பஞ்சாப் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டு அமைப்புகளான சிபிஐ (மாவோயிஸ்டு), சி.பி.எம்.எல். (ஐக்கிய கட்சி), சி.பி.எம்.எல். (புதிய ஜனநாயகம்) மற்றும் சி.பி.எம்.எல். (விடுதலை) ஆகிய நான்கு அமைப்புகள் காலூன்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவை மட்டுமின்றி சுமார் 30 அமைப்புகள் மாவோயிசக் கொள்கைகளைப் பரப்பி வருவதாகக் கூறப்படுகிறது. நிலம் பறிக்கப்பட்ட விவசாயிகள் மட்டுமின்றி, மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களையும் இந்த அமைப்புகள் கவர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஹரியாணா மாநில மாவோயிஸ்டு தலைவர் பிரதீப் குமார் உள்பட மாவோயிஸ்டுகள் என்று சந்தேகிக்கப்படும் எட்டு பேரை ஹரியாணா காவல்துறை கைது செய்துள்ளது. இவர்களிடமிருந்து 4 டெடனேட்டர்கள், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், ஒரு கிரேனைடு மற்றும் மாவோயிச பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
குருஷேத்திரா, ஜிந்த், கைதல் மற்றும் யமுனா நகர் ஆகிய இடங்களில் மாவோயிஸ்டுகள் வலிமையுடன் திகழ்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன.