பிரித்தானிய BBC தொலைக்காட்சிச் சேவையின் பனோரமா நிகழ்ச்சியில் அமரிக்காவின் அதிர்ச்சி தரும் வறுமை குறித்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது. மில்லியன் கணக்க்கில் பசித்த வயிற்றோடு வாழும் மக்கள், வீடற்று தெருவிற்குத் தள்ளப்பட்ட அமரிக்கர்கள் என அமரிக்கா இதுவரை கண்டிராத வறுமையின் கொடூரம் காண்பிக்கப்படுகிறது. இன்று ஒன்றரை மில்லியன் அமரிக்கக் குழந்தைகள் வீடற்றவர்கள். மில்லியன் கணக்கான குழந்தைகள் பசியோடு பாடசாலைக்குச் செல்கிறார்கள். உலகம் முழுவதும் போர் வெறியோடு அலையும் அமரிக்கா அதிகாரம் தனது சொந்த மக்களையே பட்டினி போட்டுக் கொலைசெய்ய ஆரம்பித்துவிட்டது.