வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரää ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனை சந்திக்க உள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை நியூயோர்க்கில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.புதிய அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகள்ää மனித உரிமை விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையகம் பெரும்பாலும் இந்த சந்திப்பு நடைபெறும் என வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளைää பிரித்தானிய விஜயத்தை முடித்துக் கொண்டதன் பின்னர் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியையும் மங்கள சமரவீர சந்திக்க உள்ளார்.
போர்க்குற்ற விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்காமல் தடை செய்வதற்காக உலகம் முழுவதும் உலா வரும் மங்கள சமரவீர அரசின் பிடியில் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள் இன்னும் சித்திரவதை செய்யப்படுகின்றனர். வடக்கும் கிழக்கும் இராணுவக் குடியேற்றப் பிரதேசங்களாகத் தொடர்கின்றன.
அதே வேளை போர்க்குற்ற விசாரணை அறிக்கையைப் பின்போட ஒத்துழைக்குமாறு அமெரிக்க்க அரசு தம்மைக் கேட்டுக்கொண்டதாக வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.