கிட்லரிடம் இருந்து நோர்வே விடுபட்டபின் இதுவரை கண்டிராத துவேச, நாசிய பயங்கரவாதக்குண்டு வெடித்தாக்குதல் நேற்று வெள்ளி 22.07.2011 மாலை 3:25 மணியளவில் நடந்தேறியது. தாக்குதல் நடந்த இடம் போர்களமாகவே காணப்படுகிறது. இத்தாக்குதலானது நோவேயிய பிரதமமந்திரியான யன்ஸ் ஸ்தொல்தன் பர்க்கையும், நீதியமைச்சரான குனுத் ஸ்தூர்பர்கையும், தொழிட்கட்சியையும் குறிவைத்தே நடத்தப்பட்டிருக்கிறது. பிரதமமந்திரியின் வாசல்தனமானது நீதியமைச்சரகத்துடன் இணைந்தே இருந்தது. இந்த நீதியமைச்சின் கீழ்தான் இன்று குடிவரவு குடியகல்வு ஆணையகம் (Imigration) இயங்கி வருகிறது.
இந்தக் குண்டு வெடிப்பின் காரணமாக பிரதமமந்திரியின் வாசல்தலத்தைச் சுற்றியுள்ள அமைச்சரகங்கள் சிதறடிபட்டுள்ளன. கண்ணாடிகள், தடளபாடங்கள், கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இத்தாக்குதலின் போது ஏற்பட்ட சத்தம் ஒஸ்லோவுக்கு வெளியிலும் கேட்டுள்ளது. இத்தாக்குதலை அனுபவித்துவர்களின் கூற்றுப்படி பூகம்பம் நடந்தது போல் உணரப்பட்டுள்ளது.
இது ஒரு கார்குண்டுத்தாக்குதல் என்பதை ஊகிக்கக்கூடியதாக இருக்கிறது. காரணம் தாக்குதல் நடந்த இடத்தில் ஒரு கார் சின்னாபின்னமாக்கப்பட்டு எரிந்த நிலையில் உள்ளது.
எப்படி இது நடந்தது என்பதைப் பற்றிச் சிந்திக்குக் கூடிய நேரகாலம் பொலிசுக்கு இல்லை. காயப்பட்டவர்களுக்கு உதவி செய்வதும், சிகிச்சை அழிப்பதும், இறந்தவர்களை அகற்றி உறவினர்களுக்கு அறிவிப்பதுமே தற்போதைய தேவைஎனப் பொலிஸ் கருதுகிறது.
இன்னுமொரு தொர்ச்சியான புதியதாக்குதல்
இவனிடம் இருந்து தப்புவதற்காக கடலினுள் பாய்தவர்களும், குன்றுகளின் பின்னால் ஒளித்தவர்களும் தமது சோகத்கதையை தொ.காட்சிக்கு அளித்தனர்.
கொலைகாரப்பாதகனின் பின்புலம்
இவன் 2006ம் ஆண்டு முன்னேற்றக்கட்சி (பிரெம்கிறிஸ் பாட்டி- FRP) அல்லது எவ்ஃ.ஆர்.பி (FRPUP)அரசியற்கட்சியின் இளையோர் அமைப்பில் இருந்தான். இக்கட்சி வெளிநாட்டவர்கள், முக்கியமாக கறுப்பினத்தவர்கள், இஸ்லாமியர்கள் மேல் துவேசட்தை மறைமுகமாக வளர்க்கும் செயற்பாடுகளைக் கொண்டது. பெருந்தொகையான வெளிநாட்டவர்களின் வருகையும், இக்கட்சியின் அபரீதமான வளர்ச்சியின் ஒருவடிவம் தான் இது என்று கருதமுடிகிறது. குசி கட்சியின் வெளிநாட்டவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் எதிரான போக்குப் போதாது என்பது அவனுடைய கருத்தாக இருந்தது.
முஸ்லீம்களுக்கு எதிரான கொள்கையைக் கொண்டுள்ள இவன் பள்ளிக்காலங்களில் ஒரு இஸ்லாமியனுடன் தான் கூடித்திரிவதும் உடற்பயிற்சி செய்வதும் வளக்கம். இவன் படிப்பறிவு கொண்டவனாகவும், விவசாயியாகவும், தன்னை தேசியவாதியாகவும் வகுத்துக் கொண்டான். பிரேவீக் கியோபார்ம் (Anders Behring Breivik) என்ன ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து மரக்கறிகளையும், தாவரங்களையும், நல்மரங்களையும் உருவாக்கும் நிறுவனமாகவே அதை வரையறுத்தான். இதனுடைய பின்புலம் எப்படி அமைந்தது என்பதை பொலிஸ் அறியமுயல்கிறது.
இவன் ஒரு விவசாயியாக இருப்பதனால் போதியளவு உரம் போன்ற இரசாயணப்பொருட்களை வாங்குவதற்கு அனுமதி உடையவனாவான். இந்த இரசாயண உரங்களைப் பயன்படுத்தியே இந்த வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்பது ஊகமாகிறது. இவன் மே மாதம் 4ம் திகதி 6தொன் நிறைகொண்ட இரசாயண உரத்தை வாங்கியுள்ளான்.
இவன் தனது இணையத்தளத்தில் துவேசம் கலந்திருப்பது அறியப்படுகிறது. அதில் அவன் குறிப்பிட்ட வியக்கத்தகு வசனமானது ‘ஒரு தனிமனிதனின் பெருங்செயல் 1000 பேரின் கவனத்தை ஈர்க்கும்’ இதைச் செய்தும் காட்டியுள்ளான். புதிய போர்முறைகள் பற்றிய வீடியோ விளையாட்டுகளை விளையாடுவதில் இவனுக்கு அலாதிப்பிரியம். இப்போது புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன் வீடியோ விளையாட்டுக்கள் வளர்ந்த, படிப்பறிவுள்ள மனிதர்களையே சுயசிந்தனை இழக்கச் செய்கிறது என்றால் தமிழ்பெற்றோர்களே தயவுசெய்து உங்கள்பிள்ளைகளின் வீடியோ விளையாட்டை தயவுசெய்து கண்காணியுங்கள். நாளை இந்தப்பாதகன் போன்றபிள்ளைகள் எம்குலத்தில் உருவாகக்கூடாது
துவேசக்கட்சியான குசியும் தொழிட்கட்சியும் வெளிநாட்டவர்கள் பற்றிய முரணான அரசியல் கருத்தியலைக் கொண்டவை. அதுமட்டுமல்ல வெளிநாட்டவர்களுக்கான வலதுசாரித் தீவிரவாதத்தையும், துவேசவாதத்தையும் நோவேயிய பொலிஸ் ஏறக்குறைய அழித்ததன் காரணமாக இவர்கள் தலைதூக்கி ஆடமுடியாத நிலையில் ஒருசிலர் சேர்ந்து இந்தத்தாக்குதலைச் செய்திருக்கிறார்கள் என்பது ஊகம். இதற்கு முக்கிய காரணமான துவேசம் பேசும் கட்சிகளும், துவேசத்தைத் தூண்டும் வண்ணம் எழுதும் ஊடகங்களும் இதன் பொறுப்புகளை ஏற்கவேண்டும்.
மீண்டும் ஒருவன் இன்று கைது.
ஊகங்கள்
இவனுடன் இன்னும் பலர் இயங்கிவந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். நோர்வேயிய வலதுசாரித் தீவீரவாதிகளும், தேசியவாதிகளும் பொலிசாரின் திறமையால் அடக்கப்பட்டார்கள் என்பது பொலிசின் பக்கமிருக்கும் நற்செயற்பாடு என்பதை எந்த வெளிநாட்டவரும் மறக்கலாகாது.
தாக்குதல் முடிவு
முக்கியகுறிப்பும், உலகம் படிக்க வேண்டிய பாடமும்
ஊடகங்களும் தங்கள் பங்குகிற்கும், பணம் பண்ணலுக்கும், செய்தி நிரப்பலுக்குமாக ஊதித்தள்ளும் செய்திகள் இப்படியான சம்பவங்களுக்குக் காரணமாகிறது. தேசியவாதிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் அனைவரும் குறுகிய நோக்கமுள்ளவர்களாகத்தானே காணப்படுகிறார்கள். எது தேசியம்? பிறக்கும் போது கொண்டு வந்தீர்களா? போகும் போது கொண்டு தான் போகப்போகிறீர்களா? மக்களாய், மனிதர்களாய், மனிதநேயத்துடன் வாழமுடியாதவர்களை மானிடர் என்பதே அவமானம் ஆகும்.
ஐரோப்பாவில் கிட்லர் என்ற அரக்கன் ஜனநாயகத்தேர்தலில் தம்மக்களின் நலனை காட்டியே ஆட்சிக்கு வந்தான். ஆரியச்சாதியின் பெருமைகளை நிலைநிறுத்தி ஆயிரமாயிரமாகக் கொன்று குவித்தான். வளர்த்த காடாவே மார்பில்பாய்ந்ததை ஜேமனியமக்கள் உணர்ந்தனர். ஆரியம்பற்றிப்பேசிய கிட்லர் அவன் கூறிய அதே ஆரியத்துக்குரிய தோற்றத்தைக் கொண்டிருக்கவில்லை. அப்படியானால் தன்னைத் தானே வெறுத்தானா? அதை மறைக்கத்தான் யூதர்களைக் கொன்று குவித்தானா? அவன் அழித்துத் தள்ளிய, வெறுத்து ஒதுக்கிய யூதர்தான் இவனுடைய பேரன். இவனுடைய அரசியல் யதார்த்தம் என்பது என்ன? தன்பேரனால் துர்பிரயோகம் செய்யப்பட்டகாரணத்தினால் யூத இனத்தையே கிட்லர் எனும் அரக்கன் அழிக்கத்துணிந்தான் எனும்போது இவனது அறிவையும் புத்திக் கூர்மையையும் என்னவென்று நாம் துணிவது. இவன் தன்பேரனை கொன்று பழிதீர்த்திருந்தால் கூட இவனை உலகம் மன்னித்திருக்கும்.
வளர்த்தகாடா மார்பில் பாய்ந்த கதைகள் எமது நாட்டிலும் நடந்தன. சிறீமா தன் அரசியல் நலன்களுக்காக வளர்த்துவிட்ட செகுவேராவே அவருக்கு எதிராகப்பாய்ந்தது. அதனால் அவரே அவர்களை அழித்ததும், தன்னித்தைக் கொன்றுதள்ளியது எம்மால்; மறக்கவியலாது? தமரசியல் இலாபத்துக்காக இளைஞர்களை உசுப்பிவிட்டுப் புலியான இளைஞர்களால் அதே கூட்டணித்தலைவர்கள் கொல்லப்பட்டார்களே இதை நாம் மறக்கலாமா? எம்மை முள்ளிவாய்கால்வரை தள்ளிச் சென்றது என்ன? சிந்தியுங்கள் வாசகர்களே? மனிதநேயம் தவறி சொல்லும் எந்த ஒரு வார்த்தையோ, நடக்கும் எந்த ஒரு செயற்பாடோ இறுதியில் உங்களுக்கு இயமனாகும் என்பதை யாரும் மறக்கலாகாது. இது மதங்களுக்கும் பொருந்தும்.
2ம் உலகயுத்தத்தில் கிட்லரின் தோழனான நோவேயிய கிவிஸ்லிங்கும் இப்படியே உருவானான். இவ்வளவையும் அறிந்தும், படித்தும் கொண்ட அரசியல்வாதிகளும், ஊடகங்களும் துவேசம் பேசுவதையும் குறிப்பிட்ட நிற, மத மக்களுக்கெதிராக தமது வார்த்தைகளால் மக்களை ஏவிவிடும் அசிங்கமான நாகரிகமற்ற செயல்களை இன்னும் நிறுத்தவில்லை என்பது வெட்கித் தலைகுனியவேண்டிய விடயமாகும். இந்தத் துக்கரமான செயலுக்குக் காரணமான, கொடுமையான அரக்கனான அன்டர்ஸ் பிரேவிக் எப்படி உருவானான்? யாரால் தூண்டப்பட்டான்? காரணம் என்ன? இவற்றை ஆய்வுறும் போது மனிதநேயம் மறந்து வோட்டுகளுக்காக வெற்று வார்த்தைகளால் வேட்டுப்போடும் அரசியல்வாதிகளும் ஊடகங்களுமே காரணமாவர்.
உண்மைச் செய்திகளுடன் உங்களின் நோர்வே நக்கீரா
இந்த தாக்குதலில் நெடியவன்(புலி) குழுவின் பங்கு குறித்து தீவிரமாக தேனி ஆசிரியர் குழு ஆராய்கிறது. எப்படியும் இணைத்து விடுவார்கள்.
தேனீ ஆராய்கிறார்களோ கண்டுபிடித்து விடுவார்களோ தெரியவில்லை. பிரேவீக் புலிகளை மறக்கவில்லை. தான் வெளியிட்ட 1500 பக்கயறிக்கையில் கொலை செய்வதில் புலிகள் ஆதர்சமாக திகழ்தார்கள் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறான்.
இப்ப உங்களுக்கு திருப்தி ஏற்பட்டிருக்குமென்று நினைக்கிறேன்.
தமிழர் என்றால் சும்மாவா? திருப்பியடிக்கிறான் பிரேவீக்.பல்லிண கலாச்சாரம் கூடி வாழ்வது பற்றி. இந்த அடி திரும்பவும் பத்துலட்சம் தமிழருக்கு மட்டுமல்ல கத்தோலிக்கம் சாராத ஏனையவர்களுக்கு எதிராகவும் திரும்பி வருகிறது.21-30 வருடங்களோ சிறைதண்டணை விதிக்கப்பட்டாலும். ஐரோப்பிய-அமெரிக்க முதாலித்தவம் ஐரோப்பாவின் தலைவனாக்குவதற்கு முயற்ச்சி எடுக்கும்.இதற்கு ஐரோப்பிய தொழிலாளிவர்க்கம் எப்படி முகம்கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்தே! வெற்றி தோல்வியமையும்.
நெட்கொலுவான் இது என்ன அபத்தமான செய்தி. மொட்டந்தலைக்கும் முளங்காலுக்கும் முடிச்சுப்போட்டு மாதிரியல்லவா இருக்கிறது.
சிறப்பான ஆய்வு. முடிவில் இப்போது காணப்படும் ஐரோப்பிய நெருக்கடி இந்தக் கொலைகாரனை போல எத்தனை பேரை வளர்க்கும் என்பது தான் பார்க்க வேண்டிய ஒன்று. அப்படியான சந்தர்ப்பத்தை நாம் எப்படி எதிர்கொள்ளலாம்? சிறீமாவை விட நல்ல ஒப்பீடு எல்ரிரீஈ தான். புனிதம் அடிப்படை வாதம் போன்றன கொலைவெறியையே வளர்க்கும். போராட்டத்தை வளர்க்க வேண்டும் என்றால் இவற்றைக் கைவிட்டு நேர்மையான வழிகளை தேட வேண்டும்.
இது ஒரு துயரமான சம்பவம், 96 ம் ஆண்டிலிருந்து ஒஸ்லொவொவில் வசிக்கின்றேன் அதற்கு முன்பு 5 ஆண்டுகள் சுவீடனில் வசித்தேன்,நான் சுவீடிஸ் பிரஜை, இலங்கையில் சொந்த் இடம் நுவர எலிய, ஸ்கன்டினேவிய மக்கள் இடது சாரி கொள்கை மிக்கவர்கள், வர்க்க வித்தியாசம் பார்க்காதவர்கள்,அவர்களுக்கு இப்படிநடந்தது கவலை மிக்கது
//இவன் 2006ம் ஆண்டு முன்னேற்றக்கட்சி (பிரெம்கிறிஸ் பாட்டி- FRP) அல்லது எவ்ஃ.ஆர்.பி (FRPUP)அரசியற்கட்சியின் இளையோர் அமைப்பில் இருந்தான். இக்கட்சி வெளிநாட்டவர்கள், முக்கியமாக கறுப்பினத்தவர்கள், இஸ்லாமியர்கள் மேல் துவேசட்தை மறைமுகமாக வளர்க்கும் செயற்பாடுகளைக் கொண்டது. பெருந்தொகையான வெளிநாட்டவர்களின் வருகையும், இக்கட்சியின் அபரீதமான வளர்ச்சியின் ஒருவடிவம் தான் இது என்று கருதமுடிகிறது. குசி கட்சியின் வெளிநாட்டவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் எதிரான போக்குப் போதாது என்பது அவனுடைய கருத்தாக இருந்தது //
கட்டுரையாளர் முழங்காலுக்கும் மொட்டம் தலைக்கும் முடிச்சு போடும்விதமாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வலதுசாரி சிந்தனை போக்குள்ள இளைஞன் இடதுசாரிகளின் அரசியல் மீதும் அரசதலைவர்கள் மீதும் கொண்ட அதீத அரசியல் சிந்தாந்த, நடைமுறை அரசியல் வெறுப்பே இந்த ஈவிரக்கமற்ற கொலையை செய்ய தூண்டியுள்ளது. அவரது கொலைவெறி நோர்வேஜீ பூர்வீக மக்களை அதிகமாக கொண்ட தனது இன, மதத்தை சார்ந்தவர்கள் மீதே பாய்ந்திருக்கிறது. இந்நிலையில் இச்சம்பவத்தில் எங்கேயிருக்கிறது நிற, மத வெறி?
சொந்தநாட்டில் உரிமையை நிலைநாட்ட போராடாது நகரும் அகதிகளும், போலி பொருளாதார அகதிகளும் . வந்தவிடத்திலும் தமது மதஅடிப்படைவாதத்தை வளர்ப்பவர்களும் ஒருவகையில் வலரதுசாரி தீவிரவாதிகளை கொரூரகொலையாளியாக மாற்றியதில் பங்குவகிக்கின்றனர்.
நோர்வே அரசு ஈழத்தமிழர் விடயத்தில் நயவஞ்சமாகவே நடந்து எமது மிகநீதியான உரிமை போராட்டத்தை நசுக்க உதவியது. அதனால் மேலும் மேலும் ஈழத்தமிழர்கள் அகதியாவதற்கு காரணமாகவிருந்தது. இந்த அகதிகள் மேற்கு நோக்கி நகரும் போது வலதுசாரி சிந்தனைப்போக்கு மேலும் மேற்கு பூர்வீக குடிகளிடம் வளர்க்கப்படுகிறது. இதை ஆழ்ந்து உணரும் ஒரு மேற்குநாட்டவன் தனது அரசு மீது கோபப்படவே செய்வான்.
மேற்கு நாடுகள் தமது வெளிவிவகார அணுகுமுறையை மீள்பரிசீலனை செய்து சிறுபான்மை இனங்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிபடுத்துவதே அகதி உருவாக்கமும், அவர்கள் மேற்கு நோக்கி நகர்வதும் கட்டுப்படுத்த முடியும்.
மேற்கு நாடுகளில் கோபுரம் வைத்து கோவில்களும், தூபி வைத்து மசூதிகளும் கட்டி மதஅடிபபடை வாதத்திற்கு ஆதரவு கொடுத்து.உங்கள் பங்கிற்கு இன்னும் இன்னும் வலதுசாரி சிந்தனையாளாரை உற்பத்தி செய்யுங்கள். இவர்களை கொலைவெறி பிடித்தவர்களாக மாற்றுங்கள். இப்படியே மேற்குலக பூர்வீக குடிகளை அழித்து உங்கள் வாழ்கையை மேம்படுத்துங்கள். உங்கள் இந்த சுயநலவாழ்வை இடதுசாரியமென சொல்லிக்கொள்ளுங்கள்
செய்திகளின் தொடர்ச்சியைப் பின்நோட்டத்தில் தந்துகொண்டிருப்பேன். இன்று காலை எழுந்ததும் என் நெஞ்சை உலுப்பியது ஒரு இளம்பெண்ணின் வார்த்தை. இவர் மனிதவெறியனால் சுடப்பட்ட இளசுகளுக்கு பொறுப்பாய் இருந்தது மட்டுமல்ல தப்பித்தவரும் கூட. வாத்தை இதுதான்” ஒருதனிமனிதனுடைய வெறுப்பை நாம் இப்படி ஒருகோரவடிவமாகக் கண்டோம் நாம் அனைவரும் இணைந்து எவ்வளவு அன்பை கொடுக்கலாம்” இந்தப்பிள்ளையின் நிலையில் இருப்பவர்கள் அனைவரும் வெறுப்பின்; ஆத்திரத்தின் விழிப்பில் இருந்திருப்பார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட இந்த இளங்குஞ்சின் வார்த்தைகளால் நான் சிதறியே போனேன். இப்பிள்ளை கடவுளுக்கு ஒப்பாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. புத்தர் யேசு கிருஸ்ணர் நாயன்மார்கள் சொன்னதும் இப்படியான வார்த்தைகளைத்தான்.
நிர்மலன்! உங்கள் கருத்துக்கு நன்றி. நீங்கள் கூறிய பலவிடயம் சரியாக இருந்தாலும் கொலைஞனுடைய பின்புலம் பற்றி ஆராயவேண்டியது அவசியம். நோர்வேயில் வலதுசாரிகளும் உள்ளார்கள். அதிலும் தீவீரவாதத்தை வளர்க்கும் முகமான அரசியல் பேசுவதைத்தான் நான் கண்டித்தேன். //இந்நிலையில் இச்சம்பவத்தில் எங்கேயிருக்கிறது நிறஇ மத வெறி?// என்று கேட்டிருந்தீர்கள். அவனுடைய இணையத்தளத்தில் வலதுசாரியத் தீவீரவாதம் பற்றி 1500 பக்கங்கள் எழுதியுள்ளான். அங்கே காணக்கிடைக்கும் செய்தி மக்களை முஸ்லீம்களுக்கும் மாக்சிசத்துக்கும் குறிப்பாக இடதுசாரித்துவத்துக்கும் எதிராகவே தூண்டியிருக்கிறான்.
//நோர்வே அரசு ஈழத்தமிழர் விடயத்தில் நயவஞ்சமாகவே நடந்து எமது மிகநீதியான உரிமை போராட்டத்தை நசுக்க உதவியது. // இது உங்களுடைய கருத்தாயினும் அதுபற்றிக் குறிப்பிட உனக்கும் உரிமை உண்டு என்று எண்ணுகிறேன். உங்களது பார்வை மிக மேலோட்டமாகவே இருக்கிறது. 3ம் தரப்பின் மத்தியில்தான் பேச்சுவார்த்தை என்று புலிகள் அடம்பிடித்தபோது எந்த நாடுமே இதற்கு முன்வரவில்லை. இதைப்புலிகள் நன்கு அறிவார்கள். நோர்வே முன்வந்தவேளை எறிச்சூல்கெய் மிகத்தெழிவாகக் கூறியிருந்தார். நாம் வெறும் அனுசரணையாளர்களே தவிர எந்த முடிவையோ தீர்ப்பையோ தரமாட்டோம். முடிவுகளும் தீர்வுகளும் புலிகளும் அரசும் புரிந்துணர்தலூடாகப் பெற்றுக்கொண்டால் அதை முழுமையாக ஆதரிப்போம். அதைத் தவறாகப்புரிந்து கொண்ட இருபக்கத்தவர்களும் நோவேயிடன் எதிர்பக்கங்களின் குற்றங்களைக் கூறியபோது எரிக் சொன்னவியடம் எனக்கு நன்கு தெரியும் “எதிர்வரும் சந்திப்பில் மறுபக்கத்துக்குக் கூறுங்கள்” என்பது. நோர்வேயின் பங்கு இருபகுதியினரையும் ஒருமேசைக்குக் கொண்டுவந்து இருபகுதியினரின் பேச்சுவார்த்தை மூலம் புரிந்துணர்வுகளை ஏற்படுத்தி இலங்கையில் ஒரு சுமூகமான நிலையை ஏற்படுத்துவதே தவிர நீங்கள் சொல்வதுபோல் யாருக்கும் எதிராகச் செயற்படுவதல்ல. நீங்கள் நோவேமீது வைக்கும் அபாண்டமான அநீதியான குற்றச்சாட்டு. எனக்கு எறிக்கூல்கைமை நன்கு தெரியும் என்பது மட்டுமல்ல புலிகளும் அவருடைன் நல்லுறவைப்பேணிவந்தார்கள். இறுதிநேரத்தில் கூட எரிக்குடன் புலிகள் பேசியிருந்தார்கள். நோர்வே குறிப்பிட்ட படி நடந்திருந்தால் புலிகளின் தலைமை காக்கப்பட்டிருக்கும். சரி பேச்சுவார்த்தையை முறித்தது யார்? பேச்சுவார்த்தைக்கு யாராவது வாருங்கள் என்று அழைத்தது யார்? பேச்சுவார்த்தையில் இருசாராரும் எழுத்த தன்னிச்சையான முடிவுகளை நடைமுறைப்படுதாது இழுத்தடித்தது யார்? எல்லாம் நோர்வே தானா? இப்படியான ஒரு தேசிய துக்கநிகழ்வு நடந்திருக்கும் போது இது பேசக்கூடிய விடயமா என்பது எனது கேள்வி.
உங்களின் எழுத்தின் படி பூர்வீக குடிகள் படுவலதுசாரித்துவத்தைக் கொண்டவர்களாகக் காட்ட முயல்கிறீர்கள். நீங்கள் நோர்வேயில் இருக்கிறீர்களோ இல்லையே நோர்வேயையும் அதன் அரசியல் கலை கலாச்சாரப்பண்பாடுகள் பற்றிய அறிவு மிகக் குறைவு எனறே கருதுகிறேன்.
//கோபுரம் வைத்து கோவில்களும்இ தூபி வைத்து மசூதிகளும் கட்டி மதஅடிபபடை வாதத்திற்கு ஆதரவு கொடுத்து.உங்கள் பங்கிற்கு இன்னும் இன்னும் // ஏன் கிறீஸ்தவத்தையும் திருச்சபைகளையும் தேவாலயங்களையும் விட்டீர்கள்? இடதுசாரித்துவம் பேசி அவற்றைக் பின்புலத்தில் காப்பாற்ற முயல்கிறீர்களா?
உங்கள் கருத்துக்கு நன்றி Nackeera!
// ஏன் கிறீஸ்தவத்தையும் திருச்சபைகளையும் தேவாலயங்களையும் விட்டீர்கள்? இடதுசாரித்துவம் பேசி அவற்றைக் பின்புலத்தில் காப்பாற்ற முயல்கிறீர்களா? //
உங்களிடம் முதலில் ஒன்றை மிகத்தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். நான் பிறப்பால் சைவசமயத்தை சார்ந்தவன். ஆனால் தற்போது எனக்கு எந்த மதமீதும் சம்மதமில்லை. இந்நிலையில் கிறீஸ்தவத்திற்கு வக்காலத்து வாங்க வேண்டிய எந்த அவசியமும் எனக்கில்லை.நோர்வேஜீய மக்களின் மதமாக கிறிஸ்தவ பின்னனியே பெரும்பாலும் உள்ளது அது அவர்களின் வாழ்வில் இரண்டறக்கலந்தது. அதன் நடைமுறைகள் பழக்கவழக்கங்கள் அவர்களை அசெளகரியப் படுத்தாது. இந்நிலையில் நான் கிறிஸ்தவத்தை பேசவேண்டிய தேவையெதுவுமில்லை!
அத்துடன் நான் வலது சாரியோ இடதுசாரியோ என்ற முடிவான நிலையெடுப்பவன் அல்ல. ஈழத்தமிழ்மக்களின் சமூகநலனென வரும்போது இடதுசாரியமூடாகவே அணுகுவேன். ஒட்டுமொத்த இன தமிழர்தாயக நலனென வரும் போது நிட்சயம் நானொரு தேசீயவாத சிந்தனைப் போக்குடையவன்.
////நோர்வே அரசு ஈழத்தமிழர் விடயத்தில் நயவஞ்சமாகவே நடந்து எமது மிகநீதியான உரிமை போராட்டத்தை நசுக்க உதவியது. // இது உங்களுடைய கருத்தாயினும் அதுபற்றிக் குறிப்பிட உனக்கும் உரிமை உண்டு என்று எண்ணுகிறேன். //
நிட்சயமாக உங்களிற்குள்ள கருத்துரிமையை வரவேற்கிறேன் மதிக்கிறேன். புலிகள் தம்மீது இறுக்கப்பட்டிருந்த இராணுவ முற்றுவையை வெற்றிகரமாக தளர்த்தியிருந்தாலும். எமது சிறிய இனத்தொகையில் மிக அதிகமான போராளிகளையும் மக்களையும் இழந்துவிட்டோம் இதை தடுக்க போரைதவிர்த்து ஒரு அரசியல் ரீதியான நகர்வில் அதிக அக்கறை காட்டினர். அதற்கு நோர்வே மத்தியஸ்த்த ஏற்பாட்டளாராக உதவ முன் வந்த போது பெரும் நம்பிக்கையுடன் இருகரம் நீட்டிவரவேற்றனர். ஆனால் நோர்வே அமெரிக்கா இந்தியாவின் விருப்பை நிறைவேற்றி கொடுக்கும் பொறுப்பை ஏற்று இந்தச் சந்தர்ப்பத்தை புலிகளின் இராணுபலத்தை சிதைக்கும் ஒரு பொறியாகவே பாவித்தது.
புலிகள்- சிறிலங்கா ஒப்பந்தப்படி ஒருவாரத்தில் ஒருமாதத்தில் இரு மாதத்தில் மூன்றுமாதத்தில் ஆறுமாதத்தில் நிறைவேற்ற ஒத்துக்கொண்ட விடயங்களை ரணில் நடைமுறைப்படுத்தாது விட்டபோதும் ஏன் காலம் தாழ்தியேனும் நடைமுறைப்படுத்தாது விட்ட போதும் நோர்வே கள்ள மெளனமே சாதித்தது. பாலா- பீரிஸ் பேச்சில் காணப்பட்ட எந்தவொரு இணக்கப்படும் நடைமுறைப்படுத்தாது விட்ட போதும் நோர்வே கள்ள மெளனமே சாதித்தது.
யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு புலிகளில் விரும்பிச் சேரும் இளைஞர் யுவதிகளையும். புலிகளின் ஆதரவு மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் யுத்த நிறுத்த மீறலாக பதிந்து சர்வதேசத்திற்கு அறிக்கையிட தயங்கவில்லை. ஆனால் சிறிலங்கா அரசபயங்கரவாதம் செய்த பாரிய யுத்த நிறுத்த மீறல்களை கூட சர்வதேசத்திற்கு அறிக்கையிட மறுத்தது. ஈழத்தமிழர் பெருமளவில் மூதூர் வாகரைப்பகுதியில் கொல்லப்பட்ட போது கள்ள மெளனமே சாதித்தது. ஆனால் புலிகளை ஆயுதத்தை கைவிட்டு சிறிலங்கா அரசபயங்கரவாதத்திடம் சரணடைய சொல்லி பலதடவை அறிக்கையிட்டது. புலிகள்- சிறிலங்கா ஒப்பந்தத்தில் எந்த பங்கும் வகிக்காத இந்திய அதிகாரிகளை சிறிலங்கா வரும் ஒவ்வோரு தடவையும் சந்தித்து அவர்களின் விருப்பத்தை நேரில் அறிந்து செயற்படுத்த எரிக்சொல்கைம் மறக்கவில்லை. ஏன் புலித்தேவன்- நடேசன் சிறிலங்கா இராணுவ தரப்பிடம் போய் பேச தான் ஐநாவூடாக ஏற்பாடு செய்து விட்டேன் போய் பேசுங்கள் என பொய் சொல்லி எரிக்சொல்கைம் அறிவித்ததை நம்பித்தானே அவர்கள் போய் சித்திரவதைப்பட்டு இறந்தனர். இல்லை என்று சொல்லப்போகிறீர்களா! மகிந்தவால் பலிகொள்ளப்பட்ட ஈழத்தமிழரின் இரத்தத்தில் நோர்வேயின் எரிக்சொல்கைமின் கைகளும் நனைந்துள்ளது. இப்படி யதார்த்தமிருக்கும் போது சொல்கிறீர்கள் ” நோவேமீது வைக்கும் அபாண்டமான அநீதியான குற்றச்சாட்டு. எனக்கு எறிக்கூல்கைமை நன்கு தெரியும்” என. அவர் உங்களின் தனிப்பட்ட நண்பராக இருக்கலாம். ஆனால் அவரின் பணியென்பது உங்கள் நட்பை மீறிய மேற்குலக நலன் பேணுகை இருப்பதை மறக்காதீர்கள்.
//சரி பேச்சுவார்த்தையை முறித்தது யார்? பேச்சுவார்த்தைக்கு யாராவது வாருங்கள் என்று அழைத்தது யார்? பேச்சுவார்த்தையில் இருசாராரும் எழுத்த தன்னிச்சையான முடிவுகளை நடைமுறைப்படுதாது இழுத்தடித்தது யார்? எல்லாம் நோர்வே தானா?//
பேச்சுவார்த்தைக்கு அழைத்தது மட்டும் புலிகள். மிகுதியெல்லாம் சிறிலங்கா அரசபயங்கரவாதம் இதற்கு துணைபோய் அமெரிக்கா இந்திய நலன் பேணியது நோர்வே/ எரிக்சொல்கைம்.
பலஸ்தீன-இஸ்ரேவேல் அமைதி முயற்சி நடைபெற்று கொண்டிருந்த ஆரம்பத்திலேயே பலஸ்தீன-இஸ்ரேவேல் தலைவர்களிற்கு அமைதிக்கான(?) நோபல்பரிசு கொடுத்து பலஸ்தீனர்களை ஏமாற்றிய சதிகார நோர்வே அரசின் செயலை. புலிகள் கணிக்க தவறியதே அவர்களின் பெருஅழிவிற்கு காரணம் ஆனது.
//உங்களின் எழுத்தின் படி பூர்வீக குடிகள் படுவலதுசாரித்துவத்தைக் கொண்டவர்களாகக் காட்ட முயல்கிறீர்கள். நீங்கள் நோர்வேயில் இருக்கிறீர்களோ இல்லையே நோர்வேயையும் அதன் அரசியல் கலை கலாச்சாரப்பண்பாடுகள் பற்றிய அறிவு மிகக் குறைவு எனறே கருதுகிறேன்.//
நானொரு போதும் சொல்ல மாட்டேன் நோர்வே மக்கள் அனைவரும் வலதுசாரி சிந்தனையுடையவரென்று. எம்மின மக்களையும் முஸ்லிம்மக்களையும் தம்முடன் அரவணைத்து வாழ்கிறார்கள். அதனால் எழுந்த கொலைகாரனின் கொடுர வெறிக்கு தமது 92 பிரசைகளை பறிகொடுத்து மாறா தாளா சோகத்தில் இருக்கிறார்கள்.
படுகொலை வெறியாட்டம் நடந்த செய்தி பரவியதும் மேற்குலக வலதுசாரிகள் எந்த ஆதாரமுமின்றி குற்றத்தை இஸ்லாமிய பயங்கரவாதமாக காட்டத் தயாராகி விட்டனர். அதே போல் கொடூரபடுகொலைக்குள்ளாக்கப்பட்ட மக்களும் நோர்வேஜீயகிறிஸ்தவ பின்னனியை உடைய பூர்வீகமக்கள் என்பதை கணக்கில் எடுக்காது நிறமத வெறியாக மட்டும் காட்ட/ பார்க்க முற்படுவதும் தவறே.
அத்துடன் நான் சொல்வது வலதுசாரி சிந்தனையுடையவனை கொடுரகொலைகாரனாக மாற்றியதில் நோர்வே அரசினதும் எம்போன்ற மக்களினதும் முஸ்லிம் அடிப்படைவாதிகளினதும் பெரும்பங்கிருக்கு.
நிர்மலன்!
//இந்நிலையில் கிறீஸ்தவத்திற்கு வக்காலத்து வாங்க வேண்டிய எந்த அவசியமும் எனக்கில்லை.நோர்வேஜீய மக்களின் மதமாக கிறிஸ்தவ பின்னனியே பெரும்பாலும் உள்ளது அது அவர்களின் வாழ்வில் இரண்டறக்கலந்தது. அதன் நடைமுறைகள் பழக்கவழக்கங்கள் அவர்களை அசெளகரியப் படுத்தாது. //
நன்றி நிர்மலன் உங்கள் பெயருக்கேற்றால் போல் நிர்மலமாக நிற்கிறீர்கள். பலநோவேயிர்களும் பல வெளிநாட்டவர்களும் தேவாலயங்களில் அவர்கள் அறியாமலேயே பதியப்படுகிறார்கள் என்ற உண்மை பலருக்குத் தெரியாது. அதுமட்டுமல்ல இறந்தவின் தாழ்பதற்கு இடத்துக்காகவும் பதியப்பட்டதில் இருந்து தம்மை மீட்காமல் உள்ளார்கள். இங்குள்ள சகலமதத்தவர்களும் அசரதேவாலயத்தில் பதியப்பட்டு பணம்பிடுங்கப்படுகிறது. விரும்பாதவர்கள் கடிதமூலம் விடுவித்துக் கொள்ளலாம். இப்படி எனது மனைவி ஒருநோவேயியர் நம்பிக்கை இந்துமதம் ஆனால் அவரும் பிள்ளைகளும் தேவாலயத்தில் பதியப்பட்டுள்ளார்கள். இது எம்மைக்கேட்காது செய்யும் அடாவடித்தனமே. இன்றும் நோவேயியர்களில் 70வீதத்துக்கு மேற்பட்டவர்கள் கிறிஸ்தவ நம்பிக்கை அற்றவர்கள். இந்தமதம் உதிரம் ஊற்றித்தான் மக்களை மாற்றினார்கள். கத்தோலிக்கள்கள் கூடக் கழுத்து வெட்டப்பட்டார்கள். கிஸ்தவம் தழுவாதவர்களின் கல்வி மறுக்கப்பட்டது. இப்படிதான் இங்கே கிறிஸ்தவம் உருவானது. இதற்கு என்மனைவின் பரம்பரையில் பலவீக்கிங்குள் பொறுப்பாவார்கள். கிறிஸ்மஸ் இங்கே கிறிஸ்துவுக்கு முன்னரே ஒளிநாளாக் கொண்டாடப்பட்டுது அதற்கான போதிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. மாற்று மதம் மாற்றுச்சிந்தனைகள் இல்லததாலும்; தம்பிணத்தைத் தாழ்பதற்காகவும்: தேவாலயத்தில் பதியப்பட்டுள்ளோம் என்பதை அறியாமலுமே பல நோவேயியர்கள் கிறிஸ்தவர்களாகக் கணிக்கப்படுகிறார்கள்.
//அதற்கு நோர்வே மத்தியஸ்த்த ஏற்பாட்டளாராக உதவ முன் வந்த போது பெரும் நம்பிக்கையுடன் இருகரம் நீட்டிவரவேற்றனர்// இது தவறு நிர்மலன். நோர்வே மததியத்தம்வகிக்கவில்லை இதை மிகத்தெளிவாக வரையறுத்திருந்தனர். தமது பங்கு அனுசரணையாளர்கள். அதாவது பேச்சுவார்த்தை நடநதேறுவதற்கு அனுரணையாளர்கள்.
நீங்கள் நோர்வே மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் விவாதத்துக்குரயது நிர்மலன். நாம் கறுப்புக்கண்ணாடி போட்டுக் கொண்டுதான் போரை இன்றும் பார்க்கிறோம். நோர்வேக்கு என்றும் சிலகட்டுப்பாடுகள் உண்டு. அவற்றை மீறி அவர்களால் செயற்பட இயலாது. அதனால்தான் அனுரணையாளர்கள் ஆனார்கள். நோர்வேயின் மெளம் பற்றி எழுதியிருந்தீர்கள். ஆனால் அக்காலகட்டத்தில் இருபக்கத்தவருடனும் இரகசிப்பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்ததை மறுக்கிறீர்களா? அனுரணையாளர்கள் அன்றும் ஒருபக்கம் சார்ந்து பேச இயலாது. இந்தியா அமெரிக்கா என்றீர்களே யுத்தம் சீனா இரஸ்யாவின் முழுப்பின்னணியில்தான் நடந்தது என்பதை மறுக்கிறீர்களா? மேற்குலகின் கொடியபற்களை பிடுங்குவதற்கு அரசு நாடிய நட்பே சீன இரஸ்சிய உறவு. சரியான முறையான ஆளமான முறையில் சிந்திப்போமானால் நோர்வே வெறும் அப்பாவியே. அமெரிக்காவின் ஆதிக்கம் இருந்தது என்பதை மறுக்கவில்லை. அதற்குக் காரணம் இடதுசாரியநாடுகளாக தம்மைக் காட்டிக்கொள்ளும் சீன இரஸ்சிய உள்னுளைவுகளேயாகும்.
நோர்வே செயற்பட்டது அமெரிக்காவின் வேண்டுதலுக்கேயன்றி வேறெதுவுமில்லை அத்தோடு நோர்வே போன்ற சிறிய நாடுகளால் தனித்தவகையில் சா்வதேச விடயங்களில் தலையிட முடிவதில்லை.
இவன் ஒரு வன்முறையில் காதல் கொண்ட மனநோயாளி.
உண்மைதான். தான் மனப்பலம் கொண்டவன் என்று தனது இணையத்தில் சிலநாட்களுக்கு முன் எழுதியுள்ளான். இந்த வெறியாட்டம் வெற்றிகரமாக நடந்தேறவேண்டும் என்று யேசுவை வேண்டியுள்ளான். புதிய செய்திகளை பின்நோட்டத்தில் எழுதுகிறேன். மனநோயாளி என்று தப்பித்துக் கொள்ளும் சாத்தியங்ளும் உண்டு. விராரணையின் போது ஒரு துளி கண்ணீர்கூட அவன் விடவில்லை என்பது மரத்துப்போன மனம் என்பது புரிகிறது.
புதிய செய்தி 1
தீவில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய கொலைஞன் பொலிசார் வந்து இறங்கியதும் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி சரணடைந்தான். ஒவ்வோரு கொலைகளையும் நிதானமாகவே செய்து முடித்தான். கொலைவெறி மிக நிதானமாகவே இருந்திருக்கிறது.
புதிய செய்தி2
இவன் செய்த வெடிகுண்டுக்கு இரசாயண உரமே பாவிக்கப்பட்டுள்ளது. இதைச் செய்வதற்கு 500 -700 கிராம் இரசாயண உரம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் 6தொன் இரசாயண உரத்தை இவன் ஒன்றரை மாதங்களுக்கு முன் வாங்கியிருக்கிறான். தற்போது கண்டு பிடிக்கப்பட்ட உரம் 3தொன் மாத்திரமே. மீதி இரண்டரைத் தொன் எங்கே என்பது பொலிசின் கேள்வி. குண்டுகளாகத் தயாரித்து மறைத்து வைக்கப்பட்டுள்ளதா?
புதிய செய்தி3
ஒன்பது வருடங்களுக்கு முன்னரே துவேசத்தின் அடிகோலல் இணையத்தளமாக உருவாகியிருக்கிறது. எவ் ஆர் பி என்ற வெளிநாட்டர் எதிர்பாட்டியில் 5வருடங்களுக்கு முன் இருந்திருக்கிறான். 32வயது கொண்ட இவன் தனது 23வயதில் தனது நடவடிக்கைகளை முடக்கிவிட்டுள்ளான்
புதியசெய்தி4
அவனது நெருங்கிய பாலியல் நண்பன் ஒரு முஸ்லீம். அதாவது 10ம்பகுப்புப்படிக்கும் வரை.
புதியசெய்தி 5
அவனது இணையத்தளத்தில் மேலும் குறிப்பிடுவது ஐரோப்பாவில் முஸ்லீம்களின் ஆக்கிரமிப்பையும் பல்கலாச்சாரமுறையைவும் முற்றாக வெறுப்பதாகவும். தன்னை ஒரு பெரும்போராணியாகப் படங்களாய் பிரசுரித்தும்; தன்னைத்தானே பேட்டிகண்டம் எழுதியுள்ளான்.
தான் இந்தத்தாக்குதலில் இறக்கலாம் அப்படி இல்லாமல் உயிர்வாழ்தான் தனது நீதி விசாரணை திறந்த வளக்காடு மன்றமாக இருக்க வேண்டும் என்பது அவனது வேண்டுகோள். அப்போதான் தன் கருத்துக்களை துவேசத் துடிப்பை வெளிக்கொண்டர முடியும் என்பது அவனது எண்ணம்.. திறந்த வளக்காடு மன்றத்தினூடாக மனித காலாச்சார வெறுப்பை ஏற்படுத்து முயல்கிறான்
செய்தி 6
இவன் இஸ்லாமிய மாக்சிச எதிர்ப்புவாதி துவேசி இல்லை என்று சிலர் கூறினாலும் பலகாலச்சார வெறுப்பு என்பது துவேசம் சார்ந்ததே.
செய்தி 7
இது ஒரு முக்கிய தகவல் இவனுடை மனுவெஸ் என்று கூறப்படும் குறிப்புப் புத்தகத்தில் இவனுடைய பல பிரதிகள் வேறு ஒரு துவெசியிடம் இருந்து களவாடப்பட்டு சிலமாற்றங்களுடன் பிரசுரிக்கப்பட்டது. இவனுடைய வழிகாட்டியாக அமைந்தவன் யார் என்பதை விக்கிப்பீடியா இணைப்பூடாக வாசகர்களுக்குத் தருகிறேன். மூளைச்சலவையும் தீவீரவாதமும் மனநோயும் எப்படிக்கலக்கிறது என்று பாருங்கள்
இணைப்பு
http://en.wikipedia.org/wiki/Unabomber
http://www.nrk.no/skattelister2009/anders_behring_breivik~748384/
http://www.vg.no/nyheter/innenriks/oslobomben/artikkel.php?artid=10080704
Inncome 0capital 390.171tax 0he cheats well
http://www.tv2.no/nyheter/prosjekt/frimurer/losjer/soilene/medlem/80189
Inncome infohttp://skattelister.no/skatt/profil/anders-behring-breivik-33747942/
ஒட்டுறவே இல்லாத என்னை வரவேற்று வாழவைத்த என் சின்னம்மாதேசத்தின் உதிரமுறைந்த காட்சிகள். அமைதியான மலைகளுக்கிடையில் நடப்பட்ட வீடுகளையும் மனிதர்களையும் கொட்ட என்சின்னம்மாவின் உடலில் வீழ்ந்த இரத்தங்களைப் பாருங்கள். மனிதவெறி இனவெறி துவெசம் வெறுப்பு இரத்தம் தோய்ந்த மண்தான்.
எம்மை வாழவைக்கும் என்னினிய நோர்வேயின் சின்னச்சிட்டு தான் காயப்பட்ட போதிலும் சொன்ன ஒரு வார்த்தை என் நெஞ்சைக்கிழித்து உயிரில் அறைந்தது. அந்த வார்த்தைகளை கேழுங்கள்
“ஒருவனால் இவ்வளவு பேரழிவையும் வெறுப்பையும் ஏற்படுத்த முயுமானால் நாம் அனைவரும் சேர்ந்த எவ்வளவு அன்பு செய்யமுடியும் ”
சுயமாகவே கொலைக்களத்தீவின் அவதியுற்று பலரை இழந்த ஒரு நோர்வேயியக் குஞ்சின் ஆணித்தரமான வார்த்தைகள் இவை.
புதிய செய்தி 9
இக்கொலை வெறியன் கைது செய்யப்படும் பொழுது அவனிடம் போதிய அளவு அமினிசன் (சன்னங்கள்) இருந்தன. ஆனால் அவற்றை அவன் பாவிக்க வில்லை. தான் வாழவேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறான்
புதியசெய்தி 10
தன்னை இந்தச் செயல்பாட்டால் தன்னினச் சேர்க்கை பாலியல் கொண்டவன் என்றே; நாசி என்றோ; வலதுசாரத்தீவீரவாதி என்றோ ….. பல்கலாச்சாரிகள் கூறுவார்கள். நான் முஸ்லீங்களையும் பல்கலாச்சாரத்தையும் முற்றாக வேறுக்கிறேன். என்று எழுதியிருந்தான்
புதியசெய்தி 11
என்னைமனநோயாளி என்று யாரும் கூறலாம் ஆனால் நான் திடமான புத்தியும் கொண்டவன். நான் குடும்பமாக என்னால் வாழமுடியும் ஆனால் எனது திட்டத்தை நிறைவேற்றாது எதையும் மேற்கொள்ள இயலாது.
நான் சொந்தமாகத் தயாரித்த 3 பிரான்ஸ் வைன்கள் உள்ளன. கடசி போத்தலை 2 விபச்சாரிகளுடன் கூடிக் குறிக்க விரும்புகிறேன் என்று எழுதியுள்ளான்
புதியசெய்தி 12
இவனது பெற்றோர்கள் விவாகரத்துச் செய்து கொண்டவர்கள். தந்தை இன்று பிரான்சு நாட்டில் இருந்த தன் மகனின செயற்பாட்டை அறிந்த அதிர்ச்சி அடைந்தார். தாயின் வளர்ப்பிலே வளர்ந்த இவன் தன் குழந்தைப்பராயத்தைப் பற்றி இப்படிக் கூறுகியான்
” நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். பணப்பிரச்சனை என்றும் இருந்ததில்லை. நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
புதியசெய்தி13
மற்றவர்கள் இவனைப்பற்றி கூறும் போது இவன் என்றும் பிரத்தியேகனாகக் காணப்படவில்லை. என்றும் தாயிடன் ஞாயிற்றுக்கிழமைகளில் சாப்பிட வருவான். தாய் அவனைப்பற்றி என்றும் பெருமையாகவே பேசிக்கொள்வாராம்
செய்தி 14
30வருடங்களுக்கு மேல் பழக்கம் கொண்ட ஒரு சுமார் 78வயதான பெண்மணி தான் இவனது தாயை குண்டு வெடித்த இடத்தில் கண்டதாக சாட்சியம் அழித்துள்ளார். இந்த வெறியாட்டத்துக்கும் தாய்க்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது
செய்தி 15
பொலிஸ் விராசணையின் போது அமைதியாகவே பதிலளிக்கிறான். செத்தவர்கள் தொகையும் அவலங்களும் காட்டப்பட்ட போது கூட ஒரு துளி கண்ணீர்ரோ தன் செயலுக்கான கவலையே அவனிடம் தென்படவில்லை.
தன்செயலுக்கு தண்டனை வழங்கப்படக் கூடாது காரணம் முஸ்லீம்களையும் பலகலாச்சார வருகையையும் ஐரோப்பாவில் தடுப்பதற்காவே இதைச் செய்தேன். எனது செய்பாடு சரியானதே என்று அடப்பிடிக்கிறான்.
செய்தி 16
மீதி வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக அவன் கொடுத்த தகவலின் பெயரில் பொலிஸ் சோதனை நடந்தது. அங்கு எதுவுமே இருக்கவில்லை. அது ஒரு பாழடைந்த வீடு. ஆனால் பல வாகனங்கள் அங்கு வந்து போனதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன: சிலவேளை இவனுடன் தொடர்புள்ளவர்கள் அவற்றை அப்புறப்படுத்தியிருக்கலாம்
“……நோபல்பரிசு கொடுத்து பலஸ்தீனர்களை ஏமாற்றிய சதிகார நோர்வே அரசின் செயலை. புலிகள் கணிக்க தவறியதே அவர்களின் பெருஅழிவிற்கு காரணம் ஆனது…….”
காலம்கடந்த ஞானோதயம்.அதிலிருந்து என்ன பாடம் கற்றீர்கள் ஐயா நிர்மலன்.?நாடு கடந்த குஞ்சாமணி என்று ஏன் இப்போ அமெரிக்காவுக்கு ஆலவட்டம் பிடிக்கினம்.?நக்கின குணம் போகாது.
இது ஒரு நியாயமான கேள்வியாகத்தான் எனக்குப் படுகிறது. சரி மேற்குலகும் அமெரிக்காவும் புலிகளை அழித்தார்கள் என்றால் மீண்டும் எதற்காக அவர்களை நாடுகிறீர்கள். பயங்கரவாதியும் பல்கொலையாளியான இந்த நோர்வேயினின் நடவடிக்கை போலிக்கிறது எம்மில் பலரின் கருத்துக்கள். தேசியம் பற்றி அக்கறைப்படும் இந்தக் கொலைஞன் தென்தேசத்து மக்களைத் தானே அழித்தான். கிறிஸ்தவ வலுவாக்கத்தை உறுதிப்படுத்த விரும்பம் இவன் கிறிஸ்தவத்தின் எதிரிகத்தானே பார்க்கப்படுகிறான். இப்படியல்லாது எமது கருத்துகளும் செயற்பாடுகளும் ஒன்றாக இருப்பது அவசியம்.
//ஏன் இப்போ அமெரிக்காவுக்கு ஆலவட்டம் பிடிக்கினம்.?நக்கின குணம் போகாது. // “கோமாளி ” நவநீதன்
ஏன் தாங்கள் அமெரிக்கனிடம் 60 வருடமாய் நக்கினீர்களே அது கசந்திட்டுதா!. இப்ப சீனா ரசியா முஸ்லீம் நாடுகளினதை நக்குகிறீர்களே அது இனிக்குதோ!
Peaceful Norway also saw the carnage. He stopped the war in Sri Lanka because of 9/11 in USA. This time he cannot start the war again. He has also seen 33 years from 1976 to 2009.
நோர்வேயால் அந்தப்பேரை நிறுத்தியிருக்க முடியாது. காரணம் பலபரிமாணங்கள் கொண்டது. ஏன் ஐ.நாடுகளால் முடியாத என்று சிறிய நோர்வேயால் செய்திருக்க முடியும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள் சிறீ? ஐ.நா சபையினரே விட்டுவிட்டு ஓடியவர்கள் தானே இன்று சனல் 4 ல் சாட்சியமாகிறார்கள்
Nowegian terrisk and nasi’s face book http://brianakira.files.wordpress.com/2011/07/anders-behring-breivik-facebook.pdf
terrist document in English http://brianakira.files.wordpress.com/2011/07/anders-behring-breivik-document-dot-no.pdf
look at her how a terrorist become:
http://brianakira.files.wordpress.com/2011/07/andrew-berwick-2083-a-european-declaration-of-independence-illustrated-hyperlinked.pdf
http://brianakira.wordpress.com/2011/07/23/norwegian-zio-masonic-mass-murdering-queerist-anders-behring-breivik/
//உங்கள் பெயருக்கேற்றால் போல் நிர்மலமாக நிற்கிறீர்கள்//Nackeera
அப்படியா!நன்றி. ஆனால் தாங்கள் தங்கள் பெயருக்கேற்றமாதிரி இல்லை என்பதையிட்டு வருத்தம்.
//பலநோவேயிர்களும் பல வெளிநாட்டவர்களும் தேவாலயங்களில் அவர்கள் அறியாமலேயே பதியப்படுகிறார்கள் என்ற உண்மை பலருக்குத் தெரியாது.//Nackeera
சரி பெரும்பாலானவர்களிற்கு அதில் சம்மதமில்லாதுவிடில். அதை சட்டரீதியாக நீக்கும் ஐனநாயகமுறைமை நோர்வேயில் இருக்குத்தானே! ஏன் நோர்வேஜீயர்கள் அமைதிகாக்கிறார்கள்! ஒன்றில் அவர்களுக்கு அதில் சம்மதம் இல்லையெனில் அது அவர்களை அசெளகரியபடுத்தவில்லை. வந்தேறு குடிகளின் அசெளகரியமொன்றும் நோர்வே கலாச்சாரமாகிவிடாது நண்பரே!
//நோர்வே மததியத்தம்வகிக்கவில்லை இதை மிகத்தெளிவாக வரையறுத்திருந்தனர். தமது பங்கு அனுசரணையாளர்கள். அதாவது பேச்சுவார்த்தை நடநதேறுவதற்கு அனுரணையாளர்கள்//Nackeera
அப்படியா! புலிகளின் கிழக்குமாகாணபோராளிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட கெளசல்யன் நாடளமன்ற உறுப்பினர் யோசெப் பரராசசிங்கம். சிறிலங்கா அரசபயங்கரவாத புலானாய்வாளர்களால் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் கொல்லப்பட்ட போது வேடிக்கை/ மெளனம் சாதித்த நோர்வே ஏனாம் கதிர்காமர் கொழும்பில் கொல்லப்பட்டுவுடன் பொங்கியெழுந்து கண்டனம் வெளியிட்டது. புலிகளை ஆயுதத்தை போட்டுவிட்டு சரணடையுமாறு பலதடவை வலியுறுத்தியது! நோர்வே அமெரிக்காவின் கைக்கூலியென்பது பலதடவை அம்பலமாகிவிட்டது நண்பரே!
ஈழத்தமிழனின் இரத்தம் ஐநா தொடங்கி அமெரிக்கா சீனா ரசியா இந்தியா பாகிஸ்தான் ஈரான் நோர்வே ஐரோப்பியயூனியன் நாடுகளென 38 நாடுகளின் கைகளை நனைத்துள்ளது.
மிகநீதியான நேர்மையான தமிழீழ இனவிடுதலை போராட்டத்தை பயங்கரவாதமென அழிக்க உதவிய நோர்வே சொந்த நாட்டு பயங்கரவாதத்திற்கு 92 உயிர்களை பலியிட்டு நிற்பது பரிதாபம்தான். எனியாவது ஊரைகெடுப்பதைவிட்டு நோர்வே தனது சொந்த மக்களை காக்கும் விதமான அரசியலை செய்யட்டும்.
//இது ஒரு நியாயமான கேள்வியாகத்தான் எனக்குப் படுகிறது. சரி மேற்குலகும் அமெரிக்காவும் புலிகளை அழித்தார்கள் என்றால் மீண்டும் எதற்காக அவர்களை நாடுகிறீர்கள்//
சொந்த மக்களின் பங்களிப்பையும் நலனையும் சுயஅடையாளத்தையும்ஆதாரமாக கொண்ட போராட்டத்தை பயங்கரவாமென சொல்லி அழித்தார்கள். அதற்காக ஈழத்தமிழர் சிறிலங்காவின் அடிமைகளாக வாழச்சொல்லி சொல்லுகிறீர்களா! இல்லை அதுதான் தங்கள் ஆழ்மனவிருப்பா! சரி இவ்வுலகில் நேர்மையான போராட்திற்கு இடமில்லையென்பதை 3இலட்சம் ஈழத்தமிழர் உயிர்களை சிறிலங்கா அரசபயங்கரவாதத்திற்கு பலியிட்டு படித்தாச்சு. எனி உலகம் போகிற விரும்புகிற வழியில் போராடுவது ஆதரவை பெற முயற்சிப்பது ஒன்றும் தவறில்லையே!
நண்பர் நோர்வே நக்கீரா! நீங்களும் உங்கள் உறவுகளும் அந்த கோரச்சம்பவத்திலிருநது அதிஸ்டவசமாக தப்பியுள்ளீர்கள். அந்தவகையில் சந்தோசம்!சக நண்பர்களின் நிலையறியாது ஏங்கித்தவிக்கிறீர்கள். இந்நிலையில் உங்களின் உணர்வுகளையும் உணர்சிகளையும் எனது கருத்துபதிவு புண்படுத்துமோ என்ற ஆதங்கமாக இருப்பதால் உங்களுடன் இத்தலைப்பில் கருத்துபகிர்வை தவிர்க்க விரும்புகிறேன். எனது முன்னைய கருத்துப்பகிர்வு தங்களிற்கு மனஉளைச்சலை தந்திருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நன்றி!
இப்படியான மனநோயார்களை வளர்த்துவிடும் ஊடகங்களின் சில பங்குகளை இங்கே தருகிறேன். அதற்காக வெளிநாட்டவர்கள் செய்வது எல்லாம் சரி என்று ஆகாது. எமக்கும் எமது செயற்பாடுகளுக்கும் நாம் காரணம் என்பதையும் உணர்ந்து கொண்டு காணெளியைக் காண்க
1) http://www.youtube.com/watch?v=o2y3R9i1Vvk&feature=player_embedded
2)http://www.youtube.com/watch?v=j3CWTkF-vwc&feature=player_embedded#at=291
3)http://www.youtube.com/watch?v=m3rEZjuswho&feature=player_embedded#at=105
4)http://www.youtube.com/watch?v=wFMsPaqF3MM&feature=player_embedded#at=69
5)http://www.youtube.com/watch?v=M4ZllIoagsQ&feature=player_embedded
நிரஞ்சன்!
உங்கள் கேள்விகளுக்குக் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளேன்
//ஒன்றில் அவர்களுக்கு அதில் சம்மதம் இல்லையெனில் // எதில் அவர்களுக்குச் சம்மதம் சம்மதம் இல்லை என்பது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். மதம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது கொஞ்சமேனும் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட தம்மைத் தாழ்பதற்கு இடம் தேவை என்று கருதியே வெளியேறாமல் இருக்கிறார்கள். கிறிஸ்தவத்தின் உயர்திருநாளான கிறிஸ்மஸ்சை ஒன்யேனும் தேவாலங்களுக்குப் போகமாட்டார்கள். தமிழ் கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் போகும் தொகை கூட தேவாலயங்களில் திருநாட்களில் கூட இருப்பதில்லை. மீதியை நீங்கள் தீர்மானியுங்கள் இவர்கள் கிறிஸ்தர்களா என்பதை
//நோர்வே அமெரிக்காவின் கைக்கூலியென்பது பலதடவை அம்பலமாகிவிட்டது // இது தெரிந்தும் என் நோர்வேயை அனுசரணையாளர்களாகப் புலிகள் தொடர்ந்து ஏற்றுக்கொண்டார்கள்? அப்போதே புலிகள் வசமுள்ள நாடுகளை கொண்டு வந்திருக்கலாமே?
//மிகநீதியான நேர்மையான தமிழீழ இனவிடுதலை // எம்மக்களின் இனவிடுதலையை நான் என்றும் மறுக்கவில்லை.
//ஈழத்தமிழனின் இரத்தம் ஐநா தொடங்கி அமெரிக்கா சீனா ரசியா இந்தியா பாகிஸ்தான் ஈரான் நோர்வே ஐரோப்பியயூனியன் நாடுகளென 38 நாடுகளின் கைகளை நனைத்துள்ளது.//
38நாடுகள் தமிழர்களுக்கெதிராக் களமிறங்கியதாக நான் அறியவில்லை. தயவு செய்து வரிசைப்படுத்த முடியுமா? எப்படி தமிழர்களை எதிர்த்துப் போராடினார்கள் என்றும் எழுதுங்கள். தெரியாத ஒன்றை அறிவது தப்பில்லைத்தானே.
எனது பெயருக்கு ஏற்றால் இல்லை என்றீர்கள். நல்லது கதை தெரியும்தானே. சிவனே மறுத்துரைத்தது உண்டல்லவா? முடிவு எப்படி என்பதையும் அறிவீர்கள் அல்லவா. இனி நான் சொல்ல வேண்டியது ஒன்றில்லையே.
//கொண்ட போராட்டத்தை பயங்கரவாமென சொல்லி அழித்தார்கள். அதற்காக ஈழத்தமிழர் சிறிலங்காவின் அடிமைகளாக வாழச்சொல்லி சொல்லுகிறீர்களா!// இல்லைத் தோஸ்து. பிஎல்ஓவை பயங்கரவாத இயக்கம் என்று வர்ணித்த அமெரிக்கா பின் அவர்களுடன் தான் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். பயங்கரவாதி என்ற பதம் தமக்கேற்றால் போல் மாற்றப்பட்டு வந்திருக்கிறது. இன்று தேசத்தந்தையான காந்தியும் அன்று பயங்கரவாதிதான். நெல்சன் மண்டேலாவும் பயங்கரவாதிதான் என்பார்வையில் ஐம்பெரும் வல்லரசுகளும் பயங்கரவாதிகள் தான். பயங்கரமான செயல்கள் செய்யும் அனைவரும் பயங்கரவாதிகள் தான் இந்தப்பதம் புலிகள் மாற்றுக்கரத்தாளர்களை மற்றயை இயக்கங்களை துரொகி என்பது போல் என்று சொல்லுங்களேன்.
எனக்கு எவ்வளவு இக்கட்டான நிலை அமைந்தாலும் என்னாலியன்ற உண்மைத்தகவல்களையும். உங்கள் கேள்விகளுக்குச் சரியெனப்பட்டவற்றையும் தருகிறேன் அதற்காக எனது கருத்து மட்டும் தான் சரி என்று விவாதிக்க வரவில்லை. சிலகருந்துகளுக்கும் சிந்தனைகளுக்கும் காலம்தான் பதில் சொல்லும் நோர்வேயியக் கொலையாளிக்கு காலத்தின் பதில் என்ன என்பது அறியப்பட்ட ஒன்றாகும். நன்றி நிரஞ்சன்
இனியும் இப்படி நடக்காமல் தடுப்பதுதான் முக்கியம். இமைப்பொழுதில் நிகழ்ந்தது யாராலும் தடுக்க முடியவில்லை. ஆனால், ஈழத்தில் ஒரு அரசு நன்கு திட்டமிட்டு, கால அவகாசமெடுத்து, தனது சொந்த மக்கள் என்று சொல்லிக்கொண்டு கொன்றழித்தது. இது பலர் பார்த்திருக்க நிகழ்ந்த அக்கிரமம். பலரால் இதைத் தடுத்திருக்க முடியும். இதுதான் இரண்டுக்குமுள்ள வித்தியாசம். ஒன்று மனிதம் கொன்ற மனிதன். மற்றையது மனிதம் அ
ற்ற ஒரு அரசு. தடுத்திருக்கக் கூடிய ஒரு இனப்படுகொலை.
யோகராசா! நீங்கள் கூறிய செய்தியுடன் நானும் ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறறேன். மனிதமற்ற மனிதன். மனிதமற்ற அரசு இரண்டையும் எழுத்துக் கொண்டால் ஒரு தனிமனிதனுக்கில்லாத பொறுப்பும் பொறுப்புணர்வும் அரசுக்கு இருக்க வேண்டும். பல தனிமனிதர்களின் பிரதிநிதிகள் தான் அரசியல்வாதிகள். ஒரு பொறுப்புள்ள அரசு காலங்காலமாக கலவரங்களைக் கட்டவிழ்த்து விடுவதும் போர் என்று கொன்று குவிப்பதையும் என்றும் எந்த மனிதவர்க்கமும் மன்னிக்கவே கூடாது. தான் அரசபதவில் இருந்தபோது புரியாத விடயம் இப்போது சந்திரிகாவுக்குப் புரிந்திருக்கிறதான். பிள்ளைகள் இன்றைய அரசின் செயல்பாட்டால் தன் பிள்ளைகள் தாம் சிங்களவர்கள் என்று சொல்லவே வெட்கப்படுவதாக நேற்றுக் கூறினார். என்னமா நடிக்கிறார்கள். எல்லாம் தம் எதிரிக்கு மட்டும்தான். அதைவிட செய்வதையும் செய்து விட்டு சண்டித்தனம் பேசும் அரசை என்ன செய்யலாம்.
என்னால் இன்னும் ஒரு விடயத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளவே முடியவில்லை கெலேன என்று இளம் பெண் கொலைகளமான தீவில் அனைத்தையும் கண்டு தன் தெரிந்தவர்கள் இனத்தவர்கள் நண்பர்களையும் இழந்த தன்வாழ்விலே மீண்டும் அதேவயிற்றில் பிறக்க முடியாத தாயையும் (மொனிக்கா 42)இக்களத்தில் இழந்தபின் இன்று தொ.காட்சியில் பேசினாள். அவளின் வார்த்தைகளின் வலுவிலும் சிந்தனையிலும் என்னையே நான் வெறுக்கும் நிலைக்கு உள்ளாகிறேன் “நாம் கொலைகாரனை வெறுப்பதை விட இருப்பவர்களில் அன்பு கொள்ளுங்கள்” எனக்கு இன்னும்தான் புரியவில்லை இந்தத் தெய்வத்தன்மை எப்படி வருகிறது. அறிவு கொடுப்பதா? வளர்ப்புக்கொடுப்பதா? எப்படி” இவ்வளவு வயது வளர்ந்தும் என்மனம் பண்படவில்லையே என்று வேதனையில்தான் எழுதுகிறேன். யாராவது இதற்கு விடையிருந்தால் சொல்லுங்கள்.
ஓஸ்லோவின் மலர் ஊர்வலத்தில் 200 000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதாக நோவேயிய தேசியதொ.கா அறிவிக்கிறது. இறந்தவர்கள் தொகை 97 என்று அறிவிக்கப்பட்ட போதிலும் தப்பிக்கொண்டவர்கள் மீண்டதில் இறந்தவர்கள் தொகை குறைவடைகிறது. சுமார் 76. இது சரியான தொகை என்று இன்னும் கூறவியலாது