தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) முக்கிய உறுப்பினரும், செயற்பாட்டாளருமான பரிதி -ரேகன் – (நடராஜா மதீந்தரன்) அவர்கள் பரீஸ் நகரின் மையப்பகுதியில் வைத்து 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி சுட்டுக்கொலை செய்ய்ப்பட்டார். இக் கொலை குறித்த பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இறுதியாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் துணைக்குழுவான சிறீ ரெலோ என்ற மக்கள் விரோத இயக்கத்துடன் தொடர்புடைய நபர்கள் கொலையாளிகள் என்ற ஆதாரபூர்வமான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலிகள் இயக்கத்தின் பெரும் தொகைப் பணம் குறித்த மோதல்கள் அதன் ஆதரவாளர்கள் இடையே நடைபெற்று வந்த காரணத்தால் அந்த இயக்கத்தின் புலம் பெயர் பிரிவுகளே கொலையின் பொறுப்பாளிகள் என்ற சந்தேகம் நிலவியது. இறுதியாகக் கிடைத்த நமபகமான தகவல்களின் அடிப்படையில் இக்கொலையின் சூத்திரதாரிகள் இலங்கை அரசாங்கமும் அதன் இராணுவத் துணைக்குழுவான சிறீ ரெலொவுமே என்று தெரியவருகிறது. ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் பிரஞ்சு போலிஸ் அவ்வியக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் இருவரைக் கைது செய்துள்ளது.
சயந்தன் வடிவேலு என்ற சிறீ ரெலோ இயக்கத்தின் 48 வயது நபரும், அதே இயக்கத்தைச் சேர்ந்த உதயகுமார் குலேந்திரன் என்ற 32 வயதான நபரும் கொலையுடன் நேரடியான தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரஞ்சு போலீசாரால் நேற்றய தினம் 05.06.2013 அன்று பாரீசின் புற நகர்ப் பகுதியான வில்ஜூவிவ் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து அதிகாலை 5 மணிக்குக் கைதாகியுள்ளனர்.
கைதாகியுள்ள அச்சுவேலியைச் சேர்ந்த சயந்தன் வடிவேலுவின் பெயரிலேயே இலங்கையில் சிறீ ரெலோ பதிவுசெய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான போலிக் குற்றச்சாட்டு, பல்வேறு சமூக விரோதத் தாக்குதல்கள், கொள்ளை, வழிப்பறி, கடத்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய துணை இராணுவக் குழுவான சிறீ ரெலோ இலங்கை அரச பாசிஸ்டுக்களின் மிகவும் நம்பிக்கையான அமைப்பாகும்.
இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினரான கீரன் என்ற மாணிகம் நகுலேந்திரன் பிரித்தானிய தமிழ்த் தொலைகாட்சியில் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவது குறித்தும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களைத் தாமே காட்டிக்கொடுத்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் வழன்க்கியிருந்தார்.
பருதி கொலை செய்யப்பட்ட மறு நாளே பிரேம், ரமேஷ், தவம் ஆகிய மூவரை பிரஞ்சு காவல்துறை கைது செய்தது. இவர்களில் ஒருவருக்கும் சிறீ ரெலோவுடன் நெருங்கிய தொடர்பு காணப்பட்டிருந்தது.
இலங்கை அரசின் பாசிசக் கரங்கள் புலம் பெயர் நாடுகள் வரை நீண்டுள்ளது. துணை இராணுவக் குழுக்கள் புலம் பெயர் நாடுகளில் சுதந்திரமாக நடமாடுகின்றன. உலகின் அனைத்து உளவுத்துறைகளதும் ஆடுகளமாக மாறிப்போன சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் இலங்கை அரசை அகதிகளான நாடுகளுக்குக் கூட அழைத்து வந்துளது.
மனித உரிமை,ஜனநாயகம்,தலித்,மற்றும் இலக்கிய மதகு என ஓரம் கட்டியவர்கள்,மகிந்தாவின் கல்லாப் பெட்டிக்கே என்பது வெள்ளிடை மலை.தீபம் தொலைக்காட்சி சங்கூதப்பட்டதற்கும் தொடர்பு இருக்குமோ?
The thing is like the cash trail vis-a-vis the People’s Band hold ups in the 1980 or so. It is a blank after K. P. No new weapons will come into the country of Sri Lanka again. None can break the law in any country where he or she is domiciled.
Except in home sweet home though !
பேச்சுக்கள் , எழுத்துக்கள் காட்டிக் கொடுத்துவிடும் .
கீரனின் ஒப்புதல் வாக்குமூலம் .
தவராஜாவும் அவரது மனைவியும் சென்னையில் வைத்து கடத்தி பணயம் வைக்கப்பட்டு பெரும்தொகைப்பணம் கப்பமாக கேட்டவர்கள் தமிழ்நாட்டிலும் லண்டனிலும் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தியில் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு விடயம் உள்ளது. சென்னைக்கடத்தலின் பின் அதன் சூத்திரதாரி லண்டனில் கைதுசெய்யப்படார். அவரது பெயர் அஜந்தன். இவர் யார் தெரியுமா?
2008இல் ஸ்ரீடெலோ ஜேர்மனியில் ஒழுங்கு செய்த கூட்டத்துக்கு லண்டனில் இருந்து மூன்று பேர் போனார்கள். முதலாவது ஆள் கீரன் (டெலோநியுஸ்.கொம்) இரண்டாம் நபர் விஜி என்றழைக்கபட்ட சோதி (தேசம்னெட்.கோ.யுகே) மூன்றாவது நபர் ரூபன் என்றழைக்கப்பட்ட அஜந்தன்.
சென்னை கடத்தலின் பின்னணியும் ஸ்ரீடெலோ என்பது இப்போது தெளிவாகி இருக்கும்.
புலியில் இருந்தவர்கள் அண்ணைக்கு (பிரபாகரனுக்கு) பிடிக்கும் பிடிக்கும் என ஆட்களை போட்டுத் தள்ளினார்கள். சிறிnலோ ‘தோழர்’ மகிந்தாவை சந்தோசப்படுத்த முதல்கட்டமாக புலிகளை போடத் தொடங்கியுள்ளது.
சயந்தன் பிரான்சில் ரவுடி குழு ஒன்றையேநடத்தி வந்தார். இவர் சம்பந்தமாக பொலிசில் ஏற்கனவே பல முறைபாடுகள் உள்ளன. பிரான்சில் இவர் குற்ரசெயல்களில் ஈடுபடார். மிக பிரபலமானவர்.