மத்திய நைஜீரிய நகரமான ஜோஸ் இல் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்பு ஒன்றில் குறைந்தபட்சம் 118 பேர் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. பயணிகளும், வர்த்தகர்களுன் நிறைந்திருந்த வர்த்தக நகரில் இடம்பெற்ற இக்குண்டுவெடிப்பை இதுவரை யாரும் உரிமைகோரவில்லை எனினும் போக்கோ கராம் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் நடவடிக்கையாகவே இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
‘ஜோஸ் நகரில் உள்ள சந்தைப்பகுதியில், நிறுத்தப்பட்டிருந்த வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி ஒன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதல் நடைபெற்ற 20 நிமிடங்கள் கழித்து, வெடிகுண்டு நிரப்பப்பட்ட மினி பேருந்து ஒன்று வெடித்து சிதறியது.
இந்த இரட்டை குண்டுவெடிப்பில் சிக்கி, அப்பகுதிகளில் நின்றுகொண்டிருந்த 116 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும், 45 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதல்களில் பலியானவர்களில் பெண்களே அதிகம்.’ என நாட்டின் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க அரசு நைஜீரியாவிற்கு இராணுவத்தையும் பாதுகாப்பு ஆலோசகர்களையும் அனுப்பிவைத்துள்ளது. பிரித்தானிய அரசும் அமெரிக்காவைப் தொடர்ந்து பாதுகாப்புப் படைகளை அனுப்பிவைத்துவிட்டு தாம் வாஷிங்டனுடன் இணைந்து வேலைசெய்வோம் என்கிறது.
இவ்வாறான சூழலிலேயே இக் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் போக்கோ ஹராம் அமைப்பை வளர்த்தன் பின்புலத்தில் யார் செயற்பட்டார்கள் என்பது பிரதானமான கேள்வி.
அந்த அமைப்பிற்கு ஆயுதம் மற்றும் பண உதவிகளை சவூதி அரேபியாவிலுள்ள பல இஸ்லாமிய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. சிரியாவில் அசாத்தின் சர்வாதிகார அரசிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்துவரும் அமெரிக்க ஆதரவு இஸ்லாமியப் பயங்கரவாதக் குழுக்களுக்கும் இதே சவூது அரேபியக் குழுக்கள் தான் உதவி செய்து வருகின்றன. அமெரிக்காவின் நெருங்கிய பங்காளி நாடான சவூதி அரேபியா, மத்திய கிழக்கில் அமெரிக்க சார்பு அரசுகளுக்கு இராணுவ உதவியும், அமெரிக்காவிற்கு எதிரான நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கும் பணம் மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.
2012 ஆம் ஆண்டு அமெரிக்க ஹில்லாரி கிளிங்டன் பதவியிலிருந்த வேளையில் போக்கோ ஹராம் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றாக தரப்படுத்துவதற்கு மறுப்பு வெளியிட்டார். அதனை பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்யுமாறு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் அதனை மிகவும் தீவிரமாக அவர் மறுத்தார். தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க எண்ணிய போது மட்டுமே அமெரிக்க அரசு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்தது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு படுகாயமடைந்தோரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.