இலங்கையில் அமைதியை நிலைநாட்டி, அபிவிருத்தியை மேற்கொள்ளவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும் தமது அரசு உதவி செய்யும் என, வியட்னாம் அரசாங்கம் சிறீலங்கா அரசுக்கு உறுதிமொழி வழங்கியுள்ளது.
வியட்னாம் சென்றுள்ள சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாக, அந்த நாட்டின் பிரதமர் நிகுயென் ரன் டுங்கை (Nguyen Tan Dung) சந்தித்துப் பேச்சு நடத்தியபோது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.
இதன்போது கருத்துரைத்த போகொல்லாகம, ஐக்கிய நாடுகள் சபையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்கியமைக்கு வியட்னாமிற்கு நன்றி தெரிவித்ததுடன், வியட்னாம் பிரதமரை தமது நாட்டிற்குப் பயணம் செய்யுமாறும் அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சிறீலங்கா அரசுக்கு எதிரான பிரேரணை, மற்றும் விவாதத்திற்கு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் பிறேசில் அழைப்பு விடுத்திருந்த போதிலும், ரஸ்யா, யப்பான், வியட்னாம் போன்ற நாடுகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
வியட்நாம் அமொpக்காவின் அதிகாரத்தினை தெpர்த்து போராடி பல்வேறு இழப்புகளுக்கு பின்னா; உலக நாடகளுடைய தலையீடுகளினால் தன்னுடைய வெற்றியினை சுதந்திரத்தினை அனுபவிக்க தோடங்கிய ஒரு நாடு தங்களுடைய வெற்றிக்காக போராடிய கோசி மின் னுடைய பெயாpனை தங்களுடைய ஒரு நகருக்கு பெயராக சூட்டி பெருமிதம் கொள்கினற் ஒரு நாடு இதனை அந்த நாட்டில் தற்போரு இருக்கும் தலைவா;கள மறந்த விட்டு கருத்துக்களினை வெளியிடுவதும் அஃசெயற்படுவதும் அதிர்ச்சியளிப்பதாகவும் ஆத்திரமூட்டவதாகவும் உள்ளத எனவே இலங்கையினைனுடைய உண்மையான பிரச்சினையினை யதார்த்தபுஃர்வமாக விளங்கிக் கொண்ட பின்னா; அவா;கள் இவ்வாரன கருத்துக்களினை முன்வைக்க வேண்டும்மேலும் உயா; மட்டங்னகயளில் இரக்கும் தலைவா;கள் இத்தகைய செயற்பாடுகளினை கண்டிப்பதுடன் அதன் தலைவா;களுக்கு பிர்சினையின் உண்மையான நிலவரத்தினை பூpய வைப்பதற்கு முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றே;.
கே.எம்.பிரகாஸன்
மட்டக்களப்பு