காஷ்மீர் மக்கள் கற்பனையிலும் நினைக்காத வகையில் பல மாற்றங்கள் நடந்து விட்டன. காஷ்மீரின் துப்பாக்கிக் குண்டு காயங்கள் இல்லாத இளையோரை இன்று பார்ப்பதே கடினம். கல்வி, வேலையாய்ப்பு இதை எல்லாம் இழந்து விட்ட காஷ்மீரிகள் உளவியல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது ஒரு ஆய்வு. காஷ்மீர் நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்த போதிலும் இந்த அளவுக்கு நிலமை சீரழிய ஒரே ஒருவர்தான் காரணம் அவர் பெயர் முப்தி முகமது சையது.
பாஜகவோடு கூட்டணி வைத்து காஷ்மீருக்குள் பாஜகவைக் கொண்டு வந்து விட்டு அனைத்து நாசக்கேடுகளுகும் காரணமானார். ஆனால்,. இப்போது தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா மெகபூபா முப்திதியை முன்பே இது தொடர்பாக எச்சரித்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.
பல அரசியல் குழப்பங்கள் காஷ்மீரில் நீடித்தாலும் யாரும் இந்துத்துவத்தை மைய அரசியலாக வைத்துள்ள பாஜகவோடு கூட்டணி வைக்க காஷ்மீர் கட்சிகள் அனைத்துமே தயங்கின. ஆனால், 2015-ஆம் ஆண்டு முப்தி முகமது சையது தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி, பாஜகவுடன் கூட்டணியமைத்து ஆட்சியமைத்தது. அந்த கூட்டணி அரசின் முதல்-அமைச்சரகாக முப்தி முகமது சையது பொறுப்பேற்றார். 2016-ஆம் ஆண்டு அவர் மரணமடைய அவரது மகள் மெகபூபா முப்தி காஷ்மீர் முதல்வர் ஆனார். கருத்து வேறுபாடு காரணமாக 2018-ஆம் ஆண்டு மெகபூபா அரசை பாஜக கவிழ்த்தது.
கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. “முன்னாள் முதல்வர் முப்தி முகமது சையதின் ஒற்றை தவறான முடிவு காஷ்மீருக்கான 370-வது பிரிவு ரத்திற்கு வழி வகுத்தது. நமது பலவீனத்தை பாஜக பயன்படுத்திக் கொண்டது. 2014-ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைக்க முப்தி முகமது சையத் முடிவு செய்த போது நான் அவரிடம் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது ஜம்மு-காஷ்மீருக்கு மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும். பாஜகவை காஷ்மீருக்குள் கொண்டு வந்து விடும் உங்கள் முடிவால் நாம் அனைவருமே பாதிக்கப்படுவோம். நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம் நீங்கள் பாஜகவோடு உள்ள உறவை விட்டு வெளியில் வாருங்கள் என்றோம். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. அதனுடைய பின் விளைவுகளைத்தான் இன்று காஷ்மீர் அனுபவித்துக் கொண்டிருக்கிறது”- தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா.