு என்ற சொற்பதன்கள் வெளிவருகின்றன.

      • ஓணான் says:
        13 years ago

        சரி, ஒத்துகொல்றோம்மப்ப…. மாவீரனுக்கு வீரவணக்கம் ஆனால் தேசியதலவனுக்கு எத்தின ‘மா’ முன்னுக்கு வரும் ?

  14. நக்கீரன்2012 says:
    13 years ago

    துரோகி முதல் விபச்சாரி என்ற சொல் பதங்களை கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத பலவீனமானவர்கள் பாவிப்பது. தமது அரசியல் கருத்தை துப்பாக்கி மூலம் மக்களிடம் செல்ல வைத்த புலிகள் இன்று கூண்டோடு கைலாயம் போன பின்பும்
    சில புலிவால்கள் அதே பாணியில் தொடர்ந்தும் அரசியல் செய்து வருகிறார்கள்.
    நேற்று ஐ.எல்.சி வானொலியல் பிரபல லண்டன் ஆண்வாளர்கள் இருவர் வந்து வீரவணக்கம் செய்து பொய்யுரைத்தார்கள்.இந்த ஆய்வாளர்கள் இன்னமும் மக்களை பொய் சொல்லி ஏமாத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இவர்கள் பொய்யர்கள். இன்னமும் பிரபாகரன் இறந்ததை வெளிப்படையாக சொல்ல திரணியற்ற கோழைகள்.

    உண்மை பேச திரணியற்ற கோழைகள் இங்கு வந்தும் குப்பை கொட்டுகிறார்கள். சரி துரோகிகளை களையெடுக்கிறோம் என்று சொல்லி துரையப்பாவில் தொடங்கி இன்று வரை களையெடுத்து என்ன புடுங்கனீர்கள்? உயிர் பலி எடுக்கும் கேவலம் கெட்ட ஒரு இனமாக தமிழினத்தையே மாற்றிய உங்கள் கலாச்சாரம் திரும்ப உங்களை தாக்குகையில் வலிக்குதா?
    இதற்கிடையில் இந்த முகமூடிக் கள்ளருக்கு ஒரு தமிழ் மக்கள் மீதான அக்கறையாம்! ஓநாய்கள் இயக்கத்தை விட்டு ஓடி வந்து இங்கை வசதியாக இருந்து கொண்டு இங்கிபுலீசு வேறை! இவர்கள் எல்லாம் மாபியாவையே மிஞ்சும் மகா கள்ளர்! இவர்களுக்க தேவை விலாசம்! பணம்! மற்றும் மற்றக்கருத்தாளர்களின் பிணம்! கருத்து சுதந்திரம் அடுத்தவன் கருத்தை மதிப்பவனுக்கே! இந்த பிணம் தின்னிகளுக்கு அல்ல!

  15. venu says:
    13 years ago

    பிரித்தானிய தமிழர் பேரவை  நடத்திய மக்கள் கலந்துரையடல்  2 மணி நேரத்தின் பின் கால தாமதமாக 
    மாலை 8.00 மணியளவில்  ஆரம்ப மாகி  பரிதியின் பிரிவை சொல்லி தங்களை மக்கள் ஓரங்கட்டிய விஷயத்தை 
    மூடிமறைத்து  புண்பட்ட நெஞ்சம் ஏதோ ஒருமருந்தை  வந்திருந்த மக்கள் கிட்டததட்ட 80 வரை  மிகுதி 40-50 வரை பாதுகாப்பு 
    பிரிவில் இருப்பவர்களை  கதிரையில் அமர்த்தி , அறிமுகம் என பரகாந்தன் உளறி ,தினேஷ் நேரம்,நேரம் என அடிக்கடி வழமையான 
    பம்மாத்து கூறி கிட்டத்தட்ட  1500 கதிரைகளுக்கு முன்னால் இப்படியான கேவலமான கூட்டத்தை கூட்டி இருந்த மரியாதையை 
    2012 இன் மாவீரர் நாளுக்கு முதல் காற்றில் பறக்கவிட்ட பெருமை இந்த எருமைகளுக்கு புரியும் என நினைக்கிறன் 
    இனியாவது மிச்சம் உள்ள மக்களுக்கு நேரடியாக உங்கள் ஊருக்குள்ள உள்ள பாதிக்கப்பட்ட போராளிகள் குடும்பம் 
    இயக்கத்தை நம்பி முள்ளி வாய்க்கால் வரை எல்லாவற்றையும் இழந்த உறவுகளுக்கு உதவி , உருப்படியான  மனிதநேயம் 
    கொண்ட மானிடமாக , சொந்தக்காலில் சுயமாக சிந்தித்து வாழும் மக்களாக மனிதர்களாக  வாழுங்கள்.
    மக்களை ஏமாற்ற்றும் மாபிய கும்பலுக்கு துணை போனால் , உனது இனத்துக்கு நீயே முதலேதிரி.உனது வீட்டை நீயே கட்டு ,
    அயலவனோ,தூரதேசத்தவனோ கட்டித்தருவான் என கனவுகாணாதே  

  16. chandran.raja says:
    13 years ago

    திரு தேவன் அவர்களே! உங்களுக்கு எஸ்.வீ. சிறீரங்கனுடன் தனிப்பட்ட பகையாக? கருத்துமோதலா?? கருத்து மோதலாக இருந்தால் சொல்லுங்கள் விளங்கும் படி புரியவைக்கிறேன் இலகுவாக..

    • thevan says:
      13 years ago

      “”கருத்து””” மோதலாக இருந்தால் சொல்லுங்கள் ////புலி தவறு ஆகவே இலங்கை ராணுவம் சரி என்ற கருத்து படு கேவலமான “”கருத்து.”””” எஸ்.வீ. சிறீரங்கனுடன் தனிப்பட்ட பகை// let S V SRI be ANTI LTTE/VP,but I hate to see S V SRI as pro GOSL/SLA.

  17. chandran.raja says:
    13 years ago

    ஒளவையாருக்கும் வள்ளுவனுக்கும் வடக்குக்கும் தெற்குக்கும் வித்தியாசம் தெரியாமலே பலர் இங்கு வந்துபோகிறார்கள். அந்த இடத்திற்கு நீங்களும் வந்துவிடக் கூடாது என்பது தான் என்விருப்பம். “எழுதரம் அளவெடு ஒருதரம் வெட்டு” என ஒருமுதுமொழி இருக்கிறது. நீங்கள் இதை எழுதமுன்பு இன்னுமொரு முறையாவது மறுவாசிப்புக்கு உட்படித்தியிருக்கலாம். அதையும் தாங்கள் செய்யவில்லை.

    கவனியுங்கள். நானோ சிறீரங்கனோ இலங்கை இராணுவம் செய்தது சரியென்று சொல்லவில்லை. “சரி” முடிவெடுத்தது உங்கள் கற்பனையில் விளைந்தது.

    தெருவைத் தோண்டி கண்ணிவெடி புதைத்தால்-வெடிக்க வைத்தால் போராளி என்கிற ஆயுதங்கும்பல் ஓடிமறைந்து விடுவார்கள். அங்குள்ளவரை இராணுவம் வந்து நாசகாரம் செய்யும் என்பது இலங்கை இராணுவத்திற்கு மட்டும் உரிய செயல் அல்ல.
    இனி நீங்களே! சொல்லுங்கள். இராணுவம் அங்கு உள்ளவர்களுக்கு “சோடா”வா உடைத்துக் கொண்டுக்கும்.

    • thevan says:
      13 years ago

      “”இராணுவம் செய்தது சரியென்று சொல்லவில்லை””// நல்லது அப்படியே இருக்கட்டும். இராணுவம் செய்தது பிழையென்று கூறுகிறீர்களா? ஆயுதங்கும்பல் ஓடிமறைந்து விடுவார்கள். அங்குள்ளவரை இராணுவம் வந்து நாசகாரம் செய்யும் என்பது இலங்கை இராணுவத்திற்கு மட்டும் உரிய செயல் அல்ல.//// நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்? புரியவில்லை.

      புலி செய்தது எல்லாம் பிழை ஆகவே தமிழ் மக்களை இராணுவம் கொல்லலாம் என்கிறீர்களா?

      • P.V.Sri Rangan says:
        13 years ago

        இந்தத் “தேவன்” என்ற பெயரில் எனக்குத் தெரிந்த நண்பரொருவர் முன்பு இனியொருவில் எழுதியிருக்கிறார்.
        இந்தத் தேவன்,அவர்தானோவெனச் சந்தேகப்படத் தேவையில்லை!

        நோர்வேயில் இருப்பவர் த்துவார்த்தரீதியாக மிகவுயர்ந்தும்,போராட்டச் செல்நெறியை மிக Nhர்த்தியாகப் புரிந்தவர்.அத்தோடு ஒரு அமைப்பின் உயர்ந்த உறுப்பினராகவும் இருந்தவர்.அவரைவிட்டு, இந்தத் தேவனைப் புரிந்துகொண்டால், இவருக்கு மக்கள் வாழ் சூழலைப் பாதிப்படையவைத்துப் புலிகள் போராளிகளைத் தேடிக்கொண்டதும்,சும்மாவிருந்த மக்களுக்கு இராணுவமே பிரச்சனை என உருவகப்படுத்துவதற்குமான அரசியல் புரியாதமாதிரி நடிக்கத் தெரிந்திருக்கிறது.

        நாசிகள் அறுபது மில்லியன் மக்களை வேட்டையாடுவதற்கு எங்ஙனம் தமது மக்களைக் காயடித்தார்களோ அதே பாணியில் புலிகளும் மக்களைக் காயடித்ததன் சாட்சியிலொன்று இந்தத் தேவன்!

        • thevan says:
          13 years ago

          தத்துவார்த்தரீதியாக புலி செய்தது எல்லாம் பிழை ஆகவே தமிழ் மக்களை இராணுவம் கொல்லலாம்.Well Said SRI and Chandran

        • thevan says:
          13 years ago

          இந்தத் தேவனைப் புரிந்துகொண்டால், //P.V.Sri Rangan !!புலி செய்தது எல்லாம் பிழை ஆகவே தமிழ் மக்களை இராணுவம் கொல்லலாம் என்கிறீர்களா? இந்த கேள்வியின் பதிலென்ன ஸ்ரீ ?

          உங்கள் புலி எதிர்ப்பு என்ற முகமூடியின் பின் உள்ள இலங்கை இராணுவ சார்பு தத்துவத்திற்கு இடைஞ்சலாக இருப்பான் இந்த தேவன்.புரிந்திருக்கும் உங்களிற்கு.

  18. chandran.raja says:
    13 years ago

    ஒருபோதும் உங்களால் புரியமுடியாது என்பதே! உண்மை.

  19. thevan says:
    13 years ago

    ஒருபோதும் உங்களை புரியமுடியாது என்பது பொய்.
    புலி எதிர் முகமூடி போதும்,அரசு சார்பு என்று நேரேயே கூறுங்களேன்

  20. siva says:
    13 years ago

    உண்மையான விடுதலைப்போரை விரும்பாத புலத்து புலிகளின் (2002பின் பொறுப்பேற்ற )சொத்துக்கூட்டம்
    அதிகூடியளவு கடும்போக்கை பயன்படுத்தி புலம்பெயர் மக்களை ஏமாற்றி பலவிதமான மாயைகளை காட்டி
    பெரும்தொகை சொத்துகளை சேகரித்து முடக்கி விட்டு ,தலைமையை ஏமாற்றியது மட்டுமல்ல, இரண்டு பேருக்காக
    (பிரகாரன், பொட்டுஅம்மன் ) பெருந்தொகையான போராளிகளையும்,மக்களையும் பலிகொடுக்க காரணமானவர்கள்.
    இவைகள் எந்தவொரு நீண்டதூர அரசியல் அறிவும் இல்லாத இராணுவத்தைக் கட்டியமைத்த தலைமை ,எந்தக்கட்டத்தில்
    எப்படியான அரசியல் இராஜதந்திரம்செய்ய வேண்டும் என தெரியாமல் ,குறிப்பாக 9-11 க்குப்பின் சர்வதேச அரசியல் தெரியாமல்
    போராட்டத்தின் ஒரு அத்தியாயம் முடிக்கப்பட்டுள்ளது . இப்போது எமக்கு யாரவது வீடுகட்டித்தந்தால் நான் தனிக்குடித்தனம்
    நடத்துவேன் எனக்கூறிக்கொண்டு ,வெறும் கோசம்மிட்டுக்கொண்டு அலைகிறோம். அறிவுபூர்வமான அரசியல் கட்டமைப்பை
    கட்டமுடியாத சமூகமாக வாழுகிறோம்

  21. venu says:
    13 years ago

    பிரித்தானிய தமிழர் பேரவை தலைவர் யார்? உருவக்கியவகள் எங்கே ? 
    மக்கள் சொத்துக்கள் வைத்திருக்கும் இந்த அனைத்துலக கும்பலைச்சேர்ந்தவர்கள் என அழைக்கப்பட்ட 
    பலர் இன்று தங்கள் தொலைபேசிகளை துண்டித்து விட்டு 3 ஆண்டுகளாக எதுவுமே தெரியாது ,
    தங்களுக்கு உத்தரவை எதிர்பார்த்தவண்ணம் இருக்கிறோம் . மேலிடத்தின் கட்டளை வந்தவுடன் 
    எல்லாம் ஒப்படைப்போம் . என புலுடா விட்டபடி பல சொத்துக்களை கைமாற்றி விட்டு,நல்ல பிள்ளைகளாக 
    நடிக்கிறார்கள். பிரித்தானிய தமிழர் பேரவை ஈழத்தில் இன அழிப்பு நடைபெற்றது என இனிமேல்  பிரச்சாரம் செய்யுமா ?
    அவர்களின் நகர்வுகளில்  தமிழீழம் தான் சரியான தீர்வு ,எனவே ஜனநாயக வழியில் நாடுகாடந்த அரசை ஏற்றுள்ளதா?

  22. manithan says:
    13 years ago

    இலங்கை அரச பயங்கரவாதம் பிரான்ஸ் வரை ஊடுருவி உள்ளதாம். புலிசார் இணையங்கள் புலம்புகின்றன. சபாலிங்கத்தின் மற்றும் ஈழநாடு பத்திரிகையோடு தொடர்பானவர்களின் படுகொலை யாருடைய பயங்கரவாதம்?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...