ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்ட இலங்கை குறித்த விசாரணை அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்பட உள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் ஆற்றிய உரையைப் பாராட்டிய பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் யுத்தத்தின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முனைப்புக்களை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கையின் அடிப்படையிலும் பரிந்துரைகளின் அடிப்படையிலும் நம்பகமான விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்கும் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியப் பழமைவாதக் கட்சி இவ்வாறு தெரிவிக்கும் அதே வேளை ‘பழமைவாதக் கட்சிக்கான தமிழர்கள்’ என்ற அமைப்பு ராஜபக்சவைத் தூக்கில் போடுவோம் எனக் கூறி வருகிறது.
அவர்களின் கேலிக்கூத்து அதற்கு மேலே சென்று லண்டன் நகரபிதா தேர்தலில் போட்டியிடும் பழமைவாதக் கட்சியின் உறுப்பினருக்கு தமிழ்த் தேசியத்தின் சார்பில் ஆதரிக்குமாறு தொலைபேசிக் குறுஞ் செய்திகளை அனுப்பி வருகின்றனர்.