27.12.2008.
இறுதி வரை சமரச மில்லா இடதுசாரியாக விளங்கிய, இலக்கிய நோபல் விருது பெற்ற பிரிட்டிஷ் நாடக எழுத்தாளர் ஹெரால்ட் பின்டர் புதன் இரவு காலமா னார் என்று வியாழனன்று அறிவிக்கப்பட்டது. 78 வயதான பின்டர் ஈரல் புற்று நோயால் மரணம் அடைந் தார்.
2005ம் ஆண்டின் இலக் கிய நோபல் விருது இவ ருக்கு வழங்கப்பட்டது. வச னங்களின் தாக்கத்தை உணர்த்துவதற்காக நாடகங் களில் நெடிய மவுனங்களை உருவாக்கினார். ஆங்கில நாடக மேடைகளில் பலத்த அங்கீகாரம் பெற்ற இந் நடைமுறையை ‘பின்ட ரஸ்கு’ (ஞiவேநசநளளூரந) என்ற வார்த்தையுடன் ஆக்ஸ் போர்ட் சொல் அகராதி அங்கீகரித்துள்ளது.
இறுதி வரை இவர் சம ரசமில்லா இடதுசாரியாக விளங்கினார். இராக் மீது அமெரிக்கா, பிரிட்டிஷ் படைகள் ஆக்கிரமித்ததை இவர் கடுமையாக எதிர்த் தார். இந்நாடுகளின் அயல் உறவுக் கொள்கையை இவர் வெளிப்படையாக விமர் சித்து வந்தவர். மூன்று ஆண் டுகளுக்கு முன் முழு நேர அரசியல் பணிகளுக்காக எழுத்துப் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித் தார். பிரிட்டிஷ் அரசு வழங் கும் ‘சர்’ பட்டத்தை இவர் ஏற்க மறுத்துவிட்டார்.
1930ம் ஆண்டில் ஈஸ்ட் லண்டனில் பிறந்த பின்டர் அணு ஆயுத எதிர்ப்பு போராட் டத்தில் முன்னணியில் நின் றவர். அணு வலிமை பெற்ற நாடுகள் தாமாக முன்வந்து அணுகுண்டுகளை அழிக்க வேண்டுமென்று கூறினார். மத்திய தெற்கு அமெரிக்க நாடுகளில் அமெரிக்க ஏகா திபத்தியம் எடுத்து வந்த எதிர்ப்புரட்சி மற்றும் மேலாதிக்க நடவடிக்கை களை எதிர்த்து வந்தவர்.
இவர் 30 நாடகங்களை எழுதியுள்ளார். அன்றாட வாழ்வின் அவலங்களை வெளிக் கொணர்ந்தவர் என் றும் ஒடுக்கப்பட்ட மக்க ளின் அடைக்கப்பட்ட அறைகளில் நுழைந்து வந் தவர் என்றும் இவருக்கு அளிக்கப்பட்ட நோபல் விருது சான்றிதழ் கூறினர். இவருடைய மனைவி அன் டோனியா பிரேசர் சீமாட் டியும் நன்கு அறிமுகமான ஒரு எழுத்தாளர். மகத்தான மனிதருடன் 38 ஆண்டுகள் வாழ்ந்ததைப் பெருமையாகக் கூறுகிறார் அவர்.
ஹெரால்ட் பின்டர் அவர்களின் மறைவுக்கு ‘இனியொரு’ தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறது.