
படையினரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளதாக செனல்4 ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. யுத்த வலயங்களில் பாலியல் வன்முறைகளை தடுக்க பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் மற்றும் ஐக்கிய நாடுகளில் அகதிகளுக்கான முகவர் நிலையத்தின் ஆதரவுடன் லண்டனில் மாநாடு ஒன்றை நடத்தினார். இவ்வாறான ஓர் நிலைமையில் ஆபத்துக்களை எதிர்நோக்கி வரும் பெண் ஒருவரை பிரித்தானியா நாடு கடத்த முயற்சித்து வருவதாக செனல்4 ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கைப் படையினரால் பல தடவைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குறித்த பெண் தெரிவிக்கும் நிலையிலேயே, நாடு கடத்த தீர்மானிக்க்பபட்டுள்ளது. குறித்த பெண் கடந்த 2010ம் ஆண்டில் பிரித்தானியாவை வந்தடடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேணிய தொடர்பு, படையினரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமை மற்றும் உளவியல் பாதிப்புக்கு உள்ளானமை போன்ற காரணிகள் எடுத்துரைக்கப்பட்டும், அவை குறித்து பிரித்தானிய அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
அரசுகளின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் மௌனமாகவிருப்பது இதற்கான பிரதான காரணமாகும். மக்கள் அணிதிரள்வதும் போராடுவதும் இவற்றைத் தடுப்பதற்கான ஒரே வழியாகும்.