ஹிட்லர்ருக்கு நெருக்கமான நாசி அதிகரிகளை சீ.ஐ.ஏ உட்பட்ட அமெரிக்க அரசின் உளவு நிறுவனங்கள் வேலைக்குச் சேர்த்துக்கொண்டன என்ற தகவலை நியூ யோர்க் ரைம்ஸ் வெளியிட்டுள்ளது. 1950 ஆம் ஆண்டுகளில் சோவியத் ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக யூதர்களின் இனப்படுகொலையோடு நேரடித் தொடர்புடைய நாசிகளை அமெரிக்காவின் சீ.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ போன்றன வேலைக்கு அமர்த்திக்கொண்டன. அவர்களில் சிலர் இன்னும் அமெரிக்காவில் உயிருடன் வாழ்கின்றனர். அமெரிக்க உளவு நிறுவனங்களோடு இணைந்துகொண்ட இக் குற்றவாளிகள் அமெரிக்க கிரீன் கார்ட் பெற்று அங்கேயே நிரந்தரக் குடியேறிகளாகினர். 1994 ஆம் ஆண்டு லித்துவேப்னியாவில் ஆயிரக்கணக்கான யூதர்களைக் கொலை செய்த நாசி இராணுவ அதிகாரி ஒருவருக்கு எதிரான வழக்கைக் கைவிடுமாறு சீ.ஐ.ஏ இன் வழக்குரைஞர் ஒருவர் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்தார். 1980 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வாழ்ந்துவந்த 16 நாசி உயர் அதிகாரிகள் குறித்த தகவல்களை நீதிமன்றத்திற்கு வழங்க எப்.பி.ஐ மறுத்துள்ளது.
மற்றொரு சீ.ஐ.ஏ இன் முக்கியமான நாசி அதிகாரி ஹிடலருடன் நேரடித் தொடர்பில் வேலை செய்தவர். இறுதித் தீர்வு என்ற ஆலோசனை ஆவணத்தை ஹிட்லருக்கு தயாரித்தவர். இவர் தயாரித்த ஆவணத்தில் யூதர்களை எப்படிச் சித்திரவதை செய்வது என்பதும் அடங்கியுள்ளது. ஐரோப்பாவில் உளவாளியாக வேலை செய்த இவரின் குடும்பத்தை நியோ யோர்க்கில் அமெரிக்க அரசு குடியேற்றியுள்ளது. இந்த குறித்த நாசியின் மகன் இது தொடர்பாக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். தனது தந்தையைத் தண்டிக்காமல் அமெரிக்காவிற்கு சகல வசதிகளோடும் வாழ வசதி செய்துகொடுத்தது தவறு என்கிறார்.
குறைந்தது ஆயிரம் நாசிகள் அமெரிக்கக் குடியுரிமையும் வேலையும் வழங்கப்பட்டு உள்வாங்கப்பட்டுள்ளனர் என்று விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு புறத்தில் நாசிகளைத் தேடித் தேடி அழிக்கிறோம் என்று நாடகமாடிய அமெரிக்கா மறுபுறத்தில் அவர்களைக் காப்பாற்றியுள்ளது.
இன்னும் சில வருடங்களின் பின்னர் அமெரிக்காவில் கிரீன் கார்ட் பெற்றுள்ள கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க ஏஜண்டாகவே இலங்கைக்கு வந்திறங்கினார் என்ற செய்திகளை மூன்றாவது தலைமுறை கேள்விப்பட்டாலும் வியப்படைவதற்கில்லை.