வட மாகாண ஆளுனராக ஜீ.ஏ.சந்திரசிறியை மகிந்த ராஜபக்ச மீண்டும் ஐந்து ஆண்டு காலம் பதவியில் அமர்த்தியமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு விக்னேஸ்வரன் பதவி விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இவ்வாறு தாம் யாரிடமும் பதவி விலகுவது குறித்து அறிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இனப்படுகொலை அரசின் எல்லைக்குள் சட்டங்களைப் பயன்படுத்தி பிரிக்கப்பட்ட மாகாண சபை ஊடாக மாற்றங்களைக் கொண்டுவருவேன் என பூவோடும் பொட்டோடும் ஆட்சிக்கு வந்த விக்னேஸ்வரன் இதுவரையில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை.
தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களைக் கூட தலைமை தாங்க மறுத்து இலங்கையில் இன்னும் ஜனநாயகம் நிலவுகிறது என போலியன விம்பத்தைக் கொடுக்கும் விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது தமிழ் மக்களின் சாபக்கேடு.
விக்னேஸ்வரன் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து இன்று வரை இனக்கொலை அரசின் ஒடுக்குமுறை மேலும் அதிகரித்துள்ளது. நிலப்பறிப்பும் பௌத்த சிங்கள மயமாக்கலும் எந்தத் தடையுமின்றித் தொடர்கின்றன. போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்கப்போவதாக ஏகாதிபத்திய நாடுகள் ஆடும் நாடகத்தில் சாமியார் வேடம் போடும் விக்னேஸ்வரன் மற்றும் சம்பந்த குழு போராட்டங்களைத் தடுப்பதற்கான மற்றொரு உக்தி.
ஊடகத்தில் வீரவசனம் பேசும் பலர் யதார்தங்களை புரிவதில்லை. தாயகத்தில் தமிழ் மக்களினது ஆதரவோடு ஒரு நடைமுறைக்கேற்ற வகையில் தம்மை அடையாளப்படுத்திய ஈழத்தமிழர்கள் எக்கேடு கெட்டாலும் புலத்து ஊடக அதர்மத்திற்கு பதில் கூற வேண்டும்.
மக்கள் என்று சொல்லிக் கொண்டு மகான்களாகும் பலர் சமூகத்தின் எதிர்கால யதார்தத்தை புரிவதில்லை தாயகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயல்படும் அளிவிற்கு புலத்து தமிழர்கள் ஒன்றிணைய மறுத்து ஊடக தர்மத்தை அவமதித்து செயல்படும் ஒவ்வொரு நகர்வும்தான் இலங்கை அரசாங்கத்தை அதர்ம வழிகளில் வழிநடத்துவதற்கு நம்பிக்கை அழிக்கின்றது.
போராட்டம் அதற்கான பின்னடைவை தம்மை வலிமைப்படுத்த ஒவ்வொரு புலம் பெயர் அமைப்புக்களும் ஊடகங்களும் தர்மத்தை அவமதித்து செயல்படும் போது . தமிழகத்தலைவர்களையும் தமக்கு பலமாக்கி எமது விடுதலைக்கு பலமான ஒரு அடையாளத்தை தமதாக்கி வளர்த்த தாயக மக்களது எதிர்பார்பை பூர்த்தி செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வடமாகாண சபையும் பின் நிற்கப் போவது இல்லை என்பதனை புலம் பெயர் தலைவர்களும் ஊடக விமர்சகர்களும் புரிந்து கொண்டு செயல்பட்டால் அதுவே எமது விடுதலைக்கு மிகப் பெரும் உதவியாக அமையும்.
யாது செய்தல் உசிதம் என்பது தங்களின் கருத்து.பாசிச ஆட்சியில் யார் இருந்தாலும் இதுதான் நிலை.நியைமைய-ம் கூட.
சும்மா நையாண்டி பண்ணி எழுதுவதால் ஏதும் ஆற்றமுடியாது.
ராஜபக்ஷவும், இந்தியாவும் ஈழத்தமிழரின் இரத்தத்தை உறிஞ்சி குடிப்பதற்கு சட்டபூர்வமான குளாய்களாக சம்பந்தவும், விக்கியும் மானசீகமாக சேவை செய்கின்றனர்.
யாது செய்தல் உசிதம் என்பது அவரவர் நம்பிக்கை வழிகளை கொண்டு இருந்தாலும் யதார்தம் மாறும் போது ஒரு இனத்தின் விடுதலைப்பயணமம் மாறி உள்ளதே தவிர தமிழர்கள் தோற்றுவிட்டார்கள் என்பது அவமானமானது.
விடுதலைப்புலிகள் அமைப்பு மட்டுமல்ல சங்கிலி மன்னன் எல்லாளன் பண்டார வன்னியன் எ ன பலரது போர் சிங்கள தேசத்துடன் நடந்தும் தமிழர்களின் அழிவை நிறுத்த வும் முடியவில்லை தமிழர்கள் தமக்கான ஒரு அடையாளத்தை பெறவும் முடியாதமைக்கு காரணம் தமிழர்கள் தமது வரலாற்றை சிங்கள தேசத்திடம் கொடுத்து விட்டு தமது உரிமைக்காகவே போராடுகின்றார்கள் ஈழமே தமிழர்களினது உரிமைஎன்பதற்கான நகர்வை தேடிக்கொள்ளவில்லை. இலங்கையை சிங்கள தேசம் ஆளநினைக்கலாம் அது தமிழர்களை அழித்து மகாவம்சக்கொள்கையில் சிங்கள தேசத்தைவளர்பதற்காக அல்ல என்பதனை உணர மறுத்த அரசியல் இன்றுவரை நகர்தப்படுகின்றதே தவிர ஈழமும் அதன் வரலாறுகளும் பலதரப்பட்ட சந்தற்பங்களில் தமிழர்களை தோற்றிகாத நிலையில் வைத்திருப்பதற்கு எமது தேசமானது புனித பூமி அதில் நியாயத் தோடும் தர்மத்தோடும் போராடி சத்தியவழிகளில் வெற்றியை பெற வேண்டும்.
அதாவது இலங்கையில் மகாவம் சக் கொள்கை அழிகப்பட்டு சகல மக்களின் பாதுகாப்பிற்கும் சிங்கக் கொடி அகற்றப்பட வேண்டும். அதற்கான நகர்வை ஆதரிக்கும் உலகத்தமிழினம் ஒன்றுபடவேண்டும் என்ற உண்மை நிலைகளுக்கும் தம்மை வளர்த்துக்டகொள்ளவில்லை . உயிர்தியாகங்களை அடையாளப்படுத்துவது நாம் வாழ்வதற்கு மட்டுமல்ல எதிர்கால சமூகம் விடுதலை பெற வேண்டும் என்பதற்காக . அதற்கான நகர்வை வளர்பதற்கு எதிராக தமிழர்கள் செயல்படுவதானது நா.க.தமிழீழ அரசாங்கத்தின் அணுகு முறையில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.
வரலாறு எம்மை அவமதிக்கின்றதா? நாம் வரலாற்றை அவமதிக்கின் றோமா?