.இன்று இந்திட அரசும் அதன் அடியாட்களும் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், மக்களுக்கான தீர்வு என்று ஒரு புறத்தில் வேடம் போட்டு பிற்றிக்கொள்ள மறுபுறத்தில் இலங்கை அரசு இனச்சுத்திகரிப்பை இந்திய அரசின் துணையோடு நடத்திவருகிறது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் வரைக்கும் இந்திய அரசின் பாதுகாப்பில் இந்தியாவில் அஞ்ஞாதவாசம் செய்திருந்த வரதராஜப்பெருமாள் என்பவர் தலைமைதாங்க பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற அமைப்பு இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் செயற்படும் அமைப்பாகும்.
எந்தக் கூச்ச உணர்வுமின்றி இந்தியாவை கை பிடித்து அழைத்துவர வேண்டும் என்று கூறுகின்ற இந்த அமைப்பு தனது பிரச்சார வேலைகளை புலம்பெயர் நாடுகளில் முடுக்கிவிட்டுள்ளது. புலியெதிர்ப்பு என்ற தலையங்கத்தில் இவர்களோடு கைகோர்த்துக்கொள்ளும் அமைப்புக்கள் அண்மையில் கனடாவிலும் பிரான்சிலும் நடத்திய பத்மநாபா நினைவுதினக் கூட்டங்களில் இனியொரு.. இணையம் தம்மீது அவதூறு செய்வதாக போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள்.
கடந்தகால அரசியல் குறித்த விமர்சனக்கள் வெளிவரும் முன்வைக்கப்படும் போதெல்லாம் அவதூறுகளும் மிரட்டல்களும் வழமையானவை. இனியொருவிற்கு கடந்த சில நாட்களாக வெளிவரும் மிரட்டல்கள் எமது கருத்துக்களின் வெற்றியையே வெளிப்படுத்துகிறது.
கனடாவில் நடைபெற்ற பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் நினைவு தினக் கூட்டத்தில் ஈபிடிபி, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், சுரேஸ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈரோஸ். சம உரிமை இயக்கம் ஆகிய அமைப்புக்கள் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஈபிஆர்எல்எவ் இன் மீது சுதந்திரமான தமது கருத்துப் பதிவுகளை விமர்சனங்களாக முன்வைத்த பலரும் இந்திய இராணுவத்தின் பிரசன்ன காலத்தில் ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள் சிலர் இயக்க கட்டுப்பாட்டையும் மீறி மக்களுக்கு எதிராக செயற்பட்டனர் என்ற விடயங்கள் சம்பவ ரீதியாக எடுத்துரைத்தனர். இது தோழர் பத்மநாபாவின் ஏற்புடன் நடைபெற்றிருக்க வாய்ப்புக்கள் இல்லை என்று தாம் நம்புவதாகவும் கருத்துக்கள் தெரிவித்தனர்.
இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் இலங்கையில் வந்திறங்கி போர்க்குற்றங்களில் இந்தக் கும்பல் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது ரூபவாகினி தொலைக்காட்சியில் தோன்றிய வரதராஜப் பெருமாள் நாங்கள் இது பழை ஈ.பி.ஆர்.எல்.எப் அல்ல புதியது என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறோம் என்றார். ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர்கள் தங்கியிருந்த அசோக் கோட்டேல் அப்போது மனித கசாப்புக் கடையாக மாறியிருந்தது என்பதை யாரும் மறந்துவிடவில்லை.
நமது கடந்தகால அரசியல் நவடிகைகளைச் சுயவிமர்சனம் செய்துகொண்டு தவறுகளைத் தவறுகளாக ஏற்றுக்கொள்ளாவிட்டால் இலங்கையில் இன்னும் அழிவுகள் தவிர்க்க முடியாதவை.
இலங்கை இந்திய ஒப்பந்த காலங்களில் இந்திய ராணுவத்தாலும் ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்களாலும் செய்யப்பட்ட அனைத்து படுகொலைகளுக்கும் ஈபிஆர்எல்எவ் பொறுப்பேற்க வேண்டும்.
முதன் முதல் இந்திய இராணுவம் கொடுத்த ஒட்டுக் கேட்கும் கருவிகளை,தன் தோழர்களுக்கு எதிராக உளவு பார்க்கப்பழகிக் கொண்ட யாழ்.பல்கலைக்கழக விண்ணர்கள்தான்,இன்று ‘நாப தாஸ சரிதம்’ பேசுகிறார்கள்.
போர்க்குற்றம் பற்றி தெளிவு வந்த்துள்ள இந்தக் காலத்தில் ஈ.பி.ஆர்.ர்ல்.ர்ப் உம் புலிகளும் மற்ற இயக்கங்களும் போர்குற்றத்துக்காக தண்டிக்கப்பட வேண்டும்.
I heard Dr. Satchi Srikantha writes for Sangam.Com. Inioru.com is a good hobby everyday. Colombo Campus and Peradeniya Campus. Zoology Special. American Doctorates.
How many times you will repeat this ? BTW it is sangam.org not sangam.com 🙁
ஜரோப்பாவிள் எஸ்.டி.ஓ என்ற கட்டமைப்பு மிகவும் இக்கட்டான காளகட்டத்தில் 11 அமைப்புக்களை கொண்டவர்களை கொண்டு உருவாக்கப்பட்டது அதில் இருந்து சட்டரீதியாக விலகாமல் பல கூட்டங்களிள் எஸ்.டி.ஓ அமைப்புக்குள்பட்டவர்கள் செயல்படுவது நல்ல பண்புக்கு அழகில்லை .ராயநாமா ……அல்லது செயள்படுவது என்ற உறைந்தபட்ச பண்பு இருக்க வேண்டும் .தியாகிகள் என்னங்கள் நம்கையில்தான் உள்ளது . குலப்பங்கள் என்பது .அன்னியரிடமிருந்து வருவது .எஸ்.டி.ஓ என்ற கட்டமைப்பு சட்டரீதியாக உள்ளது என்பது அதில் உள்ள அனைவருக்கும் தெரிந்தவிடையம் .வாழ்க தமிழ் தியாகங்கள்