மாணவன் ரஞ்சனுக்கு நீச்சல் பயிற்சியின் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், மூச்சுக் குழாயில் தண்ணீர் புகுந்ததால், மாணவனுக்கு தான் முதலுதவி அளித்ததாகவும், பின்னர் மருத்துவமனைக்கு சிககிச்சைக்காக எடுத்துச் சென்றதாகவும் நீச்சல் பயிற்சியாளர் ராஜசேகர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தனியார்மய கல்வியின் லாபவெறிக்கு மீண்டும் ஒரு மாணவன் படுகொலை: சென்னை கே.கே. நகர் திருமதி ஒய்ஜிபி-யின் பத்மா ஷேசாத்திரி பள்ளியில் இன்று காலை நீச்சல் பயிற்சியின் போது 4ஆம் வகுப்பு மாணவன் ரஞ்சன் முறையான பயிற்சியாளர் இல்லாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளான்.
தரமான கல்வி என்ற பெயரில் தனியார் கல்வி முதலாளிகளால் அன்றாடம் மாணவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் இன்று (16.8.12) இரவு 8 மணிக்கு புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன் கொடுத்த விரிவான பேட்டி இதோ:
பள்ளிக்கூடங்களே அமைக்கக்கூடாதின்னும் ஒரு சட்டம் கொணராமுல்ல ?
இந்தியமாணவர்களை சுத்திகிட்டு இருக்கிற இந்தப்பாம்பு இப்ப நம்ம மாணவர்களுக்குள்ளேயும் ஊர ஆரம்பித்துவிட்டது.