பாராளுமன்றில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.
அரசியலில் பெண்களின் வாக்குரிமை என்ற தலைப்பில் இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே சந்திரிகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகளில் பாராளுமன்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்த நாடுகளில் இலங்கையும் ஒன்றெனக் குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி, இலங்கை பாராளுமன்றில் 13 வீதமான பிரதிநிதித்துவமே உள்ளதாகவும் அந்த வீதம் திருப்திகரமற்றதெனவும் தெரிவித்துள்ளார்.
இயற்கையாகவே பெண்கள் மிகவும் சிறந்த ராஜதந்திரிகளாகவும், பேச்சுவார்த்தை நடத்தக் கூடியவர்களாகவும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டின் நல்லாட்சி மற்றும் இராஜதந்திர விடயங்களை கையாள்வதில் பெண்கள் இயற்கையாகவே திறமையானவர்களெனவும் தெரிவித்தார்.