முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் பாரத லக்ஸ்மன்பிரேமசந்திரவின் புதல்வி ஹிருனிகா பிரேமசந்திர அரசியலில் களமிறங்கத் தீர்மானித்துள்ளார்.
ஸ்ரீலங்கா மஹஜன கட்சியில் இணைந்து கொண்டு செயற்பாட்டு அரசியலில்ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் 8ம் திகதி பாரத லக்ஸ்மன்பிரேமசந்திர ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஹிருனிகா, படுகொலைச் சம்பவம்தொடர்பில் கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
நடிகரும், முன்னாள் ஜனாதிபதியின் கணவருமான அமரர் விஜயகுமாரதுங்கவினால் ஸ்ரீலங்கா மஹஜன கட்சி 1984ம் ஆண்டு நிறுவப்பட்டது.
பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவும், ஸ்ரீலங்கா மஹஜ கட்சியின் ஊடாகவேஅரசியலில் பிரவேசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வந்த ஹிருனிகாஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா மஹஜன கட்சியில்இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.