பல்கலைக்கழகத்திற்குள் காவற்றுறையினர் கடமையில் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அமைப்பாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகளில் மாணவர்களுக்கு இடையில் ஏற்படக் கூடிய மோதல் நிலைமைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் காவற்றுறை காவலரணங்கள் அமைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க தெரிவித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே சஞ்சீவ பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேபோன்றதொரு நிலைமை 1984ம் ஆண்டிலும் காணப்பட்டது. மாணவர்களின் உரிமைகளை ஒடுக்கும் நோக்கத்தினாலான இவ்வாறான முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கமே பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்தியில் மோதல்களை ஏற்படுத்தி வருவதாகவும் மாணவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறான கலகங்கள் ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.