எச்.ஐ.வீ நோயாளி என்று சந்தேகமுடைய பெண் நோயாளி ஒருவரை செங்கல்பட்டு அரச மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலிருந்து இரண்டு நாட்கள் வெளியேற்றி கொட்டும் மழையில் நிறுத்தியுள்ளனர். மருத்துவ மனை ஊழியர்களே இக்கொடுரச் செயலைச் நிகழ்த்தியுள்ளனர்.
மருத்துவக்கல்லூரி அதிபரின் கவனத்திற்கு இச்செய்தி கொண்டுவரப்பட்ட பின்னரே பேபி என்ற அப்பெண் மீண்டும் நோயாளர் விடுதிக்குள் அனுமதிக்கப்பட்டார்.
சுமார் பத்து நாட்களின் முன்னர் பேபியின் கணவர் அவரை மருத்துவ மனையில் அனுமதித்துவிட்டு மறைந்து விட்டார்.
பேபி மறை மலை நகர் என்ற சென்னையின் புற நகர்ப் பகுதியில் கூலிவேலை பார்த்துவந்த ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவராவர்.
மருத்துவ மனையின் அருகாமையிலுள்ள கடைச் சொந்தக்காரர் ஒருவர் பெண்ணொருவர் கொட்டும் மழையில் இரண்டு நாட்களாக நிற்பதைக் கண்டு நகரசபை பிரதித் தலைவரான கிரிபாபுவிற்கு அறிவிக்க, அவரின் முன்முயற்சியின் அடிப்படையிலேயே பேபி மருத்துவ விடுதிக்குள் அனுமதிக்கப்பட்டார்.