2014.10.29ம் திகதி கொஸ்லாந்தை- மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற கொடூரமான, பாரிய மண்சரிவினால் உயிரிழந்துள்ள மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், இவ்வியற்கையனர்த்தத்தில் உறவுகளையும், உடைமைகளையும் இழந்துத் தவிப்போருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கின்றோம் எம்மால் இன்னும் எதிர்த்;து உயர்ந்தெழ முடியும் என நம்பிக்கையூட்டுகின்றோம்.
ஓங்கி உயர்ந்திருக்கும் பேய்மலையே – நாம்
உயர்ந்தெழுவதைத்தான் மறைக்கின்றாயென்றால்,
எம்மை விழுங்கியும் விட்டாய் !
அகோரப்பசி கொண்ட மலையே
ஆறியதோ உன்பசி
அத்தனை உயிர் தின்றபின்?
இன்னும் எத்தனை உயிர்களை தின்னப்போகிறாய்?
மீளமுடியாத துன்பத்தையளித்துள்ள இக்கொடூர இயற்கையனர்த்தம் எம்மிதயங்களை புன்னாக்கி நிலைகுலைய வைத்துள்ளது.
கொஸ்லாந்தை- மீரியபெத்ததோட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை பெற்றுக்கொடுக்க அனைவரும் முன்வரவேண்டும், இனம், மதம், மொழிப்பேதங்களை மறந்து நிர்க்கதியாய் நிற்கும் எம்மக்களுக்கு உதவிக்கரங்கொடுப்போம் என நாம் அரசாங்கத்தினையும், அரச சாரா நிருவனங்கள், தொண்டு நிருவனங்கள், சிவில் அமைப்;புக்கள், வர்த்தகர்கள், செல்வந்தர்கள், அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் யாவருக்கும் நாம் பகிரங்க அழைப்பு விடுக்கிறோம்.
அரசாங்கம், அனர்த்த நிவாரண அமைச்சு, மாவட்ட, பிரதேச செயலாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நிருவனங்கள் விரைவாக செயற்பட்டு நிர்க்கதியாகியுள்ள மக்கள் மீளக்குடியமர்வதற்காக பாதுகாப்பான இடங்களில் வீடுகளை கட்டிக்கொடுக்க முன்வரவேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அங்கே அகதிகளாயுள்ள சிறுவர், பாடசாலை மாணவர், முதியோர், பெண்கள் என அனைத்து தரப்பினருக்குமான பாதுகாப்பினை உறுதி செய்வதோடு தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் பரவாமல் சிறந்த சுகாதார வசதினை வழங்க வேண்டும் என சுகாதார அமைச்சிடம் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
“ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்” -வள்ளுவர்-
நன்றி
மலையக சிவில் சமூகம்
Mohanarajan LL.B (Hons) (Colombo),
DIE (Col), DAPS (U.K)
Attorney-at-Law, Notary Public, Commissioner for Oaths &
Registered Company Secretary.
072 400 7080