இந்தியாவின் சிறிய மாநிலமான திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக இடதுசாரிகளின் ஆட்சி நடந்து வந்தது. அங்குள்ள பழங்குடிகளை இடதுசாரிகளுக்கு எதிராகத் தூண்டி விட்ட பாஜக மத வாத அரசியலை முன் வைத்து 25 ஆண்டுகால இடதுசாரிகளுக்கு விடை கொடுத்து ஆட்சியைக் கைப்பற்றியது.
2018-ல் பாஜக பதவியேற்றதும் இடதுசாரிகள் மீதான தாக்குதல் நடந்தது. காவல்துறை உதவியோடு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இடதுசாரிகளின் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டு முன்னணி இடதுசாரிகள் பலர் கொல்லப்பட்டனர்.
இப்போது வங்காளதேசத்தில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக நடந்து வரும் தாக்குதல்களைக் கண்டித்து இந்துத்துவ அமைப்பான விஷ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் ஊர்வலம் நடத்தின. இந்த ஊர்வலத்தில் மசூதிகளும் முஸ்லீம்களின் வீடுகளும் தீக்கிரையாக்கபட்டன. இதுவரை 16 மசூதிகள் தீக்கிரையாக்கபப்ட்டுள்ளன, வன்முறை அரசு ஆதரவோடு நடைபெற்று வரும் நிலையில், பெரிதாக யாரும் இந்த கலவரங்கள் தொடர்பாக பேசவில்லை.
அங்குள்ள காவல்துறை இந்த கலவரங்களில் மசூதியில் தீக்கிரையாக்கப்படவில்லை. என்று தெரிவித்துள்ள போதிலும் இந்திய வரலாற்றாய்வாளர் ராம் புன்னியானி உட்பட பலரும் இந்த கலவரங்கள் மிக மோசமாக முஸ்லீம்களை குறி வைத்து நடத்தப்படுவதாகவும் அங்குள்ள பாஜக அரசின் ஆதரவோடு இக்கலவரங்கள் நடப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.