யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் மூவருக்கு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நாளை வெள்ளிக்கிழமை, இவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அலுவலகத்துக்கு வருமாறு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் யாழ். பல்கலைக்கழக மாணவிகள் விடுதியின் சங்கத் தலைவி என்றும் ஏனைய இருவரும் மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப்பீட முதலாமாண்டு மாணவியான நடராசா கியானி என்பவர் சுன்னாகத்திலுள்ள அவரது வீட்டில் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்த மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.







