புது தில்லி: மே மாதத்துக்கான பணவீக்கம் 7.55 சதவீதமாக அதிகரித்துள்ளது.பண்டங்களின் மொத்த விலைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் பணவீக்கம் முந்தைய ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் கூடியிருக்கிறது. ஏப்ரல் மாதம் பணவீக்கத்தின் அளவு 7.23 சதவீதமாக இருந்தது. உருளைக்கிழங்கு, பருப்பு, கோதுமை ஆகிய உணவுப் பொருள்களின் விலையேற்றமே பணவீக்கம் உயரக் காரணம் என்று கூறப்பட்டது.
உணவுப் பண்டங்களின் பணவீக்கம் 10.74 சதவீதத்தை தொட்டது. மொத்த விலைப் பட்டியலில் உணவுப் பண்டங்களின் பங்கு 14.3 சதவீதமாக இருக்கின்றது. வருடாந்திர நோக்கில், மே மாதம் உருளைக் கிழங்கின் விலை 68 சதவீதம் அதிகரித்தது. பருப்பு வகைகளின் விலையேற்றம் 16.61 சதவீதம். கோதுமையின் விலையேற்றம் 6.81 சதவீதமாக இருந்தது. மே மாதம் காய்கறிகளின் விலைகள் 49.43 சதவீதம் அதிகரித்தது. முட்டை, இறைச்சி, மீன் விலை 17.89 சதவீதமும் பால் விலை 11.90 சதவீதமும் உயர்ந்தது.
What did Dr. Kaushik Basu and Nobel prize winning economist Amartya Sen got to say? Indian born economist Dr. Ravi Batra made a lot of predictions from Texas in the USA. It is so nice that you can see all that in Sri Lanka – Shri Lanka. .