ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைக்கான நிபுணர் குழுவின் வரையறைகள் பற்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான தனிப்பட்ட சந்திப்பின் போது ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் என்ன கூறியிருந்தார் என்பது தொடர்பாக, அதாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பான் கி மூன் தனிப்பட்ட புரிந்துணர்வை எட்டியிருந்தாரா என்பது குறித்து தெரிவிப்பதை பான் கி மூனின் பேச்சாளர் தவிர்த்துக் கொண்டிருப்பதன் மூலம் இலங்கை தொடர்பான கலந்துரையாடலுக்கு ஐ.நா. இடையூறு ஏற்படுத்துவது அதிகரித்து வருவதாக இன்னர் சிற்றி பிரஸின் நிருபர் மத்தியூ ரஸல் லீ குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “இது தனிப்பட்ட நாடுகளின் தலைவர்களைப் பொறுத்த விடயம்.” அவர்கள் எத்தகைய அறிக்கைகளை விரும்புகிறார்களோ அது அவர்களைப் பொறுத்த விடயம் என்று ஐ.நா.வின் பேச்சாளர் மார்ட்டின் நீசேர்கி கூறியுள்ளார்.
ஆனால் பான் கி மூன் ராஜபக்ஷவுடன் புரிந்துணர்வை எட்டியிருந்தாரா? அதனால் அவர்களின் சந்திப்புத் தொடர்பான பான் கி மூனின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிராத விடயங்களை அவரால் கூற முடிந்ததா? என்பது தொடர்பாக நீசேர்கி பதிலளிக்கவில்லை.
பான் கி மூன் செயலாளர் நாயகமாக வருவதற்கு முன்னரிலிருந்து தற்போது வரையான ராஜபக்ஷவுடனான பான் கி மூனின் தொடர்புகள் பற்றி இன்னர் சிற்றி பிரஸ் திரும்பவும் கேட்டது.
இதற்குப் பதிலளிப்பதாக முன்னர் நீசேர்கி உறுதியளித்திருந்தும் ஒக்டோபர் 1 இல் இக்கேள்வி பற்றித்தான் புரிந்து கொண்டிருக்கவில்லை என்று நீசேர்கி கூறினார். சந்திப்புகள், விடயங்கள் மற்றும் பான் கி மூன் ராஷபக்ஷவை தனிப்பட்ட நண்பராக கருதுகிறாரா? என்ற கேள்வி குறித்து தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று நீசேர்கி தெரிவித்துள்ளார்.