தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) முக்கிய உறுப்பினரும், செயற்பாட்டாளருமான பருதி-ரேகன் – (நடராஜா மதீந்தரன்) பாரீஸ் 20 ஆம் மாவட்டத்தில் அமைந்துள்ள என்ற 341, Rue des Pyrénées தெருவில் 341ம் இலக்க மாடிக் கட்டடத்திலிருந்து வெளியேறும் போது, நேற்று 08.11.2012 அன்று பின்னிரவில் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்ற புலம்பெயர் புலிகளின் அமைப்பாக இயங்கிய அமைப்பின் உத்தியோகபூர்வமற்ற பொறுப்பாளராக இருந்த பருதி ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகத்தில் இருந்து வெளியெறும் போதே சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் வெளியேறியதும் இருசக்கர மோட்டார் வாகனத்தில் அங்கு காத்திருந்த இருவர் பருதி மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். முதல் சூட்டோடு சிறிது தூரம் ஓடிச் சென்ற பருதி அங்கிருந்த பஸ் நிலையத்தின் அருகாமையில் நிலத்தில் விழுந்தபோது மேலும் இருதடவை துப்பாக்கியால் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமானார்.
இது குறித்து பாரிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் வினவிய போது, புலிகள் சார்ந்த இரண்டு குழுக்களுக்கு இடையேயான மோதலின் விளைவாகவே பருதி கொல்லப்பட்டார் எனத் தெரிவித்தனர்.
விநாயகம் மற்றும் பாண்டியன் குழுவினரே கொலைகளின் பின்னணியில் செயற்பட்டதாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தரப்பின் உத்தியோகபூர்வமற்ற பகுதிகளிலிருந்து தெரிவித்தனர். வினாயகம் ஆதரவுக் குழுக்களாகக் கருதப்படும் ஏனைய குழுவினர் இதனை மறுத்துள்ளனர்.
இணையத் தளங்கள் பல கொலைய இலங்கை அரசே நிகழ்த்தியிருப்பதாகக் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இதற்கிடையே தமிழீழ விடுதலைப் புலிகள் பருதிக்கு அஞ்சலி செலுத்துவாதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
ஈழத்தில் மரணத்துள் வாழும் மக்கள் தமது ‘தலைவிதி இதுவோ என’ துயரத்தில் புலம்பும் ஒலி இன்னும் இவர எவரதும் காதுகளை எட்டியதாகத் தெரியவில்லை.
2011 Oct பரிதி மருத்துவமனையில் இருந்த போது எழுதிய குறிப்புகள் :
பாரிஸ் பரிதி மீது ஆழ ஊடுருவும் ஆவிகள் படையணி தாக்குதல் – ஆபத்தான நிலையில்…
சூரன்போர் கலவரம்: 1
இந்த வன்முறையின் பின்னால் ஒரு குறூப் இருப்பதற்கான தடயம் பிரான்சியப்பொலிசார் கண்டறிந்துள்ளனர்.பரிதி அவர்கள் வழிநடத்திய சில குறூப்புகள் பரிதியின் சொல் கேட்க மறுத்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அந்த குழுவுக்கும் பரிதிக்கும் இடையில் முரண்பாடுகள் வெடிந்திருந்ததாக அறியமுடிகிறது.
ஒரு தடவை குறித்த குறூப்பை சேர்ந்தவர்கள் பரிதியை ஒரு தொடருந்து நிலையத்தில் பரிதியின் சேட்டைப் பிடித்து வெருட்டியதாக அறியப்படுகிறது. இதன் தொடர்ச்சியே இந்த வன்முறையின் பின்னணியென்று விளங்கிக் கொள்ள முடிகின்றது. குறிப்பாக ஆவிகள் தினத்தை(Hallowen Day) இந்த தாக்குதலில் ஈடுப்பட்டவர்கள் தாக்குதலில் ஈடுபடுவதற்கான நாளாக குறித்துமுள்ளனர். இது நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவும் இந்த தினத்தை தெரிவுசெய்தவர்களின் சரளமான பிரான்சிய பழக்கவழக்கங்கள் அறிந்தவர்களாகவும் இருந்துள்ளனர்.
பரிதி தனது வலதுகை சஞ்சீவனுக்கு சொன்ன வாக்குமூலத்தில் தான் வரும்வரையும் ஒருவருடனும் முரண்பாடாமல் இருக்கச் சொன்னதான தகவலும் கசிந்துள்ளது.
சூரன்போர் கலவரம்:2
இதேவேளை பிறிதொரு தகவலில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்திலிருந்து தாங்கள் மூன்று பேர் வெளியேறி காரில் ஏறிச்செல்ல சென்ற போது அங்கு 6பேர் நின்றதாகவும், அவர்களில் சிலர் தங்களுடன் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களும் இருந்தனர் என்று காயமடைந்த பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் பரிதி என்று அழைக்கப்படும் நடராசா மதீந்திரன் பிரான்ஸ் காவல்துறைக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளதாக உள்ளது.
இங்கு முகமூடி அணிந்திருந்த தாக்குதலாளர்களை எப்படி பரிதி இனங்கண்டு கொண்டார் என்பது பரிதிக்கு தான் வெளிச்சம்.
இங்கு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவில் இருந்து பிரிந்து இயங்கும் தமிழர் நடுவம் என்ற அமைப்பில் உள்ளவர்களும் தாக்குதலுக்கு உடந்தையானவர்கள் என்ற ஜயப்பாடு தமிழர் ஒருங்கிணைப்புக்கு ஆதரவானவர்களால் கூறப்படுகின்றது.
இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழர் நடுவத்தின் பிரிதிநி கனி என்பவர் தாக்குதலில் காயமடைந்த பரிதியை காலை 5 மணி வரை வைத்தியாசாலையில் இருந்து கவனித்ததோடு இப்ப வரைக்கும் அக்கறையுடன் இருக்கின்றார் என்ற தகவலும் மறுஆய்வுக்கு எட்டியுள்ளது.
சூரன்போர் கலவரம்:3
இன்றைய கள நிலவரப்படி பரிதி மற்றும் தமிழர் ஓழுங்கிணைப்புக்குழு மீது ஒருவித அனுதாபத்தைத் தேடவும் – தமிழர் நடுவம் மீதும் போராளிகள் மீதும் அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட நாடகம் போல் உள்ளது எனபலரும் இவ்வாறு பேசத் தொடங்கியுள்ளனர்.
சம்பவம் குறித்து ஏற்படுத்தப்பட்ட செய்தி திட்டமிட்டு ஏற்படுத்துப்பட்ட பரபரப்பு போல் இருக்கின்றது.
செய்தியில் வந்தது போல் கடுமையான அல்லது மோசமான வன்முறைச் சம்பவமாக இது இருக்கவில்லை. சிறு காயத்துடன் பரிதி மூன்றாம் நாளான 1ம் திகதியே வீடு திரும்பியுள்ளார்.
எந்த விதி மோசமான நிலையும் இல்லை.பரிதி சார்ந்த இணையத்தினால் பரப்பபட்ட பரபரப்பு செய்திக்கும் நடைமுறைக்கும் முரணாகவே இவைகள் அமைந்துள்ளன.
மேலும் பரிதி பிரான்சில் இயங்கும் சில விளையாட்டுக்குழுக்களுடனும் முரண்பாட்டுகளை சமீபகாலங்களில் ஏற்படுத்தியுள்ளார்.
உண்மையில் தனக்கு துணையாக தான் வளர்த்த வன்முறைக் கும்பலும் வன்முறையுமே அவரை இன்று தாக்கியுள்ளது.
பரிதி நட்பை வளர்ததைவிட பகையைத்தான தனக்கு உருவாக்கி வைத்துள்ளார். தமிழர் நடாத்திய பல கூட்டங்களில் பரிதி ஏவிய கும்பல்கள் வந்து நடாத்திய வன்முறையும் குழப்பங்களும் வெளியில் மக்களுக்கு தெரியாதவை. ஏவிய வன்முறையே இன்று அவரை முழுங்க விளைந்துள்ளது.அடிப்படையில் இந்த வன்முறைகள் மக்களுக்கும் அருவருப்பையும் வெறுப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தும்.
சூரன்போர் கலவரம்:4
பிரான்ஸ் மக்களவைக்கும் பரிதிக்கும் இடையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னரேயே முரண்பாடு தோன்றியுள்ளது மட்டுமல்லாது கதைபேச்சுக்களிலும் ஈடுபடுவதில்லை.
இதன் காரணமாக சாலினி என்பவர் ரீசிசியில் இருந்து விலகியுள்ளதோடு பரிதிக்கு எதிராக குறை கூறிக் கொண்டு இருக்கின்றார் ( சாலினி : மக்களைவின் செயலாளர் ) அத்துடன் நாடு கடந்த அரசு ஜனநாயக அணியின் தேசிய தலைவியும் கூட)
இதில் பிரான்ஸ் மக்களைவின் வலதுகை மட்டுமல்ல ‘ அனைத்துல மக்களை’ என்று சொல்லப்படுகின்ற மாய அமைப்பின் செயலாளருமாகிய பிரதீப் என்பர் ஒரு முன்னாள் றவுடி.
பிரான்சின் 93 பிராந்தியத்தில் நடைபெற்ற மிக்கப்பயங்கரமான படுகொலைக் கேஸ் என்று பிரெஞ்சு காவல்துறையினரால் வர்ணிக்கப்படுகின்ற ‘பொபினி’ படுகொலையின் சூத்திரதாரிகளில் இந்த பிரதீப் இருக்கின்றார்.
பரிதி மீது இப்படியொரு சம்பவம் இடம்பெற்றிருக்குமாயின் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள இந்த சம்பவத்துக்கு பின்னால் இந்தச் தொழிலில் மிகவும் கைதேர்ந்த ஒருவரே இதன் பின்னால் இருந்திருக்க வேண்டும்.
இதில் பிரதீப் மிகவும் கைதேர்ந்தவர் என்பது முக்கியமானதும் மக்களை-ரீசீசீ முரண்பாட்டையும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டியுள்ளது.
மேலும் பரிதி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தில் நிற்கின்றார் என்பதும் குறித்த நேரத்தில் வெளியில் வருகின்றார் என்பதும் உள்ளுக்குள் இதனை நன்கறிந்தவர் ஒருவர் இருந்திருக்க வேண்டும்.
நடைமுறையில் தமிழர்நடுவம் ஆக்களோ அல்லது போராளிகளோ உள்ளிருக்க வாய்ப்பில்லை அல்லது பரிதியின் போக்குவரத்தை அறிந்தவர்கள் இருக்க வாய்பில்லை. இது கூடவிருந்து குழிபறிக்கவல்ல ஒருவரால்தான் முடியும்.
அனைத்துலக பிரிவுக்குள் பிரிவு – பிளவு
கடந்த 2009 மே மாதத்தின் பின்னர் அனைத்துலக பிரிவினரின் நடமாடும் தலைவரான இரும்பொறைக்கும் – விடுதலைக்கும்( குட்டி) இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக இந்த பிரிவினரது கட்டுப்பாட்டில் உள்ள ஊடகம் வாயிலாக அறியமுடிகிறது.
தற்போது ஈழமுரசு ஆதித்தன்- நந்தகோபன் – விடுதலை ஒரு அணியாகவும் – இரும்பொறை மறு அணியாகவும் பிளவுபட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த இருதரப்பில் யாருக்கு ‘அனைத்துல செயலகம்‘ என்ற பிரச்சனை தொடங்கியுள்ளது.
2009 மே மாதத்துக்கு பின்னர் அனாமதேயமாக அனைத்துலக பிரிவினரால் அனுப்பப்படும் கறுப்பு என்ற மின்மஞ்சலுக்கும் அனைத்துலக பிரிவுக்கும் தொடர்பில்லை என்று ஒர் அறிக்கை அனைத்துலக தொடர்பகம் என்ற பெயரில் இரும்பொறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஈழம்பிறஸ் என்ற இணையத்தில் செய்தியிடப்பட்டிருந்தது. எனினும் அனைத்துலக தொடர்பகத்தின் அறிக்கைகளை ஆவணப்படுத்தி வெளியிடும் பதிவு, சங்கதி, தமிழ்க்கதிர் ,ஈழமுரசு போன்ற இணையத்தளங்களில் இவ் அறிக்கை வெளிவரவில்லை.
லண்டனில் தமிழ் இளைஞன் சுட்டுக்கொலை?
பிராண்சில் கடந்த வியாழக்கிழமை புலிகளின் உள்வீட்டுப்பிணக்கில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் புறநகர்ப் பகுதியான லூசியம் எனுமிடத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை இவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் இவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தனர். ஆனால் மறுநாள் காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை. பொலிஸார் சம்பவ இடத்தில் திரட்டிய தடயங்களுடன் விசாரணைகளை முடுக்கியுள்ளனர் என அறியக்கிடைக்கின்றது.
புலம்பெயர் தேசத்திலே மாவீரர்களின் பெயரால் பிழைப்பு (பிச்சையெடுப்பு) களைகட்டியுள்ளது. மாவீரர்தினம் எனும் பெயரால் இடம்பெறும் வியாபாராத்தில் வருமானத்தை பங்குபோடுவதில் புலம்பெயர் தமிழரிடையே பெரும் குத்துவெட்டுக்கள் இடம்பெறுகின்றது. இக்கொலையும் இதன் அங்கமா என்பது தெளிவில்லை என்றாலும் இக்கோணத்திலும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது