‘நான் மூன்று கொலைகளைச் செய்துள்ளேன். ஆனால் ஒரு போதும் அதற்காக மாட்டிக் கொள்ளவில்லை‘ Ferrier உளவியல் நிபுணர் ஒருவரிடம் குறிப்பிட்டுள்ளான். இது அவன் தொடர்பான பத்திரங்களில் குறிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான பாலியல் பலாத்காரங்கள், உட்பட 60 க்கும் மேற்பட்ட குற்றச் செயல்களுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட இவன் Warkworth Prison in Campbellford வில் இருந்தே விடுவிக்கப்பட்டான். இதே சமயம் ‘குணப்படுத்த முடியாத மனநோயாளி‘ என்று சிறைச்சாலை மருத்துவரால் சித்திரிக்கப்பட்ட இவன் குறித்து பொதுமக்களுக்கு Peel Regional பொலிசார் எச்சரிக்கைகளை விடுத்தனர்.
விடுலைக்குப் பின்னர் Brampton பகுதியிலேயே தான் வாழப்போவதாக Ferrier தெரிவித்ததைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பெரும் அச்சமும் பீதியும் அடைந்தனர்.
‘இது பயங்கரம்! இவனை விடுலை செய்துவிட்டார்கள் என்று என்னால் நம்பமுடியாமல் உள்ளது. எப்படி இவனை பொதுமக்களுடன் வாழ அனுமதித்தார்கள்?’ என்று ஒரு பெண்மணி தன்னுடைய பயத்தை வெளிப்படுத்தினார்.
‘எனக்கு மூன்று இளம் குழந்தைகள் உள்ளன. என்ன சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை. நான் நினைக்கின்றேன் இவனை இன்னம் நீண்ட காலத்திற்கு சிறையிலேயே வைத்திருக்கலாம்‘ என்று இன்னொரு பெண் பீதியோடு கூறினார்.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ‘விடுலையாகினால் அவன் என்னைக் கொன்றுவிடுவான்‘ என்று Ferrier யின் பெற்ற தாய் பயத்தில் கதி கலங்கி அலறினாள்.
விடுதலைக்குப் பின்னர் Brampton ஹாட்டல் ஒன்றில் தங்குவதற்குச் சென்ற Ferrier க்கு அனுமதி மறுக்கப்பட்டது. கிறடிட் காட், மற்றும் அடையாளத்தை உறுதி செய்வதற்கான ஆதாரங்களும் அவனிடம் இல்லை என்று காரணம் சொல்லப்பட்டது.
இரவு பத்து மணிக்குப் பிறகு தங்குவதற்கு இடம் எதுவும் இல்லாத நிலையில் Peel 22 Division பொலிஸ் நிலையத்தில் Ferrier தஞ்சம் அடைந்தான்.
இதே சமயம் தொலைக்காட்சி நிருபர் ஒருவருக்குக் கொலைப் பயமுறுத்தல் விடுத்ததாக Ferrier மறுநாள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான். முதல் நாள் அவனை நிபந்தனைகளுடன் விடுதலை செய்த அதே நீதிபதியால் மறுபடியும் இரண்டு வருடச் சிறைத்தண்டனை அவனுக்கு விதிக்கப்பட்டது.
அப்பாடா ஒரு வழியாக இந்தச் சிக்கல் இப்போதைக்கு தீர்ந்தது என்று பெருமூச்சு விடாதீர்கள். கனடாவில் மாத்திரம் 300,000 Psychopath இருக்கின்றனர் இது எம்மாத்திரம். வட அமெரிக்காவில் இரண்டு மில்லியன் Psychopath உள்ளனர்.
இந்த psychopath கள் உங்கள் நண்பராக இருக்கலாம். உங்கள் மேலதிகாரியாகவும் இருக்கலாம். காதலனாகவோ காதலியாகவோ இருக்கலாம். அல்லது உங்கள் குடும்பவைத்தியராக, உங்கள் கணவராக, அரசியல்வாதியாக, கடவுளின் பெயர் சொல்லி சித்து வித்தை காட்டும் மகானாக, பெரும் தொழில் அதிபராகக் கூட இருக்கலாம்.
எப்படி இவர்களை அடையாளம் காணுவது?
சாதாரணமாக இவர்களை அடையாளம் காணமுடியாது. அதி வசீகரமானவர்கள் (superficial charm)). பார்த்த மார்த்திரத்தில் மற்றவர்களை தம் பக்கம் கவர்ந்து இழுத்து விடும் ஏதோ ஒன்று இவர்களிடம் எப்போதும் இருக்கும். புத்திசாலிகள். வார்த்தைகள் எந்தவிதமான தடையும் இல்லாமல் அலை அலையாக வந்து விழும்.
இவர்கள் பேசுவதை வாய்பிளந்து கேட்டுக் கொண்டே இருக்கலாம். பொய் பேசுவது தண்ணீர் பட்டபாடு. Lie detector இவர்களைக் கண்டால் பயந்து ஓடிப்போய் விடும். மிக நேர்த்தியாக பொய் சொல்வதில் தேர்ச்சி பெற்றவர்கள்.
தொடர் கொலைகள், பெரும் கிரிமினல் குற்றங்களுடன் தொடர்பு படுத்தி எப்போதாவது பத்திரிகைகளில் இவர்களின் பெயர் வரும் போது இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வீர்கள். ஒரு Psychopath உடன் தொடர்பாக இருந்திருக்கின்றீர்களே என்று அப்போது நிச்சயம் உங்களுக்கு திகைப்பாக இருக்கும். அதிகமான White- collar கிரிமினல்கள் எல்லாரும் Psychopath களே ஆகும்.
உங்கள் ஆறுதலுக்காக ஒன்றைச் சொல்லாம். உண்மையில் பெரும்பான்மையான Psychopath களால் ஆபத்து எதுவும் இல்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய சிறிய எண்ணிக்கையானவர்களே ஆபத்தானவர்கள். Psychopath எல்லாரும் கொலைகாரர்களும் இல்லை. ஆனால் தமக்கு தேவை என்று கருதும் போது கொலையும் செய்யத் தயங்கமாட்டார்கள்.
ஏதிரிப்படைகளை மூர்க்கத்தனமாக கொன்று குவிக்கின்ற இராணுவ ஹீரோக்களை, அல்லது பொதுமக்களை கொன்றொழித்த வீரர்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இராணுவத்தில் எதிரிகளை அழித்து ஒழிக்கின்ற Killing Machine கள் உண்மையில் இந்த Psychopath கள் தானாம். ஏதிரிகளை ஈவு இரக்கம் இன்றி கொன்று குவிப்பதில் இவர்கள் பலே கில்லாடிகள். கொலை செய்வதையிட்டு எந்த வருத்தமும் இவர்களுக்கு கிடையாது. கருணையோ, இரக்கமோ இவர்களிடம் இல்லவே இல்லை. எனவே கொலை செய்யும் இயந்திரமாகவே தொழிற்படுகின்றார்கள்.
ஓவ்வொரு Psychopath க்கும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய தனிப் பண்பும் இருக்கும். Psychopath களின் முக்கியமான பிரச்சனை அவர்களின் மூளையிலேயே இருக்கின்றது.
மூளையில் ஒன்றல்ல பல குறைபாடுகள் இவர்களுக்கு இருக்கும். சமூக கட்டுப்பாடுகள், கோட்பாடுகள், சட்டங்கள் ஒரு விளையாட்டாகவே இவர்களுக்கு இருக்கும். எப்போதுமே இதை மீறிக் கொண்டிருப்பார்கள். ஒரு வார்த்தையில் சொல்லுவதாயின் இவர்கள் மிக ‘அபாயகரமான பேர்வழிகள்’.
தமது இலட்சியங்களுக்கு எதிராக குறுக்கே இருக்கக் கூடிய எதையும் விட்டுவைக்க மாட்டார்கள். ஆனால் இவர்களில் பெரும்பாலோனோர் சிறைகளுக்குள் இல்லை. ஏன் என்றால் இவர்கள் புத்திசாலிகள். திட்டமிட்டுக் காரியங்களைச் சாதிப்பதில் வல்லவர்கள். குளிர்சாதனப் பெட்டிக்குள் தான் கொலை செய்த மனிதத் தலைகளை அழகாக அடுக்கி அழகு பார்த்துக் கொண்டே பொலிஸ்மா அதிபருடன் வெகு கூலாக ‘பியர்’ அருந்தக் கூடிய மனவலிமையும், செல்வாக்கும் இருக்கக் கூடியவர்கள். அடிக்கடி பொலிசாரிடம் மாட்டிக்கொள்கின்ற Psychopath களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இதற்குக் காரணம் இவர்களுக்கு கொஞ்சம் ‘அறிவு’ குறைவு என்பதே.
‘நெருப்பு’ என்று ஒரு குரல் கேட்கும் போது உங்களுக்கு ‘திகீர்’ என்று இருக்கும். ‘தண்ணீர்’ என்று சொல்லும் போது ‘குளிர்ச்சியாக’ இருக்கும். ஆனால் Psychopath களுக்கு இந்த விடயத்தில் பெரும் சிக்கல் இருக்கின்றது. ‘நெருப்பு’, ‘தண்ணீர்’, ‘பூ’, ‘இரத்தம்’. ‘குழந்தை’, ‘மரணம்’ என்ற எந்த சொற்களுக்கும் இவர்களின் மூளையில் வித்தியாசம் தெரியாது. கோரமாக இறந்து கிடக்கின்ற ஒரு உடலைப் பார்த்துக் கொண்டு ஜஸ்கிரீமை சுவைத்துச் சாப்பிடக் கூடிய மனநிலை இவர்களுக்கு உள்ளது என்றால் புரிந்து கொள்ளுங்கள் இவர்களைப் பற்றி.
தாம் செய்கின்ற தவறுகளுக்காக இவர்கள் என்றுமே மனம்; வருந்துவதில்லை. குற்ற உணர்வு என்றால் என்ன என்று இவர்களுக்குத் தெரியாது. இதற்கும் மேலாக வெட்கம், அவமானம் போன்ற உணர்ச்சிகளும் இவர்களுக்குக் கிடையவே கிடையாது. கட்டுப்பாடுகள் இவர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. குழப்பங்கள் ஏதாவது நடந்தால் மிகவும் ஆசையோடு இரசித்துப் பார்ப்பார்கள்.
தன்னைச் சூழ உள்ளவர்களும் மனிதர்கள் தானே என்ற எண்ணம் இவர்களுக்கு ஒரு போதும் தோன்றுவதே இல்லை. மனிதர்களைப் பார்க்கின்ற போதேல்லாம் அது தமக்குக் கிடைத்துள்ள ‘வாய்ப்புக்கள்’ என்றே இவர்களுக்குத் தோன்றும். மற்றவர்களுடைய உரிமை பற்றி இவர்கள் ஒரு நாளும், ஒரு போதும் சிந்திப்பதே கிடையாது. மற்ற மனிதர்களின் உணர்ச்சிகளைப் பற்றிய எந்த வித கவலையும் இவர்களுக்குக் கிடையாது. இவை எல்லாவற்றுக்கும் காரணம் இவர்களின் மூளையில் இதற்குரிய ளுலளவநஅ விருத்தி அடையாததே என்று சொல்லப்படுகின்றது.
நீண்ட கால நட்புகள், நெருங்கிய உறவுகள் என்பது இவர்களுக்கு இருக்கவே முடியாது. நீண்ட காலத்திற்கு ஒரே வேலையையும் செய்வது இவர்களுக்கு கடினமாய் இருக்கும். புதிய நபர்களால் நன்மை அதிகம் என்று கருதினால் உங்களை கைவிட்டு அடுத்த இடத்திற்கு தாவி விடுவார்கள்.
அன்பு என்றால் என்ன என்று இவர்களுக்குப் புரியாது. குழந்தைகளுக்குக் கூட அன்பைக் கொடுக்க முடியாதவர்கள் (ஆனால் அன்பைச் சொரிவது போல மிக அழகாக நடிப்பார்கள்). ஆதனால் இவர்களுக்கும் உண்மையான அன்பு கிடைப்பது வெகு அரிது.
அரசியல், விடுதலை இயக்கம் மற்றும் மதத் தலைவர்களாக பல Psychopath கள் இருக்கின்றார்கள். தம் வழி தொடர்பவர்கள் ஏதாவது காரியத்தில் வெற்றியடையாமல் போனால் அதை ஒரு பெரும் குற்றமாக உணரும்படி செய்து விடுவார்கள்.
தன்னைப் பின் தொடர்பவர்களின் விசுவாசத்தில் இவர்களுக்கு எப்போதும் சந்தேகமே இருக்கும். பின் தொடர்பவர்களின் விசுவாசத்தை அடிக்கடி பரிசோதித்துப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அது கடுமையான, இரக்கமற்ற, கரடுமுரடான வழிகளாக இருக்கும்.
கடுமையான சட்டங்கள், தண்டனைகளை தனது சீடர்களுக்கு வழங்குவது இவர்களுக்கு பெரும் சந்தோசமான காரியம். வார்த்தைகளால் கீறுவது மட்டுமல்ல கத்தியால் கீறுவதும் இவர்களுக்கு பெரும் கிளர்ச்சியை உண்டு பண்ணக் கூடிய விருப்பமான விடயமாகும்.
தமது திட்டத்திற்கு மாறாக ஏதாவது பிழைகள் நடந்து விட்டால் அதற்குக் காரணம் தான் என்று ஒருபோதும் இந்த Psychopath கள் நினைக்கவே மாட்டார்கள். ‘இந்த விடயம் பிழைத்ததற்குக் காரணம் மற்றவர்களே’ என்று எப்போதும் குற்றம் சாட்டுவார்கள்.
முறையின்றி கண்டபடி பால் உறவு கொள்கின்ற விருப்பமும், பாலியல் வன்முறைகள் செய்வதிலும் பெரும் விருப்பம் இவர்களுக்கு இருக்கும். ஆனால் தன்னை வழிபடுபவர்களுக்கு காதல், பாலியல் தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளையும், சட்ட திட்டங்களையும் வகுத்திருப்பார்கள்.
இவர்களின் இளமைப்பராயம் எப்படி இருந்திருக்கும்? என்று கேள்வி எழலாம்.
சிறு வயதிலேயே ‘வலி’க்குப் பயப்பட்டிருக்க மாட்டார்கள். சிலர் சிறு பராயத்தில் சிறிய விலங்குகளை சித்திரவதை செய்து இன்பம் அனுபவித்து இருப்பார்கள். பாடசாலைக்கு அடிக்கடி ‘கட்’ அடித்திருப்பார்கள். வீட்டை விட்டு ஓடிப்போயும் இருப்பார்கள். மது அருந்தல், புகைத்தல் பழக்கங்கள் மிக இள வயதிலேயே இவர்களுக்குத் தொற்றி இருக்கும். இவர்களுக்குத் தண்டனை வழங்கியே பெற்றோர்கள் களைத்துப்போய் ‘இனி இவன், இவள் திருந்த மாட்டான்(ள்)’ என்று கைவிட்டு விடுவார்கள்.
இதுவே இவர்கள் தொடர்ந்தும் தமது வழியில் தொடர்ந்து செல்லக் காரணமாக அமைந்து விட்டிருக்கும்.
ஒரு கனேடிய தொலைக்காட்சியின் Psychopath தொடர்பான நிகழ்சியின் போது பேட்டி அளித்துக் கொண்டிருந்து மனவியல் நிபுணரிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது.
‘கனடாவின் பிரதமராக ஒரு Psychopath ஆல் வரமுடியுமா’ என்பதுதான் அந்த சிக்கலான கேள்வி. மில்லியன் கணக்கான கனேடிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அவருடைய பதில்.
எந்த வித தயக்கமும் இல்லாமல் அந்த மனவியல் நிபுணர் அளித்த அந்த அதிர்ச்சியான பதில் ‘ஆம் கனடாவின் பிரதமராக ஒரு Psychopath ஆல் வரமுடியும்’.
கனடாவில் வரமுடியும் என்றால் இலங்கை எம்மாத்திரம் என்று நீங்கள் யோசிப்பது சரிதான்.
Psychopath கள் உங்கள் நண்பராக இருக்கலாம். உங்கள் மேலதிகாரியாகவும் இருக்கலாம். காதலனாகவோ காதலியாகவோ இருக்கலாம். அல்லது உங்கள் குடும்பவைத்தியராக, உங்கள் கணவராக, அரசியல்வாதியாக, கடவுளின் பெயர் சொல்லி சித்து வித்தை காட்டும் மகானாக, பெரும் தொழில் அதிபராகக் கூட இருக்கலாம்.
பொட்டம்மான்,கிழக்கின்சூரியன் கருணா போன்றோரின் போட்டோக்களையும் சேர்த்திருந்தால் இந்தக்கட்டுரை இன்னும் அதிக கனமுடையதாய் இருந்திருக்கும்.
“பிசியோக்கள்”
மனநோயாளிகளின் குரூரமான குணாதிசங்களை எடுத்துக் காட்டியுள்ள இக்கட்டுரை தமிழ் வாசிக்கத் தெரிந்த இலங்கைத்தமிழர்கள் அனைவரையும் சென்றடையவேண்டும். என்பது என்னுடைய வேண்டுதல். கடந்தகால போரியல் சூழல்களால் இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் மற்றும் புலம்பெயர் உறவுகள் என பெரும்பாலானோர் போரியல் குணம் கொண்ட மனநோயாளிகளாக வளர்க்கப்பட்டுள்ளனர் இந்த மனநிலையில் இருந்து இவர்கள் விடுதலைபெறுவதற்கு இது போன்ற கட்டுரைகளும் ஆக்கங்களும் எமது சமூகத்தினருக்கு மிகவும் அவசியமாகின்றது. சமூக நலன்களை பேணக்கூடிய இது போன்ற கட்டுரைகளை நீங்கள் தொடந்து பிரசுரிப்பது மட்டுமல்லாது. இது மக்களைச் சென்றடைவதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
” இதன் ஆசிரியருக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றிகளும் வாழ்த்துக்களும்”
அன்புடன்
ஜெனி
சுவிஸ்
இந்தக் கட்டுரை கனடாவின் ஒரு கிழமை வெளியீட்டில் வந்தது.
இவைபொன்றவற்றை இனியொருவிற்கு அனுப்புவபர்கள் நன்றி என்று அந்த இதழ்களைக் குறிப்பிட்டாலாவது மிகவும் நல்லது.
தமிழ் எழுத்தாளரிடம் இந்த நிலை திருத்தப்படவேண்டும்.
அன்புடன் ரபேல்,
இந்தக் கட்டுரை அதன் ஆசிரியர் செழியன் அவர்களாலேயே இனியொருவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நன்றி
“இவர்களின் இளமைப்பராயம் எப்படி இருந்திருக்கும்? என்று கேள்வி எழலாம்.
சிறு வயதிலேயே ‘வலி’க்குப் பயப்பட்டிருக்க மாட்டார்கள். சிலர் சிறு பராயத்தில் சிறிய விலங்குகளை சித்திரவதை செய்து இன்பம் அனுபவித்து இருப்பார்கள். பாடசாலைக்கு அடிக்கடி ‘கட்’ அடித்திருப்பார்கள். வீட்டை விட்டு ஓடிப்போயும் இருப்பார்கள். மது அருந்தல், புகைத்தல் பழக்கங்கள் மிக இள வயதிலேயே இவர்களுக்குத் தொற்றி இருக்கும். இவர்களுக்குத் தண்டனை வழங்கியே பெற்றோர்கள் களைத்துப்போய் ‘இனி இவன், இவள் திருந்த மாட்டான்(ள்)’ என்று கைவிட்டு விடுவார்கள்.”இதுவே இவர்கள் தொடர்ந்தும் தமது வழியில் தொடர்ந்து செல்லக் காரணமாக அமைந்து விட்டிருக்கும்.”
பிசியோக்களின் இளமைக்காலம் குறித்த இந்தா ஆனுபவங்கள் எனக்கும் இருந்திருக்கிறது. அப்போ நான் ஒரு பிசியோவா? மற்றபடி,மிக நல்ல கட்டுரை வாழ்த்துக்கள் செழியன். ஆனால் பிசியோக்கள் குறித்த முன் முடிவுகள் பொதுவானதாக இருக்கிறது. பிசியோக்களைப் பொறுத்தவரையில் இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று முடிவுக்கு வந்து விடலாகாது. இயல்பில் அது குழப்பமான ஒன்று என்றுதான் இருக்கிறது, நீங்கள் என்ன நினைத்தாலும் சரி…Ferrier (31)மீது எனக்கு கரிசனம் தான் வருகிறது. காரணம் நீங்கள் கூட ஒரு கல்லை அவர் மீது வீசியிருக்கிறீர்கள்.
மதிப்புக்குரிய ஆசிரியர் செழியன் அவர்களுக்கு.
பிசியோக்கள் பற்றிய இவ்வாய்வுக் கட்டுரை உண்மையில் திரு ஜெனி அவர்கள் மேலே குறிப்பிட்டிருப்பது போல் எமது ஈழத்தமிழர்கள் எல்லோரையும் சென்றடையவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து எதுவுமில்லை. காலத்திற்கேற்றதோர் சிறப்பான ஆய்வாகவே இதனை நானும் கருதுகின்றேன். இக்கட்டுரையை சிறப்பாக ஆய்வுசெய்த உங்களிடத்தில் ஓர் வேண்டுகோளை முன்வைக்க விரும்புக்கின்றேன். இவ்வாறான பிசியோ பாதிப்புகளுக்கு உள்ளாக்கபட்டவர்கள்அதில் இருந்து விடுதலை பெறுவதற்கான வாய்ப்புக்களையும் நீங்கள் ஆய்வு செய்தால் அதுவும் நீங்கள் எமது சமூகத்தினருக்கு செய்யும் தொண்டாக கருதலாமல்லவா? தவிர தற்போதைய சமுதாய சூழலில் இது மிக அவசியமான தொன்றாகவும் காணப்படுகின்றது.
தங்கள் பணி தொட வாழ்த்துக்காள்.