சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் வரலாறு முழுவதும் பேரினவாத ஒடுக்கு முறைக்கு நேரடியாகத் துணைசெல்லும் தமிழர்களை நாங்கள் கண்டிருக்கிறோம். இலங்கை அரசுகளோடும் , இராணுவத்தோடும் ஒட்டுண்ணிகளாக தமது பிழைப்புவாத அரசியல் நகர்த்தும் நூற்றுக்கணக்கானவர்களை ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட வரலாறு கடந்து வந்துள்ளது.
90 களின் பின்னர் பேரினவாதத்திற்குச் சார்பான புலம்பெயர் அரசியல் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்ட அரசியல் தத்துவார்த்தத் வெளியில் நகர்த்தப்படுகின்றது. ஒரு புறத்தில் புலம்பெயர் புலிகளின் அடிப்படைவாத அரசியலை நியாயப்படுத்தும் வகையிலும், மறுபுறத்தில் பேரினவாத அழிப்பிற்குத் துணைசெல்லும் வகையிலும் ‘மாற்றுக்கருத்து’ என்ற தலையங்கத்தில் மற்றொரு அரசியல் நடத்தப்படுகிறது.
சாதிவாதம், பிரதேசவாதம், மற்றும் ஏகதிபத்திய நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்கள் ஆகியவற்றின் முக்கூட்டு ; இலங்கை அரச பாசிசத்தின் அருவருப்பான தொங்கு தசையாக மாறிய அரசியல் எஸ்.எல்.டி.எப் மற்றும் தலித் முன்னணி ஆகிவற்றின் தோற்றத்தோடு ஆரம்பிக்கிறது.
புலம்பெயர் நாடுகளிலிருந்து திட்டமிடப்பட்ட இந்த அழிவு அரசியல் எஸ்.எல்.டி.எப் ஐ மையமாகக்கொண்டே வழி நடத்தப்படுகின்றது. புலிகளிலிருந்து தத்துவார்த்த அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக வெளியேறிய ராகவன், நிர்மலா போன்றவர்களால் தலமைதாங்கப்படும் இந்த அரசியல் இப்போது இலங்கையில் புற்றுநோய் போன்று ஜனாயக முற்போக்கு சக்திகளை அரித்துச் செல்ல ஆரம்பித்திருக்கிறது.
ஜனநாயக முற்போக்கு அரசியல் தளத்தை நேர்த்தியாகத் திட்டமிட்டுக் கையகப்படுத்திய இக் கும்பல்களின் கூட்டு, மாற்று அரசியல் என்பதை இலங்கை அரச பாசிசம் சார்ந்த ஒன்று என்ற விம்பத்தைத் தோற்றுவிப்பதில் பிரதான பாத்திரம் வகிக்கிறது.
இக்குழு தமது எஜமானர்களுக்காக இரண்டு பிரதான நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்கிறது. முதலில், சாதிய மற்றும் பிரதேச முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி பேரினவாதிகளின் பிரித்தாளும் நோக்கத்திற்குத் துணை செல்கிறது. இரண்டாவதாக புலிகளின் அடிப்படைவாதக் கருத்துக்களுக்கு எதிரான முற்போக்கு ஜனநாய கோட்பாடுகள் நோக்கிய அணிதிரள்தல் நிகழாமல் இரும்புத் திரை ஒன்றை ஏற்படுத்துகிறது.
வன்னி இனப்படுகொலையின் பின்னான ஐந்தாண்டு காலப்பகுதியில் இக் கூட்டங்களின் செயற்பாடுகள் குறைந்தபட்ச எதிர்ப்புகள் கூட இல்லாமல் சுதந்திரமாக நடைபெறுகின்றது. புலம்பெயர் நாடுகளில் கிழக்குப் பிரிவினை வாதத்தைக் கருணாவுடனும், பிள்ளையானுடனும் இணைந்து தலைமைதாங்கிய ஞானம் என்ற எம்.ஆர்.ஸ்டாலின், சிறீ ரெலோ என்ற ஆயுதக் குழுவின் புலம்பெயர் பிரதிநிதி கீரன், பிரான்சை மையமாகக் கொண்ட சாதிவாதிகள், இவர்களை ஒருங்கிணைக்கும் சோபாசக்தி, ராகவன், நிர்மலா போன்றவர்கள் இணைந்த அதிகார்வர்க்கத்தின் அடியாள் படைகள் இலங்கையில் ஒவ்வொரு பகுதியிலும் ஊடுருவ ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.
அண்மைக் காலங்களில் முற்போக்கு அரசியல் மாற்றுக் கருத்துக்கள் என்ற தலைப்பில் மலையகப் பகுதிகளில் இக் குழுக்களின் நடமாட்டங்களை அவதானிக்கத் தக்கதாகவுள்ளது. மலையக மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான ஈனக் குரல்களின் எதிரொலிகளை ஆங்காங்கு கேட்கும் அவலம் நிறைந்த சூழலில் இக் குழுக்களின் நேரடித் தலையீடு அவற்றை அழிப்பதற்கான ஆரம்பமா என்ற கேள்விகள் எழுகின்றன.
வன்னி அழிவுகளின் பின்னர், அடையாள அரசியல் என்ற ஏகாதிபத்திய, பின்நவீனத்துவக் கருத்துகள் இழையோடும் அரசியல் தளம் ஒன்று லெனின் மதிவாணம் மற்றும் ந.ரவீந்திரன் ஆகியோரால் தோற்றுவிக்கபடுகிறது. பிழைப்பு வாதிகளும், வியாபாரிகளும் குந்திக்கொள்வதற்கு ஏதுவாகத் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட இத் தளத்தை முதலில் பயன்படுத்திக்கொண்டது பிரான்ஸ் சாதிவாதிகளான தலித் முன்னணி.
இலங்கையை மையமாக கொண்ட முற்போக்கு ஜனநாயக அரசியல் சக்திகளின் சாபக் கேடு நீண்டகால அரசியல் வரலாற்றைக் கொண்ட ரவீந்திரனால் திட்டமிடப்படுவது அதிர்ச்சியானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.
ரவீந்திரனால் உருவாக்கப்பட்ட புதிய பண்பாட்டுத் தளம் என்ற அமைப்பு அனைவரையும் இணைப்பதாகக் கூறுகிறது.
சிங்கள பௌத்த வெறிகொண்ட இராணுவத்தோடு இணைந்து செயற்படுவது தமது அரசியல் என்று வெளிபடையாகக் கூறும் சிறீ ரெலோ கீரனயும், வேதாந்தாவையும், வெள்ளை வானையும் இணைக்கும் சோபாசக்தியையும், தலித் முன்னணியையும் இவர்கள் அனைவரதும் தத்துவார்த்த இணைப்பாளர்களான ராகவன், நிர்மலாவையும் அங்கீகரிக்க முடியும் என்றால் பேரினவாத அரசுடனேயே தொற்றிக்கொள்ளலாமே, புதிய பண்பாட்டுத்தளம் எதற்கு?
தொடர்புடைய பதிவுகள்:
சுகனார் படிகம் : ப.வி.ஶ்ரீரங்கன்
செங்கடல் – என்னோடு பயணிக்கவில்லை : கவிதா (நோர்வே)
அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 07
புலம் பெயர் தமிழர்களின் நவீன பொழுது போக்குத்தலங்களே இவைகள்.
பல அமைப்புகள் பல பெயர்களில் உருவாக்கப்பட்டுள்ளன. இவர்களால் இலங்கையில் வாழும் தமிழ்ர்கள் நன்மை பெறாவிடினும் துன்பப்படாமல்
இருந்தாலே போதும். இந்த அமைப்புகளில்லிருந்து ஒருவராவது தாயகத்தில் வாழும் ஒருவரிற்கு ஒரு நேர உணவை தானாகவே உழைத்துப்பெற வழிகாட்டினாலே போதும் அதனை வரவேற்போம்.
மற்றும்படி இவர்கள் புகழ் விரும்பி அலைவோர்தான்.
வணக்கம்!
இந்தக் கட்டுரைக்கும் இந்தக் கட்டுரைக்காக வெளியிடப்பட்டிருக்கும் படத்திற்கும் அதில் அழகாக நின்றிருக்கும் எனக்கும் (சஞ்சயன்) என்னய்யா சம்பந்தம்?
கட்டுரையாளர் அல்லது இதனை பிரசுருரித்த இனியொரு ஆகிய யாராவது இதுபற்றி கூறமுடியுமா?
நன்றி
தோழமையுடன்
சஞ்சயன்
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்
//இக்குழு தமது எஜமானர்களுக்காக இரண்டு பிரதான நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்கிறது. முதலில், சாதிய மற்றும் பிரதேச முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி பேரினவாதிகளின் பிரித்தாளும் நோக்கத்திற்குத் துணை செல்கிறது. இரண்டாவதாக புலிகளின் அடிப்படைவாதக் கருத்துக்களுக்கு எதிரான முற்போக்கு ஜனநாய கோட்பாடுகள் நோக்கிய அணிதிரள்தல் நிகழாமல் இரும்புத் திரை ஒன்றை ஏற்படுத்துகிறது.//
சரியான அவதானிப்பு இது.அசோக் சொல்லும் கருத்துக்கள் மிகவும் கவனிக்கத் தக்கது.
கிட்டத்தட்ட இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணியினரை சிறு பிள்ளைகளாகவும்,அரசியலில்”வஞ்சகம்”அற்றுச் செயற்படுவதுமாகக் காட்டிவிடும் அரசியலொன்றும் நமக்குள் உண்டு! -இது இவர்களைவிட ஆப்பத்தானதென்பேன்.இங்கு அசோக் மிகநேர்மையாக இந்தக் கும்பலது அரசியல் சாய்வைக் கணித்துச் சொல்கிறார்.
இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணித் தலைவர் தேவதாசன் மற்றும் கிழக்கு மாகாணசபைப் பேச்சாளர் ஞானம் போன்றோரது அரசியல் மற்றும் அதுசார்ந்த நகர்வுகள் குறித்தும் இத்தகைய கருத்தோடு உலா வரும் அரசியலுரையாடலுக்கு எதிராக அசோக் முன் வைக்கும் கருத்துக்களை நாம் மிகக் கவனமாகக் கவனிக்க வேண்டும்.
கடந்த பல தசாப்தாமாகச் சிங்களப் பேரினவாதவொடுக்குமுறைக்குட்படும் இலங்கைச் சிறுபான்மையினங்களது அரசியல் பிரச்சனையுள் மிக நேர்த்தியாகக் குழிப்பறிப்புகளைச் செய்யும் அரசியற் தந்திரத்தை இவர்கள் செவ்வனவே செய்து வந்திருக்கின்றனர்.தேவதாசன், ஞானம் போன்றவர்களும்,நிர்மலா -இராகவன் , கீரன் குழுக்களுமாக இலங்கை அரசைச் சார்ந்து மக்களை அண்மித்தபோதெல்லாம் இலங்கைப் பாசிச மகிந்தா அரசை சனநாயக அரசாகவே பேசியும் -எழுதியும் வந்தனர்.
இவர்கள்தாம் முள்ளிவாய்க்கால் அழிவுக்குப் பின் சில மாதங்களில் (டிசெம்பர் 2009 இல்)யாழ்ப்பாணஞ் சென்று மகிந்தாவுக்கு நன்றியும் ;இலங்கையில் சமாதானம் -சனநாயகம் மலர்ந்துவிட்டதென்றும் , “தமிழர்கள் தமிழ் தேசியவாதத்தையும் ; தமிழர்கள் எனும் உணர்வையும் “விட்டொழித்து, “நாம் அனைவரும் இலங்கையர்கள் “என்றுணர்ந்து ,இலங்கையை முன்னேற்ற வேண்டுமென்றனர்.
கிழக்கு மாகாணத்தைப் பிளந்தெடுத்து , அதைச் சிங்கள -இந்திய அரசுகளுக்குடந்தையாக மாற்றும் தந்திரத்துள் இவர்கள் முன்வைத்த “யாழ் மேலாதிக்கம்-மையவாதம்;யாழ்ப்பாணியம் -வேளாளியம் ” போன்ற அரசியற் கருத்தாக்களின் பின்னே நிகழ்த்தப்பட்ட பிளவுவாத அரசியலின் வினையென்ன?
இவர்கள் எங்ஙனம் தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயத்தை மறுத்து மகிந்தாவின் தலைமைக்காக மக்களைப் பிளந்தார்களோ அதேயளவு மூர்கத்தோடுதாம் தமிழ்பேசும் மக்களைப் பிரதேச -சாதிய ரீதியாகப் பிளந்து இந்திய -இலங்கையின் அரசியற் சூழ்ச்சிக்கேற்பக் கருத்தாடினார்கள்.
இவர்கள் எடுத்த முடிவும் -அரசியற்றெரிவும் தமிழ் பேசும் மக்களது சுயநிர்ணயக் கோரிக்கையையே சிதைத்துச் சின்னா பின்னமாக்கியது.கருத்தியற்றளத்திலும் -அரசியல் கட்சி -அமைப்பு நகர்விலும் இவர்கள் மகிந்தா அரசினது அனைத்துப் பரிணாமங்களையும் ஆதரித்துப் பிரச்சாம் செய்து, தமது அரசியலை நகர்த்துபவர்கள்.ஆனால் ,இனிவரும் ஒரு அரசியல் மாற்றத்துக்காக இவர்களிற் பலரோ தற்போது மேற்குலக லொபிகளாக மாறிவிட்டுள்ளனர்.இது யு.என்.பி. இரணிலின் பின் நகர்த்தப்படும் இலங்கையின் ஆட்சி மாற்றத்தைக் குறித்து தற்போது இயங்கத் தொடங்குகிறது!
இத்தகைய குழுக்களின் ஒரு பிரிவினரோ இப்பவும் “இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்” தேவரமானது எப்பவும் போலவே இந்தியத் திருவிளையாட்டே.இது, கைவிலகிப் போகும் இந்தியப் பிராந்திய நலன்களின் அதீத தேய்வில் இந்தியா கவலையுறும் ஒரு நிகழ்ச்சி நிரலாக இப்போதிருப்பதற்கானவொரு முன்னெடுப்பாக நாம் உணரலாம்.இதற்காகக் கிழக்கு மாகாணம் பிரித்தெடுக்கப்பட்டு அங்கே செயற்கையான முரண்பாடுகளை உருவாக்கித் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமை என்பதையே கேலிக்குரிய கோசமாக உணர வைக்கப்படுகிறது.இத்தகைய உணர்வு,கிழக்கைத் தனித்த மக்கட்டொகுதியுடைய மாகாணமாக்கிக் கிழக்குக்கான தனி இன அடையாளத்தைப் போர்த்துகிறது.இதைப் பிள்ளையானூடாகச் செய்து முடிக்கும் தகுதியிலேயேதாம் பிள்ளையானின் அரசியல் வரலாறிருக்கிறது.
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில்,மிக எளிமையான சொல்லாடல்கள்மூலம் ஒரு இனத்தின் வாழ்வாதார அடிப்படைக் கோரிக்கைகளை கிண்டலக்குட்படுத்திச் சீரழிக்கும் நரித் தனத்துடன் கருத்தாடுகிற தமிழ்ச் சூழலொன்று, இக் குழுவினர்களது அரசியலிலிருந்து மிக வலுவாக வளர்ந்துள்ளது.இது, மக்களின் உரிமைகளை சாதி -பிரதேச வாத அரசியலில் நீர்த்துப் போக வைத்தபடி,இந்திய மேலாதிக்கக் கனவுகளுக்கு வக்காலத்து வேண்டுவதில் தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிக் கொள்கிறது.மற்போது இலங்கை அரசினது ஆட்சி மாற்றத்துக்காக மீளக் கட்டியமைக்கும் படுமோசமான கட்சி, அரசியலில் மிகக் கேவலமாகத் திசைவழிகளை அமைக்கும் தமிழ்க் கட்சிகள்-முன்னாள் ஆயுதக் குழுக்கள் முன் வைக்கும் அரசியல் தாம் எதிர்ப்பு அரசியலாம்! ஆக எதிர்ப்பு அரசியல் நிலையோ இன்று, ஆளும் வர்க்ககங்களுக்கிசைவாகப் பிற்போக்குச் சக்திகளால் முன்னெடுக்கப்படுகிறது.
தமிழர்களைத் தனித்தேசப் போராட்டத்துக்குத் தள்ளிய சிங்கள மையவாதத்தைக் கேள்விக்குட்படுத்தாத இந்தத் தலித்துவ -பிரதேச “ஜனநாயகவாதிகள்” இதுவரை சிங்கள அரசினதுகளது இனவாத வரலாற்றை விவாதிக்கத் திரணியற்றவர்களாகிச் சிங்கள மேலாதிக்கத் தோடு கைகோற்றனர் , தலித்தின் பெயரால் -பிரதேச வாதத்தின் பெயரலால்.
.இது சிங்கள இனவெறி அரசினது எந்த வரலாற்றுப் பயங்கரங்களையும் சிறுபிள்ளைத் தனமாக விவாதிக்க முனையும் இன்றைய காலத்தில், நாம் தொடர்ந்தும் அடிமைப்படும் கருத்தியல் மற்றும் அரச வன்முறை ஜந்திரங்களுக்கும் ஒத்திசைவாக இருக்கும் அரசியல் சித்து விளையாட்டாகிறது இது.இதனால் இலாபம் அடையும் இயக்க-கட்சி அரசியல், மக்களிடமிருந்து அந்நியப்பட்ட சூழலில்,மக்களின் உண்மையான வாழ்வியல் தேவைகளைக் தமது எதிர்கால இருப்புக்குக் கோசமாக்கிறது.இதுவே இன்றைய தமிழர்களின் தலைவிதி.
ஶ்ரீரங்கன்
22.11.2014
// இவர்களிற் பலரோ தற்போது மேற்குலக லொபிகளாக மாறிவிட்டுள்ளனர்.இது யு.என்.பி. இரணிலின் பின் நகர்த்தப்படும் இலங்கையின் ஆட்சி மாற்றத்தைக் குறித்து தற்போது இயங்கத் தொடங்குகிறது!//
இக்குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் உள்ளதா?
இந்திய திருவிளையாடல் என நேர்த்தியாக வர்ணித்திருப்பதற்கும் உங்கள் ஆழமான பல கருத்துக்களுக்கும் நன்றி
அசோக் சொல்வதில் ஒரு பெரிய உண்மை இருக்கிறது. புலம்பெயர் நாடுகளில் புலி அடிப்படைவாதிகளுக்கு எதிரான கருத்து என்பது சோபாசக்தி, ராகவன் குழுவின் கருத்தாக காட்டப்படுவதன் பின்னால் பெரிய அழிவே நடக்கிறது. இடது சாரி தத்துவத்தையும் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் இணைத்து இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இனியொரு செயலாற்றுகிறது. இருந்த போதிலும் இனியொரு மக்கள் மத்தியில் பரவலாகச் செல்லாமைக்குக் காரணம் புலிகள் மட்டுமல்ல, இக்குழுக்களும் தான். யாராவது புலிகளுக்கு வெளியால் போராட்டத்தைப் பற்றிக் கதைத்தாலே இக் குழுக்களோடு அடையாளப்படுத்தும் ஆபத்தான சூழல் நீண்டகாலமாகக் காணப்படுகிறது. இதனால் தான் புலம்பெயர் புலிகள் இக்குழுக்களைக் கண்டுகொள்வதில்லை. சில சமயங்களில் இவர்களுடன் நெருக்கமான உறவையும் பேணி வருகிறார்கள்..
// இக்குழு தமது எஜமானர்களுக்காக இரண்டு பிரதான நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்கிறது. முதலில், சாதிய மற்றும் பிரதேச முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி பேரினவாதிகளின் பிரித்தாளும் நோக்கத்திற்குத் துணை செல்கிறது. இரண்டாவதாக புலிகளின் அடிப்படைவாதக் கருத்துக்களுக்கு எதிரான முற்போக்கு ஜனநாய கோட்பாடுகள் நோக்கிய அணிதிரள்தல் நிகழாமல் இரும்புத் திரை ஒன்றை ஏற்படுத்துகிறது //
செய்வீனம் ஆனால் செய்யேல எண்டு சாதிக்கிறதே இப்ப முழுநேர தொழிலாகச் சில பேர் செய்து வருகீனம்.
சென்ற வாரம் தான் சிங்களப் பகுதிகளில கட்சிவிட்டு கட்சிதாவும் கோமாளித்தனம் தொடங்கின….. ஆனால் புலத்தில் இந்த கட்சிதாவும் அநாகரீகம் முள்ளிவாய்க்காலோட தொடங்கீட்டுது……..
இந்தப் பிரமுகர் முந்தி தன்னை பெரிய புலி எதிர்ப்பாளர் என காட்டிக்கொண்டு திரிந்தவர் முள்ளிவாய்க்கால் முடிந்த கையோட புலிகளின் `டெக்` ( மக்கள் அவை) அமைப்புகு உள்ள அவசரம்..அவசரமாக ஓடிப்போய் செர்ந்தார்..பின்னர் நாடு கடந்த அரசு ( கே.பி ) தொடங்கியவுடன ஓடிப்போய் அதோட செர்ந்தார்….பின்னர் சம உரிமைக் கட்சி தொடங்கியவுடன ஓடிப்போய் அதோட செர்ந்தார்…இப்ப மீண்டும் மாவீரர் எதிர்ப்பு அறிக்கைகள் எழுதி, தன்னை தீவிர புலி எதிர்ப்பாளராகக் காட்டி வருகிறார்…..இவரின் செயலைப் பார்த்தால் தயான் ஜெயதிலகாவின் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை!?…..
`முட்டையில் மயிர் பிடுங்க தான் முடியாது…ஆனால் முட்டை நல்ல முட்டையா கூழ் முட்டையா என்றூ கூடவா கண்டு பிடிக்க முடியாது..?…..`
மக்களே விழிப்பாக இருங்கள்….
Ten guys. I like that number.
But one guy, asking about him…