யாழ். பல்கலைக்கழகம் அங்கு கல்விகற்கும் மாணவர்களின் போராடும் உரிமையையும், கற்றலைத் தீர்மானிக்கும் உரிமையையும், பேச்சு எழுத்து சுதந்திரங்களையும் மீறி நாளை ஆரம்பமாகிறது. நாட்டின் உயர்கல்வி அமைச்சரின் மிரட்டலுக்கும் துணைவேந்தரின் மிரட்டலுக்கும் மத்தியில் பலவந்தமாக பலகலைக்கழகம் ஆரம்பிக்கப்படுகிறது.
மாணவர்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்த நால்வர் வலுவான காரணங்களின்றி பாசிசச் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்கலைகழகம் பெரும்பான்மையான மாணவர்களின் விருப்பத்திற்கு மாறாக ஆரம்பமாகிறது. மாணவர்களைக் கைது செய்வதற்குக் காரணமாக அமைந்த துணைக்குழுத் தலைவர்கள் பிரித்தானியாவில் மாணவர்கள் குண்டு வீசினார்கள் என நேர்காணல் வழங்கும் நிலையில் பல்கலைக் கழகம் ஆரம்பமாகிறது.
உலகம் முழுவதும் மாணவர் உரிமைக்காகப் போராடும்மாணவர் அமைப்புக்களோடும், போராட்ட அமைப்புக்களோடும், இலங்கை எங்கும் காணப்படும் சிறிய வெகுஜன அமைப்புக்களோடும், சிங்கள மாணவர் அமைப்புக்களோடும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இறுக்கமான உறவுகளைப் பேணிக்கொள்ள வேண்டிய புதிய காலத்தில் வாழ்கிறார்கள்.
பல்கலைக்கழக மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவின் நான்கு இடதுசாரி அமைப்புக்கள் இணைந்து அறிக்கை வெளியிட்டிருந்தமை மாணவர்கள் தமது நண்பர்களையும் எதிரிகளையும் இனம் கண்டுகொள்வதற்கான ஆரம்பப்புள்ளியாகும்.
எரியும் தேசத்தில் போர் விழுங்கிய உரிமைகளுக்காக மாணவர்கள் துணிந்து குரலெழுப்பியமைக்காகப் பெருமையடையலாம்.
என்பது வா.செ.குழந்தைசாமியின் கல்விக் கொள்கை. நாளும் வளர்ந்து கொண்டிருக்கும் இத்தலைமுறை மாணவர்களின் எண்ணக்கரு உருவாக்கத்திலும் ஆளுமை வளர்ச்சியிலும் சமூகச் சூழலை விளங்கிக் கொள்வதிலும் மொழிப்பாடம் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. தொழில்மயம், நவீனமயம், உலகாயதமயம் போன்ற காரணிகளால் இன்றைய தலைமுறையினர் அறிவில் மூத்த தலைமுறையினர் என்றெண்ணும் அளவில் வியத்தகு முன்னேற்றம் அடைந்துள்ளனர். இன்றைய மாணவர்கள் மிகக் கவனமாகக் கையாள வேண்டிய கூரிய ஆயுதம் போன்றவர்கள். இவர்களுக்குப் புகட்டப்படுகின்ற கல்வி பதம் பார்த்து, பகுத்தறி சிந்தனையுடன் கற்கின்ற நிலையில் அமைய வேண்டும். 2001 ஆம் ஆண்டில் உறுதி செய்யப் பெற்ற தேசிய கல்வித் திட்டத்தின் படி அமைந்த 1986 ஆம் ஆண்டின் கல்விக் கொள்கை.