மக்கள் போராட்டம் வெற்றிகொண்ட அனைத்து நாடுகளிலும் பாராளுமன்ற வழிமுறையை இறுதி வெற்றியை நோக்கிய பயணத்தில் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வதென்பது அந்தந்த நாடுகளின் புறநிலை யதார்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருந்தது.. ஏகபோக அரசாக மாற்றமடைந்து சீர்குலைந்து கொண்டிருக்கும் சீனாவின் கடந்தகாலப் போராட்ட அனுபவங்கள் மிகுந்த பயனுள்ளவை. ஜப்பானுக்கு எதிரான தேசிய விடுதலை யுத்தத்தின்போதுஇ .சியாங் கே செக்கால் தலைமை தாங்கப்பட்ட பாராளுமன்ற அரசாங்கத்தில் கொமிண்டாங்குடன் இணைந்து சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையும் பங்கு கொண்டது. மாஓ தானே நேரடியாகவும் இதில் பங்குகொண்டார். ரஷ்யாவில் மக்கள் புரட்சியைத் தலைமைதாங்கிய லெனின் கூறுவது போல புரட்சி மேலெழுந்து ஆயுத கிளர்ச்சியாக பரிணமித்துள்ள நிலைமையில் மாத்திரமே செயலூக்கமான பகிஷ்கரிப்பு என்பது சரியான தந்திரோபாயமாக அமைய முடியும் என்பதும் அவதானிக்கத் தக்கது. ஆக, பாராளுமன்ற தேர்தலையும் அதன் பின்னணியிலுள்ள அரசியலையும் இறுதியான தீர்வாக அல்லாது, இறுதி வெற்றியை நோக்கிய பயணத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்வது என்ற தந்திரோபாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இவ்வேளையில், 1938 ஆம் ஆண்டில் மாவோ சே துன் வழங்கிய இந்த நேர்காணல் பாராளுமன்றத்தைப் பயன்படுத்துவது குறித்த முழுமையான கருத்தையும் அதன் இதர பரிமாணங்களையும் வெளிப்படுத்தவில்லை எனினும் அதன் சில அடிப்படைகளை முன்வைக்கிறது.
கேள்வி: கொமிங்டாங்கிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான தொடர்பு தொடர்ந்தும் நீடிக்கும் என்று கருதுகிறிர்களா?
பதில்: ஆம்,நான் தொடரும் என்றே நம்புகின்றேன். எம் இருவருக்கும் இடையே 1927இல் தோன்றிய மோதல் கம்யுனிஸ்ட் கட்சியின் விருப்பத்துக்கு எதிரானது. கொமிங்டாங்குடனான(முழு) ஒரு பிளவை கம்யுனிஸ்ட் கட்சி என்றுமே விரும்பாது. அவர்களுக்கிடையேயான பிளவு நாட்டை எங்கு நோக்கிக் கொண்டுபோகும் என்பதை தமது பத்து வருடகால அனுபவங்களின் மூலம் இரு கட்சிகளும் மட்டுமல்ல, முளுத் தேசமும்கூட நன்றே புரிந்து வைத்துள்ளனர். நாம் மேலும் ஒன்றுபடுவதற்கு இந்த அனுபவங்கள் எமக்கு உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கூட்டணி தொடர்பாக இன்றும் வரப்போகும் எதிர் காலத்துக்குமான எமது நோக்கம்இ ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டமும், நாட்டை அபிவிருத்தி செய்வதிலான கூட்டு வேலையுமேயாகும். இந்த நிலமைகளை அவதானிப்போமானால் , எந்தக் கட்சியுடன் நட்புறவு கொண்டுள்ளோமோ அந்தக்கட்சி நம்மைப்போல் நேர்மையாக நடந்துகொள்ளுமேயானால் சீன மக்கள் அனைவராலும் கட்டுப்படுத்த்ப்படும் இந்த்க் கூட்டணி நீண்டகாலத்திற்கு நிலைத்து நிற்கும் என்பது இயல்பானது.
கேள்வி: கொமிங்டாங்கிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான கூட்டு ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்றிணைந்த யுத்ததை நடத்துவதற்கானது மட்டுமல்ல, ஆக்கிரமிப்பாளரைத் தோற்கடித்ததன் பின்னால் அது நாட்டை அபிவிருத்தி செய்வதற்குமானது என கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிவிக்கையில் கூறியுள்ளது. இது முரண்பாடாகத் தெரியவில்லையா? புதிய அரசை அபிவிருத்தி செயவதில் இரு வெவ்வேறு வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு கட்சிகள் எவ்விதம் ஒன்றிணைந்து செயல்படமுடியும்?
பதில்: ஒரு அரைக்கானியல் நாடான சீனாவை ஜப்பான் தனது காலனியாக மாற்றிவிடுமோ என்ற அச்சம் ஒரு தேசம் என்ற முறையில் சீனாவின் இருத்தலையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. வெவ்வேறு கட்சிகள் வெவ்வேறு வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தினாலும் தற்போது நிலவும் நிலமையின் கீழ் அவை அனைத்தினதும் நிலை கிட்டத்தட்ட ஒரே விதமானதே. இதன் காரணத்தால் ஜப்பானுக்கு எதிரான யுத்ததில் மாத்திரமல்ல தேசத்தை விருத்திசெய்வதிலுங்கூட அவற்றினால் ஒன்றிணைந்து செயற்படமுடியும். எவ்விதமிருந்தாலும் இக்கூட்டு ஒரு வரையறுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையிலானதாக அமையவேண்டும். கட்டாயப் படுத்தப்பட்டதொன்றாகவோ வெறும் சம்பிரதாய வகைப்பட்டதொன்றாகவோ அமையக்கூடாது.
ஒரு திட்டவட்டமான வேலைத்திட்டத்தையும் உறுதிசெய்யப்பட்ட கோட்பாடுகளையும் கொண்டிராத எந்தக் கட்சியானாலும் உண்மையான நண்பர்களின் இதய பூர்வமான நட்பைப் புரிந்துகொள்ளமுடியாது. இவ்விதமானதோர் அடிப்படையில் அமையும் நட்புதான் இதயபூர்வமானதாகவும் நீடித்து நிற்கும் தன்மைபெற்றதாகவும் அமையும்.
கேள்வி: கம்யூனிஸ்ட் கட்சியால் முன்வைக்கப்படும் ஜனநாயகக் குடியரசு பற்றிய உங்கள் வரைபடம் என்ன?
பதில்: கட்சியால் முன்வைக்கப்படும் ஜனநாயகக் குடியரசின் பாரளுமன்றமானது காலனியல் அடிமைகளாக இருக்க மறுக்கும் எமது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருக்கும். எந்தக்கட்டுப்பாடும் இன்றி அனைவருக்கும் வாக்குரிமை என்ற கோட்பாட்டின்படியே தேர்தல்கள் நடைபெறும். பரந்த அர்த்ததில் சொல்வதானால் இது நீண்டகாலத்திற்கு முன்பாகவே டாக்டர் சன்-யாட்-சென்னால் வலியுறுத்தப்பட்ட அரச கட்டுமானமாக இருக்கும். இந்த வழிமுறைகளில்தான் சீன அரசு வளர்க்கப்படவேண்டும்.
கேள்வி: தற்போதைய தேசிய அரசாங்கத்துடன் கம்யூனிஸ்ட் கட்சி திருப்திப்படுகின்றதா? தேசிய சட்டசபை ஒன்று அவசியமென அது கருதுகிறதா?
பதில்: ஜப்பானுக்கு எதிரான ஆயுத எதிர்ப்புக்குத் தலைமை தாங்குவதாலும், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிரான போராட்டத்தில் ஒரு திட்டவட்டமான கோட்பாட்டைப் பின்பற்றி வருவதாலும் நாம் தற்போதைய மத்தியரசை ஆதரிக்கிறோம். ஆனால் தற்காப்பு யுத்ததின் வளர்ச்சிக்கு உகந்தமுறையில் இக் கோட்பாடுகளை மேலும் செயல்த் திறன் மிக்கதாக மற்றுவதற்காக இந்த அரசாங்கம் தன்னை விரிவுபடுத்தியும் பெருப்பித்தும் கொள்ளவேண்டும். இதற்காக அரசாங்கம் தனது உள்நாட்டுக் கொள்கையில் அவசியமான சில சீர்திருத்தங்களை செய்யுமென எதிர்பார்க்கிறோம். தேசிய ஐக்கியத்தை மேலும் வலுப்படுத்துவதற்காகவும் , எமது தேசிய தற்காப்பு அணிகளை மேலும் விரிவுபடுத்துவதற்காகவும் தேசிய சட்டவாக்கசபையை நிறுவும்படி நாம் மத்தியரசைக் கோரியுள்ளோம். இது டாக்டர் சன்-யாட்-சென்னால் அவரது காலத்திலேயே முன்வைக்கப்பட்டதொன்றாகும். தற்காப்பு யுத்தத்தின் நலனுக்கு பலன்தரக்கூடியது எதுவானாலும் அவற்றைச் செய்ய நாம் தயாராய் உள்ளோம்.
கேள்வி: வட மாகணங்கள் மூன்றிலும் (மஞ்சூரியா) ஜப்பானுக்கு எதிரான போர்க்களத்தில் நிற்கும் தன்னாரவ இராணுவத்தை வழிநடத்துவது கம்யூனிஸ்ட் கட்சி தான் என்பது உண்மையா?
பதில்: இந்த இராணுவத்துடன் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நெருக்கமான பிணைப்பை உருவாக்கிவருகிறது என்பது உண்மைதான். இத் தன்னார்வ இராணுவத்தின் தளபதிகளாக இருப்பது பிரபல்யமிக்க கம்யூனிஸ்டுகள்தான் என்பது இந்தப் பிணைப்புக்கோர் எடுத்துக்காட்டாகும். ஜப்பானுக்கெதிரான யுத்தத்தில் அவர்கள் காட்டிவரும் திட்டவட்டமான ஒருமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் பல வெற்றிகளைத் தந்துவருவதை அனைவரும் அறிவர். கம்யூனிஸ்ட்டுகளுக்குப் புறம்பான பல இராணுவக்குளுக்களும் வெகுஜன அமைப்புகளும் இங்கு காணப்படுகின்றன. இருந்தும் ஒரு தேசிய முன்னணியின் அவசியத்தை இந்த மாகாணங்கள்கூட உணரத்தொடங்கியுள்ளன. இவை அனைத்தும் பொதுவான செயல்பாட்டுகளுக்காக ஏற்கனவே ஒன்றிணைந்தும் உள்ளன.
கேள்வி: சீன-ஜப்பான் யுத்தத்தையிட்டு அமரிக்கா எடுத்துள்ள நிலைப்பாடு பற்றிய உங்கள் கருத்து என்ன?
பதில்: அமரிக்கா வாழ் ஜனநாயக அணியினர் அனைத்துலக சமாதானத்துக்காகக் குரல் கொடுத்து வருவதுவும் அந்நாட்டு ஜனாதிபதி ருஸ்வெல்ட் பாசிசத்தைக் கண்டித்துவருவதுவும், ஜப்பானுக்கெதிரான சீனாவின் எதிர்ப்பின் மீது அமெரிக்கப் பத்திரிகைகள் காட்டிவரும் பரிவும், இவை எல்லாவற்றிர்கும் மேலாக அமெரிக்க மக்கள் ஜப்பானுக்கு எதிரான சீன மக்களின் போராட்டத்துக்குக் காட்டிவரும் ஆதரவும் எமது வரவேற்புக்குரியவையாகும். நாம் இவற்றிற்காக அமெரிக்க மக்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் ஆக்கிரமிப்பிற்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்துச்செல்ல பிற அரசுகளோடு சேர்ந்து யுத்த நடைமுறை வேலைத்திட்டத்துடன் அமரிக்கா இணைந்து கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
நேர்காணல் மொழியாக்கம் : லோகன்
லோகன்.இது எந்த மொழி மூலத்திலிருந்து மொழிபெயர்த்தீர்கள்?அந்த மொழியும் அதன் மூலமும் தரமுடியுமா?அது சீன மொழியானாலும் பறுவாயில்லை-மூலம் எது-எத்தொகுப்பிலிருந்து மொழியாக்கம் பெற்றது இச் செவ்வி?
In February, 1938, Mr. Wang Kung-tah, a correspondent of the American Associated Press Agency, arrived in Yenan and obtained an interview with Mao Tse-tung. The text of the interview, as recorded by Wang Kung-tah and approved by Mao Tse-tung, was published in the Chiehfang (Liberation), the organ of the Communist Party of China, in its issue of May 5, 1938, No. 32.-
inioru
இனியொருவின் தத்துவார்த்தப் போராட்டத்திற்கு நன்றி. சபேசன் போன்றவர்கள் இனிமேல் சிந்திக்க ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்கிறோம். ரஜாகரன் போன்ற கோமாளிகளை விட்டுவிடுங்கள். தங்கள் சொந்தத் தேவைக்காக மாக்சியம் பேசுங்கிறுகர்கள் பேசிய பொய்யை அம்பலப்படுத்தியது போதும் இனி தத்துவார்தப்பணிகளைத் தொடருங்கள்.
தூங்குகிறவர்களை எழுப்பலாம்.
அறியாதவர்கட்கு அறிவூட்டலாம்.
வன்மத்தையும் யாரித்தனத்தையும் என்ன செய்வது?
எச்சரிக்கை
சிறி ரங்கனுக்குச் சொல்லாமல் எதையாவது மாஓ சொல்லியிருப்பாரா?
நிச்சயம் இவ் விடயம் ‘இனிமேல் தான் சிந்திக்க வேண்டியோர்’ உட்படப் பல பாசாங்குக்காரர்களும் துருவி விசாரித்து உண்மை என்று அறியப்பட்டால் மாஓ ஒரு திரிபுவாதி என்று என்வர் ஹோஜா பாணியில் தீர்ப்பு வழங்கப்படும்.
This felleow Mao killed milions of chinese,
Here i quote some of his misgivings.
Along with Land reform, during which significant numbers of landlords were beaten to death at mass meetings organized by the CPC as land was taken from them and given to poorer peasants,[26] there was also the Campaign to Suppress Counterrevolutionaries,[27] which involved public executions targeting mainly former Kuomintang officials, businessmen accused of “disturbing” the market, former employees of Western companies and intellectuals whose loyalty was suspect.[28] The U.S. State department in 1976 estimated that there may have been a million killed in the land reform, 800,000 killed in the counterrevolutionary campaign.[29]
Mao himself claimed that a total of 700,000 people were executed during the years 1949–53.[30] However, because there was a policy to select “at least one landlord, and usually several, in virtually every village for public execution”,[31] the number of deaths range between 2 million[31][32] and 5 million.[33][34] In addition, at least 1.5 million people,[35] perhaps as many as 4 to 6 million,[36] were sent to “reform through labour” camps where many perished.[36] Mao played a personal role in organizing the mass repressions and established a system of execution quotas,[37] which were often exceeded.[27] Nevertheless he defended these killings as necessary for the securing of power.[38]
Starting in 1951, Mao initiated two successive movements in an effort to rid urban areas of corruption by targeting wealthy capitalists and political opponents, known as the three-anti/five-anti campaigns. A climate of raw terror developed as workers denounced their bosses, wives turned on their husbands, and children informed on their parents; the victims often being humiliated at struggle sessions, a method designed to intimidate and terrify people to the maximum. Mao insisted that minor offenders be criticized and reformed or sent to labor camps, “while the worst among them should be shot.” These campaigns took several hundred thousand additional lives, the vast majority via suicide.[39]
In Shanghai, people jumping to their deaths became so commonplace that residents avoided walking on the pavement near skyscrapers for fear that suicides might land on them.[40] Some biographers have pointed out that driving those perceived as enemies to suicide was a common tactic during the Mao-era. For example, in his biography of Mao, Philip Short notes that in the Yan’an Rectification Movement, Mao gave explicit instructions that “no cadre is to be killed,” but in practice allowed security chief Kang Sheng to drive opponents to suicide and that “this pattern was repeated throughout his leadership of the People’s Republic.”[
Mr. Velu is giving reference numbers without citing the references. Obviously the material is taken off a book. But he fails to give his source(s).
The source of any information is a measure of the validity of the information.
And this is of course not the first time that one comes across such disinformation.
What happened in China was a revolution and the people who had suffered the cruelty of landlords for generations had scores to settle.
There were occasional excesses but were nothing compared with what the poor suffered for generations.
It will make sense to make a comparative study of anti-Mao literature by authors driven by an anti-left political agenda with writings of people who had been in China or been in touch with Chinese events, but not necessarily communists.
There were occasional excesses —– killing millions called occasional excesses – ha—–, then Pakse who killed few thousands and Praba who killed few more can be called saint..
You are making charges that you cannot support with valid evidence.
Give your sources.
There have been American journalists in China during the times of the alleged events.
Mao believed in armed struggle but not cold blooded murder. He even saved the life of Jiang Kaishek, when Guomindang soldiers who detained him wanted to dispose of him.
Mao did not order the killing of cruel landlords. Some events were inevitable during mass uprisings since the people had suffered generations of cruelty and humiliation. One does not prescribe killings but one has to understand the circumstances.
Very few had tears to shed for the Tsar or Adolf Hitler when they perished.
Get your facts right and then comment.
Its looks like China is better country than UK, our comrades in UK soon will depart and settle in North Corea and China, and spend their holy days in Cuba.
It is pathetic when one has to resort to cheap retorts to duck issues.
What you wish may happen, but differently.
When China, not before long, becomes a leading capitalist country and the economy of the West declines further many worshippers of Western masters will seek greener pastures in China.
Many of the progressive and politically alert Tamils living in the West did not leave the country seeking wealth. The reasons for their choice of destination and acceptance there has much to do with our colonial heritage and other things that I need not elaborate here. Some of them may even reunite with us in Sri Lanka even earlier, if things change here soon enough.
thanks for admiting China is a capitalist country, thus admiting communism and Mao s ideas are failed one, the truth is neithe capitalism nor communism will benefit mases, a middle path followed in the westen europe especially in the nordic countries is the ideal one. Our comrades while benefiiting this middle path capitalism wont admit that communism is a failure, XXX is a gentleman and admits it. Its fine if our comrades go to China and experience the raw capitalism and realise the true socialism is in the so called capitalist countries.
நீங்கள் பிடித்த முயல். 3 என்ன 2 என்ன 1 என்ன1
உங்கள் இஷ்டப்படி 5-6-8-10-100 கால்களகவும் இருக்கட்டுமே.
Jayawewa!
நீங்கள் பிடித்த முயல். 3 என்ன 2 என்ன 1 என்ன1
உங்கள் இஷ்டப்படி 5-6-8-10-100 கால்களகவும் இருக்கட்டுமே.
Jayawewa, its not I who caught this muyal its our comrades caught it, name of the muyal is communism, jayaweawa
என்னென்ன முசல் எல்லம் புடிச்சிக. ஆனா மொதல்ல கேட்ட கேள்விக்குத் தான் பதிலையே காணோமே! என்னாச்சு?
நீங்க ரொம்பப் பாவந்தான்!
thanks for admitting China is a capitalist country, thus admitting communism and Mao s ideas are failed one, the truth is neither capitalism nor communism will benefit masses, a middle path followed in the Western Europe especially in the Nordic countries is the ideal one. Our comrades while benefiting this middle path capitalism wont admit that communism is a failure, XXX is a gentleman and admits it. Its fine if our comrades go to China and experience the raw capitalism and realize the true socialism is in the so called capitalist countries.
I also call our comrades to look their comrades in Sri Lanka,most of the leftist in Sri Lanka are with racist parties, or at least supports or supported them, NM Perera and Colvin were part of the UF govt which introduced discriminatory 72 constitution, in fact it was drafted by Colvin, they were part of the govt which brought standardization. Take present govt, it is supported by all leftist parties, Our cardboard communist in UK, enjoy the fruits of capitalism,but pretend to be communist.
கேட்ட கேள்விக்குத் தான் பதிலையே காணோமே! என்னாச்சு?
நீங்க ரொம்பப் பாவந்தான்!