பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு இராணுவத்தினருக்கு பயிற்சிகளை வழங்க தமது படையினர் மகிழ்ச்சி கொண்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இந்த வருட ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக வெற்றி கொண்டதன் காரணமாக பாகிஸ்தான் தம்மி்டம் இந்த பயிற்சிக்காக கோரிக்கை விடுத்துள்ளதாக ஜெனரல் ஜகத் ஜயசூரிய கூறினார்.
இதற்கான பதில் சாதகமாகவே அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான பயிற்சிகளை அமெரிக்கா, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கும் வழங்க தயாராகவுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.
what a joke man