அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலும் பாதுகாப்புச் செலவுக்கே முன்னுரிமை கொடுத்து அதிகளவு நிதியை
சிறீலங்கா அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.2014ஆம் ஆண்டில் பாதுகாப்புச் செலவினங்களுக்காக 1.95 பில்லியன் டொலரை ஒதுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வழக்கம் போலவே அடுத்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்திலும் பாதுகாப்புச் செலவினங்களுக்கே இலங்கை அரசாங்கம் அதிகளவு நிதியை ஒதுக்கவுள்ளது.
இலங்கையில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் மீண்டும் முளைவிட்டால் அழித்தொழிக்கவும், சிங்கள மக்கள் மத்தியிலிருந்து சிறிது சிறிதாக எழும் போராட்டங்களை ஒடுக்கவும், முஸ்லிம் மக்கள் மீதான ஒடுக்கு முறயை தீவிரப்படுத்தவும் இராணுவச் செலவீனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.