மார்க்சியம் என்பது வசனங்களுக்குள் முடங்கிக் கொள்வதல்ல என்பதை உணர்ந்த ந. இரவீந்திரன், இந்திய வாழ்முறையில்- இனக்குழு வாழ் முறையில் அதன் யதார்த்த சூழலுக்கு ஏற்றவகையில் எவ்வாறு பியோகிக்க வேண்டும் என்பதை வரலாற்று அடிப்படையலும் அதன் இயக்கவியல் அடிப்படையிலும் ஆய்வு செய்து வருகின்றவர். அத்தகைய தேடலினூடாக அவர் கண்டறிந்த கோட்பாடே “ இரட்டைத் தேசியம்” ஆகும். இரட்டைத் தேசியம் பற்றி தேடலும் சிந்தனையும் வரலாற்றில் எவ்வாறு முகிழ்ந்து வந்துள்ளது என்பது குறித்தும் அவர் தமது ஆய்வுகளில் சுட்டிக் காட்டத் தவறவில்லை என்றே கூற வேண்டும். இவ்வகையில் இன்று அரசியல் தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் முக்கிய விவாத பொருளாக மாறியுள்ள இரட்டைத்தேசியம் பற்றி ஆய்வுகளும் கருத்தாடல்களும் வெளிவர வேண்டியது காலத்தின் தேவையாகும்.
ஐரோப்பிய சமூகத்தில் வர்க்க பிளவு காணப்பட்டது போன்று இனக் குழு சமூகத்தில் இல்லை. அங்கே ஒடுக்கு முறைக்குட்பட்ட உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த ஒருவர் மத்திய தர வர்க்கமாகவோ அல்லது முதலாளியாகவோ மாறி விட்டால் அவரது புதிய வர்க்கத்திற்கான அடையாள மாற்றத்தை பெற்ற விட முடியும். ஆனால் சாதி சமூகத்தில் அத்தகைய வர்க்க மாற்றத்தை பெற்றால் கூட அவரது சாதி ஒடுக்கு முறை கலைவதில்லை. எனவே சாதிய கட்டமைப்பு என்பது மேல் சாதி கீழ் சாதியினரை ஒடுக்குவதற்காகவும் சுரண்டுவதற்காகவும் உருவாக்கபட்ட அமைப்பாகவே இருந்து இன்று வரை தொடர்வதாக அமைந்தள்ளது.
ஏகாதிபத்தியம் என்பது தேசங்களை ஒடுக்கி உபரியை ஈவிரக்கமற்ற முறையில் சுரண்டுகின்றது. எனவே அதற்கு எதிரான பரந்தப்பட்ட ஜனநாயக சக்திகளையும் திரட்டி அதற்கு எதிரான போராட்டத்தை கட்டியமைக்க வேண்டியது வரலாற்றுத் தேவையாகும். ஆனால் இந்திய வாழ்முறையில் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிராக விழிப்புற்றிருந்த பார்பனர்கள் சில வேலைகளில் பார்பன வேளாளர் கூட்டு தாம் ஒடுக்கிய தலித் மக்களின் உணர்வுகளை காணத் தவறி விட்டனர். மேலும் அவர்களை கீழ்நிலைப்படுத்தி சுரண்ட தலைப்பட்டனர். எனவே மேல்சாதியினர் தலித்துகள் பற்றிக் கொடுத்த வாக்குறுதியெல்லாம் அவர்கள் சந்தேக கண்ணொட்டத்துடனேயே பார்க்க தலைப்பட்டனர். இதன்காரணமாக தலித் சார்ந்து எழுந்த இயக்கங்களும் தலைவர்களும் இவர்களின் கூற்றுக்களை நிராகரித்து ஏகாதிபத்திய அணியை நாட வேண்டியவர்களானார்கள். இந்த முரன்பாட்டை உணராது சாதியெதிர்ப்புக்காக செயற்பட்ட போராடிய முன்னோடிகளான அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர், பெரியார் முதலானோரையும் அவர் தம் போராட்டங்களையும் குறுங்குழுவாத போராட்டம் எனவும் அவர்களை ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் எனவும் பாடி பரப்பி வந்தனர்- வருகின்றனர்..
இவ்விடத்தில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் யாதெனில், இந்திய வாழ்முறையின் சுரண்டலுக்கான ஏற்றத்தாழ்வுடைய சமூகவமைப்பு (மாற்று வடிவம்) சாதி என்பதை புரிந்து கொள்ளல் அவசியமாகும். தலித்தியம் எனும் அடையாள அரசியலானது மேல் சாதியினரைத் தமது வர்க்க எதிரியாக நோக்குகின்ற தன்மையிலேயே வளர்த்தெடுக்கப் படுகின்றது. இங்கு சாதியத்திற்கு எதிராக போராடக் கூடிய சகல விதமான ஜனநாயக சக்திகளையும் ஒன்றினைத்தல் அவசியமாகும். இலங்கையில் வட பகுதியில் சிறுபான்மை தமிழர் மகா சபையும் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கமும் அனைத்து நேச சச்திகளையும்(நல்லெண்ணங் கொண்ட உயர்சாதியினரையும்) இணைத்துக் கொண்டு சாதிக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டத்தை முன் வைத்தனர். ‘சாதி ஒழியட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்’ என அவர்கள் சாதியையும் தீண்டாமையையும் குறி வைத்து போராடிய அதேசமயம் சகல ஒடுக்கு முறைகளுக்கும் எதிரான வர்க்க பார்வை என்ற சமூக விஞ்ஞான தளத்துடன் இணைத்திருந்தது அதன் முற்போக்கான அம்சமாகும். அல்லாவிடின் தலித் மக்களின் போராட்டம் கூனி குறுகி இறுதியில் படுத் தோல்வி அடையும் என்பதை வரலாறு எண்பித்திருக்கின்றது. இந்த சீரிய பணியினை இன்று தலித்தியவாதிகள் செய்கின்றார்கள். இங்கு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும் இதன் முக்கிய அங்கமாக திகழக்கூடிய சாதி எதிர்ப்பு போராட்டமும் பிளவுபட்ட தேசியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
தற்காலத்தில் இலங்கையில் இன்று அறிந்தோ அறியாமலோ சிலர் சாதியம் ஒழிந்து விட்டதாகவும் அதனை தமிழ் தேசிய விடுதலை போராளிகளே அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் எனவும் கூறுகின்றனர். அன்பர் ஒருவர் ”துப்பாக்கி நிழலில் சாதிகள் மறைந்து கிடக்கின்றது. மரித்து விடவில்லை” என்ற கருத்தினை முன்வைத்துள்ளார். பல்லவர் காலத்தில் நிலவுடமை வர்க்கம், வணிக வர்க்கத்திற்கு எதிராக அடிநிலை மக்களை தம்பக்கம் ஈர்க்கும் பொருட்டு சாதிய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். நிலவுடமை வர்க்கம் வெற்றி பெற்று சோழ சாம்ராஜ்யத்தை அமைத்தப் பின்னர் மீண்டும் சாதியம் மிகப்பலம் வாய்ந்த ஒடுக்குமுறைக் கருவியாக மாற்றமடைந்து. இந்த வரலாற்று நிகழ்வு எதனை எமக்கு உணர்த்தி நிற்கின்றது. எனவே சாதிய விடுதலை போராட்டத்தினை உழைக்கும் மக்கள் நலம் சார்ந்த போராட்டத்துடன் இணைந்து முன்னேடுப்பதற்கு இது பற்றிய நேர்மையான ஆய்வுகள் அவசியமானவையாகும்.
இலங்கையில் அறுபதுகளில் சாதிய எதிர்ப்புப் போராட்டம் தேசியத்தின் வடிவமாக இருந்தது போன்று எழுபதுகளில் தழிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டமும் முனைப்புப் பெற்றுக் காணப்பட்டது. இடதுசாரிகள் அதன் அடுத்த கட்டமான தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தையும் இணைத்து முன்னேடுத்திருப்பார்களாயின்- ஜனநாயக சக்திகளை வென்றெடுத்திருக்க முடியும். சிங்கள மக்களுடன் ஐக்கியப்படுதல் என்ற கோசத்தின் அடுத்தபக்கமாய் பேரினவாதத்திற்கு எதிராகப் போராடுதல் என்ற அம்சத்தையும் இணைத்திருப்பார்களாயின் தமிழ் ஜனநாயக சத்திகளின் ஒரு பகுதியினரை வென்றெடுத்திருக்க முடியும்.
பிரதான முரண்பாடு என்பது பிரதானமற்றதாகச் செல்வதும் பிரதானமற்றது பிரதானமாக மாறுவதும் வரலாற்று நியதி. இந்த முரண்பாடுகளின் தாற்பரியத்தை உணராதவர்களின் கையிலிருந்து வரலாறு நழுவிடும் என்பது யதார்த்த நியதி. இந்தவகையில் இன்று நேர்மையுடன் மக்களுடன் செயற்பட்டு வருகின்ற முற்போக்கு மார்க்ஸியர்கள் தமது கடந்தகாலம் குறித்து ஆரோக்கியமான சுய விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது.
அதேசமயம் இலங்கை தமிழர் சமூகவமைப்பில் புறையோடி போயிருந்த சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை தமது வெள்ளாளர் சாதிய வர்க்க நலனின் அடிப்படையில் நிராகரித்த தமிழரசுக் கட்சி சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான பார்வை கொண்டிருந்தது. 1948 ஆம் ஆண்டு மலையகத் தமிழர் வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அதற்கு எதிராக இவர்கள் குரல் கொடுத்தது அவ்வணியினரின் முற்போக்கான அம்சம் என்பதையும் இன்று நாம் கவனத்திலெடுத்தல் வேண்டும். இதன் பின்னணியில் தமிழ் ஜனநாயக சக்திகள் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக அந்த அணியினை நாடவேண்டியவர்களாக இருந்தனர். தமிழரசுக் கட்சியினர் அப்போராட்டத்தை இனவாதத்தினுள் அழுத்திச் சென்றனர் என்பது இன்னொரு துரதிஸ்டவசமான நிகழ்வாகும். இவ்வகையில் நோக்குகின்ற போது இந்தியாவில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும் சாதியத்திற்கு எதிரான போராட்டமும் எவ்வாறு பிளவுப் பட்டிருந்ததோ அவ்வாறே இலங்கையிலும் சாதியத்திற்கு எதிரான போராட்டமும் பேரினவாதத்திற்கு எதிரான தமிழ் தேசிய போராட்டமும் பிளவுப் பட்டிருந்தது என்பதை ஆய்வு அடிப்படையில் வெளிப்படுத்கியவர் ந.இரவீந்திரன்.
இவ்வாறான சூழலில் மார்க்சிய நோக்கில் உழைக்கும் மக்களின் நலனிலிருந்த அந்நியமுறாமல் இனப்பிரச்சனைக்கான தீர்வினை முன்னெடுக்கின்ற போது அது தொடர்பில் சமூகமாற்றச் செயற்பாட்டாளர்கள் இந்த முரண்பாட்டைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவரது இரட்டைத் தேசியம் பற்றிய எழுத்துக்கள் எடுத்துக் காட்டுகின்றன.
இந்தச் சூழலில் நாம், மக்களின் விடுதலை மார்க்கமான மார்க்சியத்தை இன்றைய யதார்த்த சூழலுக்கு ஏற்றவகையில் புனரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. மார்க்சியம் என்பது எல்லாக் கால கட்டத்திற்கும் எல்லா சூழலுக்கும் பொருத்தமான திட்ட வட்டமான தத்துவத்தையோ வேலைத்திட் டத்தையோ முன்மொழியவில்லை. அது ஒவ்வொரு வரலாற்றுக் காலங்களிலும் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கான திசை வழியைக் காட்டி நின்றது என்பதை நாம் புரிந்து செயற்பட வேண்டியுள்ளது.
எமது பண்பாட்டுச் சூழலில், காலமாற்றத்திற்கும் புதிய பொருளாதாரச் சூழலுக்கும் ஏற்றவகையில் பல புதிய புதிய கோட்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. பல பாரம்பரியங்களும் பழைய சிந்தனைப் போக்குகளும் காலத்திற்கு ஏற்றவகையில் மீட்டெடுக்கப்படுகின்றன. அம்பேத்கர், இரட்டை மலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் முதலானோர் இத்தகைய பண்பாட்டு மீட்டுருவாக்கத்தில் முக்கிய தத்துவவாதிகளாவர். சாதிய ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டிருந்தமையால் தமது பண்பாட்டு விருத்திக்கு இருந்த தடைகள் குறித்த புரிதல் அவர்களிடம் இல்லாமலில்லை. ஆளும் சாதியினரது மீட்டுருவாக்கம் வேத வேதாந்த சார்பாக அமைந்தது போல அயோத்திதாசரது மீட்டுவாக்கம் இல்லை. இடைக்காலத்தில் வேத வேதாந்த வழி திரிக்கப் பட்டுவிட்டது என அவர்கள் வருந்த, தாம் அடக்கப்பட்டதால் முந்திய மேலான நிலையிழந்தோம் என்ற உணர்வு சார்ந்து சிந்தித்து செயற்பட்ட அம்பேத்கர், அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் குறித்து மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது.
இத்தகைய பண்பாட்டு மீட்டுருவாக்கம் இரு நிலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஒன்று மார்க்சியத்தை நிராகரிக்கும் வகையிலும், அதனை தகர்க்கும் வகையிலும் ஆதிக்க சக்திகளால் மேற்கொள்கின்ற தத்துவார்த்த போராட்டம். சாதிய ஒடுக்கு முறையை காரணம் காட்டி சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை ஏனைய பேராட்டங்களிலிருந்து -குறிப்பாக உழைக்கும் மக்களின் போராட்டத்திலிருந்த அந்தியப்படுத்தி பார்க்கும் போக்கு. இப்போக்கில் முனைப்பாக முன் வைக்கப்படும் கோட்பாடு பின் நவீனத்துவமாகும். உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த போரட்டத்திற்கு பெரிய நட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அல்லது காட்டிக்கொடுக்கும் வகையிலே இன்றைய பின்நவீனத்துவ ஆய்வுகள் அமைந்துக் காணப்படுகின்றன. இந்தப் பின்னணியில் சமூக போராட்டத்தை சிதைக்கும் வகையிலே இந்தியாவில் பெரியாரியமும் தலித்தியமும் பின் நவீனத்துவவாதிகள் தூக்கி பிடிக்கப்படுகின்றது. பின்நீனத்துவம் குறித்த விமர்சனத்தை தமிழிலே சிறப்பாக முன்வைத்தவர் ந. இரவீந்திரன். இவ்விடத்தில் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் யாதெனில், ஒருவர் மார்க்ஸிய சுலோகங்களை உச்சரிப்பதால் மட்டும் மார்சியவாதியாக கொள்ள முடியாது. அவ்வாறே பின் நவீனத்துவத்தை பற்றி ஒவருவர் பேசிவிட்டார் என்பதற்காக அவரை பின்நவீனத்துவாதியாக கொள்ளமுடியாது. இன்று சிலர் பருவகால பறவைகள் போல, அல்லது ஏதாவதொன்றை தமிழிழல புதிதாக பேச வேண்டும் என்பதற்காக பின்நவீனத்துவம் பற்றி பேசுகின்றவர்களை நாம் அறிவோம். இவை ஒருபுறமிருக்க, தமிழில் பின்நவீனத்துவ சிந்தனைகளை முன்வைத்தவர் அ. மார்க்ஸ். பின்நவீனத்துவம் பற்றியும், அ. மார்க்ஸின் ஆய்வுகளில் அப்பார்வை எவ்வகையில் முனைப்பு பெற்றிருந்தது என்பது பற்றியும் மார்க்சிய பார்வையில் நின்று நோக்கிய இரவீந்திரன் அதன் ஒளியிலே வலது சாரி பண்புகளை விமர்சனத்திற்குட்படுத்துடன், அவற்றையும் கடந்து அ. மார்க்ஸின் பின்நவீனத்துவ கோட்பாடுகளில் முனைப்புற்றிருந்த சமூகம் சார்ந்த இடதுசாரி பண்புகள் பற்றியும் அவர் வெளிக் கொணரத் தவறவில்லை. அவ்வாறே பிரான்சிய தத்துவவாதியான ஃபூக்கோ பற்றிய அவரது மதிப்பீடும் மிகவும் நிதானமானதாகும். இவை இரவீந்திரனின் ஆய்வுத் திறனையும் நேர்மையையும் எடுத்துக் காட்டுகின்றது.
இதன் இன்னொரு போக்கு, மார்க்ஸியத்தையும் அதன் உயிர்நாடியான சமூகமாற்றப் போராட்டத்தையும் ஆரோக்கியமான திசையில் வளர்த்தெடுப்பதற்கான செயல் முறையாக அமைந்துள்ளது. இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸின் தலைமையிலும் அதன் போக்குகளிலும் பிராமணியத்தின் செல்வாக்கு அதிகமாக காணப்பட்டமையினால் அம்பேத்கர், இரட்டை மலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் போன்றோர் ஆங்கில காலனித்துவவாதிகளை ஆதரித்து நின்றதுடன் தாம் சார்ந்த மக்களுக்கான விடுதலை மார்க்கமாகவும் அதனைக் கருதினர்.
காங்கிரஸ் தலைமை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் அடக்கியொடுக்கப்பட்ட மக்களை இணைக்க தவறியதுடன், அவர்கள் சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுக்க தவறியது என்பதை முன்னர் பார்த்தோம். இதன் விளைவாக இந்திய தேசிய விடுதலைப் போராட்டமானது நண்பன் யார்? எதிரி யார் ? என்பதனை சரியாக இனங்கண்டு கொள்ளத் தவறிவிட்ட சூழலில், பாரதி இவ்விரு முரண்பாடுகளையும் சரியாக இனங்கண்டார். தன் காலவோட்டத்தின் உயிர்நாடிகளைப் புரிந்துகொண்டு செயற்பட்டமையே பாரதியின் முக்கிய ஆளுமையாக அமைந்தது.
இவ்விடத்தில், ஒப்புவமை வசதி கருதி கியூபாவின் பண்பாட்டு புரட்சியை ஒப்பு நோக்குவது பயன்மிக்கதாகும். கியூப தேசிய விடுதலைப் போராட்டமானது தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மத்திய தர வர்க்கத்தினர் அனைவரையும் தன்னுள் இணைத்திருந்தது போல, கறுப்பின மக்களின் விடுதலையையும் உள்ளடக்கியதாகக் காணப்பட்டது. இத்தகைய தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்ததில் ஹொஸே மார்த்திக்கு முக்கிய இடமுண்டு. பண்ணையடிமைத்தனத்தை தகர்ப்பது மற்றும் ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விடுதலைபெறுவது எனும் இரட்டை தேசியம் குறித்த மார்த்தியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க பங்களிப்பினை அன்றைய கியூபா புரட்சியின் முன்னணித் தலைவர்கள் சிறப்பாகவே கவனத்திலெடுத்தனர்(உண்மையில் இரட்டைத் தேசிய பிளவு என்ற நடைமுறைச் செயற்பாடு சாதியச் சமூகத்திற்குரிய யதார்த்தம் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்). “கியூபப் புரட்சிக்கான கருத்தியல் அடிப்படையை உருவாக்கிய சிந்தனையாளர் ஹொஸே மார்த்தி” என பிடல் காஸ்ட்ரோவும், “இந்த நாட்டில் தேச எல்லைகளைக் கடந்து எதையேனும் பேசவோ செய்யவோ வேண்டுமென்றால், நாம் மார்த்தியின் வார்த்தைகளையும் அவரது முன்னுதாரணத்தையும் நினைவில் கொள்ள வேண்டும்” என சேகுவேராவும் சரியான திசையில் இனங்கண்டிருந்தனர்.
இந்திய சூழலில் இத்தகைய வரலாற்றுப் பாத்திரத்தை வகித்த பாரதியின் இரட்டை தேசியம் குறித்த தெளிவை, இந்திய தேசிய விடுதலையின் முன்னணி தலைவர்கள் கவனத்திலெடுக்க தவறியமையே கியூபா விடுதலைப் புரட்சி அடைந்த வெற்றியை இந்திய தேசிய போராட்டம் எட்ட முடியாமல் போனது. இதுவரையும் இந்திய சூழலில் இவ்விடயம் கவனத்தில் கொள்ளப்படாதிருப்பது துரதிஷ்டவசமான தொன்றாகும்.
அந்தவகையில் இன்று மார்க்சியம் என்பது இந்த சூழலில் தன்னைப் புனரமைத்துக் கொள்ள வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தத்திற்கு உட்படுகின்றது. அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர், பெரியார், இரட்டைமலை சீனிவாசன் முதலானோரிடமிருந்து போர்க்குணத்தை கவனத்திலெடுக்கின்ற அதேசமயம், காங்கிரஸ் தலைமையிலான இந்திய தேசிய போராட்டத்தின் முற்போக்கான பாத்திரத்தையும் (அதன் வரையறைக்குட்பட்ட அளவில்) நாம் கவனத்திலெடுக்க வேண்டும்.
மனித சமூகத்தின் வளர்ச்சியை தூண்டும் சக்தியாக அதிகாரத்திற்கு எதிராக போராடும் வர்க்கங்கள், வர்க்கப் போராட்டத்தின் மூலமாகவே சமூகத்தை மாற்றியமைக்க முடியும். தமது அடிமை முறையிலிருந்து விடுப்பட்டு பொருளாதார ரீதியாகவும் ஆத்மார்த்த ரீதியாகவும் சுதந்திர பிரஜையாக வாழ முடியும். இந்த விடுதலையை அடைவதற்கு பொது மக்கள் தங்கள் நலன்சார்ந்த கட்சியை அமைத்துக் கொள்ள வேண்டும். புரட்சிகர சிந்தாந்தம் இன்றி புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது. அவ்வகையில் மிகவும் முன்னேறிய சித்தாந்தத்தையும் அது பெற்றிருக்க வேண்டும். இத்தகைய பார்வையை ந. இரவீந்திரன் தனது ஆய்வுகளின் மூலம் வெளிக்கொணர்கின்றார். அவர் காலத்திற்கு காலம் முனைப்புற்று செல்லாக்கு பெற்றிருக்கும் ஏதாவதொன்றில் தனது பார்வையை செலுத்தி அந்த சலசலப்பில் சிலருடைய அங்கிகாரத்தை பெற்று தமது வயிற்று பிழைப்பிற்கும் கம்பீரத்திற்கும் வழித் தேடிக் கொண்டவரல்லர். சமூகமாற்ற போராட்டத்தின் அவசியத்தை நமது வரலாற்றின் ஊடாக கற்று, ஏகாதிபத்திய சுரண்டலையும், சாதிய அடக்குமுறைகளையும் தகர்த்துவதற்காக போராடுவதே இன்றைய அரசியல் தேவையாகும் என்பதை உணர்ந்த அவர், மக்கள் பொருட்டு எத்தகைய விமர்சனங்களையும் அவதூறுகளையும் பொறுத்துக் கொண்டு எமக்கான தத்துவதளம் ஒன்றினை ஆக்கித் தர முயற்சிக்கின்றார். அந்தவகையில் இரட்டைத்தேசியம் பற்றிய புரிதலும் விவாதமுமே இன்று எமக்கு தேவையான முதல் அரசியல் பணியாகும்.
Lenin formed the Soviet Union in 1920 as only in that year they finally defined the citzenship in the United States of America. Lenin knew that USA is also one Nation under God like Sri Lanka – Shri Lanka.
Excellent political analysis… It is a good illustration of our fight for social change is increasingly inseparable from the fight for socialism.
லெனின் மதிவானம் அவர்களுக்கு,
ந.இரவீந்திரன் இரட்டைத்தேசியம் என்பதைப் பற்றி எழுதியதும் அது குறித்த எனது கருத்துக்களை ஓரளவு தர்க்க ஆய்வுகளுடன் முன்வைத்திருந்தேன். தேசியம் என்றால் என்ன? ஐரோப்பாவில் அதன் மாறுபட்ட நிலைகள் என்ன??ஆசியா நாடுகளில் அதன் உருவாக்கம் எவ்வாறு அமைந்துள்ளது???தலித்தியம் அடையாள அரசியல் என்பவற்றோடு ஏன் தேசியத்தைப் போட்டு சாம்பார் செய்ய முடியாதுஎன்பதெல்லாம் எழுதியிருந்தேன். இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகக் கூட நீங்கள் கவனத்தில் கொண்டதாக எனக்குத் தெரியவில்லை.
பதில் சொல்லப்பட்ட அதே விடயங்களை மீண்டும் எழுதியுள்ளீர்கள். அதே பல்லவி. அதில் பூக்கோ போன்றவர்கள் சரணம் பாடுகிறார்கள். நண்பரே, பூக்கோ போன்றவர்கள் அவர்கள் தோன்றிய ஐரோப்பாவிலேயே குழி தோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டார்கள். ஏகபோகங்கள் உருவான 60 களுக்குப் பிந்தய காலங்களில் மத்திய தர வர்க்கங்கள் பாதிக்கப்பட்டன. மத்தியதர வர்க்கங்களின் உணர்வுகளை புரட்சியின் பக்கத்திலிருந்து திசைதிருப்பவே இவர்கள் பயன்பட்டார்கள். 90களின் பிற்காலங்களில் ஜக் தெரிதாவின் சில உள்ளகக் கருத்தரங்களுக்குச் சென்றபோது பின் நவீனத்துவம் என்பதே ஐரோப்பாவின் நவீனமய சூழலுக்கு ஏற்றதுஎன்பார்.
ஒரு கருத்தை இது பொருளாதாரவாதம்,ஐரோப்பிய மையவாதம் போன்ற “சொல்லாடல்களால்” துவம்சம் செய்வதைவிடுத்து அதன் உள்ளடக்கதை விமர்சியுங்கள் – வேண்டுமானால் வரிக்கு வரி – .
நீங்கள் மற்றும் இரவீந்திர ஆகியோர் எழுதும் இரட்டைத் தேசியம் குறித்த கட்டுரைக்கு எனது எதிவினைகளோடு எவ்வாறு முரண்படுகிறீர்கள். விவாதத்தைஆரம்பிப்போம்…
I must say that really intelligent article. You really worked hard. You indeed deserve it. I am really proud of your success. I hope you will keep it up and continue writing like this, in future also. I like the way you try to explaing, the Marxism how involved in allover the world. Is it madness to disagree this article. Good luck
நாவலன் அவர்களே! ந.இரவீந்திரன் இரட்டைத்தேசியம் பற்றி எழுதியவற்றில் முக்கியமாக உள்ளடக்கப்பட்ட பின்வரும் விடயங்கள் பற்றி எங்களது எழுத்தில் கவனமெடுக்க தவறியுள்ளீர்கள். அவை வருமாறு.
தேசம் என்பது எவ்வாறு ஒடுக்குகின்ற தேசம் ஒடுக்கப்படுகின்ற தேசம் என்றுள்ளதோ அவ்வாறே ஏற்றத்தாழ்வுமிக்க இனக்குழு மரபு சமூகவமைப்பில் ஒடுக்குகின்ற இனக்குழு ஒடுக்கபடுகின்ற இனக்குழு என்ற சமூகவமைப்பு காணப்படுகின்றது. இதனுள் முன் தேசிய வடிவம் உள்ளது.
சாதி என்றவுடன் அதனை நிலப்பிரபுத்துவத்துடன் சமன்பாடு போடுவதில் அர்த்தமில்லை. அதனை அவ்வாறு அர்த்தப்படுத்தி பார்த்ததால் தான் நீங்கள் ந. இரவீந்திரனின் தேசியம் பற்றிய பார்வையை நிலப்பிரபுத்துவ தேசியம் என்றவகையில் பதில் சொல்ல முயற்சிக்கின்றீர்கள்.
இரவீந்திரனின் கட்டுரையில் மிகத் தெளிவாகவே முதலாளித்தவத்தின் அரசியல் வடிவம் தான் தேசியம் என்பது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. 2000 வருடமாக நீடித்த சாதியம் இப்போதுள்ள முதலாளித்துவ சமூக உருவாக்கத்திலும் தேசிய வடிவில் அவ் உணர்வுகள் தேசத் தன்மையோடு இருந்து வருகின்றது.
லெனின், ஸ்டாலின் தேசியம் பற்றி கூறிய காலத்தின் சமூகச் சூழல் வேறு. தேசியம் மொழி அடிப்படையில் மட்டுமல்ல மத அடிப்படையிலும் அமையும் என்பதற்கு சான்றாக பாக்கிஸ்தானின் உருவாக்கம் அமைந்துக் காணப்படுகின்றது. நாங்களும் லெனின், ஸ்டாலினின் கண்ணோட்டத்திலிருந்த தான் பார்கின்றோம். ஆனால் இந்த புதிய வரலாற்று சூழலை கவனத்தில் எடுக்க வேண்டியதன் அவசியத்தையம் வலியறுத்தகின்றோம்.
இத்தகைய விடயங்களை நாங்கள் முன்னர் குறிப்பிட்டது போன்று வர்க்க பிளவுற்றிருந்த ஐரோப்பிய சமூகத்திற்கரிய பார்வையை நீங்கள் அப்படியே வாய்பாட்டு நிலையில் இனக்குழு மரபு சமூகத்திலும் பொருத்தி பார்க்கின்றீர்கள். இதனால் அடிப்படையான முரண்பாட்டை உங்களால் காணமுடியவில்லை. அந்தவகையில் இரவீந்திரனின் இரட்டைத் தேசியம் பற்றிய எழுத்துக்களில் காணப்பட்ட அடிப்படையான விடயங்களுக்கு உங்களால் பதிலளிக்க முடியாமல் போனமை துரதிஸ்டமானதொன்றே.
மிக முக்கியமான விடயம், இலங்கையில் பௌத்தம் முன்னரே தேசிய வடிவத்தை தந்தது என்ற கருத்து பேராசிரியர் இந்திரபாலா போன்றோரால் ஆதாரங்களுடன் நிராகரிக்கப்பட்டுவிட்டது. மகாவம்சத்தில் சிங்கள தேசியம் இல்லை. மகாயான பௌத்தம் தமிழ் மொழியில் அமைந்திருந்த தேரவாத பௌத்தத்தை நிலைநிறுத்துவதற்காக எழுதப்பட்டதே மகாவம்சமாகும். அந்தவகையில் அது தமிழுக்கு எதிரானதல்ல. தேரவாத பௌத்தத்தை நிலைநிறுத்துவதற்காக பாலி மொழியில் அமைந்த வரலாற்று காவியம். அந்நூல் எந்தவகையிலும் சிங்கள உணர்வுடன் எழுதப்பட்ட நூலில்லை என்பதை முற்போக்கு மார்க்சிய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்யுள்ளனர்.
இத்தகைய அடிப்படை பிரச்சனைகளை உங்களது இரட்டைத் தேசியம் பற்றிய கட்டுரை கவனத்திலெடுக்க தவறியதால் நாங்கள் உங்களுக்கு பதில் சொல்லதை விட இரட்டைத் தேசியம் மேலும் விளக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
சிறு திருத்தம் எனது குறிப்பில் உள்ள பின்வரும் வாக்கியம் இப்படி வரவேண்டும்.
தமிழ் மொழியில் அமைந்திருந்த மகாயான பௌததை எதிர்த்து தேரவாத பௌத்தத்தை நிலைநிறுத்துவதற்காக எழுதப்பட்டதே மகாவம்சமாகும்.
Now we all know that the World War Three on. Religion is entwined in the basis to wage war. In the past the state power was used to propagate, promote and protect religion. Now we all are and if so have to live in modern secular states where economic interests predominate. Honourable Ranil Wickremasinghe has the leadership of Junius Richard Jayawardene and the decency of Dudley Shelton Senanayake. Shrine for Theravada Buddhism.
இரட்டை தேசியம் பிஞ்சிலே பழுத்த அபத்தமான கோட்பாடு. மதத்தை அடிப்படையாக வைத்துள்ள தேசியம் என்பதே அபத்தமானது. சீனா முழுவதும் புத்த மதம் விரிந்து இருந்தது. ஆனால் ஒரே ஆட்சிப் பிரதேசமாக இருந்தது. ஆனால் அங்கு கூட பல்வேறு தேசிய இனங்களை கொண்டிருந்தது. அங்கு அரைகாலனியம் அரை நிலப்பிரபுத்துவம் நீடித்தவரை அங்கு தேசியத்திற்கான எழுச்சியும், இன்னொரு பக்கம் மத அடிப்படையிலான ஒரு நாடும் இருந்தது. அது நிலப்பிரபுத்துவத்தின் இருப்பை குறிக்கும். அதை முற்றாக அழிக்கும்போதுதான் தேசியம் என்பது கூட முழுமை பெற்று ஒரு சரியான வளர்ச்சியினை நோக்கி வளர்கிறது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை என்று எந்த ஒடுக்கப்பட்ட நாடுகளை எடுத்தாலும் அதில் தேசியத்தின் வளர்ச்சியையும் பார்க்கலாம், அதே நேரத்தில் நிலப்பிரபுத்துவத்தை இன்னும் அகற்றாமல் தன் ஆளும் வர்க்க ஆட்சியையும் பார்க்கலாம். அது வரையில் அங்கு நிலப்பிரபுத்துவத்தின் தன்மையும், முதலாளித்துவத்தின் தன்மையும் இரண்டரக் கலந்துதான் காணப்படும். இது தெரியாதவர்கள் அல்ல ந.இரவீந்தரன் மற்றும் சிலர். இந்த வரையறுத்தலை மூடி மறைக்கவே பின்நவீனத்துவம் தேவைப்படுவதையும் அதற்கு சேவை செய்வதற்காக பயிற்றுவித்ததையும் அனைவரும் அறிவர்.
அடித்தளம், மேற்கட்டுமானம் என்ற கோட்பாட்டையே ஏற்காதவர்கள் இவர்கள். சாதி என்பது இனக்குழு சமுதாயம் என்கிறார்கள். முதலில் இனக்குழு சமுதாயத்தின் கூறுகள் பண்புகள் என்னென்ன? நிலப்பிரபுத்துவத்தின் கூறுகள் பண்புகள் என்னென்ன? என்பதை விவரிக்க முடியட்டும். பிறகு இவர்களின் இறுதி முடிவு குறித்து விவாதிப்போம்.
இலங்கையில் இவர்களின் கூட்டாளிகள் குருக்கள் நிறையபேர். ஒட்டு மொத்த ஆசியவுக்கான குத்தகைய இங்கிருந்துதான். புதிய வரலாற்று சகாப்தம் என்பது ஏதுமில்லை. ஏகாதிபத்திய சகாப்தம்தான் இன்றும் இருக்கிறது. அது இன்னும் முற்றியிருக்கிறது, சாகும் தருவாயில் இருக்கிறது என்பதைத் தவிர எந்த கட்டமும் மாறிவிடவில்லை. அதனால் தான் இன்னமும் லெனினியம் பொருந்துகிறது.
இந்தியாவை பொருத்தவரை இங்கும் அதே கதிதான். இங்கு ஒரு நூற்றாண்டாக தேசியம் வளர்ந்துக்கொண்டிருக்கிறதே தவிர முற்றுப்பெற்றுவிடவில்லை. அதனால் இன்னும் இங்கு முதலாளித்துவத்தின் கூறினையும், அதேபோல் நிலப்பிரபுத்துவத்தின் கூறினையும் காணலாம். அதன் ஒரு பகுதியாகத்தான் மதத்தையும் பார்க்க வேண்டும். சாதியை இங்கு அடித்தளமாகவும், மேற்கட்டுமானமாகவும் இரண்டறக் கலந்து பார்க்கும் வரையில் உங்கள் வரையரைக்கே வரமுடியும். இதில் ஆச்சிரியப்பட ஒன்றுமில்லை. நீங்கள் ஒரு படி மேலே போய் மதமே அடிக்கட்டுமானம் என்ற முறையில் இந்துமதம் ஆகட்டும், முஸ்லீம் மதம் ஆகட்டும் (பாகிஸ்தான் ஒரு மத தேசியம் என்ற வரையரை), இல்லை புத்தமதம் ஆகட்டும் ஒரே வரையரைக்கே வருகின்றனர். பாகிஸ்தான் பல்வேறு தேசிய இனத்தினை கொண்ட ஒரு நாடு என்ற அற்பமான உண்மையை கூட தெரிந்திருக்கவில்லை அல்லது தெரிந்தும் அதை மூடி மறைக்க எத்தனிக்கிறீர்கள் என்பதுதான் தெளிவு. இங்கு சாதியின் தளர்வு எந்தளவுக்கு இருக்கிறதோ, சாதியின் கெட்டித்தன்மை எந்தளவுக்கு தகர்க்கப்பட்டிருக்கிறதோ அந்தளவுக்கு தேசியம் வளர்ந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ளக் கூடிய அளவுக்கு இவர்கள் ஒன்றும் அறியாதவர்க்ள் அல்ல. தெரிந்தே எதற்கோ யாருக்காகவோ சேவகம் செய்பவர்கள்.
முதலாளித்துவம், உலகம் முழுக்கம் வந்ததாலேயே, அது எல்லா இடத்திலும் சர்வவியாபகமாக வந்துவிட்டது என்பது போல பிதற்றுகின்றனர் அல்லது பொய்யுரைக்கின்றனர். இன்னும் அது, அரபு நாடுகளில் தொடக்கத்திலேயே இருக்கிறது. ஆசிய நாடுகளில் முறித்துக்கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கிறது. பெரும்பாலான ஆப்ரிக்க நாடுகளில் இன்னும் அடியெடுத்து வைக்கும் தருவாயில் இருக்கிறது. இந்த நிலையில் முதலாளித்துவம் என்பதை உலகம் முழுவதும் நிலைநாட்டப்பட்டுவிட்டதாக நினைத்து, அதிலிருந்து இந்தியா வேறுபட்டது, அதிலிருந்து ஆப்ரிக்கா வேறுபட்டது, அதிலிருந்து அரபு நாடுகள் வேறுபட்டது என்று கூறும் போக்கு முழுமையிலிருந்து பகுதியை உடைப்பது, நிர்ணயவாதத்தை தகர்ப்பது, வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டம் என்பதையே தகர்ப்பது ஆகியவையே ஆகும்.
அடித்தளத்தை பொறுத்துதான் மேற்கட்டமைப்பு வடிவம் இருக்கும். அந்த மேற்கட்டமைப்பு இந்தியாவில் ஆகச் சிறந்ததாகவும், அடித்தளத்திற்கு மிகவும் ஒத்திசைந்த வகையில் மிகவும் திடப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இந்துமதத்தின் பங்கும், சாதியின் பங்கும் மேற்கட்டுமானம் என்ற வகையில் நிலப்பிரபுத்துவம் என்ற அடித்தளத்துக்கு மிக பெரிய அளவில் பொருந்திய வடிவமாக இருக்கிறது.
இனக்குழு சமூகத்திலிருந்து கம்யூனிச சமூகம் வரை பிந்தைய சமூகத்தின் அனைத்தையும் விட்டுவிட்டு வந்துவிடவில்லை. தனக்கு இயந்த விசயங்களையும் தன்னுடன் எடுத்துவந்து அன்றைய சமூகத்தின் தன்மைக்கேற்றவாறு தகவமைத்துக்கொள்கிறது. அதில் வர்ண பாகுபாடு முக்கியமானது. அன்று வர்ணத்தை பிரித்தது போல் பிரிக்க இயலாது. அன்று தொழிலின் அடிப்படையில் பிரித்த அந்த வர்ணப் பாகுபாடு அப்படியே சாதியத்தின் பிரிவினையில் இல்லை. ஆனால் படிநிலை வடிவம் அப்படியே இருக்கிறது. ஆனால் தொழில் தன்மை வேறுபட்டிருக்கிறது. அதாவது சாதியப் பிரிவினையில் வர்ணப் பிரிவினை பலவந்தமாக பொருத்தப்பட்டிருக்கிறது. வர்ணம் சாதியாக வரவில்லை. அதே போல் தென்னிந்தியாவில் இரு வர்ணமுறைதான் உண்டு. அது பார்த்து ஒழுகுதலே. ஆனால் சாதியப் படிமானம் உண்டு. குறிப்பாக இந்தியாவிலேயே சோழப் பேரரசுதான் சாதியத்திற்கான வடிவத்தை சிறப்பான முறையில் வடிவமைத்தது. அது நிலப்பிரபுத்துவத்தின் திடப்படுத்தலையும், உற்பத்திமுறையையும் ஒழுங்கமைப்பதற்குதானே தவிர, பண்பாட்டு தளத்தை மட்டும் திடப்படுத்துவதற்கல்ல. இது குறித்து இன்னும் மேலதிக அடிப்படையை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அடிக்கட்டுமானமும், மேற்கட்டுமானமும் – என்ற தலைப்பில் தொகுத்து வழங்கிய அ.கா.ஈஸ்வரன் அவர்களின் நூலை தொடக்கமாக படிக்கவும். விவாதிகவும் தயார். அதே போல் டி.டி.கொசாம்பி ஆர்.எஸ்.சர்மா, ஆலால சுந்தரம் அவர்களின் நூலினையும் பயிலலாம். ஏராளமான ஆதாரங்கள் நிரூபனங்கள் உள்ளன. துணிவிருந்தால் மறுத்து உரையாடலாம்.
அதை விடுத்து இது முற்றிலும் புதிய விசயம் என்ற பேரிலும், ஏதோ இவர்கள்தான் இதை கண்டுபிடித்தது என்பது போலவும் விவாதிப்பது அபத்தமானது. மார்க்சியத்தை படிக்காமலேயே மார்க்சியத்தை விமர்சிப்பது அல்லது திரிப்பது. உலகம் உருண்டை என்பதை உலகத்தின் எந்த மூலையிலிருந்து பொருத்தினாலும் ஒரு விடைதான். அது சூத்திரம். அதன் வடிவம், அதன் நிரூபனத்தின் கோணம் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால் அதுதான் இறுதி விடை. அது போலத்தான். மார்க்சியம் என்பது ஒரு சமூக விஞ்ஞானம். இதை உங்கள் பார்வை, இன்னொருவர் பார்வை, எங்கள் பார்வை என்ற மாதிரி கூறுவது உங்கள் அறியாமையையோ அல்லது உங்கள் நயவஞ்சகத் தன்மையையோ மட்டுமே காட்டுகிறது. இரண்டுமே ஆபத்தானதுதான். தெரிந்தே மார்க்சியத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புவதற்கு ஜனநாயகம் என்ற பெயரில் இனியொரு வாய்ப்புக்கொடுப்பது மலத்தையும் சோற்றையும் கலப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவே எண்ணவேண்டியுள்ளது. அல்லது இரண்டின் எண்ண ஒட்டமும் ஒத்து இசைவளிப்பதாகவும் இருக்கலாம். மார்க்சியத்தை ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட அடிப்படையை கேள்வி எழுப்புவதை விவாதித்து தீர்ப்பது என்பது மீண்டும் கட்டிய வீட்டை இடித்து விட்டு கட்டுவதற்கு ஒப்பானதாகும். இந்த சமூகத்தின் பிரத்தியேக வடிவம் கூட வர்க்கப்போராட்டத்தின் வரலாறுதான் என்பதை மறுப்பது மார்க்சியத்தையே ஒழித்துக்கட்டுவதுதான்.
சரி சாதி அணி சேர்க்கைக்கு வர்க்க அணி சேர்க்கைக்கும் வருவோம். குறிப்பாக தமிழகத்தை எடுத்துக்கொள்வோம். இங்கு இருக்கும் நிலவுடமையாளர் பார்ப்பனர்களைவிட பார்ப்பன அல்லாத சில மேல்சாதியில் உள்ள ஒரு கும்பல்தான். பார்பனியம் அதை தக்கவைப்பதற்கான தத்துவத்தை வழங்குபவை. அதில் பார்ப்பனர்களில் உள்ள ஒரு கும்பல்தான் கூட்டு அணி சேர்க்கை. ஆனால் நீங்கள் கூறும் இரட்டை தேசியத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தனித்து நின்று மற்ற சாதிகளை எதிரியாக்கி எதிர்த்து போராடுவதே. அதாவது சாதி மோதலே அன்றி அதற்கு தீர்வு வேறில்லை என்பது வெளிப்படை. இங்கு தாழ்த்தப்பட்ட சாதிக்கு இயைந்த அணி எதுவும் இல்லை என்பதே உங்கள் கருத்தின் உள்ளடக்கம். இது வர்க்க அணி சேர்க்கையை தகர்ப்பதற்கான ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் தத்துவம். தெரிந்தோ தெரியாமலோ அதற்கு உடன்படுவது என்பதைத் தவிர வேறில்லை.
தொடரும்….
//தெரிந்தே மார்க்சியத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புவதற்கு ஜனநாயகம் என்ற பெயரில் இனியொரு வாய்ப்புக்கொடுப்பது மலத்தையும் சோற்றையும் கலப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவே எண்ணவேண்டியுள்ளது. அல்லது இரண்டின் எண்ண ஒட்டமும் ஒத்து இசைவளிப்பதாகவும் இருக்கலாம்.//
மார்க்சியம் என்ற பெயரில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதனைக் கற்றுக்கொள்ளும் புதியவர்களுக்கும் சமூக உணர்வுள்ள பலருக்கும் பல சிக்கல்கள் இதனால் ஏற்படுகின்றன. தன்னார்வ நிறுவனங்களில் உள்வாங்கப்படுகின்ற பலர் மக்கள் பற்றுக்கொண்டவர்களாகக் காணப்படுவது இதற்கு சிறந்த உதாரணம். மார்க்சிய விரோதக் கருத்துக்களையும் திரிபுகளையும் கற்பதும் எதிர்கொள்வதும் இன்று அவசியமானது. அந்த வகையில் அதிகாரவர்கத்திற்கு எதிரான கருத்துக்கள் என்று முன்வைக்கப்படும் கருத்துக்களை உள்வாங்கி அவை தவறானவை என தர்க்கரீதியாக நிறுவுதல் அவசியமானது. அரசியல் அற்ற தலித்தியத்தின் பின்னால் உங்கள் தமிழ் நாட்டின் எல்லைக்கு உள்ளேயே பலர் உள்வாங்கப்படுகின்றனர்.அவை கூட கோட்பாட்டுத் தளத்தில் எதிர்கொள்ளப்பட வேண்டும். ஆக, இனியொருவில் அவ்வாறான கருத்துக்கள் உள்வாங்கப்படுவது மட்டுமல்ல எதிர்கொள்வதும் அவசியமானது எனக் கருதுகிறோம்.30 வருடங்கள் குறுந்தேசியக் கருத்துக்களால் அழிந்து போன சமூகத்தின் எவ்வாறு விஞ்ஞானபூர்வமான கருத்துக்களைக் கொண்டுசெல்வது எனபதற்கான நடைமுறைத் தந்திரோபயம் அவசியமானது. கார்ல்மார்க்ஸ் ஹெகல் முதல் அடம் சிமித் வரையான சிந்தனையாளர்களை உள்வாங்கிக்கொண்டு அவற்றை எதிகொண்ட வரலாற்றை எம் முன்னே கண்டுகொள்ளலாம்.
பல்வேறு மார்க்சியத்திற்கு எதிரான கருத்துக்களை எதிர்த்து மார்க்சிய லெனினியத்தை வரலாற்றுப் பூர்வமாக நிறுவும் கருத்துக்களை பரப்புதலே சரியான நடைமுறை. அதை விடுத்து மார்க்சியத்தை சிதைப்பதற்காக நிறுவும் கருத்துக்களை எந்தவித விமரசனமும் குறிப்பிடாமல் அனுமதிப்பது என்பது மார்க்சியத்தை ஒழித்துக்கட்டுவது என்பது அன்றி வேறில்லை. பழைய வரலாற்றை கற்பது என்பது வேறு. அதையே சரியென்று வாதிடுவதை பிரசுரிப்பது மார்க்சியத்திற்கு எதிரானதேயாகும். இது மதவாதிகள் வாதிடுவதை பிரசுரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதை விளக்கி விமர்சனம் செய்வதை பிரசுரித்தலே சரியான மார்க்சிய பிரச்சாராமாகும். அதை விட நேரடியாக மார்க்சியத்தை விளக்குவதே சாலச் சிறந்தது. அது எப்படி பொருந்துகிறது அல்லது வேறுபட்டிருக்கிறது என்பதை விளக்கலாம்.
பலம் கொண்ட தத்தவத்தை சித்தாந்த ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் எதிர் கொள்ள முடியாது போகின்ற போது இத்தகைய சில்லரை விளையாட்டுகளில்(சில நேரங்களில் ஆராஐகமாசவும்) ஈடுபடுகின்றீர்கள். நாகரிகமான தளத்தில் நின்று விவாதியுங்கள். அது எல்லோருக்கும் நல்லது.
எதை பற்றி சொல்ல விரும்புகிறீர்கள்? யாருக்கு சொல்ல விரும்புகிறீர்கள் என்பதை விளக்கமாக கூறலாமே? சில்லரை விளையாட்டு என்று யாருடைய விவாதத்தை கூறவிரும்புகிறீர்கள்? விளக்கமான விவாதமே சரியான திசை நோக்கி நகர்த்த உதவும்? நீங்கள் நெறிப்படுத்தலாமே.
எமது நாட்டில் இருந்து தப்பி எதோ ஒரு நாட்டில் எப்படியோ ஒரு வாழ்வை சுமந்துகொண்டு வாழும் எமக்கு,தனி ஈழம் என்பது சரிவரத ஒன்று என்பதை எம்மை துரத்தியடித்த,ஆதிக்க அரசுகளான,சிங்கள அதிகாரவர்க்கமும், புலிகளின் பாசிச தன்மையும் எமக்கு உணர்த்திவிட்டது. இன்று நாம் மீண்டும், மார்க்சியம் தான் மக்களை வழி நடத்தக் கூடியது என்று உணர்ந்து, எமது உழைப்பின் ஒரு பகுதியை புத்தகங்களுக்கும், இண்டர்நெட்க்கும் செலவு செய்து, மார்க்சிய கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் ,இரவீந்திரன் ஒரு புதிய விஷயத்தை மிக தெளிவாக விளக்க ஆரம்பித்து இருக்கிறார். முதலில் அவரை சொல்ல விடுங்கள். மேலும், மேலும் சொல்ல வையுங்கள். புரிய முடியாவிட்டால், சந்தித்து கேட்டு அறியுங்கள், அல்லது கேள்வியை முன் வையுங்கள்.அவரையும், அவர் ஆளுமைகளையும் சிதைக்கும் வேலையில் ஈடுபடாதீர்கள்.லெனின் மதிவாணன் அவரது கையாளா, சிஷ்யனா எனபது முக்கியமில்லை. நன்கு ஆழ்ந்து ஆராய்ந்து ,வாசிக்கும் பழக்கம் உடைய இரவீந்திரன் ,நடைமுறை சார்ந்த அரசியல் வாழ்வியல் கொள்கை உடையவர்.அவரது கருத்துகளில் ஒன்றி அது பற்றி ,லெனின் மதிவாணன் தனது நடையில் சொல்கிறார். அவர் சொல்வதை முதலில் சொல்ல விடுங்கள்.தனிப்பட்ட தாக்குதலகளை தவிருங்கள்.இனிமேலும் எம் சமூகத்தில் பிரிவினை வேண்டாம். எங்களை போன்ற சமூக அக்கறை கொண்டவர்களை ஒன்றுமே வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளாதீர்கள் விவாதகன்.
லெனின் மதிவாணன் அவர்களே, உங்களின் கடைசிப் பதில் மிக அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் இருந்தது. இரவீந்திரனையே இக் கேள்விகளுக்கு பதில் சொல்ல வைத்தால்,இன்னும் நன்றாக இருக்கும். “புத்தக வாதத்திலிருந்து மீழுவது அவசியமானது. எந்தத் திரிபுக்கும் இடம் கொடுக்காமல் மார்க்சியத்தைப் பாதுகாத்து வளர்த்தெடுப்போம்.”. இரவீந்திரனுக்கு கணணி தொழில் நுட்பம் கிடைக்காவிட்டால் ,அது பற்றிய ஒழுங்கைச் செய்து ,அவரைக் கூட்டி வாருங்கள்.
வாணன் அவர்களுக்கு…! ந. இரவீந்திரன் இரட்டைத்தேசியம் பற்றி அவரது இனையதளமான ”சத்தியமணை தேடலும் பதிவும்” என்ற இணைய தளத்தில்(n-raveendran.blogspot.com) தொடர்ந்து எழுதிவருகின்றார். மேலதிகமான விபரங்களுக்கு அவற்றை வாசிக்கலாம். பொதுவாக இரட்டைத் தேசியம் தொடர்பில் கேட்கபட்ட கேள்விகளுக்கும் மற்றும் விமர்சனங்களுக்குமான பதிலாகவும் அவை அமைந்துள்ளன.
லெனின் மதிவானம் அவர்களுக்கு,
//தேசம் என்பது எவ்வாறு ஒடுக்குகின்ற தேசம் ஒடுக்கப்படுகின்ற தேசம் என்றுள்ளதோ அவ்வாறே ஏற்றத்தாழ்வுமிக்க இனக்குழு மரபு சமூகவமைப்பில் ஒடுக்குகின்ற இனக்குழு ஒடுக்கபடுகின்ற இனக்குழு என்ற சமூகவமைப்பு காணப்படுகின்றது. இதனுள் முன் தேசிய வடிவம் உள்ளது.//
இரட்டைத் தேசியம் என்பது ஏன் தவறானது என்பதற்கு நீங்களே இங்கு பதில் சொல்கிறீர்கள். “தேசம்” என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்களே, தேசியம் என்பது அதனோடு மட்டும் தான் தொடர்புடையது. தேசத்தில் வாழும் மக்களை ஒன்றாக இணைக்கும் உணர்வே தேசிய உணர்வு எனப்படுகிறது. அதை விடுத்து தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கின்ற பகுதியும் தேசம் என்றும் அதற்கு தேசிய உணர்வு உண்டு என்று நீங்கள் குறிப்பிடுவது சிறுபிள்ளைத் தனமாக உள்ளது.
//சாதி என்றவுடன் அதனை நிலப்பிரபுத்துவத்துடன் சமன்பாடு போடுவதில் அர்த்தமில்லை. அதனை அவ்வாறு அர்த்தப்படுத்தி பார்த்ததால் தான் நீங்கள் ந. இரவீந்திரனின் தேசியம் பற்றிய பார்வையை நிலப்பிரபுத்துவ தேசியம் என்றவகையில் பதில் சொல்ல முயற்சிக்கின்றீர்கள்.//
சாதி என்பது இனக்குழு சமூகத்தில் தொழில் பிரிவினைகளோடு இணைந்து உருவானது. பேரரசுகள் உருப்பெற்ற காலத்தில்(நிலப்பிரபுத்துவம்), மையப் பேரரசுகள் குறு நிலங்களை தம்மோடு இணைத்துக் கொள்வதற்காக சாதீயத்தை சமூகத் தளத்தை நோக்கி நகர்த்தின. அது காலனியக் காலகட்டத்தில் அரசியல் தளத்தை நோக்கி உறுதியாக நகர்த்தப்பட்டது. இந்த வரலாற்று உண்மையை ரவீந்திரனும் நீங்களும் உணர்ந்து கொண்டால், இதற்குரிய காலனிக்குப் பிந்திய உற்பத்தி முறையை உணர்ந்துகொண்டால் பல விடயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.
//இரவீந்திரனின் கட்டுரையில் மிகத் தெளிவாகவே முதலாளித்தவத்தின் அரசியல் வடிவம் தான் தேசியம் என்பது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. 2000 வருடமாக நீடித்த சாதியம் இப்போதுள்ள முதலாளித்துவ சமூக உருவாக்கத்திலும் தேசிய வடிவில் அவ் உணர்வுகள் தேசத் தன்மையோடு இருந்து வருகின்றது.//
இப்போது எங்கே முதலாளித்துவ சமூகம் உள்ளது. ? மூன்றாம் உலக நாடுகளான இந்தியா இலங்கை போன்றவற்றில் முதலாளித்துவ சமூக அமைப்புக் காணப்படவில்லை. அங்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முதலாளித்துவம் சிக்கலான ஒரு சமூக அமைப்பை உருவாக்கியுள்ளது. மார்க்சியத் நீங்கள் ஏற்றுக்கொண்டால் அதனைப் பிரயோக்கிக்க முற்படுதலே சரியானது பிரதியெடுப்பதில்லை. மூன்றாம் உலக நாடுகளில் தேசிய உருவாக்கத்தில் மார்க்சியம் எவ்வாறு பிரயொகிக்கப்படலாம் என்பதை எனது முன்னைய கட்டுரையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.
//லெனின், ஸ்டாலின் தேசியம் பற்றி கூறிய காலத்தின் சமூகச் சூழல் வேறு. தேசியம் மொழி அடிப்படையில் மட்டுமல்ல மத அடிப்படையிலும் அமையும் என்பதற்கு சான்றாக பாக்கிஸ்தானின் உருவாக்கம் அமைந்துக் காணப்படுகின்றது. நாங்களும் லெனின், ஸ்டாலினின் கண்ணோட்டத்திலிருந்த தான் பார்கின்றோம். ஆனால் இந்த புதிய வரலாற்று சூழலை கவனத்தில் எடுக்க வேண்டியதன் அவசியத்தையம் வலியறுத்தகின்றோம்.//
முதலில் பாக்கிஸ்தான் முதலாளித்துவ அரசைக் கொண்ட தேசிய அரசு இல்லை. அங்கு ஏகாதிபத்தியம் ஏற்றுமதிசெய்த உற்பத்தி சக்திகள் வளர்ச்சி பெறாத, தேக்கமடைந்த சமூகமே காணப்படுகிறது, இவ்வாறான சமூகங்களை ஒன்றிணைப்பதற்கு ஒரு புறத்தில் தேசியமும் மறுபுறத்தில் நிலப்பிரபுத்துவத்தின் தத்துவார்த்த மேல் வடிவங்களான மதங்களும் தேவைப்படுகின்றன. இந்தியாவில் பார்பனீயம், இலங்கையில் பௌத்தம், பாகிஸ்தானில் இஸ்லாம். ஆக, லெனின், ஸ்டாலின் உற்பத்தி அன்றைய சக்திகளின் நிலையிலிருந்து தேசியம் குறித்து முடிவிற்கு வந்ததைப் போன்று நீங்கள் இன்றைய உற்பத்திசக்திகளினது உற்பத்தி உறவுகளது வளர்ச்சியிலிருந்து முடிவிற்கு வாருங்கள். அவர்கள் மார்க்சியத்தைப் பிரயோகித்தது போன்றே நீங்களும் இன்றைய சூழலுக்கு ஏற்ப பிரயோக்க முயலுங்கள்.
இல்லை அவர்களைப் போன்று உற்பத்தி சக்திகளையும் உற்பத்தி உறவுகளும் அது உருவாக்கும் சமூகமும் குறித்துப் பேச மறுத்தால் நீங்கள் மார்க்சியத்தை நிராகரிக்கிறீர்கள் என்று வெளிப்படையாகக் கூறுங்கள், அது நேர்மையானது.
மேலும் தொடரும் ..
“உலகம் உருண்டை என்பதை உலகத்தின் எந்த மூலையிலிருந்து பொருத்தினாலும் ஒரு விடைதான். அது சூத்திரம். அதன் வடிவம், அதன் நிரூபனத்தின் கோணம் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால் அதுதான் இறுதி விடை. அது போலத்தான். மார்க்சியம் என்பது ஒரு சமூக விஞ்ஞானம். இதை உங்கள் பார்வை, இன்னொருவர் பார்வை, எங்கள் பார்வை என்ற மாதிரி கூறுவது உங்கள் அறியாமையையோ அல்லது உங்கள் நயவஞ்சகத் தன்மையையோ மட்டுமே காட்டுகிறது. இரண்டுமே ஆபத்தானதுதான்.” என விவாதகன் எங்கள் மீதான குற்றச்சாட்டை முன் வைக்கின்றார். அவரது கூற்றிருந்த உண்மைசாராத விடயங்கள் மார்க்கியத்தின் வரலாற்று வளர்ச்சி குறித்த சிறியதொரு விளக்கத்தை அவருக்கு விளக்க வேண்டியுள்ளது.
ஏகாதிபத்திய சகாப்தம் உருவான காலத்தில் தனியொருநாட்டில் சோசலிசம் சாத்தியம் என்ற லெனின் சொன்னதற்கு மாறாக ட்ரொட்ஸ்கி அதனை மறுத்து உலக புரட்சி ஒன்றின் மூலமாகவே சோசலிசம் சாத்தியமாகும் என்ற கருத்தை முன் வைத்தார். நிரந்தர புரட்சியின் மூலம் ஐரோப்பா முழுவதிலும் ஏற்படும் புரட்சி எவ்வாறு உலக நாடுகளை விடுவிக்கும் என்ற ட்ரொட்ஸ்கியின் கருத்து உண்மையில் மார்க்சின் கருத்து தான். அது மார்க்சின் காலக்கட்டத்திற்கு பொருந்தமாக இருந்தது. ஆனால் பின்னர் ஏகாதிபத்திய சகாப்தமாக மாறிய போது மார்க்சியத்தை புதிய சூழலுக்கு ஏற்றவகையில் ஒழுங்கமைக்க வேண்டியிருந்தது. அவ்வகையில் ஏகாதிபத்திய சங்கிலியில் எந்த கண்ணி பலவீனமாகவுள்ளதோ அவ்விடத்தை உடைத்துக் கொண்டு சோசலிசத்தை சாத்தியமாக்குவதே லெனினிசத்தின் அடிப்படையாகியது. ட்ரொட்ஸ்கி இந்த மாற்றத்தை சொல்வதற்கு பதிலாக மார்க்சின் வார்த்தைகளுக்கள் முடங்கி போனார். அந்தவகையில் ட்ரொட்ஸ்கியவாதிகள் முன் வைத்த கோட்பாடு நடைமுறைக்கு ஒவ்வாத வெற்றுப் புலம்பல்களுக்கே இட்டு செல்வதாகவே அமைந்தது.
ஏகாதிபத்தியக் காலக்கட்டத்தில் ஒரு விவசாய புரட்சியை நடத்துகின்ற தேசிய விடுதலைப் போராட்டத்தில் மக்களை கிராமத்திலிருந்த நகரத்தை நோக்கி அணித்திரட்டி அப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்தது மாஓவின் மிக முக்கியமான பங்களிப்பாகும். இவ்விடத்தில் லெனின், நகரத்தில் பாட்டாளி வர்க்கம் வெற்றிப் பெற்று கிராமத்தை நோக்கி புரட்சியை எடுத்து செல்ல வேண்டும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார். மிக முக்கியமா லெனின் பாட்டாளிவர்க்க அரசு, பாட்டாளிவர்க்க சர்வதிகாரம், என்ற கோட்பாடுகளை முன் வைத்தார். மேலும் அவர் கூட்டரசாஙகம் என்பது தவறானது என்ற கருத்தினை முன் வைத்தார். ஆனால் மாஓ தலைமையில் புரட்சிகர வர்க்கங்களின் கூட்டரசாங்கம் சாத்தியம் என்பதை நிறுபித்துக்காட்டினார். இந்த அடிப்படையில் பாட்டாளிவர்க்க சர்வதிகாரத்திற்கு மாறாக மக்கள் ஜனநாயக சர்வதிகாரம் என்ற கோட்பாட்டை மாஓ முன் வைத்தார்.
மேலும் லெனின் தேசிய இனங்களக்கு பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்னய உரிமை என்ற கருத்தினை முன் வைக்க மாஓ பிரிந்து செல்லும் உரிமை இல்லாத சுயநிர்ணய உரிமை என்ற கருத்தினை தேசிய இனங்கள் தொடர்பில் முன் வைத்தார். இவ்விடத்தில் மாஓ லெனினை நிராகரித்தவிட்டார் என வாதிக்கலாமோ?
இதே மாதிரிதான் எங்களுடைய சாதிய சமூகத்தில் ஒரு இனக்குழு இன்னொரு இனக்குழுவை ஒடுக்கியதன் வாயிலாக சுரண்டல் நடக்கின்றது. மார்க்ஸ் ”முலதனம்” என்ற நூலில் ஆசிய முறை உற்பத்திக் குறித்து ஆராய்கையில் இவ்விடயம் பற்றியும் குறித்துக்காட்டியுள்ளார்.
எமது சமூகவமைப்பில் வர்க்க போராட்டம் என்பது சாதிகளுக்கிடையில் நடந்த போராட்டத்தின் ஊடாகவே சமூகமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தலித்தியவாதம் வர்க்கப் பார்வையை நிராகரித்து சாதிய கண்ணோட்டத்தில் பார்க்கின்றது. இதன் பின்னணியில் தலித் அல்லாதோரை இவர்கள் தமது எதிரியாகவே கருதினர். இலங்கையில் சிறுபாண்மை தமிழர் மகா சபை, தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டம் என்பனவற்றின் மூலம் கிடைத்த வெற்றி அனைத்து சாதியினரும் ஐக்கியப்பட்டு போராடியதாகும். இங்கு அதிக்க சாதியினரை எதிரியாக கொள்ளாமல் சாதி அமைப்பை தகர்த்துவதற்கான போராட்டமாகவே அமைந்திருந்தது. இதனை இரட்டைத் தேசியக் கோட்பாடு மிகச் சிறப்பாகவே வலியுறுத்துகின்றது. இந்தியாவில் முனைப்புற்றிருக்கின்ற தலித்தியக் கோட்பாடு ஆதிக்க சாதியினருக்கு- பிராமணர் அல்லது பிராமணர் அல்லாத ஆதிக்க சாதியினரை தமது எதிரியாக கருதுகின்றவகையிலே அமைந்துள்ளது.
பாக்கிஸ்தான் ஒரு காலத்தில் நிலத்தொடர்பு அல்லாத கிழக்கு பாக்கிஸ்தானாக தான் (ஒரு பிரதேசமாக) இருந்தது. அது அடிப்படையில் மதத்தேசியம் என்ற ஒரே வடிவத்தில் இருந்தது. அதற்கு பின் மொழி ரீதியான ஒடுக்கு முறைகள் வருகின்ற போது கிழக்கு பாக்கிஸ்தான் வங்காலிகளின் பங்காளாதேஷ் என்ற தேசமாக மாறியது. இப்போது பாக்கிஸ்தானில் தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடு உள்ளது. ஆனால் 1947 இல் மதத் தேசியமே இங்கு மேலோங்கி காணப்பட்டது. ஆரம்பத்தில் அரபு நாடுகளிலிருந்து இந்தோநேசியா வரைக்கும் இஸ்லாமிய மதத் தேசியம் என்பது முனைப்பற்றுக் காணப்பட்டது.
மேலும், மார்க்ஸ் முதல் கோசாம்பி, ஆர்.எஸ். சர்மா வரையானவர்கள் சொன்னதன் தொடர்ச்சியாகவே இரட்டைத் தேசியம் என்னும் கோட்பாடு முன் வைக்கப்படுகின்றது. விவாதகன் இது ஒன்றும் புதிய விடயம் அல்ல என தனது ஆதஙகத்தை கொட்டுகின்றார். அப்படியாயின் இதனை சரியென சொல்லுகிறாரா என்பதும் சுவாரசியமான வினா தான். இதில் என்ன புது விடயம் உள்ளது என்ற கேள்விக்கு ஒரு கதையை கூறலாம் என நினைக்கின்றேன்.
கொலம்பஸ் ஐரோப்பியாவில் அமெரிக்காவை கண்டு பிடித்த போது அதற்கா ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அதி மோதவிகள்( விவாதகன் அப்போது இருக்கவில்லை) இது சாதாரண விடயம் தானே, இதில் என்ன புதுமை இருக்கின்றது எனக் கேட்டார்களாம். அதற்கு கொலம்பஸ் ஒரு முட்டையைக் காட்டி இதனை மேசை மீது நிலைக்குத்தாக வைக்க முடியுமா எனக் கேட்டாராம். அனைவரும் முடியாது என மறுக்க அவர் அவித்த முட்டையொன்றினை எடுத்து, அதன் அடி பாகத்தை வெட்டி மேசையின் மேல் நிலைக் குத்தாக வைத்தாராம். அப்போதும் அந்த மேதாவிகள் அதான் எங்களுக்கு தெரியுமே என்றார்களாம். அதற்கு கொலம்பஸ் ஒருவர் கண்டுப் பிடித்த பின் மற்றவர்களால் செய்ய முடியும் என்றாராம். இது போன்று விவாதகனுக்கு இருக்கின்ற மிக முக்கியமாக உள சிக்கல் இரட்டைத் தேசியம் பற்றிய கருத்துக்களை யார் முன் வைத்தார்கள் என்பதே. அதற்காக மார்க்சியத்தின் வளர்ச்சிப் போக்கையே வரட்டுதனமாக நிராகரிக்கின்றார். விவாதத்திற்கு அப்பாற்பட்ட அநாகரிக வார்த்தைகளியெல்லாம் கொண்டு எங்களை திட்டி தீர்க்கின்றார்.
//நிரந்தர புரட்சியின் மூலம் ஐரோப்பா முழுவதிலும் ஏற்படும் புரட்சி எவ்வாறு உலக நாடுகளை விடுவிக்கும் என்ற ட்ரொட்ஸ்கியின் கருத்து உண்மையில் மார்க்சின் கருத்து தான். //
எங்கே மார்க்ஸ் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்பதை கூறமுடியுமா. டிராட்ஸ்கியின் கருத்து உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் புரட்சி என்பது. மார்க்ஸ் கருத்து என்பது பொய் எந்த நாட்டில் முதலில் புரட்சி வரும் என்பதை ஆரம்ப ஆய்வு நிலையில் இருந்தவர். தனி ஒரு நாட்டில் நடந்த பிரஞ்சுப் புரட்சிக்கு தலைமைத் தாங்கியவர். அதன் தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு கற்றுக்கொடுத்தவர் (இதுதான் வரலாற்றின் முதல் அனுபவம் அறிவு).
//ஏகாதிபத்திய சங்கிலியில் எந்த கண்ணி பலவீனமாகவுள்ளதோ அவ்விடத்தை உடைத்துக் கொண்டு சோசலிசத்தை சாத்தியமாக்குவதே லெனினிசத்தின் அடிப்படையாகியது//
இதையேதான் மாவோ நாட்டிற்குள் நடக்கும் புரட்சியில் நடைமுறைப் படுத்தினார்.
//லெனின் பாட்டாளிவர்க்க அரசு, பாட்டாளிவர்க்க சர்வதிகாரம், என்ற கோட்பாடுகளை முன் வைத்தார். மேலும் அவர் கூட்டரசாஙகம் என்பது தவறானது என்ற கருத்தினை முன் வைத்தார்.//
லெனின் எங்கு கூட்டரசாங்கம் என்பது தவறானது என்று குறிப்பிட்டுள்ளார் என்பதை தெளிவுப்படுத்தவும். அப்படி எதுவும் கூறவில்லை என்பது என் கருத்து.
//மாஓ பிரிந்து செல்லும் உரிமை இல்லாத சுயநிர்ணய உரிமை என்ற கருத்தினை தேசிய இனங்கள் தொடர்பில் முன் வைத்தார்// எங்கு அவ்வாறு முன்வைத்தார் என்பதை தெளிவுப்படுத்தவும். இது ஆதாரமற்ற வாதம்.
தலித்திய கோட்பாடு வர்க்க சமரசபாதையை முன் மொழிகிறது. தரகுமுதலாளித்துவத்துடனும், ஏகாதிபத்தியத்துடனும் சமரச வழியை மேற்கொள்ளும் ஒரு தத்துவமே தலித்தியம்.
பாகிஸ்தான் பல்வேறு தேசிய இனங்களை கொண்ட ஒரு சிறைக்கூடம்தான். இந்தியாவும் பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு சிறை கூடம்தான். மதத்திற்குள்ளே நடக்கும் மோதலின் வடிவம் கூட அதன் உள்ளடக்கத்தில் தேசியத்தின் தன்மையே இருக்கிறது. ஏகாதிபத்தியவாதிகளும், இங்குள்ள ஆளும் வர்க்கங்களும் மத அடிப்படையில் அதை திசை திருப்பி கொம்பு சீவி விட்டு திசைதிருப்புகிறார்கள். பஞ்சாப் தேசியப் போராட்டத்தை சீக்கிய தேசப் போராட்டமாக மாற்ற முனைந்ததில் பாகிஸ்தானில் ஒரு பகுதி, இந்தியாவில் ஒரு பகுதி என்று பிளவுப்பட்டு நிற்கிறது. காசுமீரத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரே இனத்தை இரண்டாக உடைத்து ஆஜாத் கேஷ்மீர், ஜம்மு கேஷ்மீர் என்று கையாளுவதிலும் தெரியும். அவையெல்லாம் பலவந்தமாக இணைக்கப்பட்டு தேசிய உரிமைகளை மறுக்கப்பட்டதினால் ஏற்பட்டது.
ஆர்.சர்மா, கொசாம்பி ஆகிய யாரையுமே படிக்காமல் கூறுகின்ற மோசடியான விவாதம். ஆர்.எஸ்.சர்மா குலங்கள், சாதி, பழக்க வழக்கங்கள், சமூக வழக்காறுகள் இவையெல்லாம் மேற்கட்டுமானமே என்று வரையறுக்கிறார் (Rethinking – India’s Past). ஆனால் நீங்களோ //எமது சமூகவமைப்பில் வர்க்க போராட்டம் என்பது சாதிகளுக்கிடையில் நடந்த போராட்டத்தின் ஊடாகவே சமூகமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.// என்று கூறியிருப்பது முற்றிலும் நேரதிரானது. சமூக மாற்றத்தினைப் பற்றி மிக ஆழமாக ஆர்.எஸ்.சர்மா Ancient Medieval Indian Society – Black Swan Publisher) என்ற புத்தகத்தில் தெளிவாகவே கூறியிருக்கிறார். எப்படி நிலப்பிரபுத்துவம் உருவாகியிருக்கிறது என்றும். சாதி அதன் மேற்கட்டமைப்பாக எப்படி உருவாகியிருக்கிறது என்பதையும் தெளிவாக உறுதிபட நிரூபித்திருக்கிறார். இந்திய வரலாறு ஓர் அறிமுகம் என்ற டி.டி.கொசாம்பியின் புத்தகத்தை வாசிபோர் அனைவரும் அறியலாம். வார்த்தை ஜாலம் வேண்டாம். குறிப்பாக விவாதிக்கவும் தயார். அங்கொன்றும் இங்கொன்றுமாக வார்த்தையை வீசிவிட்டு போவது எளிது.
இரட்டை தேசியத்தை யார் முன்வைத்தாலும் அது மார்க்சியத்திற்கு எதிரானதே. இதில் உளச்சிக்கல் என்ன இருக்கிறது. இது புதிய விசயம் இல்லை என்று நான் கூறியது ”புதிய மொந்தையில் பழைய கள்” அவ்வளவே. இதில் தேவையிலாமல் மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்களின் தொடர்ச்சியாகத்தான் இரட்டைத் தேசியம் என்ற கோட்பாடு என்று கூறியிருக்கிறீர்கள். அதற்கு நேரதிரானது என்பது அனைவரும் அறிவர். மேற்கண்ட ஆய்வுப் புத்தகங்களே போது.
மார்க்சியத்தின் அடிப்படையான அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம் என்ற நிர்ணய வாதத்தை ஏற்கிறீரா இல்லையா?
//புதிய மாற்றங்கள் பண்பாட்டுப் புரட்சி வாயிலாகவே நடந்தேறியது //
//சாதி ஒவ்வொன்றும் தேசத்துக்குரிய பண்பைக் கொண்டுள்ளது என்பது எமக்கான பிரத்தியேக வரலாற்றோடு தொடர்பானது.//
//பண்பாட்டுப் புரட்சி வடிவமே அதிகம் தாக்கம் செலுத்தும் வாய்ப்புடையதாய் எமது அமைப்புமுறை உள்ளது என்ற நிதர்சனத்தை ஏற்பது அவசியம்// என்ற இரட்டைத் தேசியத்தின் கருத்து பண்பாட்டு புரட்சியை மட்டுமே கோருகிறது. அதாவது அடிக்கட்டுமானம்தான் மேற்கட்டுமானத்தினை உருவாக்குகிறது. மேற்கட்டுமானம் அடிக்கட்டுமானத்திற்கு இசைந்த வடிவத்தை பெருகிறது என்பதை ஏற்க மறுக்கிறீர்கள். சரியாக சொல்லப்போனால் இந்த ஆட்சிமுறையை தகர்க்க விரும்பவில்லை. இந்த அமைப்பு முறையை தகர்க்க விரும்பவில்லை. அதற்கு மாறாக இந்த அமைப்பு முறைகுள்ளேயே சீர்திருத்த மாற்றங்களை கோருகிறீர்கள்.
இதனால் தீர்வாக //அவற்றிடையான பேதங்கள் களையப் பட்டு ஒன்று கலத்தலுக்கு வாய்ப்பேற்பட விரும்பின் சலுகை அனுபவித்தவர்கள் தம் வாய்ப்புகள் பறிபோவதுபற்றிப் புலம்புவதை விடுத்து பாதிக்கப்பட்டவர்களான பிற்படுத்தப்பட்டோரதும் இன்னும் அதிகமாய் தலித்மக்களினதும் கோரிக்கைகளுக்கு செவிகொடுப்பது அவசியம்.// என்று இறைஞ்சுகிறீர்கள். அதாவது ஆதிக்க சாதியில் உள்ளவர்கள் எல்லாம் செவி மடுத்து திருந்தவேண்டும் என்று மத மயக்கத்தில் புலம்புகிறீர்கள். இங்கு உழைக்கும் வர்க்கமாக இருப்பவர்களை ஓர் அணியிலும் அதில் ஒடுக்கப்பட்ட சாதியும், பிற மேல் சாதியில் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் ஜனநாயக சக்திகளின் அணி சேர்க்கை அவர்களுடைய இலக்கு இந்த சமூகத்தின் அடித்தளத்தையே மாற்றக் கோருவதற்கு மாறாக வெறும் பண்பாட்டு தளத்தில் மட்டுமெ மாற்றக் கோருவது, அவர்களை எந்த வகையிலும் விடுதலையடையாது இந்த சுதந்திரமற்ற, ஜனநாயகமற்ற சமூகத்திலேயெ அழுத்தி வைப்பதையே முதன்மையாக கொண்டுள்ளது. பண்பாட்டுத்தளத்தில் இருப்பதை மாற்றவேண்டுமானால் இந்த அரை நிலவுடைமை சமூகத்தை மாற்றவேண்டும். ஏகாதிபத்தியத்தின் சுரண்டிலலிருந்து விடுதலையடைய வேண்டும். இது தான் அவர்களின் பொருளாதார அடித்தளத்தை மாற்றும், அதுதான் அவர்களின் பண்பாட்டுத் தளத்தினையும் மாற்றும். நான் மாற்றினை தெளிவாக வைக்கிறேன். நீங்கள் உங்கள் அரசியல் சித்தாந்ததிலிருந்து வழியினை தெளிவாக வரையறுத்து வையுங்களேன் பார்க்கலாம்?
தொடரும்….
I am not shure that what am saying is write OR wrong:
Marxism might have succeeded in USSR if they had just maintained a
LITTLE respect for the difficulty of growing food well. Hard to
respect people you call idiots!
There were other gaping holes in Marxist reasoning but time and
charitable intent leads me to end this here. After all, if you cannot
feed yourself and cannot make anything worth buying, you have truly
produced a failed society.
That what happant in Marxism. This is my friend who’s age 92 years old come from USSR (Dr.Gordon Clark ) told me.
Dr. Keethaponaclan from the Colombo Political Science Department wrote it right in Thinakkural. Leftists just gave head aches to the governement up to 1956. The way they voted in the Indian Citizenship and Sinhala Official Language bills did not gain any support among Tamils in the North and East. After 1970 they are also majoritorian. This Gunartnam Premakumar from Austrlia is another example. He is also an idiot like that poor Richard de Zoysa. I was surprised to learn that his mother is a Dr. Saravanammuthu.
சில்லறைத்தனமான சர்ச்சைகளில் ,”விவாதகன்” ஈடுபடாதீர்கள். முதலில் உங்கள் பெயரை மாற்றிகொள்ளுங்கள். விவாதிப்பது உங்கள் தொழிலா? மார்க்சியம் என்றால் என்ன? பரந்துபட்டது. இன, மத, தேசம்,பண்பாடு, சாதி.. எல்லாவற்றையும் உட்கொனர்ந்து பிறிது அறிந்து, மக்களை சரியானதை நோக்கி நடக்க வையுங்கள். லெனின் மதிவாணன் உங்களுக்கு என் வாழ்த்துகள்
//சரியானதை நோக்கி நடக்க வையுங்கள்// என்பதை தெளிவுப்படுத்தலாமே. இரட்டை தேசியத்தை வரவேற்போர் எல்லாமே ’மொட்டையாகவே’ விவாதிப்பது என்பது ஆரோகியமாகாது. எல்லாவற்றையும் உட்கொணர்ந்து என்று கூறிவிட்டீர்கள். எதனடிப்படையில் மார்க்சியத்தின் அடிப்படையிலா அல்லது மார்க்சியமல்லாத வழிகளிலா. நான் மார்க்சியம் எது என்பதை தெளிவுபடுத்த கூறுகிறேன். நீங்கள் அனைவருமே பிதற்றுவதையெல்லாம் மார்க்சியம் என்கிறீர்கள். முதலில் மார்க்சியம் கற்போம். மார்க்சியம் சமூக வரலாற்றினை எவ்வாறு பார்க்கிறது என்ற அடிப்படையை தெரிந்துகொள்ள கோருகிறோம். நீங்கள் வந்தடைந்த முடிவிற்கு மார்க்சியத்தை தேவையில்லாமல் இழுக்கிறீர்கள். ந.ரவீந்திரன் மார்க்சியத்தையே ஏற்காதவர் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும். அவர் மார்க்சியத்தை வளர்ப்பது என்ற பேரால், மார்க்சியத்தை திருத்துவது என்ற பேரால் மார்க்சியத்தின் அடிப்படையையே தகர்த்துக்கொண்டிருக்கிறார். இதில் சில்லரைத்தனமான விவாதம் எங்கிருந்து வந்தது. துணிவிருந்தால் இது மார்க்சியத்தின் அடிப்படையிலானது என்பதை மார்க்சிய நிலைபாடுகளிலிருந்து விளக்கலாம் அதை விடுத்து வெறுமென சிலறைத்தனமான சர்ச்சை என்று கூறி மார்க்சியத்திற்கு குழி வெட்டாதீர்கள். இனி மார்க்சிய அடிப்படையில் விளக்கம் தந்தால் மட்டுமே என் பின்னூட்டம் இந்தக் கட்டுரையில் இருக்கும். இல்லையென்றால் மார்க்சியத்தை குழிதோண்டி புதைப்பதற்கு வழிவிட்ட இனியொரு குழுவுக்கே அதன் பொறுப்பினை சாரும். யாருமே இரட்டைத் தேசியத்தை ஆதரித்து மார்க்சிய ரீதியாக விவாதம் செய்ய துணியவில்லை. வெறுமென விவாதத்திலிருந்து சில்லரை விவாதம் என்று கூறி நழுவப் பார்ப்பதுதான். இன, மத, தேசம், பண்பாடு, சாதி எல்லாவற்றையும் உட்கொணர்ந்து பிறிது அறிந்து என்று கூறி இருக்கிறீர்கள். முதலில் அதை அறிவதற்கே மார்க்சிய முறையியல் தேவை. அந்த முறையியலை கைவிட்டு விட்டு முதலாளித்துவ முறையியலை கைக்கொள்வதாலேயே, சீர்திருத்த வழிமுறையினை கைக்கொள்வதாலேயே தவறான முடிவுக்கு வர நேர்கிறது. இது சிலர் தெரிந்தே யாருக்காகவோ செய்கிறார்கள். பலர் அதை நம்பி அதன் பின்னே தன் வர்க்க நலனிலிருந்து செல்கிறார்கள். மார்க்சிய முறையியலையே கேள்விக்குள்ளாக்கி விட்டு நீங்கள் ஆய்வு முடிவு என்பதெல்லாம் சரியானதை நோக்கி நடக்கவைக்கமுடியாது. முதலில் அடிப்படையிலேயே கோளாறு இருக்கிறது. அதை முதலில் தெளிவுப்படுத்துவோம்.
மார்க்சிய ரீதியாக தொடர்ந்தால், என் பின்னூட்டம் தொடரும்….
Mr. Ragu, i am totally agree with you, because At least take the time to read it. If you don’t want to read it, no problem, don’t critisize . If who someone read this article (ந.இரவீந்திரனின் இரட்டைத் தேசியம் பற்றிய தேடலும் பதிவும் : லெனின் மதிவானம் ) their will understand, what Mr. Lenin Mathivanam try to saying.
நீங்கள் நேர்மையாக விவாதிக்க முடிந்தால் நின்று விவாதியுங்கள். அதைவிடுத்து , பிளாக்மெயில் செய்வது போன்று, அது செய்தால் தான் இது செய்வேன் என்பதும், ” நான் மார்க்சியம் எது என்பதை தெளிவுபடுத்த கூறுகிறேன். நீங்கள் அனைவருமே பிதற்றுவதையெல்லாம் மார்க்சியம் என்கிறீர்கள். “என்று கூறுவது எந்த வகையில் நியாயம் ஆகும்?அனைவருமே ஏற்றுகொள்கிறார்கள் என்றாலத்தில் எதோ கொஞ்சம் சரி இருக்கவேண்டும் என்று தானே பொருள்.
சாதிமுறையை உச்சமாகப் பயன்படுத்தி அதீதமான ஆடம்பர வளர்ச்சிகளில் நிலப்பிரபுத்துவம் திழைத்தது மெய்யாயினும், சாதி நிலப்பிரபுத்துவத்தினால் தோற்றுவிக்கபட்ட அமைப்பு அல்ல என்பதை மார்க்ஸிய ஆய்வியல் ஏற்கனவே வெளிப்படுத்திவிட்டது. சாதியம் குறித்த ஆய்வில் கேசவனின் பங்களிப்பு கவனிப்புக்குரியது. இனமரபுக் குழுக்கள் சாதிகளானது குறித்து அவர் பேசியுள்ளார்; ஆயினும், அவரும் நிலப்பிரபுத்துவதுக்குரிய சாதியக் கருத்தியலை மட்டுமே கவனத்தில் எடுத்ததால், ஏற்றத்தாழ்வு முறை தோன்றி நிலப்புரபுத்துவத்துக்கு முன்னதாக இருந்ததைச் சாதியத்துக்கான முன் வடிவமாயே கருதினார். இதன்பேறாக, முழுமையான முதலாளித்துவ வளர்ச்சியில் சாதிமுறை ஒழியும் எனக்கூறினார். இன்று அரை-நிலப்பிரபுத்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சம் காணப்படுவதாலேயே சாதியுணர்வு நீடிக்கிறது என்பார்.
அவர்சரியாக எடுத்துக்காட்டியது போன்றும், முன்னதாகக் கார்ல் மார்க்சே கூறியிருந்தவாறும் இனமரபுக் குழு சாதியானது என்றவகையில் விவசாய வாய்ப்புடன் முன்னேறிய மருதத்திணை கிழார்களாகிப் பின்னாலே நிலப்பிரபுத்துவ வளர்ச்சியை எட்டத்தக்க சாதியான போது ஏனைய வென்றடக்கப்பட்ட திணைகளுக்குரிய இனமரபுக்குழுக்கள் இடைநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளாக்கப்பட்டன. இவ்வாறு ஆன ஆரம்ப காலத்திலேயே சாதியத்துக்கான முதல் கருத்தியல் வடிவம் தோன்றிவிட்டது. அதுவே ரிக்வேத இறுதிக் கட்டத்தில் தோன்றிய வருணக் கோட்பாடு(பிரஹஸ்பதியின் தலையிலிருந்து பிராமணனும், தோள்களிலிருந்து சத்திரியனும், தொடையிலிருந்து வைசியனும், பாதத்திலிருந்து சூத்திரனும் தோன்றினர் என்பது); தொடர்ந்த வளர்ச்சியில் பின்னர் வென்றடக்கப்பட்டவர்கள் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்ட அவர்ணர்களான ஒடுக்கப்பட்ட மக்கள் (தலித் சாதிகள்) எமது வரலாற்று அரங்கில் பிரவேசித்தனர். கிழார்களின் இந்த முதல் வெற்றிக்கட்டத்துடன் இந்த ஏற்றத்தாழ்வு வாழ்முறையை ஏற்புடையதாக்கும் பிராமணரும் விவசாயச் சாதியுடன் சொத்துகளுக்குரிய ஆளும் சாதியாக்கப்பட்டனர். இதனூடு வளர்ச்சியுற்ற வணிக ஆதிக்கம் அரசு ஏற்புக்குரியதாக இருக்கவேண்டியிருந்தபோது பிரமணர் ஆதிக்கம் தகர்க்கப்படவேண்டியிருந்த வரலாற்றுக் கட்டம் தோன்றியது; அத்தேவையை நிறைவாக்கும் வண்ணம் சமண பௌத்த எழுச்சி சாத்தியமானது. இப்புதிய மதங்கள் பிராமணர் புனிதமான சாதியினர் என்பதை அகற்றிய அதேவேளை சாதி வாழ்முறையை அங்கீகரிக்க வேண்டியிருந்தது. சாதி எனும் சொல்லே பௌத்தத்துக்குரிய பாளிச் சொல் என்பது தற்செயலானது அல்ல. தொடர் வளர்ச்சியில் இந்துமதம் ஊடாக மீண்டும் பிராமணர் ஆதிக்கம்பெற்ற நிலப்பிரபுத்துவக்கட்டத்தில் உண்மையில் வர்ணக் கோட்பாடு விளக்கக் கடுமையான நிலையில் சாதி என்பதே நிலைபேறடைந்தது(ஆயினும், வர்ணக் கோட்பாடு வாயிலாக சாதியை விளக்க மனு ஸ்மிருதி முயன்றது கவனிப்புக்குரியது).
இந்த மாற்றக்கட்டமான கி.பி.நாலாம் நூற்றாண்டு முக்கியத்துவம் மிக்க ஒரு காலப் பகுதி. இந்த எல்லையில் முன்னர் வணிக ஆதிக்கம் நிலவியது; பின்னர் நிலப்பிரபுத்துவம் மேலாண்மைபெற்று, கி.பி.ஏழாம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ சமூகம் நிலைபேறான ஆதிக்க அமைப்பாகியிருந்தது. இந்தமாற்றத்தில் மதங்களின் கருத்தியலில் ஏற்படும் மாற்றம் மாறுகின்ற அமைப்புக்கான ஏற்பினை சமூகத்தில் சாத்தியப்படுத்துவதாக அமையும். மனுதர்ம சாஸ்திரம், வாத்ஸாயனரின் காமசூத்திரம், பகவத்கீதை ஆகியன இத்தகைய நிலப்பிரபுத்துவ மாற்றத்துக்கான பண்பாட்டுப் புரட்சியின் கருத்தியல் வெளிப்பாட்டுப் படைப்பாக்கங்கங்களாகும். இவற்றின் வாயிலாகவே பிராமண மதம் புதிய இனக் குழுக்களை உள்ளீர்த்து, முழுமுதற் கடவுள் கோட்பாட்டுடனான இந்துமதம் தோற்றம்பெற ஏதுவாயிற்று. இதற்குமுன்னர் எந்தக் கடவுளும் இத்தகைய பரம்பொருள் அல்ல. பௌத்தத்திலும் இக்கட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. நிலப்பிரபுத்துவத்துக்கு ஏற்றதாக அதன் கருத்தியல் மாற்றம் ஏற்பட்டபோது மகாயான பௌத்தம் தோன்றி, புத்தரை ஒரு முழுமுதற் கடவுள் ஆக்கிக் கொண்டது.”
இது இரவீன்றனிடம் இருந்து நான் புரிந்துகொண்ட பகுதி. தயவு செய்து நீங்களும், வாசியுங்கள் அல்லது வாசிக்க முயலுங்கள். அவர் கொவகாரர் ஆக இருந்திருக்கிறார். ஆனால் எப்போதும் தனுடைய கருத்துகளை திருபுபடுதுபவராக இருந்ததில்லை. அவரை நியப் படுத்த வேண்டிய தேவை எனக்கு இல்லை. இருந்தும் ஒரு சமொஓதிர்காக வாழும் ஒருவரை கொச்சைப் படுத்துவதை அவரது நூல்களையும், கருத்தாடலகளையும் அறிந்தவன் என்ற வகையில் பொறுத்துக் கொள்ள முடியாது.”ந.ரவீந்திரன் மார்க்சியத்தையே ஏற்காதவர் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்.” என்று கேட்டு இருக்கிறீர்கள். இதற்குப் பிறகும் உங்களுடன் பேசுவதில் அர்த்தம் இல்லை.இது கே. எ. சுப்பிமணியம், கே..செந்தில்வேல் ,சி, சிவசெகரதியும் சேர்த்து தாக்கியதற்கு சமன். உங்களைப் போல காழ்ப்பு உணர்வு கொண்டவர்கள் ,வக்கீல் தொழிலின் மேல் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.
முகமறியா உங்களை யார் என்பது எனக்கு தெரியாது. முகடுதட்டிப்போனதோர் எல்லைப்பரப்பில் பாலைவனத்தில் பசுந்தரையாய் – உங்களின் நேர்மையான கருத்துக்கள் எமக்கு நம்பிக்கையை மட்டுமல்ல கூடவே கர்வத்தையும் தருகின்றது தோழரே. நாங்கள் தொடங்கிய நீண்ட பயணம் வெல்லும்.
Dr. Jayampathy Wickremaratne, President’s Counsel said on national television that there should be two yard sticks for anything. He is in the central committee of the Lanka Sama Samaja party. Dr. Pakiasothy Saravanamutu is also right about alternative policy for the North and East.
விவாதகனின் விவாதம் தொடரட்டும்… பல புதிய விடயங்களை கற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறது. ஈழத்தில் இருப்பவர்களில் 99 விழுக்காடு மார்க்சியத்திற்கு எதிரானவர்கள் இரண்டு காரணங்கள் ஒன்று மார்க்சியம் தெரிந்தவர்கள் ஒருவரும் இல்லை இரண்டாவது ஒரளவு தெரிந்து வைத்திருப்பவர்களும் தங்களது சொந்த நலன்களுக்காக அதனை திரிபுபடுத்தி பாவித்து கொள்கின்றனர்.
விவாதகன் முன்வைக்கும் வாதங்கள் பொதுவாக எந்த முரண்பாடுகளும் இல்லை. அதனை அழுத்தப்படுத்துவதற்கு மேலும் ஒன்றைக் குறிப்பிடலாம். மார்க்ஸ், மாவோ, லெனின், ரொஸ்கி என்ற ஒரு சில பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் ஒவ்வொரு சூழலிலும் எவ்வாறு மார்க்சியத்தைப் பிரயோகம் செய்கிறார்கள் என்று எழுத முற்படுகிறார் லெனின் மதிவானம். இதில் ரொஸ்கியை தவிர்த்து ஏனையோரைப் பார்த்தால் அவர்கள் எவ்வாறு மார்சிய அணுகுன்முறையைத் தமது சுழலுக்கு ஏற்ப பிரயோகித்தனர் என்பதை லெனின் மதிவானம் வசதியாக மறந்துவிடுகிறார். முதலில் அங்கு நிலவும் உற்பத்தி முறை அதனோடு இணைந்து உற்பத்தி உறவுகள் என்பன உருவாக்கும் சமூகத்தின் அடிக்கோப்பு என்ன என்பதே ஒவ்வொரு மார்க்சிஸ்டும் முதலில் எழுப்பும் கேள்வி. அதன் பின்னர் அவற்றைத் தக்கவைத்துக்கொள்வதற்காக உருவாகும் மதங்கள், சட்ட ஒழுங்கு முறைகள், சடங்குகள், இவற்றினூடான சிந்தனை என்பன குறித்து ஆய்வு அவசியமானதாகும்.
இது மூன்று படி நிலைகளைக் கொண்டது.
1. சமூகத்தின் மேல் நிலியில் உள்ள அதவது மேற்கட்டுமானத்தில் காணப்படும் சிக்கல்களைக் எடுகோளக்குதல்.
2. அதற்குரிய அடிப்படையான காரணங்களை ஆராய்தல் – அதாவது சமூகத்தின் அடிக்கோப்பின் எந்த நிலை இதற்கு காரணமாகிறது என்பதை அறிதல்.
3. பின்னர் மேற்கட்டுமானத்தில் காணப்படும் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளல்.
மேற்கட்டுமானம் மற்றும் அடிக்கோப்பிற்கு இடையேயான இயங்கு நிலை உறவு சூழலுக்கு ஏற்ப மாறுபடும் என்பது கருத்தில் கொள்ளப்படும். இங்கே நீங்கள் முன்வைக்கும் எந்த ஆய்விலும் இவை கருத்தில் கொள்ளப்படுவதில்லை. இதனாலேயே பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. தவிர, மார்கிசிய ஆய்வை முன்வைக்காமலேயே வெறும் சொற்களை துணைக்கு இழுப்பதால் பல பாதிப்புக்களை அது ஏற்படுத்துகிறது.
உதாரணமாக தேசியம் என்பதன் உள்ளர்த்தத்தை எவ்வாறு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் ஒரு வரலாற்றுக் கட்டத்திற்குரிய மேற்கட்டுமானம் என்று புரிந்து கொண்டால் அதனைத் மதத் தேசியம், இனத்தேசியம், நிறத்தேசியம் என்றெல்லாம் வார்த்தைகளைக் கொட்டமாட்டீர்கள்.தேசம், தேசியம் குறித்த விஞ்ஞான பூர்வமான உள்ளடக்கத்தையே மறுக்கும் இரட்டைத் தேசியம் போன்ற கருத்துக்களை இதனால் தான் எதிர்கொள்ளப்பட வேண்டும் என்று கருதுகிறேன்.
சீனாவில் 55தேசிய இனங்களுக்கும் சுய நிர்ணய உரிமை வழங்கப்பட்டிருந்தது என்பதே உண்மை. சுயநிர்ணய உரிமை என்றாலே அது பிரிந்து போகும் உரிமையையும் உள்ளடகியது தான்.
பிரஞ்சுக்காரர்களால் உருவாக்கப்பட்ட ரெயூனியன் போன்ற நாடுகளில் அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள் மத்தி ஆரம்பத்தில் சாதி அமைப்பு முறை பலமாகக் காணப்பட்டாலும் அங்குள்ள சமூகத்தின் அடிப்பகுதி வேறுபட்டதால் சாதி அமைப்பு இன்று முற்றாகத் தகர்ந்துள்ளதைக் காணலாம். இதற்காக சாதீயத்திற்கு எதிரான போராட்டம் தேவையற்றது என நிராகரிக்கவில்லை அதன் இறுதி சமூக மாற்றத்திற்கு உரியதான போராட்டத்தை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்பதே இங்கு அடிப்படையானது.
லெனின் மதிவானம் எப்படி பல தவறான தகவல்களை வாசகர்களுக்கு கொடுத்துள்ளார். இது மிக பெரிய தவறு.
தவறான தகவல்கள் எவையென கூறினீா்கள் என்றால் உதவியாக இருக்கும். அப்படியில்லயைாயின் அது வாசகர்களை மட்டுமல்ல உங்களையும் குழப்பிக் கொள்வதாகவும் இருக்கும்.
லெனின் மதிவாணம் இரவீந்திரனை காப்பபற்ற முனைகின்றரா ?
நீங்கள் கவலைப்படுவது போல இரவீந்திரனைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் எனக்கில்லை. அவரது கருத்தில் நேர்மை இருக்கின்றது என்ற வகையில் எனக்கும் இரட்டைத் தேசியம் பற்றிய கோட்பாட்டில் உடன்பாடு இருக்கின்றது.
உண்மையில் செயல்படுத்த வேண்டிய விடயங்களை இந்தமாதிரி விவாதித்துக்கொண்டு இருப்பதே வீண்வேலைதான். சீனப் புரட்சி பீக்கிங்கை அண்டிவந்த போதும் ஒரு கொம்யூனிஸ்ட் கட்சி விவாதித்துக் கொண்டிருந்ததாம், கிராமங்களிலிருந்து வந்த புரட்சியை வரவேற்பதா வேண்டாமா என்று. நானே சரியான மார்க்சியத்தோடு இருக்கிறேன் என்று ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டிருப்பதை விடச் செயலில் காட்ட முயல்வது நல்லது. இங்கு ஒவ்வொருவரும் அந்த அக்கறையோடு விவாதிப்பதாகக் கருதி இப்பதிலை எழுதுகிறேன்; சரியான கோட்பாட்டை வகுத்து, அதன்வழி மார்க்கத்தைத் தெரிவுசெய்து ஏற்ற தந்திரோபாயங்கள் ஊடாக இயங்கியாக வேண்டும் என்கிற வகையில் எனது கருத்தை முன்வைக்கிறேன்.
மீண்டும் மீண்டும் சொல்வதைப் போல இலங்கையில் சிறுபான்மைத் தமிழர் மாகா சபை, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஆகியன எந்தச் சாதியையும் எதிராகக் கருதாமல் சாதிமுறைக்கு எதிராக போராடியதில் அனைத்துச் சாதியினரையும் ஐக்கியப்படுத்திய அனுபவத்திலிருந்தே இரட்டைத் தேசியம் பற்றி எழுதுகிறோம். எம்மை எதிர்க்கிறவர்கள் அதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், எவர்புத்தகத்தில் எந்தப் பக்கத்தில் எதுவெல்லாம் இருக்கிறது என்பதிலேயே அக்கறையாய் இருக்கிறீர்கள். உண்மையில் இப்போதுள்ள வறட்சியில் மார்க்சிய நூல்களைப் பற்றிப் பேசுவதே சந்தோசமானது தான்.
என்ன, அதனோடு முடித்துவிட இயலாது; எமக்கான, இன்றைய பிரத்தியேகச் சூழலில் அவற்றை எவ்வாறு பிரயோகிக்கப் போகிறோம் என்பதே முக்கியம். சாதியம் தொடர்பான விவாதங்களில் இலங்கையில் சாதியத் தகர்ப்புப் போராட்டங்களை உள்வங்கியபோது தவிர்க்கமுடியாமல் எமது முடிவுக்கே எவரும் வருவர்;அதனாலேயே எதிர்க்கிறவர்கள் அந்தப்பக்கம் வராமல் புத்தகங்களுக்குள்ளே முகத்தைப் புதைக்கிறார்கள். சரி, புத்தகம் என்றால் மூலதனத்தில் கார்ல் மார்க்ஸே எமது ஏற்றத்தாழ்வுச் சமூக முறை இனமரபுக் குழு மேலாண்மையால் ஏற்பட்டுள்ளது எனச் சொல்லியிருக்கிறார் எனச் சொன்னால் அதைப்பார்க்கத்தயாராயில்லை. சீனவில் பிரிந்து செல்லையலாத சுயநிர்ணய உரிமையே உண்டு; மஒவை எதிர்த்தா அவ்வாறு?
தவிர, புத்தகங்களில் சொல்லப்பட்டதிலிருந்து கற்றுக்கொண்டதை அடிப்படையாக வைத்து எமது நடைமுறைகளுக்கும் புறச் சூழலுக்கும் ஏற்றவாறு பிரயோகிப்பதற்கேற்ப விருத்தி செய்யப்படுவதுதான் மார்க்சியம். அந்த அடிப்படையில் டி.டி.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா போன்றோர் இந்தியச் சமூக வரலாற்றுத்தொடக்கம் பற்றிக்கூறியதில் இருந்து தொடங்கி, இன்றைய புதிய தரவுகளோடு வளர்ந்துள்ள ஆய்வு முடிவுகளையே பேசுகிறோம். இனமரபுக்குழுக்க்ழ்ளில் விவசாய வாய்ப்பைப் பெற்றது ஏனையவற்றின் மேல் மேலாண்மை பெற்று உருவாகியதே சாதி. இதற்கான கருத்தியலை முதலில்(மட்டுமன்றி அதிகம் பொருந்தும் வகையிலும்) பிராமணியம் முன்வைத்தது. சமணம், பௌத்தம் போன்றனவும் சாதிமுறைக்கான கருத்தியலை உடையன. இவ் உற்பத்திமுறை மாற்றம் அவசியப் படும்போது சாதியக் கருத்தியலில் மாற்றம் ஏற்பட்டு, அதன் பிரயோகத்துக்கு அமைவாக ஆட்சிமுறை மாற்றப்பட்டு, புதிய உற்பத்தி உறவுக்கு ஏற்ப சாதிகளின் ஆதிக்கப்படிமுறைக்ளில் மாற்றம் ஏற்படும். அந்தவகையில் பண்பாட்டுப் புரட்சி வாயிலாகவே சமூக மாற்றம் எமது சாதியச் சமூகத்தில் ஏற்படுகிறது. புதிய உற்பத்தி உறவின் தேவையோடே இந்தப் புதிய கருத்தியல் தோற்றமும். ஆக, அடித்தளமும் மேல்கட்டுமானமும் இணைந்த ஒரு புதிய தன்மை எமக்குரியது. அதற்காக இந்த இரண்டையும் கவனத்தில் கொள்ளாது விடுவதில்லை. அடித்தளமே மேற்கட்டுமானத்தைத் தீர்மானிக்கிறது என்பதும், குறித்த சூழலில் அடித்தியளத்தின் மீது மேற்கட்டுமானம் தாக்கம் செலுத்தும் என்பதும் இங்கும் செயற்படாமலில்லை.
தேசம், தேசியம் என்பது முத லாளித்துவத்துக்குரியவை. சாதியில் ஒடுக்கும்-ஒடுக்கப்படும் திணைகளான தன்மை அவற்றுக்கு தேசத் தன்மையையும், தேசிய உணர்வுத் தன்மையையும் கொடுக்கும். அதன் வெளிப்பாடுதான் சாதிக் கட்சிகள். தேசம் என்றால் பிரிந்துசெல்லும் உரிமையுடையன என்கிற உங்களுக்கு இது பிரச்சனைதான். எங்கலைப் பொறுத்தவரை பிரியமுடியாத சுயநிணயமும் உண்டு. சாதித் தேசங்கள் பிரிய முடியாத சுநிணயம் உடையன. அவற்றின் கோரிக்கைகளைப் புரட்சிகர அமைப்பொன்று கவனத்தில் எடுக்க வேண்டும் என்பது தான் பேச்சு. ஆதிக்கசாதிகளிடம், அல்லது அரசுகளிடம் மண்டியிட்டு இறைஞ்சுவது பற்றிப் பேச்சில்லை.
சாதி ஆதிக்கத்தைத் தகர்ப்பதும், தேசங்கள் சுரண்டப்படுவதை ஒழிப்பதும் அவசியப் பணியாயுள்ள காரணத்தால், பாட்டாளி வர்க்க சிந்தனை முறையை இதற்கு எவ்வாறு பிரயோகிப்பது என்பது பற்றி நாம் விவாதிக்கிறோம்; அதைமுடக்கி தூய பாட்டாளிவர்க்க அணி சேர்க்கை பற்றிப் பேசிக்கொண்டிருந்தால் ஆதிக்கசாதிகளுக்கும் ஒடுக்கும் தேசங்களுக்கும் சந்தோசம்தான். அந்தவகையில் புத்தக வாதத்திலிருந்து மீழுவது அவசியமானது. எந்தத் திரிபுக்கும் இடம் கொடுக்காமல் மார்க்சியத்தைப் பாதுகாத்து வளர்த்தெடுப்போம். அக்கறையோடு விவாதித்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.
Thank you for giving me the good opportunity to read your article. Good luck