லட்சத்தீவுகள் பல தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டம்தான் இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. குற்றச் செயல்களோ, மதுவகைகளோ இல்லாத சுற்றுலா தலமாக இருந்தது. அங்கு பிரபுல் ஹோதா படேலை அதிகாரியாக நியமித்தது மத்திய அரசு. அவர் நான்கு விதமான சட்டங்களை அங்கு நடைமுறைப்படுத்தினார். வளர்ச்சியின் பெயரால் நிலங்களை சுற்றுலா வணிக கார்ப்பரேட்டுகளுக்கும்,மக்களை முன் அனுமதியே இன்றி கைது செய்வது போன்று சட்டங்களையும் கொண்டு வந்தார். இது அங்கு கடுமையான மக்கள் எதிர்ப்பை உருவாக்கியிருப்பதோடு கேரள மாநிலத்திலும் கடும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.காரணம் லட்சத்தீவு கேரள உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
லட்சத்தீவில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பத்துக்கும் மேற்பட்ட பாஜகவினரே கட்சியை விட்டு விலகியிருக்கிறார்கள். இந்நிலையில் லட்சத்தீவில் ஒரு மளிகைக்கடைக்காரர் தன் கடையில் பாஜகவைச் சேர்ந்தவர்களுக்கு இங்கே பொருட்கள் விற்பனை செய்யப்படாது என்று விளம்பரப்பலகை எழுதி வைத்துள்ளார்.இந்த படம் வைரல் ஆகியுள்ளது.