சம்பவம் : ஒன்று
காலம் : கி.பி 1915
இடம் : அட்லாண்டிக் பெருங்கடல்
லுசிடானியா கப்பல்:
இங்கிலாந்துக்கும் ஜெர்மனுக்கும் யுத்தம்.அப்போதும் உலகவங்கியாளர்களுக்கு யுத்தம் என்றாலே சிம்ம சொப்பணம் தான். அதிக பணத்தை வட்டிக்கு கொடுத்து லாபம் ஈட்டலாம். அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் அவர்களுடைய, மெண்டராகவும் தலைமை ஆலோசகராகவும் இருந்த கலோனல் ஹவுஸ்க்கும் உலக வங்கியாளர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.
வங்கியாளர்களின் ஆலோசனைப்படி அமெரிக்கா யுத்தத்தில் நுழைந்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று எண்ணினார். ஆனால் அமெரிக்கா இவ்வுத்தத்தில் பங்கு கொள்வதற்கு எந்த அரசியல் வரலாற்று காரணமும் இல்லை. இருப்பினும் இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சர் எட்வேர்ட் க்ரேயிடம் கலோனல் ஹவுஸ் அமெரிக்காவை யுத்தத்தில் பங்கெடுப்பதற்கான வழிமுறைகளை ஆலோசித்தார்.
எட்வேர்ட் க்ரே
”அமெரிக்க பயணிகள் கொண்ட உங்கள் கப்பலை ஜெர்மன் கடற்படை மூழ்கடித்தால், அமெரிக்கர்கள் என்ன செய்வார்கள்.?”
கலோனல் ஹவுஸ்
”அப்படி செய்வதன் மூலம், அமெரிக்க மக்கள் கடுங்கோபத்துக்கு உள்ளாவர். அதுவே அமெரிக்காவை யுத்தத்தில் பங்கு கொள்வதற்கு வழிவகுக்கும்,சிறந்த காரணமாகவும் அமையும்.”
எட்வேர்ட் க்ரேயின் ஆலோசனைப்படி 1200 அமெரிக்க மக்களை ஏற்றிக் கொண்டு மே 7, 1915 ல் லுசிடானியா என்னும் பயணிகள் கப்பல் ஜெர்மன் கடற்பகுதிக்குள் சென்றது. லுசிடானியாவை ஜெர்மன் யுத்த பகுதிக்குள் அனுப்பக்கூடாது, அனுப்பினால் அதன் விளைவுக்கு ஜெர்மன் பொறுப்பல்ல என்று நியூயார்க் டைம்ஸில் ஜெர்மன் எம்ப்பஸியின் செய்தி பிரசுரமானது..
வெளியுறவுத் தலைவர்களின் திட்டப்படி ஜெர்மன் கடற்படை லுசிடானியாவை மூழ்கடித்தது. 1200 மக்கள் இறந்தனர். இதன் பாதிப்பு அமெரிக்கா முழுதும் பரவியது. அமெரிக்கர்களின் எதிரியாக ஜெர்மனியர்கள் சித்தரிக்கப்பட்டார்கள். வில்லன் இல்லாமல் படமும் எடுக்க முடியாது யுத்தமும் செய்ய முடியாது காசும் பார்க்க முடியாது என்ற விதி மீண்டும் உண்மையானது.
அமெரிக்காவும் முதல் உலகப்போரில் நுழைந்தது. 3,23,000 அமெரிக்கர்கள் மடிந்தனர். அவர்களின் தியாகம் மரியாதை செய்யப்பட்டது. நாட்டுப்பற்று ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் ஊட்டப்பட்டது. இதன் மூலம் உலகவங்கியாளர் ஜே.டி.ராக்ஃபெல்லர் 200 மில்லியன் டாலர்கள் லாபம் ஈட்டினார்.
சம்பவம் : இரண்டு
காலம் : கி.பி 2010
இடம் : இந்துமாப் பெருங்கடல்
டைட்டஸ் விசைப்படகு:
ராமேஸ்வரம். ஏப்ரல் 5, 2010. காலை 11 மணி. மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குள் சென்றனர். கச்சத்தீவை கொடுத்தற்கு பின் நிறுவப்பட்ட கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.. கண்ணிற்கு எட்டிய தொலைவு வரை சிங்கள கடற்படை தென்படவில்லை. மீன் அதிகமாக உள்ள தலைமன்னார் கடற்பகுதிக்கு சென்று பத்து விசைப் படகுகளில் மீன் பிடித்திருக்கின்றனர். இவர்களைக் கண்ட சிங்கள மீனவர்கள் கடுங்கோபத்தில் எச்சரித்துள்ளனர்.
சிங்களமீனவர்கள்
”இது எங்கள் எல்லை, இங்கு உங்களுக்கு மீன்பிடிக்க உரிமை கிடையாது.
உங்கள் எல்லைக்கு சென்று விடுங்கள்”.
தமிழக மீனவர்கள்
எங்க எல்லையில தான் மீனே இல்லையே,
எங்க போய் தான் தொழில் பாக்குறது?.
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே சிங்களமீனவர்கள் பெட்ரோல் குண்டுகளை வைத்து மிரட்டுகின்றனர். மிரட்டியதோடு அல்லாமல் ஒரு படகில் இருந்த 4 மீனவர்களை வலுக்கட்டாயமாக பிடித்து வேறு படகுக்கு மாற்றியிருக்கின்றனர். பின் அந்த படகை கைப்பற்றி அதன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி ,சேதப்படுத்தி முங்கச் செய்திருக்கின்றனர். இதையெல்லாம் சற்றும் எதிர்பார்க்காத தமிழக மீனவர்கள் சிங்கள மீனவர்களிடம் பேச எத்தணித்த போது மீண்டும் பெட்ரோல் குண்டுகளை வைத்து விரட்டி உள்ளனர். விசைப்படகு முங்குவதைப் பார்த்தவாறே அடுத்த நாள் காலை ஏப்ரல், 6, 2010 அன்று கரைக்கு திரும்புகின்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள். இதை எந்த தலைமையிடம் தெரிவித்தும் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்து யாரிடமும் அவர்கள் தெரிவிக்கவில்லை.
சம்பவம் 1 ல் அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து அமெரிக்க மக்களை எப்படி பலி கொடுத்தனரோ அப்படியே சம்பவம் 2ல் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து ராமேஸ்வர மீனவ மக்களை பலிகொடுக்கின்றனர்.
சம்பவம் 1ல் வங்கிக் காரர்களுக்கு லாபம். சம்பவம் 2ல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் என்ன லாபம் இருக்க முடியும்?
முதல் உலகப்போர் முடிந்து 93 வருடங்கள் கழித்து வெளிவந்த விவரணைப்படம் zeitgeist யார் லாபம் சம்பாதித்தார்கள், யுத்தம் தேசப்பற்று எல்லாம் எப்படி வியாபாரத்திற்கு பயன்பட்டது என்பதை நிறுவியது. சம்பவம் 2ல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஆன லாபத்தை நிறுவ ஒருவேளை இன்னும் 100 வருடம் கழித்து யாராவது ஆவணப்படம் எடுப்பார்களாய் இருக்கும். அதுவரை காத்திருக்க எனக்கும் உங்களுக்கும் ஆயுள் போதாது. எனவே நான் கேட்டும் கண்டும் யூகித்தவற்றை உங்களுக்கு சொல்கிறேன்.
இந்தியாவின் லாபம்
ராமேஸ்வரம் ஒரு கோவில் தளம். வெளிநாட்டினர், இந்தியாவின் அனைத்து மூலையில் இருந்து வரும் பக்த கோடிகள் இவர்களால் வரும் பெரும் பணம். கிட்டதட்ட தமிழகத்தின் திருப்பதி. இவர்களுக்கு இடையூராய் இருப்பது அங்கிருக்கும் மீனவர்கள்,வாழ்வுமுறை அப்புறம் பிடிப்பட்ட மீன்களால் வரும் நாற்றமும் ஈக்களும். கடற்கரை தோறும் விரிந்து இருக்கும் மீனவச் சேரிகள்.
கடற்கரையில் கட்டப்பட வேண்டியவை 5 நட்சத்திர விடுதிகள் தானே எப்படி மீனவச்சேரி இருக்க முடியும்? விவசாய நிலங்களை முதலாளிகள் கைப் பற்றும் போது கடல் நிலத்தையும் கடலையும் கைப்பற்றாமல் எப்படி இருக்க முடியும்? கைப்பற்ற தடையாய் இருப்பவர்கள் மீனவர்கள். மீனவர்களை விரட்ட மீன்பிடித் தொழிலை முடக்குவது ஒன்றுதான் வழி.
ராமேஸ்வரத்தை இன்னொரு e.c.r(கிழக்கு கடற்கரைச் சாலை,சென்னை) ஆக மாற்ற வேறு எந்த வழியும் இல்லை. தமிழ் நிலத்தை தமிழர்களிடம் இருந்து பறித்த்தைப் போல் தமிழ் கடலையும் பறிப்பதற்கான ஒரே வழி மீனவர்களின் தொழிலை முடக்குவதுதான்
(இப்படி யோசிப்பதற்கான சான்றுகள். 1. ராமேஸ்வரம் மீனவர்கள் பேச்சாலை மீனை பிடிக்கக்கூடாது என்ற சட்டம். 2. சமீபத்தில் அரசாங்கத்தால் முன் மொழியப்பட்டு அப்புறம் இந்தியா முழுவதும் மீனவர்களால் எதிர்க்கப்பட்டு தற்காலிகமாய் நிறுத்தி வைக்கப்பட்ட புதிய மீன்பிடிச் சட்டம்)
இலங்கையின் லாபம்
இலங்கைக்கு வெகு அருகாமையில் உள்ள தமிழகக் கடற்பரப்பு. ராமேஸ்வரம். இலங்கையின் கடந்த 40 வருட யுத்தத்தில் ராமேஸ்வரம் பெரும் பங்காற்றியுள்ளது. தமீழீழ உத்வேகம் உள்ளவர்களுக்கான பாலம் ராமேஸ்வரம். புவியியல் ரீதியாய் எந்த தமிழனும் இவ்வெல்லையில் பிரவேசிக்காமல் இருப்பது என்பது இலங்கையின் அவசியம்.
இந்திய முதலாளிகளின் முதலீடும் இலங்கையில் இப்போது பெருகியுள்ளது. அவர்களின் முதலீட்டைக் காப்பதற்கும் இந்த கடல் பிராந்தியத்திற்குள் எந்த தமிழனும் பிரவேசிக்காமல் இருப்பது என்பது அவசியம்.
{இப்படி யோசிப்பதற்கான சான்றுகள்: ரிலையன்ஸ், ஏர்டெல், இந்திய பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களின் முதலீடுகள் இலங்கையில். மேலதிக தகவல்களுக்கு சீனாவின் முற்றுகையில் இந்தியா என்ற புத்தகத்தைப் படிக்கவும்)
உங்களின் மேலதிகக் கவனத்திற்கு
,கடந்த 20 வருடங்களாக சிங்கள தமிழ் மீனவர்களுக்கு நடுவே இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதே இல்லை. அதிகப்படியாக ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் ஏசிக் கொள்வதைத்தாண்டி கைகலப்பு கூட நடந்ததில்லை. இருவரும் தங்களுக்குள் உணவும் பரிமாறிக் கொண்ட காலமும் இருந்தது.
முதன்முதலாய் இது நடைபெறுவதற்கான காரணம் வெகு சமீபத்தில் இந்திய ராணுவம் சில சிங்கள மீனவர்களைக் கைது செய்தது. இதுவும் அடிக்கடி நடக்கும் நடவடிக்கை தான். இந்தியக்கடலில் எங்கு கைது செய்யப்பட்டாலும் மீனவர்கள் பெரும்பாலும் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட இரண்டு மூன்று நாட்களில் திருப்பி இலங்கைக்கு அனுப்பப்படுவர். ஆனால் இம்முறை கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை. இதன் எதிர்வினைதான் சிங்கள மீனவர்களின் தாக்குதல் என்று சொல்கிறார்கள் ராமேஸ்வரம் மீனவர்கள்.
இதுவரை சிங்கள ராணுவத்திற்கு மட்டும்தான் பயந்தோம், இனி சிங்கள் மீனவருக்கும் அச்சப்பட வேண்டி இருக்கிறது. எப்படி தொழில் செய்வோம் என்று தெரியவில்லை என்று தங்கள் கையறு நிலையை பதிவு செய்கின்றனர்
எச்சரிக்கை.
மீனவர்களுக்கு தெரியவில்லை அடுத்து என்ன செய்ய என. ஆனால் ஒன்று தெரிகிறது. ராமேஸ்வரம் மட்டும் இன்றி இந்திய கடற்கரைகள் பெரும்பாலனவற்றை தாய்லாந்தின் பாங்காங் போன்று மாற்றும் முயற்சிகள் நடக்கிறது. பாங்காக் வரலாற்றைப் படிப்பதன் மூலம் நாம் மேலும் இதை உணரமுடியும்.
பாங்காங் போகதவர்களுக்கு ஒரு தகவல்
பாங்காங்கின் கிளப்புகளில் பெண்கள் தங்களுடைய பெண் உறுப்பில் பேனாவை விட்டு தங்கள் காலிடுக்கில் உள்ள தாளில் welcome to Bangkokஎன்று எழுதி வரவேற்பார்கள். இன்னும் இருபது வருடங்களில் welcome to india, welcome to tamilnadu என நம் பெண்களும் எழுதும் படி நேரலாம்.
தொடர்பான பதிவு : https://inioru.com/?p=12105
பாங்கொக் கிளப்புக்கள் இருக்கட்டும்.
ஏலவே இந்தியாவில் உள்ள கிளப்புக்கள் என்ன நிலையில் உள்ளன?
சிறந்த அனுமானம். இந்த நிகழ்வுக்கு பின் பல பணக்கார நாடுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை இன்னும் உற்று நோக்குதல் வேண்டும். பொதுவாக கடற்கரை நகரங்கள் எல்லாமே நீங்கள் கூறியதைப் போலத்தான் இருக்கும். இன்னும் 20 வருடங்களில் ராமேஸ்வரம் நீங்கள் எதிர்பார்ப்பதை விட மோசமாகத்தான் இருக்கும் தோழரே. ராமேஸ்வரத்துக்கும் இலங்கைக்கும் நடுவில் ஒரு பாலம் வரும் காலம் இன்னும் வெகு தூரத்தில் இல்லை.
ராஜ்,
தயவு செய்து எந்தப் பணக்காரநாடுகள் என்றும் அவை தான் காரணம் என்பதற்கான சான்றுகளையும் கூறுவீர்களா?
xxx , தங்களுடைய நிஜப்பெயர் தான் என்ன?
இதில் இயங்கிக் கொண்டிருப்பது சாம் அங்கிளை தவிற வேறு யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
உங்களின் மேலும் புரிதலுக்கு ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புத்தகத்தை படியுங்கள்.
ராஜ் உங்களுக்கு என் பேர் ஏன் தேவைப்படுகிறது? இங்கே பெரும்பாலானோர் சொந்தப் பேர்களைத் தெரிவிப்பதில்லை. உங்கள் பேர் கூட முழுமையானதில்லை. யாராவது கேட்டார்களா?
நீங்கள் குறிப்பிட்ட நூலைப் படித்திருக்கிறேன். அதனால், எல்லாவற்றுக்கும் அமெரிக்கா மீது பழி சுமத்திவிட முடிய்மா?
ஒவ்வொரு குற்றச் சாட்டும் ஆதாரத்துடன் கூறப்படின் வலுவாயிருக்கும்.
படித்தும் புரியவில்லை என்றால் நான் சொல்வதை ஆராயுங்கள். சேது சமுத்திரம் திட்டம் எதற்கு தேவை என்று யோசித்து பாருங்களேன்? கப்பல்களுக்கு சுற்றி செல்லாமல் செல்வதற்கா?…. அது மட்டும் தானா? இந்த திட்டத்தை இந்திய நிறுவனம் மட்டுமா செய்யப்- போகிறது? அமெரிக்க தலையீடு இல்லையா? அபெரிக நிறுவனங்கள் இல்லையா?
“இந்திய நிறுவனம் மட்டுமா செய்யப்- போகிறது? அமெரிக்க தலையீடு இல்லையா? அமெரிக்க நிறுவனங்கள் இல்லையா?” —
இவையெல்லாம் சேது சமுத்திரத் திட்டதின் பின்னால் அமெரிக்கவே உள்ளது என்பதற்கு ஆதாரங்களில்லை.
இந்திய விஸ்தரிப்புவாத நோக்கங்கள் தான் சேது சமுத்திரத் திட்டதின் பின்னணியில் உள்ளன என்றே நினைக்கிறேன்.
நீங்கள் ஆராய்ந்தறிந்து கன்டு பிடித்த ஆதாரங்களைத் தந்தால் என் போன்ற அறிவிலிகட்கு உதவியாக இருக்கும்.