இதுவரை அன்றாடம் மக்களின் வாழ்வில் தலையிட்டு சிவில் நிர்வாகத்தை நடத்தி நடத்திவந்த பேரினவாத அரசின் இனப்படுகொலை இராணுவம், இப்போது பாடசாலைகளிலும் தலையிட ஆரம்பித்துள்ளது. நேற்று 01.04.2012 கிளிநொச்சி பாடசாலைகளுக்குள் நுளைந்த இராணுவம் சிங்களம் கற்பிக்கப்போவதாக மிரட்டியது.
அதன் பின்னர் கருத்துத் தெரிவித்த தளபதி ருவான் வணிகசூர்ய, தாம் பாடசாலைகளில் ஏனைய பாடங்களையே கற்பிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
தாம் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றக்குறை குறித்து ஆய்வு நடத்தியதாகவும் அதன் பின்பே இந்த முடிவிற்கு வந்ததாகவும் சாரி சாரியாக அப்பாவி மக்களைக் கொலைசெய்த இராணுவம் தெரிவித்துள்ளது. கிரிமினல்களுக்கு குழந்தைகளுடன் என்ன வேலை எனக்கேட்பதற்கு இலங்கையின் எந்தப் பகுதியிலும் யாரும் துணியவில்லை.
இதற்கு சமாதானம் கூறிய கொலைகார இராணுவத்தின் பேச்சாளர், சீருடையில் நாம் கற்பிக்க மாட்டோம் சிவில் உடையிலேயே கற்பிபோம் என்றார். வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு ஆசிரியர் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். கோத்தாபாயவின் கிரிமினல்கள் பள்ளிகளில் பாடம் கற்பிக்கிறார்கள்.
புலித் தலைவர் தமிழ் பிரதேசங்களில் என்னவெல்லாம் செய்தாரோ அவர் வழியில் நாங்களும் தொடர்வோம்.