ஈழத்தமிழர்களுக்கான ஒர் பலம்மிக்க திரைத்துறைக்கான தளதினை உருவாக்கும் நோக்கில், பிரான்சில் தோற்றம் பெற்றுள்ள ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் ( LIFT) பிரான்சில் கருத்தாய்வு அமர்வொன்றை நடாத்தியுள்ளது.
கடந்த சனி – ஞாயிறு (பெப்ரவரி 19-20) ஆகிய இருநாட்கள் இடம்பெற்ற இந்த அமர்வில், திரைத்துறை சார்ந்த கலைஞர்களுடன், கலை, இலக்கிய, சமூக பங்காளர்கள்,ஆர்வலர்கள் என பலரும் பங்கெடுத்திருந்தனர்.
யேர்மனியிலிருந்து வருகை தந்திருந்த திரு. வரதராசா அவர்கள் இந்த இருநாள் அமர்வுகளை நெறிப்படுத்தினார்.
ஈழத்தமிழ் திரைப்படச் சங்கம் சார்ந்து, எவ்வித கற்பனை பொதிந்த எதிர்பார்ப்புகளோ, கருதுகோள்களோ, கோட்பாடுகளோ அற்ற, அவ்வப்போது மாற்றம் அடைந்து கொண்டிருக்கும் அக, புற சூழல்களைப் புரிந்து கொள்ளும் வல்லமை உள்ள, புலம் பெயர் மண்ணின் சட்ட வரம்புகளுக்குட்பட்ட, சன நாயக ஒழுங்குகளைக் கடைப்பிடிக்கின்ற, செயற் திறனுடன் தனது இலக்குகளைத் தானே தீர்மானித்துச் செயற்படுகின்ற, படைப்பாளிகளின் படைப்புச் சுதந்திரத்தில் தலையிடாத, அதேவேளை தமிழர் நலன்களில் அக்கறை நிறைந்த ஒரு முகமும் – குணமும் கொண்டதான முன்மொழிவுகள் சபையோரால் முன் வைக்கப்பட்டன. இவ்வகையில், சங்கமானது ஒருமித்த நிலையிலும், தனிப்பட்ட படைப்பாளிகள் நிலையிலும், தன்னைத்தானே புரிந்து கொள்வதில் அக்கறையுடன் செயல்பட்டது. அடையாள, யதார்த்த சினிமா ஒன்றின் தேடலுக்கான தாகம் சபையை நிறைத்தது.
அமர்வுகளை வழிநடத்திக்கொண்டிருந்த நெறியாளர், ஈழத் தமிழர் திரைப்படச் சங்கமானது படங்களைத் தயாரிப்பதற்கு, பார்வையாளர்களைச் சென்றடைவதற்கு ஏதுவான வழிவகைகளைக் கண்டறிவதில் முக்கிய பங்காற்றி உதவும் அதேவேளை, படத்தை எடுக்க வேண்டிய பொறுப்பு அவரவர்க்கே உரியது என்கிற, சபையோரின் ஒருமித்த கருத்தின் சுருக்கத்தை எடுத்துரைக்க, ‘தூண்டில் பெற உதவுவோம். மீனை நீங்களேதான் பிடிக்கவேண்டும்” என்கிற யேர்மனியப் பழமொழியை அவ்வப்போது பயன்படுத்தியமை சுவையாக இருந்தது.
இவ்விரு நாட்களிலும் நடைபெற்ற உற்சாகம் நிறைந்த அமர்வுகளில், சங்கத்தின் நோக்க வரையறைகள், உப அமைப்புக்கள், விதிகள், உப விதிகள், ஒழுகுமுறைகள் என்பன சபையோரால், ஆலோசனை, விவாதங்களினூடாக இயன்றளவு யதார்த்த நிலையிற் கண்டறியப்பட்டுத் தீர்மானிக்கப்பட்டன.
மாதாந்தம் உலக சினிமா திரையிடலும், அது குறித்தான விவாதமும் – சினிமா பட்டறை – குறும்பட திரையிடல் ஆகியன இவ்வாண்டுக்கான (2011) வேலைத்திட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளதோடு ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்துக்கான ஒர் இணையத்தளம் மற்றும் சங்கத்துக்கான ஓர் இடம் ஆகியனவும் தீர்மானிக்கப்பட்டன.
குறிப்பிட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ,உபக்குழுக்கள் தெரிவு செய்யப்பட்டதோடு அதற்குரிய செயற்பாட்டாளர்களும் தெரிவு செய்யப்படனர்.
ஆண்களுக்கு மட்டுமே உரியதோ??
இப்படி ஒரு கேள்வி வரக்கூடாது என்று தானே ஒரு பெண்ணை நிறுத்தியிருக்கிறார்கள்.
அப்படி என்றால் கேள்வி வந்து விடும் என்ற காரணத்துக்காக தான் அவரை நிறுத்தியுள்ளார்களா?? அவர் அந்த புகைபடத்திலிருக்கும் ஒரு கலைஞரின் மனைவி என்றும் நான் அறிவேன்.. நன்றி உங்கள் பதிலுக்கு.
இல்லை பிரியசகி அனைவருக்கும் பகிரங்க அழைப்பினையே விடுத்திருந்தோம் ஆனால் ஆண்களே
பெருமளவில் கலந்து கொண்டார்கள், இவ்வமர்வில் 5 பெண் கலைஞர்களும் கலந்து கொண்டார்கள். இப்பொழுதும் காலம் தாழ்ந்துவிடவில்லை இது நமக்கான சங்கம் எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் இணைந்து கொள்ளலாம். எமது சங்கத்தில் பால், இன,மத,அரசியல்,
வேறு பாடு கிடையாது என்பதை அனைத்து உறுப்பினர்கள் சார்பாகவும் நான் இங்கு கூற கடமைப்பட்டுள்ளேன். நீங்கள் கூறும் புகைப்படம் நிகழ்ச்சி முடிவில் எடுக்கப்பட்டது, நிகழ்ச்சி முடியுமுன்பே மிகுதி நால்வர் சென்று விட்டதால் அவர்கள் அந்த படத்தில் இல்லை. புகைப்படத்தில் நிற்கும் பெண் ஒரு கலைஞரின் மனைவியா? அவரை ஒரு குறும்பட இயக்குனராகவே எனக்குத் தெரியும்.
இதற்கு பதில் நான் முகநூலில் சொல்லி விட்டேன்..
நல்லதொரு முயற்சி. வாழ்த்துக்கள்.
நன்றி அண்ணா
இல்லை பிரியசகி அனைவருக்கும் பகிரங்க அழைப்பினையே விடுத்திருந்தோம்
ஆனால் ஆண்களே பெருமளவில் கலந்து கொண்டார்கள், இவ்வமர்வில் 5 பெண் கலைஞர்களும் கலந்து கொண்டார்கள். இப்பொழுதும் காலம் தாழ்ந்துவிடவில்லை இது நமக்கான சங்கம் எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் இணைந்து கொள்ளலாம். எமது சங்கத்தில் பால், இன,மத,அரசியல்,வேறு பாடு கிடையாது என்பதை அனைத்து உறுப்பினர்கள் சார்பாகவும் நான் இங்கு கூற கடமைப்பட்டுள்ளேன்.
நன்றி விக்கிரம் அவர்களே.. அனைவருக்கும் பகிரங்க அழைப்பினை விடுத்திருந்தும் ஏன் பெண்கள் இணைவதில்லை?? பெரும்பாலும் ஆண்கள் மட்டும்மே பங்கு கொள்வதால்… ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதா என்று கேட்க தோன்றுகிறது.. நன்றி.
. இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.. .
நன்றி பிரியசகி.
mika thamathamaaka yedukkum mudivu.
eruntha podum nallathu.
cinemavinaal oru maaperum samuka purachchiyai undakka mudiyum yenpathai unarntha unkalukku yen vaalththukkal.
unkalin entha muyarchchi vella vaalththukkal
by
mu.kalanchiyam
film director.
நன்றி அண்ணா.
short flims are very advanced in the west. Why don’t you collaborate with universities and films societies in the west. They don’t know about you either, however if you get in touch with those people you can exchange a lots between you.
Thank Samithra, We will do one buy one, some of us are already in unversities for learning the cinematography. We have a workshop on June ( we didn’t fix the date yet ) and we hope to bring someone from west film societies. Thank you for the Idea and you can also always share your ideas with us.
நல்ல விசயத்த நடத்திக் காட்டி இருக்கிறார்கள் ஆனால் இங்கு குந்தி இருந்து குதர்க்கம் பேசுவோர் மட்டும் தங்கள் பரம்பரைப் பழக்கத்தை விடாது பழங்கதை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.பெண்களூக்கு மேற்கில் மூடப் பழக்கம் இல்லை ஆனால் நமக்கு மட்டும்தான் மூடப்பழக்கம்.என்ன செயவது சிவனே என்றூ கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
புத்திசாலிதனமாக பேசுவதாக நினைப்போ???
நல்லதொரு முயற்சி. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்