முன்னாள் முதல்வரும் அதிமுக தலைவருமான ஜெயலலிதா மரணத்தின் பின்னர் அதிமுகவைக் கைப்பற்றிய பாஜக அதனை வைத்து தமிழ்நாட்டில் நிழல் அரசு ஒன்றை நடத்தி வந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் ஏராளமான இடங்களைப் பெற்று படு தோல்வியடைந்த போதும் மதவாதம் சாதி வெறி பிளவு அரசியலால் வெல்வோம் என்ற நம்பிக்கையில் களமாடி வந்தது.
இந்நிலையில்தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணிக் கட்சிகள் இருக்கும் நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக 4 மேயர் பதவிகளையும். 30 சதவிகித உள்ளாட்சி வார்டுகளையும் கேட்டு அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்க அதிமுக இதனை விரும்பவில்லை எனத் தெரிகிறது. நான்கு சதவிகித இடங்களை மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்க விரும்புவதாக அதிமுக தெரிவித்த நிலையில் இரு கட்சிகளுக்கும் இடையில் முருகல் நிலை உருவானது.
இந்நிலையில் இன்று பாஜக தனித்துப் போட்டியிடுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ஆனால் அதிமுகவோடு கூட்டணி தொடரும் என்று பாஜக தெரிவித்தது. அதே கருத்தைத்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்தார்.