26.03.2006.
மிகப்பயங்கரமானவரான பிரபாகரனுக்கே அச்சப்படாத ஜனாதிபதிக்கு பிள்ளையான் ஒரு சிறுபிள்ளை போன்றவரென மாகாண உள்ளூராட்சிகள் சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கிழக்குமாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் சில கிராமங்களிலிருந்து மக்களை வெளியேற்றுவது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
ஜே.வி.பி. உறுப்பினர் கூறியதுபோல் திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஆண்டான் குளம் மற்றும் திருகோணமலை நகரிலுள்ள சமுத்திரகம மற்றும் துறைமுகத்தை அண்டிய பகுதிகளிலுள்ள மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுவது தவறு.
திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த பகுதிகளிலுள்ள 5000 காணிகள் துறைமுகத்துக்கு சொந்தமானவை இதனால் அவற்றை துறைமுக அதிகாரசபை பொறுப்பேற்றுள்ளது.
சிங்கள மக்களை அப்புறப்படுத்த மாட்டோமென கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் தெரிவித்துள்ளார். மிகப்பயங்கரமானவர் பிரபாகரன் அவருக்கே அச்சப்படாத ஜனாதிபதிக்கு இந்தப்பிள்ளையான் சிறுபிள்ளை போன்றவர் எனவே எவரும் அச்சப்படத் தேவையில்லை.