பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய உதவிகளின் நோக்கங்கள் பற்றிக் கருத்தத் தெரிவித்துள்ள பாகிஸ்தானின் இராணுவு புலனாய்வு எழுத்தாளர் ஆயிஷா சித்தீகா, தெற்காசிய நாடுகளின் அரசியலில் செல்வாக்குச் செலுத்துவதன் மூலமாக இந்தியாவுடனான சமபலத்தைப் பேணுவதான தோற்றத்தை உருவாக்குதல், பிராந்தியத்தில் அச்சமூட்டத்தக்க செல்வாக்கை வளர்த்ததெடுத்தல், இந்தியப் புலானாய்வுத் துறையினரால் உருவாக்கப்பட்ட தமிழ்ப் போராளிகளை அழித்தல் என்பவை பிரதான நோக்கங்களாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும் உள்ளுரில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயதங்களை சந்தைப்படுத்துவதும் துணைநோக்கங்களில் ஒன்றாகக் கருதலாம் எனவும் தெரிவித்திருக்கிறார். ஸ்ரீலங்கா கார்டியனுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே இவ்வாறு ஆயிஷா சித்தீகா தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் தமிழருக்கு அரசியல் தீர்வை வழங்குவதில் சிங்களவருக்கு சகிப்புத் தன்மை, பொறுமை வெண்டுமெனவும் சமூக அரசியல் தணிவுக்காக ஒரு வேலைத்திட்டம் வேண்டுமெனவும் குறிப்பிட்டிருக்கிறார்.